என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, October 27, 2010

8 நடிகர்கள் எல்லாம் உண்மையான ஹீரோக்கள் கிடையாது

 சினிமாக்காரர்கள் உண்மையான ஹீரோக்களா என்று பார்த்தோமேயானால் நம்மை விட முட்டாள்கள் இந்துலகத்தில் யாருமில்லை. வருடத்திற்கு ஒரு முறை அவர்களின் பிறந்தநாளுக்கு ஒரு பத்து பேருக்கு தையல்மிசின், நாலு பேருக்கு சைக்கிள் கொடுத்ததோடு தன் சமூக சேவையை முடித்துவிடுவார்கள். அதில்கூட சுயநலம் இருக்கும்.  இந்த பப்ளிசிட்டி ஸ்டண்ட் எல்லாம் எதிர்காலத்தில் அரசியலுக்கு உதவும், மக்கள் நம்மை ஹீரோவாக பார்க்கணும், அடுத்து வரும் நம் படம் ஓடனும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி என்றால் உண்மையிலேயே ஹீரோ என்பவர் யார்? சுயநலம் கருதாமல் பொதுநலம் ஒன்றையே தனது குறிக்கோளாக கொண்டிருக்கும் நம் மண்ணின் மைந்தன் திரு.கிருஷ்ணனை போன்றவர்கள். அவரை பற்றி எல்லோருமே எழுதிவிட்டார்கள். கிருஷ்ணன் செய்கின்ற தொண்டுக்கு மனிதம்,புனிதம்,என்று எந்த வார்த்தைகளாலும் அடைத்து விட முடியாது எல்லாத்துக்கும் மேல் என்று  சொல்லலாம்.அதனால்தான் CNN கூட அவரை ஹீரோ என்று சொல்கிறது. நாமும் சொல்வதில் என்ன தப்பு? இப்போது நான் செய்யவேண்டியதெல்லாம் இந்த சுட்டியை தட்டி அவருக்கு வாக்களிக்க வேண்டியதுதான். அதற்காக நாம் எங்கும் போகத்தேவையில்லை.உட்கார்ந்த இடத்திலேயே இந்த சுட்டியை தட்டி வாக்களிக்கலாம். எத்தனையோ போலி ஹீரோக்களுக்கு கட் அவுட், பால்குடம் அது இதுன்னு நாம் செய்த பாவங்களுக்கு  இதன் மூலம் பரிகாரம் தேடுவோம். எவ்வளவோ பண்ணிட்டோம்.இதை பண்ணமாட்டோமான்னு நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. அப்புறம் என்ன யோசனை? நான் வாக்களித்து விட்டேன்.அப்ப நீங்க?

Post Comment

இதையும் படிக்கலாமே:


8 comments:

 1. நானும் ஓட்டு போட்டுட்டேன்.

  ReplyDelete
 2. மாங்கு மாங்குன்னு என்னத்த எழுதினாலும் நின்மதி இல்லை ..... உமக்கு ஒட்டு என்ன ... ஒட்டு ஒரு விளம்பரமே தருகிறேன்
  நல்ல செய்தி இட்டமைக்காக வாழ்த்துக்களும் நன்றிகளும் உமக்கு.
  மேலும் இபட்டி நல்ல மனிதர்களை முன்.... செய்தி என்ன வேண்டி இருக்கு.
  அவருக்கும் உமக்கும் தரவு இணையத்தின் சார்பாக வாழ்த்துக்களும் நன்றிகளும் .....

  ReplyDelete
 3. வோட்டு போட்டாச்சு...

  ReplyDelete
 4. ​போட்டாச்சு ​போட்டாச்சு..........

  ReplyDelete
 5. mikka santhosam nanbare

  ReplyDelete
 6. இத்தகவலை எல்லோருக்கும் அறிவிப்போம்....

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.