என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, October 12, 2010

22 விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா சன் நிறுவனமும், எந்திரனும்?சன் டி.வி. நோட்டீஸ்  சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள எந்திரன் படம் குறித்த தவறான கருத்துக்களைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டி, பிரபலமான தமிழ் நாளிதழ் மற்றும் ஒரு ஆங்கில நாளிதழுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் .
இந்த நாளிதழ்கள் படம் பற்றிய கருத்தைச் சொல்லாமல், படத்தை தனிப்பட முறையில் தாக்கி வருவதாகவும், மக்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும்படி தூண்டும் விதத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளதாகவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சென்னை நகரில் இன்று வரை 42 அரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது எந்திரன். ஆனால் அந்த ஆங்கில நாளிதழ், படம் வெளியான மூன்றாவது நாளே அதாவது ஞாயிற்றுக்கிழமை கூட்டம் குறைந்தது என்றும், திரையரங்குகளில் காட்சிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும் பொய்ச் செய்தி வெளியிட்டது. இது பொறாமையால் வெளியிடப்பட்ட செய்தியே.
குறிப்பிட்ட அந்த தமிழ் நாளிதழ், படத்துக்கான மார்க்கெட்டிங் உள்ளிட்ட பலவற்றை குறை சொல்லியிருந்தது. உண்மையில் அனைத்தையும் சட்டப்படியும் திரையுலக விதிகளுக்கு உள்ளிட்டும்தான் நாங்கள் செய்திருக்கிறோம், என்று சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இரு நாளிதழ்களும் வெளியிட்ட எந்திரன் தொடர்பான செய்திகள் பொய்யே என்றும், இந்தச் செய்திகள் மற்றும் வரம்பு மீறிய தாக்குதல் கட்டுரைக்கு உரிய மறுப்பு வெளியிட்டு, மன்னிப்பு கோராவிட்டால் நீதிமன்ற நடவடிக்கையை நாட வேண்டியிருக்கும் என்றும் அந்த நோட்டீஸில் சன்பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது

என் கருத்து

விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டதா சன் நிறுவனம்?
இவர்கள் தயாரித்த படம் என்றால் அந்தப்படம் பற்றி  எல்லாருமே நல்லபடியாகத்தான் எழுதவேண்டும் என்று எப்படி நினைக்கலாம். இன்று ஏதோ ஒரு பத்திரிகை இவர்களின் படத்தை தப்பாக எழுதியது என்று கூப்பாடு போடும் இவர்கள், சன் டி.வி.-யில் டாப் 10 என்ற பெயரில் எத்தனை படத்தை கேவலப்படுத்தியிருக்கிறார்கள். யாரவது ஒருவருக்கு கோட்டு சூட்டு மாட்டிவிட்டு இந்தப்படம் நொள்ளை, அந்தப்படம் நோட்டை என்று சொல்லவைத்தவர்கள்தானே இவர்கள்.இன்று இவர்கள் படத்திற்கு ஒரு பிரச்சினை என்றதும் வழக்காம்,நோட்டீசாம், நஷ்ட ஈடாம். வேடிக்கையாக இல்லை.  இவர்களால் மோசமான படம் என்று வர்ணிக்கப்பட்ட அத்தனை படத்தின்  தயாரிப்பாளர்களும் இவர்களைப்போல் கேஸ், நோட்டீஸ் நஷ்ட ஈடு என்று கிளம்பியிருந்தால் சன் டி.வி-யையே அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். அதிலும் இவர்கள் படத்தயாரிப்பில் இறங்கியபின் நிலைமை இன்னும் மோசம். இவர்களால் விலைக்கு வாங்கப்பட்ட பாடாவதி படத்தை கூட அரைமணி நேரத்திற்கு ஐந்து முறை  விளம்பரப்படுத்தி பிரபலமாக்கினார்கள். கூட்டமே இல்லாத படத்தை கூட தொடர்ந்து மூன்று  மாதத்திற்கு
முதலிடத்தில் வைத்து கொண்டார்கள். உருப்படாத பாடல்களை கூட  சூப்பர் 10 நிகழ்ச்சியில் முதலிடம் தந்து சந்தோசப்பட்டார்கள். மற்ற படங்களை மறந்தும் கூட முதலிடத்திற்கு கொண்டு வருவதில்லை. மற்றதயாரிப்பாளர்களின் படத்தை குறை கூறிக்கொண்டு இருந்த இவர்கள், இப்போது இவர்கள் படம் என்றதும் கூப்பாடு போடுகிறார்கள். அது சரி, வரம் கொடுத்தவர் தலையிலே கைவைத்தவர்கள்தானே இவர்கள்?


Post Comment

இதையும் படிக்கலாமே:


22 comments:

 1. எங்கள் வீட்டில் சன் டிவி கிடையாதுங்கோ..... அதனால், present சார் மட்டும் சொல்லிக்கிறேன்.

  ReplyDelete
 2. 150 கோடி பணம் ஒரு வீண் செலவு
  நம்ம ஊர்ல இன்னும் படிக்காத படிக்க முடியாத நிலைல இருக்க
  ஒரு 1000 மாணவர்களை படிக்க வைத்து இருக்கலாம்.
  சூப்பர் ஸ்டார்,சன் டிவி போன்ற பணம் இருக்கும் இடம் பணம் பெருகும்.,

  அனைத்து நடிகர்களும் சூர்யாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை
  சூர்யா - அஹரம் - விதை
  http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/10/blog-post_3041.html

  ReplyDelete
 3. வெளிநாட்டுல இருக்கீங்க.. நீங்க தைரியமா பேசலாம்? நாங்க இந்தியால இல்ல இருக்கோம்..? வாயத் தொறக்க முடியலையே...

  ReplyDelete
 4. நல்லவேளை சித்ராக்கா நீங்க தப்பிச்சுட்டீங்க...இல்லேன்னா...நிமிசத்துக்கு ஒரு தரம் எந்திரன் ட்ரைலரை போட்டு சாகடுச்சுடுவாங்க.

  ReplyDelete
 5. அடடே வாங்க எஸ்கா. யூத்புல் விகடனில் கடந்த வருடம் நான் கிறுக்கிக்கு இருந்தபோது நீங்கள் பின்னூட்டம் இட்டது. அதுக்கு பிறகு இப்பத்தான் வாறீங்க. இந்தியாவுல இருந்துக்கு நீங்க கூடத்தான் எந்திரன் - சில (பல) கேள்விகள் (ஐ... ஜாலி... ஜாலி... எந்திரன் பாத்தாச்சே.....)ன்னு ஒரு பதிவு போட்டுருக்கீங்க...அதைவிடவா நான் எழுதிட்டேன்.

  ReplyDelete
 6. அதென்ன சார் வரம் கொடுத்தவங்க தலையிலே கைவத்தவர்கள்
  இந்த வரி எனக்கு புரியல

  ReplyDelete
 7. ராஜகோபால் said...
  ///150 கோடி பணம் ஒரு வீண் செலவு
  நம்ம ஊர்ல இன்னும் படிக்காத படிக்க முடியாத நிலைல இருக்க
  ஒரு 1000 மாணவர்களை படிக்க வைத்து இருக்கலாம்.
  சூப்பர் ஸ்டார்,சன் டிவி போன்ற பணம் இருக்கும் இடம் பணம் பெருகும்.,////
  நான் இக்கருத்தை முற்ற முழுதாக ஆதாரிக்கிறேன்.

  ReplyDelete
 8. Anonymous அதென்ன சார் வரம் கொடுத்தவங்க தலையிலே கைவத்தவர்கள்
  இந்த வரி எனக்கு புரியல//////
  ஊரு உலகத்துக்கே தெரிந்தது உங்களுக்கு தெரியாதா? அதுபத்தி விளக்கம் சொல்ல பின்னூட்டத்தில் இடம் போதாது. விரைவில் விளக்கமாக ஒரு பதிவு போட்டுட்டா போச்சு.

  ReplyDelete
 9. @Anonymous
  வரம் கொடுத்தவர் கருணாநிதி. இது கூட தெரியாதா?

  ReplyDelete
 10. சித்ரா, எஸ்கா, ராஜகோபால், மதி.சுதா, விசா, NKS.ஹாஜா மைதீன், ஆடம்,அழகி, அப்புறம் பெயர் இல்லாத அனானி ஆகியோரின் வருகைக்கு நன்றி...

  ReplyDelete
 11. இரண்டு பத்திரிக்கைகளுக்கு நோட்டிஸ் அனுப்பியிருப்பது வெட்ட வெளிச்சம் என்றால் அவற்றின் பெயரையும் போடலாமே.

  ஐங்கரன் பிக்சர்ஸ் 30 கோடி வரை செலவழித்தபின் பணம் போடமுடியாத நிலையில் படம் ரிலீஸ் ஆனா பிறகு உங்கள் பணத்தை வட்டி இல்லாமல் கொடுப்போம். இஷ்டமானால் ஒப்பந்தம் போடலாம் என்று அராஜகம் பண்ணி RIGHTS வாங்கியதாக பேச்சு அடிபட்டதே. உண்மை தானா?

  ReplyDelete
 12. @cnsone//இரண்டு பத்திரிக்கைகளுக்கு நோட்டிஸ் அனுப்பியிருப்பது வெட்ட வெளிச்சம் என்றால் அவற்றின் பெயரையும் போடலாமே.

  ஐங்கரன் பிக்சர்ஸ் 30 கோடி வரை செலவழித்தபின் பணம் போடமுடியாத நிலையில் படம் ரிலீஸ் ஆனா பிறகு உங்கள் பணத்தை வட்டி இல்லாமல் கொடுப்போம். இஷ்டமானால் ஒப்பந்தம் போடலாம் என்று அராஜகம் பண்ணி RIGHTS வாங்கியதாக பேச்சு அடிபட்டதே. உண்மை தானா?////

  ஏங்க நானே பொழுது போகலைன்னு ஏதோ கிருக்கிக்கு இருக்கேன். நீங்க என்னன்னா புலனாய்வு பத்திரிகையின் நிருபர் ரேஞ்சுக்கு கொண்டுவந்து விட்டுருவீங்க போல....

  ReplyDelete
 13. மாட்டு சாணத்தை கூட நடிகையை வைத்து விளம்பர படுத்தினால் வாங்க போட்டி போடும் தமிழ் நாட்டில் நாம் கருத்து சொல்லிக்கொண்டு வேடிக்கை தான் பார்க்க முடியும்..

  ReplyDelete
 14. nan keralavil intha padathai[trivanrum]parthen .irandavathu nalil evening show .50 % seat ellam summa than irunthathu

  ReplyDelete
 15. [ma][im]http://www.freeimagehosting.net/uploads/f11eadc45e.png[/im][/ma]

  ReplyDelete
 16. அந்த தமிழ் நாளிதழ் வெளிஇட்ட செய்தியல் தப்பு இருப்பதாக தெரியவில்லையே .ஒருவாரத்தில் எத்தனை திரய்யரங்குகளில் படம் எடுக்கப்பட்டது என ரசிகர்களுக்குத்தான் தெரியுமே .சரி ,5௦வது நாள் ஓடிய திரையரங்குகளை சன் குழுமம் விளம்பர படுத்துமா?

  ReplyDelete
 17. மிகவும் தைரியமாக கருத்து எழுதியுள்ளீர்கள். தமிழ்நாட்டில் எந்தப் பத்திரிகையிலும் இப்படி எழுத யாருக்கும் துணிச்சல் வராது அப்படி எழுதினால் அந்த பத்திரிகையும் எழுதிய நிருபரும் என்ன கதியாவார்கள் என அனைவரும் அறிவர். உண்மையை எழுதியதற்கு பாராட்டுக்கள்.M.ASHRAF

  ReplyDelete
 18. மிகவும் துணிச்சலான விமர்சனம். தமிழ்நாட்டில் (வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள்) நாங்கள் நினைப்பதை அப்படியே வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள். நன்றி! - ஸ்டெல்லா ஜான்சன்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.