என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, December 06, 2010

24 குழந்தையின் சிரிப்பொலி

  ல்ல மழை.வானம் தூறிக்கொண்டே இருந்தது. மின்சாரம் வேறு இல்லை.ஒரே இருட்டாக இருந்தது.கைத்தொலைபேசியில் மணியை பார்த்தான் சுப்பையா. அது எட்டை காட்டியது.
'காலையிலிருந்து ஒரு போன் வரல. இதுக்கு வேற அப்பப்போ காசு போட வேண்டியிருக்கு. மணிபாக்கத்தான் இது லாயக்கு, இனிமேல் யாரு நம்ம கடைக்கு வரப்போகிறார்கள்' என்று நினைத்தபடி கடையை அடைக்கும் முயற்ச்சியில் இறங்கினான். அவன் கடையை அடைக்கட்டும். நாம் அவனை பற்றி பார்ப்போம்.
சுப்பையா ஒரு நடுத்தரவாதி. ஊர் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துபவன். அவன் கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் அவன் வீடு. மனைவி, பத்தாவது படிக்கும் ஒரு மகன் என்று குடும்பத்தை வைத்திருப்பவன்.
சரி கடையை அடைத்துவிட்டான். இனி அவனை பார்ப்போம்.
மாலை வீட்டிலிருந்து தேநீர் வந்த தூக்கு வாளியைஎடுத்து ஒரு துணிப்பைக்குள் வைத்தவன்,மழையில் நனைந்து விடுமோ என்ற கவலையில் தன் அலைபேசியையும் ஒரு பேப்பரில் சுற்றி கவனமாக அந்த துணிப்பைக்குள் வைத்துவிட்டு  வெளியில்வந்து தன் சைக்கிளை நகட்டினான். சைக்கிளில் காற்று இறங்கி போயிருந்தது.
'சே....இந்த நேரத்தில் இப்படி பழிவாங்கிவிட்டதே இந்த சனியன்' என்றவாறு சைக்கிளை கடையிலேயே வைத்து பூட்டிவிட்டு நடக்கலானான். இருட்டைப்பார்த்ததும் ஒருவித பயம் அவனுள் தொற்றியது.
இன்று மதியம் இவன்பார்த்த இறந்து போன ஒரு குழந்தையின் சவஊர்வலம் வேறு நினைவிற்கு வந்து அவனை மேலும் பீதிக்குள்ளாக்கியது.
நடையை இன்னும் வேகமாக்கினான். திடீர் என்று ஒரு குழந்தையின் சிரிப்பொலி மிக அருகில் கேட்டது. ஒரு வித கலக்கத்துடன்'மதியம் பார்த்த சவ ஊர்வலத்தையே நினைத்துக்கொண்டு நடந்ததால் பிரம்மையாக இருக்கும் என்று நினைத்தபடி சிறிது நேரம்  நின்றான்.
இப்போது சிரிப்பொலியை காணோம்.மறுபடியும் நடக்கலானான். சிறிது தூரம் சென்றிருப்பான். மீண்டும் அதே குழந்தையின் சிரிப்பு சத்தம். இவன் பயத்தில் ஓட ஆரம்பித்தான் . கூடவே வந்தது அந்த சத்தமும். ஒரு வழியாக வீட்டை அடைந்தான்.
"என்னங்க....சீக்கிரமே கடையை அடச்சுட்டீங்க போல"
"மழை வேற...கரண்டும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. அதான் நேரத்தோட அடச்சுட்டேன்"
"அதாங்க....வரும்போது மெழுகுவர்த்தி எடுத்ததுக்கு வரச்சொல்லலாம்ன்னு உங்களுக்கு போன் அடிச்சேன். எடுக்கவே இல்லை. ஏன் போன கடையிலேயே வச்சுட்டு வந்துட்டீங்களா?"
"இல்லையே நனைஞ்சாலும் நனைஞ்சுரும்ன்னு பையில்தான் இருக்கு. நீ போன் அடிக்கவே இல்லையே"
"நான் அடிச்சேன் உங்களுக்கு விளங்கல போல...."
"இல்ல...நீ போன் போடவே இல்ல...நான் பக்கத்துலதான வச்சுருந்தேன்.எப்படி கேக்காம போகும்"
"இல்லைங்க காலையில நம்ம பய உங்க போன எடுத்து என்னவோ பண்ணிட்டு இருந்தான்.அதான் ஏதும் ஆச்சோ..எதுக்கும் ...நீங்க போன எடுத்து பாருங்க தெரியும்."
"அப்பா நான் ஒன்னும் பன்னல...ரிங் டோன் தான் மாத்திவச்சேன்".என்றான் அவன் மகன்.
சுப்பையா போனை பார்த்தான்
"அமாம்.நீ போன் போட்டுருக்கே...அப்புறம் எப்படி விளங்காம போச்சு. எதுக்கும் இப்ப ஒரு தடவ போன் போடு. பாத்திடலாம்."
போன் அடித்தாள். அங்கே ரிங் டோனாக வந்தது அந்த குழந்தையின் சிரிப்பொலி. இவன் எதைக்கண்டு பயந்து வந்தானோ அதே சிரிப்பொலி...


Post Comment

இதையும் படிக்கலாமே:


24 comments:

 1. சரியா போச்சு !

  ReplyDelete
 2. ஹ ஹ... நல்லாருக்குங்க... செம ஃப்ளோ... அவரு கடையடைக்கற கேப்புல அவர அறிமுகப்படுத்தினது அருமை... இயல்பாட நடை உங்களுக்கு..

  ReplyDelete
 3. உங்கள் எழுத்து நடை நல்லாருக்குங்க. கதை செம ஸ்பீடு.

  ReplyDelete
 4. அருமை நண்பரே,நல்லாயிருக்கு தொடருங்கள்...நன்றி

  ReplyDelete
 5. கலக்கலா இருக்கு தலைவரே

  ReplyDelete
 6. ஆகா! சூப்பர்! :-)

  ReplyDelete
 7. அருமையாக இருக்கிறது... வாழ்த்துக்கள்...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.

  நனைவோமா ?

  ReplyDelete
 8. எழுத்து நடை சூப்பர்...

  ReplyDelete
 9. உங்களிடமிருந்து மேலும் பல கதைகளை எதிர்பார்கிறேன்....

  ReplyDelete
 10. நல்ல நடை ரஹீம்! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 11. கதை நல்லா இருக்கிறது../***ரிங் டோனாக வந்தது அந்த குழந்தையின் சிரிப்பொலி. இவன் எதைக்கண்டு பயந்து வந்தானோ அதே சிரிப்பொலி...***/இப்படி தான் நிறைய பேரு ஏமாறாய்ங்க..

  ReplyDelete
 12. நல்ல கதை, அதனால் ஓட்டும் போட்டாச்சு....

  ReplyDelete
 13. அருமை நண்பரே, அருமையாக இருக்கிறது... சூப்பர்!

  ReplyDelete
 14. நல்லாயிருக்குங்க.. எப்படியெல்லாம் பீதியக் கிளம்ப்புது இந்த மொபைலு..

  ReplyDelete
 15. இப்படியொரு டுவிஸ்டா ?கதை சூப்பர்.

  ReplyDelete
 16. நல்லா இருக்கு கதை

  ReplyDelete
 17. கலக்கல் தல..அடிக்கடி இப்படி ரெண்டு பதிவு போடுங்க..

  ReplyDelete
 18. என்னய்யா இது! ஒரே திகில் கதையா இருக்கு இன்னைக்கு? நல்ல கதை!

  ReplyDelete
 19. நல்ல அனுபவம்... இவ்வளவுதானா இன்னும் இருக்கா...

  ReplyDelete
 20. ஹா...ஹா...நினைத்தேன்..

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.