என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, September 23, 2016

4 தொடரி- தடம் புரண்டதா?
டெல்லி டூ சென்னை வரும் ரயில் கேண்டீனில்(பேஸ்ட்ரி) வேலை செய்பவர் தனுஷ். அதே ட்ரைனில் வரும் பிரபல நடிகையின் மேக்கப் உதவியாளர் கீர்த்தி சுரேஷ்
அதே ட்ரைனில் பயணிக்கும் மத்திய அமைச்சர் ராதாரவி. அவருக்கு செக்யூரிட்டியாக வரும் இருவர்.
அதே ட்ரைனில் தனுஷின் மேனஜராக
தம்பி ராமையா. தனுஷோடு வேலை செய்யும் நண்பர்களாக கருணாகரன், தர்புகா சிவா
அதே ட்ரைனின் ஓட்டுனர் ஆர்.வி.உதயக்குமார். அவருக்கு உதவியாளராக போஸ் வெங்கட்...
அதே ட்ரைனில்...
ஏய் ஸ்டாப்... ஸ்டாப்
ஏப்பா 150 கிமீ ஸ்பீட்ல ட்ரைன் ஓடுது எப்படிப்பா நிப்பாட்ட முடியும்?
நான் ஸ்டாப்ன்னு சொன்னது ட்ரைனை அல்ல... அதென்ன அதே ட்ரைன், அதே ட்ரைன்னுன்னே சொல்லிட்டு வர்றே?
ஆமாப்பா படம் முழுக்க ட்ரைன்ல நடக்கறப்போ அப்படித்தானே சொல்ல முடியும்?
அதுக்காக இப்படியா?
இப்ப சொல்லவா வேண்டாமா?
சரி சரி சொல்லித்தொலை.
அந்த ட்ரைன்ல வரும் நடிகைக்கு தனுஷ் சாப்பாடு கொடுக்கப்போகும்போது கீர்த்தி சுரேஷை பார்க்கிறார். கண்டதும் காதல்.
அதே ட்ரைனில் இன்னொரு கூபேயில் வரும் மத்திய அமைச்சர் ராதாரவிக்கும் தனுஷ் சாப்பாடு கொடுக்கப்போகும்போது ராதாரவியின் செக்யூரிட்டியோடு மோதல்.
ஒரு பக்கம் காதல் ஒரு பக்கம் மோதல். சூப்பர். மேலே சொல்லு
இதுக்கிடையில் ஒரு ஸ்டேசன்ல ட்ரைன் நிற்கும்போது திருடர்கள் க்ரூப் வேறு ட்ரைனில் ஏறிடறாங்க. அப்படி இருக்கும் சூழ்நிலையில் ட்ரைன் ஓட்டுனர் ஆர்.வி.உதயக்குமாருக்கும், அவரின் உதவியாளருக்கும் மோதல் வருகிறது. இந்த டென்சனில் உதயக்குமார் ட்ரைன் ஓடும்போதே செத்துப்போய்டறாரு.
அய்யயோ போச்சா... அப்புறம்.
அப்புறம் என்ன? இதுக்கிடையில் கீர்த்தி சுரேஷ் தனுஷோட சண்டை போட்டுக்கிட்டு எஞ்சினுக்கு பக்கத்தில் போய் ஒண்டிக்கறாங்க. ட்ரைன் நிக்காம போகுது. போகுது.. போய்ட்டே இருக்கு. இந்த கேப்ல ட்ரைன் கொள்ளையர்கள் கொள்ளையடிச்சுட்டு ட்ரைன் உச்சில வந்து ஜாலியா உட்கார்ந்துட்டு வர்றாங்க... கீர்த்தி சுரேஷை தேடிட்டு ட்ரைன் உச்சில நடந்து வர்ற தனுஷ்
போதும்யா, போதும். ட்ரைன் நின்னுச்சா இல்லையா?...
இருப்பா முழுசா சொல்லிக்கறேன். ட்ரைன் நிக்கலேன்னு தெரிஞ்சதும் மீடியாக்காரங்க வழக்கம்போல் மத்திய அமைச்சர் ராதாரவியை கடத்த மொத்த ட்ரைனையும் தீவிரவாதிகள் கடத்திட்டதா நியூஸ் போடறாங்க. இதுல கொடுமை என்னனா பாவம் ஒண்டிக்கிட்டு வரும் கீர்த்தி சுரேசை பெண் தீவிரவாதின்னும் அவங்க தலைமையில்தான் இந்த கடத்தலே நடக்குதுன்னும் செய்தி போடறாங்க.
கடைசில அந்த சதியெல்லாம் முறியடிச்சு ட்ரைனை தனுஷ் நிப்பாட்டினாரா? கீர்த்தி சுரேசுடன் காதல் சேர்ந்துச்சா என்பதுதான் ரெண்டே முக்கா மணி நேரக்கதை.
ஏப்பா இவ்வளவு சொன்னே... க்ளைமேக்ஸையும் சொல்லிடேன்.
அஸ்க்கு புஸ்க்கு... நாங்க மட்டும் தியேட்டருக்கு போய் மொக்கை வாங்குவமாம். இவரு நோகாம கதை கேட்டு எஸ்கேப் ஆகிடுவாராம்.
சரி சரி தம்பி ராமையா இருக்கறதால காமெடி நல்லாருக்குமே?...
காமெடியா... அய்யோ அய்யோ சிரிப்பே வரலப்பா.. செம கடுப்பாகுது. ஆனால் காமெடி இல்லாத குறையை போக்கறது ட்ரைன் சீன் கிராஃபிக்ஸ்தான்.
ஏன்பா?
அட தண்டவாளத்தில் நடக்கும்போதே நமக்கெல்லாம் தடுமாற்றம் வரும். ஆனால் 150 கிலோ மீட்டர் ஸ்பீட்ல போற ட்ரைன் மேலே எந்த பிடிமானமும் தடுமாற்றமும் இல்லாமல் அசால்டா நடந்து வர்றாங்கப்பா... தனுஷ் மாட்டு வண்டி மேலே நின்னு டான்ஸ் ஆடறதுமாதிரி செம ஸ்பீட்ல போற ட்ரைன்மேலே நின்னு டூயட் பாடறாருப்பா. அதுவும் ட்ரைன் தீப்பற்றி எரியும்போது.
ஹா ஹா ஹா. ஊரே பற்றி எரிந்தபோது பிடில் வாசிச்ச நீரோ மன்னன் மாதிரி ட்ரைன் பற்றி எரியும்போது டூயட் பாடியிருக்காரு தனுஷ்.  அப்புறம்.
கேட்ட உனக்கே இப்படி சிரிப்பு வருதே பார்த்த எனக்கு.
சிரிப்பாத்தான் இருந்திருக்கும். அப்புறம்?
இன்னும் இருக்கு. ட்ரைனுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு செலவு செஞ்சு கிராஃபிக்ஸ்லாம் போட்டவங்க... கூட கொஞ்சம் செலவு பண்ணி ஒரு ராட்சச ஃபேன் வாங்கியிருக்கலாம்.
இது எதுக்கு?
அதாவது சாதாரனமா அம்பது அறுபது கிலோ மீட்டர் ஸ்பீட்ல போற ஒரு பஸ்லயோ, கார்லயோ  நம்ம உட்கார்ந்திருந்தா எப்படி காத்தடிக்கும்.முடியெல்லாம் சும்மா பிய்ச்சுக்கும்ல்?  ஆனால் 150 கிமீ ஸ்பீட்ல ஒரு ட்ரைன் போகுது. அது மேலே தனுஷ் நிக்கறாரு, ட்ரைன் திருடர்கள் நிக்கறாங்க, ஒரு ஓரத்துல கீர்த்தி சுரேஷ் ஒண்டிக்கிட்டு நிக்கறாங்க யாருக்குமே முடிகூட அசையலேன்னா பார்த்துக்க. நல்லா தெரியுது அதெல்லாம் கிராஃபிக்ஸ் சீன் என்று. சரி ஓரளவு லாஜிக் வேண்டாமா? அதான் சொன்னேன். தனுசும் மத்தவங்களும் ஒரு ரூம்க்குள்ளே நடிச்சிருப்பாங்க போல, அதுக்கு கிராஃபிக்ஸ் எல்லாம் போட்டு ஓடற ட்ரைன்மேல நடிக்கற மாதிரி மாத்திட்டாங்க. ரூம்க்குள்ளே நடிக்கறபோது எதிர்ல ஒரு ஃபேனை வச்சு காத்து அடிக்க வச்சு முடியை பறக்க விட்டிருந்தா கொஞ்சம் ரியாலிட்டியாவது கிடைச்சிருக்கும். அதோடு, நிறுத்தவே முடியாத ஸ்பீடில் போகும் ட்ரைனுக்குள் இருக்கும் பேசஞ்சர்ஸ் எவ்வளவு பதட்டப்படணும்?. அதே பதட்டத்தை அப்படியே பார்க்கற ஆடியன்சுக்கும் கடத்தணும். அங்கே என்னன்னா ட்ரைன்ல இருக்கற பேசஞ்சர்க்கும் எந்த பதட்டமும் இல்லை. பார்க்கற ஆடியன்சுக்கும் எந்த பதட்டமும் இல்லை என்பது பெரிய மைனஸ்.
சரி பாட்டெல்லாம் எப்படி?
பரவாயில்லை ரகம்பா...
வேற ஏதும் ஸ்பெஷல்?
இருக்கு. பிரபு சாலமனுக்கு இந்த மீடியா மேலே என்ன கோபமோ தெரியல... விவாத நடத்தும் நெறியாளர், அதில் கருத்து சொல்லும் நாலு பிரபலங்கள்,ஸ்கூப் நியூஸ் ஏதாவது கிடைச்சா அதை கவரேஜ் செய்பவர்கள்ன்னு அம்புட்ட்டு பேரையும் சும்மா கிழி கிழின்னு கிழிச்சிருக்காரு.
இது எந்த படத்தின் காப்பின்னு இந்நேரம் நம்ம போராளிக கண்டுபிடிச்சிருப்பாங்களே?
ஆமாப்பா... ஏதா அன்ஸ்டாப்பபிள்ன்னு ஒரு ஆங்கில படமாம். அங்கேருந்து சுட்டதா சொல்றாங்க.
முடிவா என்னதான் சொல்றே? தொடரி தடம் புரண்டுடுச்சா?
என்னத்த சொல்ல?


Post Comment