என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, December 18, 2010

34 ஒரு கவிதை- ஒரு சிறுகதை

ஒரு கவிதை(யாம்)

தயவு செய்து குப்பைகளை
குப்பைதொட்டியிலேயே கொட்டுங்கள்....
சுத்தத்திற்காக  இல்லாவிட்டாலும்.
குப்பைகளை பொறுக்கி வயிறு வளர்க்கும்
சிறுவர்களுக்காகவேனும்

================================================

                               
ஜுரம் (சிறுகதை மீள் பதிவு)

 "அடடே வா திலகா. என்ன இவ்வளவு தூரம்?"

"ஒண்ணுமில்லை புவனா, மூணு நாலா உன்னை பார்க்கமுடியலியே, அதான் சும்மா பார்த்துட்டு போகலாம்ன்னு..."

"அதுவா, என் பையனுக்கு உடம்பு சரியில்லை... அதான் வெளில வர முடியல."
"ஏன் என்னாச்சு பையனுக்கு?"

"சரியான ஜுரம். நெருப்பா கொதிக்குது உடம்பு. இருமல் வேற தொலைச்சு வாங்குது. சுருண்டு போய்ட்டான் குழந்தை."

"டாக்டர்ட்ட கூட்டிட்டு போனியா?"

"அதுல்லாம் ஆச்சு. மருந்து மாத்திரை கொடுத்துருக்காரு. ஆனா, ஒண்ணுக்கும் கட்டுப்படற மாதிரி தெரியல."

"இப்ப இருக்க காய்ச்சல சொல்ல முடியல, சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே... இப்ப எங்க பார்த்தாலும் பன்னிக்காய்ச்சல், எலிக்காய்ச்சல்ன்னு பீதிய கிளப்புறாங்க. எதுக்கும் ரத்தத்தை எடுத்து டெஸ்ட் பண்ணி பார்த்துடேன்!"


"அதையும் பார்த்தாச்சு. அதுமாதிரி ஒன்னும் இல்லைன்னுட்டாரு டாக்டரு... வந்தவள உக்காருன்னு கூட சொல்லாம நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். சரி என்ன சாப்பிடுறே திலகா?"

"அதுலாம் ஒண்ணும் வேண்டாம்."

"இல்ல ஏதாவது சாப்பிடு."

"உனக்கு எதுக்கு வீண் சிரமம் புவனா?"

"இதுல ஒரு சிரமமும் இல்ல. மாரியம்மா உள்ளேதான் இருக்கா, அவட்ட சொன்னா செய்ய போறா." என்றவாறு தன் வீட்டு வேலைக்காரியை அழைத்தால் புவனா.

"மாரியம்மா..!"

"என்னம்மா?"- சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்தாள் மாரியம்மாள்.

"ரெண்டு காபி கலக்கேன்."

"சரிம்மா"

"சொல்லு திலகா வேறென்ன சேதி?"

"ஒண்ணுமில்லை.ஆமா, உன் வீட்டுக்காரர் எங்கே ஆளைக்கானாம்?"

"பையன்னுக்கு எழுதிக்கொடுத்த மாத்திரை முடிஞ்சுருச்சு. அதை வாங்க மெடிக்கல் சாப் வரைக்கும் போயிருக்காரு."

"அம்மா காபி" - காபி கொடுத்தவாறு பேசினாள் மாரியம்மாள்.

"அம்மா நீங்க ரெண்டுபேரும் பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன். நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?"

"இல்லை மாரியம்மா சொல்லு."

"அம்மா எங்க ஊர்ல ஒரு பூசாரி இருக்காரு. அவருட்ட பையன கூட்டிட்டு போனா... அவரு துன்னூறு கொடுப்பாரு அதை வாங்கி சாப்பிடக்கொடுத்தா..."
"மாரியம்மா நீ குக்கிராமத்துக்காரி. உங்க கிராமத்துல ஹாஸ்பிடல் எதுவும் இருக்காது. அதான் வேற வழி தெரியாம பூசாரிகிட்ட துன்னூறு வாங்கி சாப்புடறீங்க. நீயும் அப்படித்தான் சொல்லுவே. லட்சக்கணக்குல பணத்தக் கொட்டி நாலு வருசம், அஞ்சு வருசம் அவனவன் டாக்டருக்கு படிச்சுட்டு ஹாஸ்பிடல், கிளினிக்குன்னு நடத்துகிறான்... நீ என்னடான்னா அந்தக்காலம் மாதிரி துன்னூறு, விபூதின்னு கதை சொல்லிட்டு இருக்கே."
"நான் எதிர்த்து பேசறேன்னு நினைக்காதீங்க. எங்க பக்கம் அவரு ரொம்ப கைதேர்ந்தவரும்மா. அவரு மந்திரிச்சு கொடுத்தா எந்த மாதிரி வியாதியும் பறந்துடும்மா."

"மாரி... உன் நம்பிக்கையை உன்னோடு வச்சுக்க. இதுலாம் எனக்கு நம்பிக்கை இல்லை."

"புவனா, மாரியம்மா சொல்ற மாதிரி ஒருதடவைதான் கூட்டிட்டு போய்த்தான் பாரேன்."

"என்ன திலகா நீ படிச்சவ மாதிரி பேசு. இந்த துன்னூறு விபூதி எல்லாம் சுத்த ஹம்பக். அவ சொல்ற மாதிரி எல்லா வியாதியும் அந்த துன்னூருல சரியா போச்சுனா, அப்பறம் டாக்டர் எதுக்கு? ஹாஸ்பிட்டல் எதுக்கு?"

"அப்படி சொல்லாதே. சில விஷயங்கள் உண்மை. நம்ம கண்ணுக்கு தெரியாம எவ்வளவோ விஷயங்கள் நடக்குது. அவதான சொல்றாளே? நிறையா பேருக்கு குணமாகிருக்குன்னு..?"

"குணமாகிருக்கலாம். நான் மறுக்கல... அதுக்குக் காரணம் அந்த பூசாரி கொடுத்த துன்னூறு இல்லை. வாங்குனவங்க மனசு.
அதாவது வியாதிங்கறது  அம்பது சதவீதம் மருந்தாலும், அம்பது சதவீதம் மனசாலும் குணமாகுது. வியாதி குணமாக மனசும் ஒரு முக்கியமான காரணம்."

"அதை நானும் ஒத்துக்கறேன். இருந்தாலும் நீயும் வியாதி குணமாகும் என்ற நினைப்போடு போய்த்தான் பாரேன்."

புவனா வேண்டாவெறுப்பாக தலையாட்டி வைத்தாள்.


"சரி மாரியம்மா நான் வர்றேன். இப்ப என் மகன் இருக்க நிலமையில அவனுக்கு நடக்கக்கூட தெம்பில்லை. நாளைக்கு போகலாமா?"

"நாம பையன கூட்டிக்கு போகணும்ன்னு கூட அவசியமில்லைம்மா. நம்மமட்டும் போயி பூசாரிட்ட விஷயத்தை சொல்லி துன்னூறு வாங்குவோம்."

"சரி எப்ப போகலாம்?"

"இன்னைக்கு சாயங்காலம் போவோம்மா."

"ஓகே. நீதான் கூட்டிட்டு போகணும்"

"சரிம்மா."

மாலை ஒரு வாடகை காரில் இருவரும் கிளம்பினார்கள்.

பூசாரியின் வீட்டு வாசலில் போய் கார் நின்றது.
 காரிலிருந்து இறங்கிய மாரியம்மாள் பூட்டியிருந்த பூசாரி வீட்டு கதவை தட்டினாள். உள்ளிருந்து பூசாரியின் மனைவி எட்டிப்பார்த்தாள்.

"மாரியம்மாவா, வா... இது யாரு?"

"இது என் முதலாளியம்மா. பூசாரி அய்யா இல்லையா?"

"இல்லியே, அவரு பக்கத்துக்கு டவுன் வரைக்கும் போயிருக்காரு."

"எப்ப வருவாரு?"

"யாருக்கு தெரியும். டாக்டர பாத்த உடனே வந்துடுவாரு."

"டாக்டரா?"

"ஆமாம் மாரியம்மா. என் மகனுக்கு ரெண்டு நாளா ஒரே காய்ச்சல். அதான் டவுன்ல இருக்க டாக்டர்ட்ட காட்டிட்டு வரலாம்ன்னு அவன தூக்கிட்டு போயிருக்காரு. ஆமா நீங்க எதுக்கு வந்தீங்கன்னு சொல்லவே இல்லையே?"
================================================================


Post Comment

இதையும் படிக்கலாமே:


34 comments:

 1. கவிதையில் சொல்ல வந்த கருத்து சூப்பர்!!மனதை என்னவோ சிந்திக்க செய்துவிடுகிறது

  ReplyDelete
 2. யோசிக்க வைக்கும் எழுத்து

  ReplyDelete
 3. சி.பி.செந்தில்குமார் said...
  உங்க நடை சூப்பர்[ma]ஆஹா....வசிஷ்டர் வாயில் பிரம்மரிஷி பட்டம். நன்றி தல...[/ma]

  ReplyDelete
 4. கவிதை...

  கதை....

  இரண்டுமே சூப்பர் ரகம்...

  அதுவும் அந்த சிறிய கவிதை ரொம்பவே நெகிழ்வு...

  ReplyDelete
 5. நல்லா அருமையா சொல்லி இருக்கீங்க

  ReplyDelete
 6. வலது பக்கம் உள்ள் லின்கு பதிவுஎல்ல்லாம் ரொம்ப டார்க்கா இருக்கு
  படிகக் முடியல் எழுத்துக்கு ஏற்றார்போல் பேக்ரவுண்டு கலரா மாற்றினா பதிவு படிக்க ஈசியா இருக்கும்.

  ReplyDelete
 7. எல்லா வியாதியும் அந்த துன்னூருல சரியா போச்சுனா, அப்பறம் டாக்டர் எதுக்கு? ஹாஸ்பிட்டல் எதுக்கு?"
  100% உண்மை!...

  ReplyDelete
 8. இரண்டும் அருமை.... பாதை வேறானாலும் நோக்கம் ஒன்றல்லவா...

  ReplyDelete
 9. அருமையான கதை...கருத்துள்ள கதை

  ReplyDelete
 10. சார் ஒட்டு போட்டாச்சு ....

  தொடருங்கள் பாதையை வழிகாட்ட மின்னி மினி பூச்சிகளாய் நான் என்றும்

  ReplyDelete
 11. பலரையும் சென்றடைய, வாக்களித்து விட்டேன். :-)

  ReplyDelete
 12. நல்லாயிருக்குங்க கதை..

  தமிழ்மணம், இன்ட்லி இரண்டிலும் வாக்களித்தாச்சு.. :-)

  ReplyDelete
 13. அருமையான கதை அதோடு உங்கள் கவியும் அருமை பாராட்டுக்கள்

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  ReplyDelete
 14. நல்லாருக்கு கவிதையும் கதையும் கருத்தும் அருமை

  ReplyDelete
 15. சத்தியமா ஓட்டு போட்டு விட்டேன் நண்பா, சந்தோசமா?

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. இரவு வானம் saidசத்தியமா ஓட்டு போட்டு விட்டேன் நண்பா, சந்தோசமா?நம்புறேன். சந்தோசம் நண்பா...

  ReplyDelete
 18. கவிதை என்று சொல்வதை விட இதை உணர்வுகளின் உச்சம் என்று சொல்லவேண்டும் அருமையான சிந்தனை . மீள் பதிவு என்றாலும் மீண்டும் அதன் சிறப்புக் குறையாமல் ரசிக்க வைக்கிறது . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 19. நல்ல சிறுகதை பாராட்டுகள் . இப்படித்தான் பலர் ஏமாறுகின்றனர். உண்மை எது போலித்தனம் எது என்பதை தெரிந்து கொள்வதில்லை . உண்மை தூங்குகிறது .பாவம் அறியாமை நிறைந்த மக்கள் .

  ReplyDelete
 20. சிறுகதைக்கு பாராட்டுக்கள் ...

  ReplyDelete
 21. தயவு செய்து
  குப்பைகளை மட்டும்
  குப்பைதொட்டியில்
  கொட்டுங்கள்....
  குழந்தைகளை
  வேண்டாம்...

  எப்பூடி...

  ReplyDelete
 22. எழுதும் விதம் நல்லாயிருக்குங்க..
  ஓட்டுக்கேட்ட விதம் ரொம்ப அருமைங்க..
  அப்புறம் எதாவது போட்டி வைச்சா சொல்லி அனுப்புங்க...

  ReplyDelete
 23. அருமை நண்பரே

  ReplyDelete
 24. இரண்டுமே அருமை,கவிதை நச்சுன்னு இருக்கு ........

  ReplyDelete
 25. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 26. உங்க நடை அருமை... சூப்பர் ஃபினிசிங்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.