என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, December 09, 2010

18 ஒரு நடிகை தத்தெடுத்த கதை

  தமிழ் சினிமாவின் பிரபல நடிகை சுபா தன் உயிர்த்தோழி கவிதாவுடன், தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் கிருஷ்ணாவை பார்க்க அவரது வீட்டிற்கு போனாள்.
"அடடே வாம்மா சுபா. என்ன இவ்வளவு தூரம்? இன்னக்கு உன் பிறந்த நாள் கூட இல்லியே?"
"பிறந்தநாளா இருந்தாத்தான் வரணுமா சார்?"
"அப்படி இல்லம்மா. பிறந்த நாளுக்கு பிறந்தநாள்தானே வருவே, எங்கிட்ட ஆசி வாங்க"
"இன்னைய தேதியிலிருந்து இன்னும் ஒரு வருஷம் என்னோட கால்ஷீட் டைரி புல்லா இருக்கு. ஓய்வே இல்லை. அதான் சார் வர முடியல.கோவிச்சுக்காதீங்க சார்"
"அய்யய்ய நான் சும்மா காமெடிக்கு சொன்னேன்மா. நானும் சினிமாக்காரன்தான எனக்கு தெரியாதா நீ பிசியான நடிகைன்னு?..... சரி என்ன விஷயம் சுபா...சொல்லு?"
"சார் நான் ஒரு பையனை தத்தெடுக்கிறதா இருக்கேன்"
"எதுக்கும்மா திடீர்ன்னு இப்படி ஒரு ஆசை?"
"இது ஆசை இல்லை சார்.என்னோட லட்சியம். அதான், என்னோட குரு காட்பாதர் என்ற முறையில உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லலாம்ன்னு...."
"ரொம்ப சந்தோசம்மா, இன்னைக்கு சினிமா உலகத்துல நன்றி, விசுவாசம் என்கிற சொல்லு மறைஞ்சுக்கு வரும்போது, நீ இவ்வளவு தூரம் வளர்ந்த பின்னாடியும் குருங்கற முறையில என்மேல நீ வச்சுருக்கிற மரியாதையை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கும்மா"
"என்ன சார் இப்படி சொல்லீட்டீங்க. சாதரணமா மாடலிங் பண்ணிட்டு இருந்த என்னை இவ்வளவு பெரிய நடிகையாக்குனது நீங்கதானே சார். அந்த நன்றி எனக்கு எப்போதும் இருக்கும் சார்"
"இது யாருன்னு சொல்லவே இல்லையே?"
"இவ என் கிளாஸ்மேட், இப்ப என்னோட கால்சீட் விவகாரமெல்லாம் இவதான் கவனிக்கிறா"
"சந்தோசம்.என்னம்மா சாப்பிடுறே?"
"ஒன்னும் வேணாம் சார். நான் கிளம்பறேன்"
சுபா கிளம்பினாள். அவளிடம் கவிதா கேட்டாள்
"சுபா எனக்கொரு சந்தேகம். நிஜமாவே நீ அந்தப்பையன தத்தெடுக்க போறியா?"
"ஆமாம், இதிலென்ன சந்தேகம்?"
"இல்லை. இங்கேயே ஆயிரம் அநாதை ஆசிரமம் இருக்கப்போ, கேரளாவுல அதுவும் அந்த குறிப்பிட்ட கிராமத்துல இருக்க பையன போயி தத்தெடுக்க வேண்டிய அவசியம்?"
"கவிதா உன்கிட்ட ஒரு உண்மைய சொல்லணும். நான் மாடலிங் பண்ணிட்டு இருக்கும்போது ஒருத்தனை உயிருக்கு உயிரா காதலிச்சேன். என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதால என்னை நான் அவன்கிட்ட இழந்துட்டேன். அது காரணமா நான் கர்பமாயிட்டேன். திடீர்ன்னு ஒரு நாள் அவன் என்னை விட்டுட்டு வேறொருத்திய கல்யாணம் பண்ணிட்டு போயிட்டான். அன்னைக்கு நான் ரொம்ப வீக்கா இருந்ததால கருவைக்கூட கலைக்க முடியல. அதுனால கேரளாவுல ஒரு கிராமத்துல போயி தங்கிட்டு ஒரு கொழந்தைய பெத்து எடுத்தேன். அவனைத்தான் இப்ப தத்தெடுக்க போறதா சொல்றேன்."
"அப்படியா எனக்கு தெரியாம இவ்வளவு நடந்துருக்கா?. உன் குழந்தையையே தத்தெடுக்கறதா எதுக்கு போய் சொன்னே?"
"இன்னைக்கு சினிமா உலகத்துல தாத்தா, கொள்ளுத்தாத்தா வயசுல இருக்கவங்க எல்லாம் ஹீரோவா மரத்த சுத்தி டூயட் பாடுவாங்க. ஆனால் ஹீரோயினுக்கு கல்யாணாம் ஆச்சுன்னா அடுத்து அவங்கள அம்மா, அக்கா வேசத்துக்கு தான் கூப்பிடுவாங்க. அது இருபது வயசு நடிகையா இருந்தாலும் சரிதான். எனக்கு கல்யாணம் ஆகாம குழந்தை இருக்க விஷயம் தெரிஞ்சா அவ்வளவுதான். இன்னைக்கு உச்சத்துல இருக்க என்னோட மார்கெட் டமால்ன்னு சரிஞ்சுடும். அப்புறம் நானும் அம்மா வேஷம் போடவேண்டியதுதான். அதுனாலதான் என் குழந்தையையே தத்தெடுக்கறதா ஒரு டிராமா பண்ணப்போறேன். என் குழந்தை எனக்கு வந்தமாதிரியும் ஆச்சு. மனிதாபிமானமுள்ள நடிகைன்னு பேரு வந்தமாதிரியும் ஆச்சு. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா."
"அடேங்கப்பா. சரியான ஆளுதாண்டி நீ. இன்னைக்கு தத்து எடுக்கிற எல்லா நடிகைக்கு பின்னாடியும் இந்த மாதிரி கதை இருக்குமோ?"
"அய்யய்யோ, இந்த விளையாட்டுக்கு நான் வரல"

Post Comment

இதையும் படிக்கலாமே:


18 comments:

 1. சூப்பர் கதை..நல்லாருக்கு

  ReplyDelete
 2. நடிகைகள் சிலர் இப்படித்தானோ

  ReplyDelete
 3. லாஜிக்கலான கதை..
  சூப்பர்

  ReplyDelete
 4. லாஜிக்கலான கதை..//repeatu

  ReplyDelete
 5. நடிகைகள் எல்லாம் தத்து எடுக்கிறது இப்படிதானா???????

  ReplyDelete
 6. லாஜிக்கலான கதை..//repeatu//
  அடப்பாவி ஒரு வரி கமெண்ட் எழுத கூட கசக்குதா ரிபீட் போடுறியே

  ReplyDelete
 7. லாஜிக்கலான கதை..//repeatu//அடப்பாவி ஒரு வரி கமெண்ட் எழுத கூட கசக்குதா ரிபீட் போடுறியே///[ma]அப்படி சொல்லி நீங்க ஒரு ரிபீட்டை போட்டுட்டீங்களே....[/ma]

  ReplyDelete
 8. பாஸ் இது உண்மை கதையா ?!

  ReplyDelete
 9. அப்படீன்னா யார் அந்த நடிகை?!

  ReplyDelete
 10. வைகை said... பாஸ் இது உண்மை கதையா ?![si="3"][co="yellow"]இது என்னோட சொந்தக்கதைங்க...சொந்தக்கதைன்னதும் நீங்க ஏதும் தப்பா நினைச்சுக்காதீங்க....அதாவது என் கற்பனையில் உதித்த கதைங்க.....நீங்க என்னை வம்புல மாட்டி விட்ருவீங்க போல....[/co][/si]

  ReplyDelete
 11. சொந்தகதையா .ஓ.கே .ஓ.கே.

  ReplyDelete
 12. "அய்யய்யோ, இந்த விளையாட்டுக்கு நான் வரல..//

  நானும் தான்..

  ReplyDelete
 13. இது கற்பனை எல்லாம் இல்லை... சும்மா கதை விடாதீங்க... எந்த நடிகைன்னு சும்மா கிசுகிசு டைப்புல சொல்லுங்க...

  ReplyDelete
 14. யார் அந்த நடிகை சொல்லுங்க.. இல்ல நீங்கதான் அந்த காதலனா?

  ReplyDelete
 15. ஓட்டு ஓட்டு ஓட்டு எங்க பார்த்தாலும் ஓட்டு, பதிவுலக அரசியலில் எல்லோருக்கும் நிறைய ஓட்டு கிடைக்குதுகாசா பணமா ஒரு கருத்தாவது சொல்லிட்டு போங்களே அதானே

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.