என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Sunday, October 10, 2010

3 நான் இன்னும் எந்திரன் பார்க்கல.......ஏன்னா?


ந்திரன் படத்தை பற்றி ஒரு பதிவு போடணும்ன்னு எனக்கு ரொம்பநாளா ஆசை. சரி எழுதலாம்ன்னு பார்த்தா என்னத்த எழுதறது?
அதான் உலக தமிழ் வலைப்பதிவு வரலாற்றில் ஏறக்குறைய எல்லோரும் எந்திரனை பற்றி திகட்ட திகட்ட புளிக்க புளிக்க எழுதி தள்ளிட்டாங்களே? நாம என்னத்தை எழுதி கிழிக்க போறோம்ன்னு கம்முன்னு இருந்தேன்.

 இருந்தாலும் எந்திரனை பற்றி எழுதாட்டி பதிவுலகம் நம்மை மன்னிக்காதோ....எங்கே பதிவுலகிருந்து நம்மள தூக்கிருவாங்கலோன்னு ஒரு பயம் வந்துருச்சு. இப்பலாம் மொக்கை பதிவுகூட எந்திரன்னு தலைப்பு வச்சா அந்தப்படத்தை போலவே ஹிட்டாகிடுது. நம்ம என்ன ஷங்கர் மாதிரி 150- கோடிரூபா பட்ஜெட்லயா எழுதப்போறோம். என்ன ஆனாலும் சரி ஒரு மொக்க பதிவாவது எந்திரனை பற்றி எழுதிடணும் முடிவு பண்ணி களத்துல குதிச்சுட்டேன். அதன் விளைவே இந்தப்பதிவு. சரி விஷயத்து வருவோம்.
நான் இப்ப சொல்லப்போற அதிபயங்கர உண்மையை படிச்சுட்டு என்னை ஒரு தேசத்துரோகி மாதிரி பார்க்காதீங்க....அந்த உண்மை என்னன்னா....ஆமாங்க...நிஜம்தான்....நான் இன்னும் எந்திரன் பார்க்கல.

 ரஜினி நடித்த எந்திரன் மட்டுமல்ல....எந்த படத்தையும் முதல் நாளோ அல்லது முதல் வாரத்துக்குள்ளோ பார்ப்பதில்லைன்னு பாண்டியன் படம் வந்தப்போ எடுத்தமுடிவு. அதென்ன பாண்டியன் படம்?
ஆமாங்க வெளியான அன்றே பார்த்த ஒரே ரஜினி படம் பாண்டியன்தாங்க.

அந்தப்படத்துக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க என் முடிவுக்கும் ஒரு சம்பந்தம் உண்டு. அது இரு சோகமான காமெடி. (காமெடின்னா காமெடிதானே... அதென்ன சோகமான காமெடின்னு கேக்கறீங்க...அப்படித்தானே. இந்த கட்டுரையை தொடர்ந்து படிங்க...சோகமா....காமெடியா....சோகமான காமெடியான்னு புரியும்). நானும்  என் நண்பர்களும்  அருகிலிருக்கும் புதுக்கோட்டைக்கு பாண்டியன் படம் பார்க்க போயிருந்தோம். நொந்து நூலாகி வெந்து வேக்காடாகி எப்படியோ டிக்கெட் எடுத்திட்டோம். சீட் பிடிக்கும் அவசரத்தில ஒரு டீயோ, தம்மோ அட அவ்வளவு ஏன் சிறுநீர் கூட கழிக்கல. நேரா உள்ளே போயிஉக்காந்துட்டோம். ஸ்க்ரீன்ல ரஜினி பேர போட்டதிலிருந்து ஒரே கைதட்டல், விசில் சத்தம் காத பிளக்குது. படம் முடியற வரையிலே இது தொடருது. அதுகூட பரவாயில்லை. இடையிலே ஒரே சிறுநீர் அவஸ்தை. நாடு சீட்ல மாட்டிகிட்டேன். டாய்லட் போகலாமன்னு எழுந்திருச்சேன். "டே யார்ரா அது தலைவரு படம் ஓடிட்டு இருக்கையிலே இடையில எந்திரிக்கிறது. முதல்ல உக்காருய்யா" ன்னு ஒரு குரல். அதை வழி மொழிந்தது போல தொடர்ச்சியாக ஐந்தாறு குரல்கள்.அந்த சத்தத்திலே வந்த ஒண்ணுக்கும் (அதாங்க சிறுநீர்) உள்ளே போயிருச்சு. அப்புறம் எப்படி போறது?. எப்படா இடைவேளை வரும்ன்னு உக்கார்ந்திருந்தேன்.

 ஒரே அவஸ்தை. கிட்னியில கல்லு வராததுதான் குறை. அன்னைக்கு முடிவு பண்ணேன். இனிமேல ரஜினி படத்தை வெளியான அன்று பார்க்ககூடாது. அப்படி பார்த்தல் ரெண்டு பிரச்சினை இருக்குது. ஒன்னு, அவசர ஆ(மூ) த்திரத்துக்கு வெளியாக முடியாது. ரெண்டாவது படத்துல ரஜினி என்ன பேசினாலும் நமக்கு புரியாது.(பாஷைபிரச்சினை இல்லைங்க...விசில், கைதட்டல் சத்தத்துல புரியாது). அதுனாலதான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்.

 சரி இங்கேதான் இந்த பிரச்சினைன்னு மலேசியா தலைநகர் கோலாலம்பூர்ல வெளியான அன்று சந்திரமுகி படம் பார்த்தேன். அங்கே புல் ஏ.ஸி. போட்டால் படம் முடியும் வரை அமத்துவதில்லை. அதே சிறுநீர் பிரச்சினை. உடனே எந்திருச்சேன். நம்ம நாட்டு ரசிகர்கள் எவ்வளவோ பரவாயில்லை. அங்கே கெட்டவார்த்தையையும் சேர்த்து சொல்லுறாங்க. இங்கேயாவது இடைவேளைன்னு ஒன்னு இருக்கு. அங்கே அதெல்லாம் கிடையாது.

அந்தப்படம் மூணு மணிநேரம் ஓடினாலும் சரி. நாலுமணிநேரம் ஓடினாலும் சரி. படம் ஆரம்பிச்சதிலிருந்து முடியும் வரை நான்ஸ்டாப் திண்டாட்டம்தான். நானும் கோலாலம்பூர்ல ஏழு எட்டு தியேட்டர்ல படம் பார்த்திருக்கேன். எல்லா தியேட்டரிலும் இடைவேளை என்ற எழுத்தை மட்டும் கண்ணில் காட்டுவதோடு சரி.

அய்யய்யோ...கதை ரூட்டு மாறிப்போகுதோ...எங்கே விட்டேன். ஆங்.... எப்படியோ படம் முடியும் வரை அடக்கிட்டு இருந்துட்டேன். ஆத்திரத்தை அடக்கலாம். மூ________அடக்க முடியாதுங்கற பழமொழியை நான் ஜெயிச்சுட்டேன்,ஆனா, அன்னிக்கு முழுவதும் அடிவயிறு கடுமையான வலி.அப்பத்தான் முடிவு பண்ணேன். இனி இந்தியாவிலும் சரி,மலேசியாவிலும் சரி ரஜினி படத்தை முதல்நாள் பார்ப்பதில்லைன்னு. என்ன என் முடிவு சரிதானே....

Post Comment

இதையும் படிக்கலாமே:


3 comments:

 1. இந்த பிரச்சினை எனக்கும் ஏற்பட்டுள்ளது.

  ReplyDelete
 2. சகோதரா அப்ப எப்ப எந்திரன் பார்ப்பதாய் உத்தெசம்... நல்ல ஒர அறிவியல் விடயம் இருக்கும் படம் பார்க்கணுமுன்ன பாருங்க நாம எப்ப பார்த்தோம் தெரியுமா..? இந்தியாக்காரங்க பார்க்க மதலே பார்த்தாச்சு

  ஃஃஃஃஃயாழில் கலக்கிய எந்திரன் (30.9.2010)..????
  http://mathisutha.blogspot.com/2010/09/3092010.htmlஃஃஃஃ

  இன்னமொருவிடயம் தங்கள் தளத்தை மன்னர் பொல்பார்க்க முடிவதில்லை அது விரிய மிகப் பெரும் நேரம் பிடிக்கிறது. அதனால் சில வேளை ரீடரில் படித்து (கைப்பேசி) விட்டு அப்படியே போய்விடுவேன்... இன்னு மொன்று அன்றொருநாள் ரீடரில் ஒரு ஆக்கம் பார்த்து விட்டு கருத்திடுவோம் என்று வந்த பார்த்தால் ஆக்கத்தைக் காணல என்ன நடந்தது...

  ReplyDelete
 3. @ம.தி.சுதாசில நேரங்களில் இந்த தளம் திறக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறது. அதுதான் ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. நீங்கள் ரீடரில் படித்த பதிவு ஒன்று நீக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறீர்கள்.அது எதைபற்றிய பதிவு என்பதை கொஞ்சம் குறிப்பிட்டு சொல்ல முடியுமா?

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.