என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Sunday, August 08, 2010

4 ராமதாசிடம் 32 கேள்விகள்

பதிவுலகம் எனப்படும் இந்தக்கடலில் நானும் குதித்து விட்டேன். என்னையும் ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.....எனக்கு தெரிந்த விஷயங்களை நான் இங்கே உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன். அதில் குறை நிறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொகிறேன். 

(குறிப்பு: கடந்த வருடம் யூத்புல் விகடனில் வெளிவந்த என் படைப்பு. மீண்டும் உங்களின் பார்வைக்கு...)
ப்போது ஆளாளுக்கு 32 கேள்விகள் என்று நெட்டிலும்,   அவங்கவங்க பிளாக்கிலும் கலக்குறாங்க. அதனை அடிப்படையாக வைத்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸைக் கொண்டு கற்பனையாக நாம் யோசித்ததில் கிடைத்த பதில்கள்
கீழே உங்களின் மேலான பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
1) உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? இந்த பெயர் பிடிக்குமா?
ராமதாஸ் என்று என் பெற்றோர் வைத்ததால் இந்தப்பெயர் வந்துவிட்டது. ஆனால் எனக்கு மருத்துவர் அய்யா, தமிழ்குடிதாங்கி என்ற பெயர்தான் பிடிக்கும்.
2) கடைசியா அழுதது எப்போது?
தேர்தல் முடிவு வந்த அன்று அழுதேன். அந்த கூட்டணியிலேயே இருந்திருந்தால் அன்புமணியை நடுவண் அமைச்சராக்கி இருக்கலாமே என்ற இயலாமையில் அழுதேன்.
3) உங்களோட கையெழுத்து பிடிக்குமா?
அன்புமணியை மாநிலங்களவை உறுப்பினராக்க அன்பு சகோதரியிடம் ஒப்பந்தம் போடும்போது போட்ட என் கையெழுத்து பிடிக்கும்.
4) பிடித்த மதிய உணவு?
தோல்விக்கு பிறகு வெறும் கேப்பை களிதான்.
5) நீங்கள் யாருடனாவது உங்கள் நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
அது தேர்தலின் போது, பொதுக்குழுவின் முடிவின் படி அமையும்.
6) கடலில் குளிக்க பிடிக்குமா... அருவியில் குளிக்க பிடிக்குமா?
பம்பு செட்தான். அதுதானே தைலாபுரம் தோட்டத்துல இருக்கு.
7) முதலில் ஒருவரை கவனிக்கும்போது எதை பார்ப்பீர்கள்?
எத்தனை மரம் வெட்டியிருக்காருன்னு....சே.... மரம் நட்டுருக்காருன்னு அவரின் கடந்தகால செயல்பாட்டை பார்ப்பேன்.
8) உங்ககிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன...பிடிக்காத விஷயம் என்ன?
குருவை நம்புவது எனக்கு பிடிச்ச விஷயம். அன்புமணியின் சொல்லை கேட்காமல் இருந்தது பிடிக்காத விஷயம்.
9) உங்கள் சரிபாதிகிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் என்ன?
கூட்டணி மாறும்போது கம்முன்னு இருப்பது. தோற்றவுடன் குற்றம் சொல்வது.
10) யார் பக்கத்தில் இல்லாமல் இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?
எல்லோரும் என் பக்கத்தில்தான் இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பிரதமர் பக்கத்தில் அன்புமணி அமைச்சராக இல்லயே என்று வருந்துகிறேன்.
11) இதை எழுதும்போது என்ன வர்ண ஆடை அணிந்துள்ளீர்கள்?
மடித்து கட்டிய வெள்ளை வேட்டியும், முண்டா பனியனும்தான். தோட்டத்தில் தண்ணி பாய்ச்ச இந்த உடைதானே வசதி.
12) என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கீங்க?
"நான் ஒரு முட்டாளுங்க... ரொம்ப நல்லா படிச்சவங்க..........."
13) வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால்.... என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
பணம் என்ன வர்ணமோ அந்த வர்ணம்.
14) பிடித்த மணம்?
மாம்பழ மணம்.
15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம்... அவரை அழைக்க காரணம் என்ன?
காடுவெட்டி குருதான். எனக்கு யாரையாவது பிடிக்கவில்லையென்றால் அவரை விட்டுத்தானே திட்டுவேன்.
16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு?
அதுவும் குருதான். அவரின் பதிவில் எனக்கு மிகவும் பிடித்தது, சமீபத்தில் கலைஞரை பற்றிய அவரது பேச்சு.
17) பிடித்த விளையாட்டு?
மரத்துக்கு மரம் தாவி விளையாடுவது. சின்ன வயசில் அது எனக்கு பிடித்த விளையாட்டு. இப்போது எங்கே விளையாட முடியுது? அதான் கூட்டணிதாவி ஆசையை தீர்த்துக்கறேன்.
18) கண்ணாடி அணிபவரா?
இப்போதெல்லாம் தோல்வியால் அழுதும், கோபத்தால் சிவந்தும் போயிருக்கிற கண்களை கண்ணாடிதானே மறைக்கிறது.
19) எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
தந்தை மகன் பாசத்தை காட்டும் எல்லா திரைப்படமும்.
20) கடைசியாக பார்த்த படம்?
மக்கள் தொலை காட்சியில் ஒளிபரப்பான ஈழம் சம்பந்தப்பட்ட படம்.
21) பிடித்த பருவகாலம்?
அன்புமணி மந்திரியாக இருந்த அந்த பொற்காலம்.
22) இப்போது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம்?
எங்களின் தேர்தல் அறிக்கை. எங்கே தப்பு இருக்கு என்று படித்துக் கொண்டிருக்கிறேன்.
23) உங்கள் டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒருநாள் மாற்றுவீர்களா?
தேர்தலுக்கு தேர்தல் மாற்றுவேன். அதுவரை எந்த கூட்டணியில் இருக்கிறேனோ அந்த கூட்டணி தலைவரின் படத்தை வைத்திருப்பேன்.
24) உங்களுக்கு பிடித்த சத்தம்....பிடிக்காத சத்தம்?
தமிழர்களின் தலைவர் அய்யா வாழ்க என்ற கோஷம்தான் பிடித்த சத்தம். பிடிக்காத சத்தம்னா.....ராமதாஸ் ஒரு பச்சோந்தி, அரசியல் வியாபாரி என்ற சத்தம்.
25) வீட்டைவிட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு?
டெல்லிதான்.
26) உங்களக்கு ஏதாவது தனித்திறமை இருக்கா?
மக்கள் யார் பக்கம் இருக்காங்கன்னு கணிச்சு அவங்களோடு கூட்டணி வச்சுக்கிற திறன் போன 2006 தேர்தல் வரை இருந்துச்சு. ஆனா, இப்ப இல்லை.
27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்?
மத்தியிலும் மாநிலத்திலும் எந்த பதவியும் இல்லாமல் தோட்டத்தில் பாத்தி கட்டுவதும் நீர் பாய்ச்சுவதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.
28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
என் மனசாட்சிதான். தினமும் என்னை பார்த்து சிரிக்குது.
29) உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்?
போயஸ் கார்டனா, கோபாலபுரமான்னு பொதுக்குழுவில்தான் முடிவு பண்ணனும்.
30) எப்படி இருக்கனும்ன்னு ஆசை?
2016-இல் அன்புமணியை தமிழ்நாட்டிலோ பாண்டிசேரியிலோ முதலமைச்சராக்கிவிட்டு நிம்மதியா ஓய்வெடுக்கனும்ன்னு ஆசை.
31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
அவங்க இல்லாமல் எதுவும் செய்ய விருப்பமில்லை. திடீர்ன்னு என்னை பிடிச்சு உள்ளே போட்டுட்டா அவங்கதானே தூது போகணும்.
32) வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
யாரோட வாழ்வு பற்றி..? இருந்தாலும் சொல்றேன்... " ஜெயிச்சவங்க வாழறாங்க....தோற்றவங்க பொறாமையில வேகுறாங்க."


Post Comment

இதையும் படிக்கலாமே:


4 comments:

  1. முட்டாள்

    ReplyDelete
  2. பட்டைய கெளப்புறீங்க

    ReplyDelete
  3. //மக்கள் யார் பக்கம் இருக்காங்கன்னு கணிச்சு அவங்களோடு கூட்டணி வச்சுக்கிற திறன் போன 2006 தேர்தல் வரை இருந்துச்சு. ஆனா, இப்ப இல்லை.//சூப்பர்..

    ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.