என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, October 07, 2010

14 மணிரத்னம் - ஷங்கர் சில ஒற்றுமை வேற்றுமைகள் 

ரம்பத்தில் மணிரத்னம்அடிதொட்டே ஷங்கர் வந்தார்.அதாவது மணிரத்னம் தன் ரோஜா படத்தில் மதுபாலாவை நடிக்கவைத்தார். பின்னர் ஷங்கர் தான் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேனில் மதுபாலாவை நடிக்க வைத்தார். தனது பம்பாய் படத்தில் நடிக்க மனீஷா கொய்ராலாவை அழைத்துவந்தார் மணி. அவரையும் தன் இந்தியன் படத்தில் பயன்படுத்திக்கொண்டார் ஷங்கர். இருவரில் ஐஸ்வர்யாராயை அறிமுகப்படுத்தினார்
மணி. பின்னாளில் ஜீன்ஸில் ஐஸை நடிக்க வைத்தார் ஷங்கர்.
ரஹ்மானை அறிமுகப்படுத்திய மணியை விட ஷங்கர்தான் அவரை அதிகமாக பயன்படுத்திக்கொண்டார். காதலன் போன்ற டப்பா படத்தைக்கூட பிரபலமாக்கினார்.ரஹ்மானின் இசை மட்டும் அப்படத்தில் இல்லாமல் போயிருந்தால் அந்தப்படத்தின் வெற்றி கேள்விக்குறியாகிருக்கும்.
இப்படி ஒற்றுமைகள் இருந்தாலும் வேற்றுமைகளும் இருக்கிறது.
மணிரத்னம் சொந்தமாக தயாரிக்கும் படத்திலும் சரி அடுத்தவர் தயாரிப்பில் அவர் இயக்கம் படத்திலும் சரி நிறைய சிலவு செய்யவிரும்பமாட்டார். ஆனால்
ஷங்கர் அவர் தயாரிக்கும் படத்தை சிக்கனமாகவும், அடுத்தவர் தயாரிப்பில் தான் இயக்கும் படத்தை கோடிகளை கொட்டி அல்லது இறைத்து பிரமாண்டம் காட்டுவார். மணிரத்தனம் இந்தியாவில் இருக்கும் சிறந்த இடங்களிலேயே படமெடுப்பார். வெளிநாடு மருந்துக்கு கூட இல்லை.(கதைக்களம் இலங்கையை சுற்றி இருந்ததால் கன்னத்தில் முத்தமிட்டால் சிலகாட்சிகள் இலங்கையில் எடுக்கப்பட்டது. அது மட்டும் விதிவிலக்கு).

ஆனால் ஷங்கர் அப்படியல்ல….கதைக்கு தேவையில்லை என்றால் கூட வெளிநாடு சுற்ற விரும்புவார். மணிரத்னம் எதார்த்தத்தை குறைந்தசிலவில் படமெடுக்கும் படைப்பாளி. ஷங்கர் மசாலாத்தனத்தை பிரமாண்டமாக காட்டும் வியாபாரி. அனைவராலும் மணிரத்தனம் போல படமெடுக்கமுடியாது. ஆனால் கோடிகளை கொட்டினால் ராம நாராயணன் கூட ஷங்கரை மிஞ்சுமளவிற்கு படமெடுக்கலாம்.

Post Comment

இதையும் படிக்கலாமே:


14 comments:

 1. நல்லா இருக்கிறது

  ReplyDelete
 2. சரியாத்தான் படுது!!

  ReplyDelete
 3. ஷங்கர் கமல் நடித்து குரு எனும் படத்தின் (இந்தியில் தர்மேந்திரா நடித்த ஜுகுனு) கதையை அங்கே இங்கே சில மாற்றங்கள் செய்து பல படங்களை வெற்றி படமாக்கிய திறமைசாலி. மணிரத்னம் குரு என்ற படத்தின் தலைப்பையே பயன்படுத்தி படம் எடுத்தவர். மணிரத்னமும் ஷங்கரும் ஒரே டெம்ப்ளேட்டையே முறையே அவர்களின் நிறைய படங்களுக்கு யூஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

  ReplyDelete
 4. பிளாக்கரை ரொம்ப சிம்பிளாக வைத்துக் கொண்டால் என்ன..?

  ReplyDelete
 5. Dont compare Shankar and Manirathnam. Manirathnam is highly genious but shankar is only empty.

  ReplyDelete
 6. /////மணிரத்னம் எதார்த்தத்தை குறைந்தசிலவில் படமெடுக்கும் படைப்பாளி. ஷங்கர் மசாலாத்தனத்தை பிரமாண்டமாக காட்டும் வியாபாரி.////
  நல்லதொரு ஒப்பீடு அருமை சகோதரா...

  ReplyDelete
 7. nis (Ravana)
  ஹுஸைனம்மா
  nagoreismail
  easyjobs
  ம.தி.சுதா
  உங்கள் அனைவரின் வருகைக்கும் நன்றி.

  ReplyDelete
 8. //மணிரத்னம் எதார்த்தத்தை குறைந்தசிலவில் படமெடுக்கும் படைப்பாளி.

  நண்பரே, ராவணன் பட்ஜெட் எவ்வளவு என்று தெரியுமா?

  //ஆனால் கோடிகளை கொட்டினால் ராம நாராயணன் கூட ஷங்கரை மிஞ்சுமளவிற்கு படமெடுக்கலாம்.

  இது முற்றிலும் தவறு. இந்த மாதிரி பிரம்மாண்டங்களை மட்டும் நம்பி படமெடுத்த பலர் ஒரே படத்தில் ஃபீல்ட் அவுட் ஆகி இருக்கிறார்கள்

  //கதைக்கு தேவையில்லை என்றால் கூட வெளிநாடு சுற்ற விரும்புவார்.

  மணிரத்தினம் நாம் பார்த்த இடங்களை புதிய கோணத்தில் காட்டுபவர். ஷங்கர் நாம் இதுவரை பார்க்காத இடங்களை படத்தில் காட்டுபவர்.

  இந்த இருவர் குறித்த உங்கள் பார்வை நன்றாக இருக்கிறது. ஆனால் ஒருதலை பட்சமாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 9. ஷங்கரை பற்றிய உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மைதான் நண்பரே ... ஆனால் மணிரத்தினத்துடன் ஒப்பீடு செய்திருப்பது நண்பர் பாலா சொல்லியதை போல ஒருதலை பச்சமாக இருக்கிறது

  ReplyDelete
 10. @பாலாவாங்க பாலா,நண்பர் ராஜாவோட பதிவுக்கு பதில் சொல்லிட்டு நேரா இங்கே வந்துட்டீங்க போல, வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 11. @"ராஜா" இந்தியாவில் இன்று பெரிய இயக்குனர்கள் என்று மணியையும் ஷங்கரையும் தான் கொண்டாடுகிறார்கள். அப்படியானால் அந்த இருவரையும்தானே ஒப்பிடமுடியும் ?. ஷங்கரை சிந்துசம வெளி சாமியோடா ஒப்பிடமுடியும்?.
  இருவரையுன் என் கண்ணோட்டத்தில் பார்த்திருக்கிறேன் அவ்வளவுதான். இதில் ஒருதலை பட்சமேல்லாம் கிடையாது.

  ReplyDelete
 12. ஒரு தலை பட்சம் என்று சொன்னது, சங்கரின் குறைகளையும், மணிரத்னத்தின் நிறைகளையும் மட்டும் கூறி உள்ளது போல இருக்கிறது. அதைத்தான் சொன்னேன்.

  ReplyDelete
 13. @ரஹீம் கஸாலி
  நீங்கள் மணிரத்தினத்தின் குறைகள் பற்றியும் சொல்லி இருக்கலாம் ... அதைதான் கூறினேன்

  ReplyDelete
 14. .நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா ...மணிரத்னம் சிறந்த படைப்பாளி.....மணிரத்னம் தனது சொந்த படத்தை ஒரு மாதிரியும் அடுத்தவர் தயாரிக்கும் படத்தை ஒரு மாதிரியும் செலவு விசயத்தில் ஒன்றாக பாக்க மாட்டார்...அனால் ஷங்கரின் கதை வேறு...அவரின் வெயில், ஈரம்,போன்ற படங்களே இதர்க்கு சாட்சி....மணிரத்னம் ஒரு சிறந்த படைப்பாளி....ஷங்கர் ஒரு சிறந்த உடைப்பாளி...அடுத்தவரின் பணத்தை..... ....

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.