என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Sunday, December 12, 2010

16 ஜெயலலிதா- விஜய் அப்பாவிடம் பேசியது என்ன- வெளிவராத தகவல்கள்.

தமிழின் முன்னணி20 வலைப்பதிவுகள் பட்டியலில் இந்த வாரமும் எனக்கு இடமளித்த(9-தாவது இடம்) தமிழ்மணத்திற்கும், காரணமாக இருந்த சக வலைப்பதிவு நண்பர்களுக்கும் நன்றி. 
நேற்று விஜய்-ஜெயலலிதா சந்திப்பின்பேச்சுக்கள் அடங்கிய  முதல் பாகம் வெளிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் பாகம் வெளியிடலாமென்று இருக்கும் போது, நம்ம புலனாய்வு புலி கப்சா பாண்டி அவர்கள், விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் பேச்சு அடங்கிய சி.டி-யை நமக்கு அனுப்பியிருந்தார். ..... 
ஜெயா-விஜயின் சந்திப்பின் போது நடந்த பேச்சுக்களின் முக்கிய விஷயங்கள்  இப்போது ஜெயா-சந்திரசேகரின் சந்திப்பின் போதும் பேசப்பட்டிருப்பதால் நேரடியாக இதையே வெளியிட்டிருக்கிறோம்.இனி.......

ஜெ; வாங்க...சார்....எப்படி இருக்கீங்க...

ச: நல்லாருக்கேன் மேடம். தம்பி சொல்லுச்சு நீங்க வரச்சொன்னதா.....

ஜெ: ஆமா, ஏன் விஜய் வரலயா.....

ச: அவருக்கு பீகார்ல ஒரு சிலை  திறக்கறாங்க...அதான் அங்கே போயிட்டாரு....அப்படியே பத்துநாள் வெளிநாட்டு டூர் போயிடுவாரு...
.
ஜெ: ரெண்டுநாளுக்கு முன்னாடி நாங்க சந்திச்சோம். அப்போ இது பத்தி சொல்லலியே....

ச: திடீர்னு முடிவு எடுத்து போயிட்டாரு...நம்மட்ட தொழில் கத்துக்கிட்ட ஷங்கரு ஒரு படம் எடுக்கறாரு....அந்தப்படத்துல தம்பிய நடிக்கசொல்லி கேட்டாரு...தம்பியும் சரின்னுருச்சு....அப்புறம் பார்த்தா ஏதேதோ ரூல்ஸ் போட்டாராம் ஷங்கரு.....என் கிட்ட அசிஸ்டெண்டா ஷங்கரு இருக்கப்போ விஜய் சின்ன பய....அப்போ ஷங்கருதான்  கடைக்கு தூக்கிட்டு போயி கமருகட்டும், கல்கோனாவும் வாங்கிக்கொடுப்பாரு...அந்த உரிமையில ஷங்கரு போட்ட கண்டிசனுக்கு விஜய் ஒத்துக்கல....உடனே அவரு கோவமாகி தம்பிய வேனான்னுட்டாராம். போய்யா...திரீ இடியட்சும் வேணாம், போர் இன்டலிஜெண்டும் வேணாம்ன்னு கடுப்பாகி வெளிநாடு போறாரு...

ஜெ:அம்மாவ பார்க்க போகணும் கூட்டணி பத்தி பேசனும்ன்னு   நீங்க தடுத்து நிறுத்த வேண்டியதுதானே.... 

ச: அவரு முடிவெடுத்திட்டா அவரு பேச்ச அவரே கேக்க மாட்டாரு...

ஜெ :ஏன் உங்க மகன் லூசா?

ச : அய்யய்யோ...அப்படிலாம் இல்லை மேடம். எடுத்த முடிவுல உறுதியா இருப்பாருன்னு சொல்ல வந்தேன்.  அதோடு இன்னொரு பிரச்சினை மேடம்,காவலன் ஓடும் தியேட்டர் வாசல்ல ஆம்புலன்ஸ் நிறுத்தி வப்பீங்களா...படம் பாக்கறவங்களுக்கு எதாச்சும் ஆச்சுன்னா என்னபன்றதுன்னு ஒரு நாளைக்கு ஆயிரம் எஸ்.எம்.எஸ். வந்துக்கே இருக்கு. அதான் இந்த தொல்லைலாம் வேணாம்ன்னு கிளம்பிட்டாரு...

ஜெ: அப்படியா....இது கருணாநிதியோட சதியா இருக்கும். சரி நம்ம விஷயத்துக்கு வருவோம். விஜய் கிட்ட பேசிட்டேன். அவரும் நம்ம கூட்டணிக்கு வர சரின்னுட்டாரு...ஆனா சீட்டுதான் கொஞ்சம் அதிகமா கேக்கறாரு....நம்மளோட நிறையா பேரு கூட்டணிக்கு வர்றதால ஒரு முப்பது  சீட்டு உங்களுக்கும், விஜயகாந்துக்கு ஒரு அம்பது சீட்டும் தர்றேன்னேன்.....இல்லேம்மா எல்லா சீட்டையும் என்கிட்டே கொடுங்க....விஜயகாந்துக்கு நாங்க பிரிச்சு கொடுத்துக்கறோம்.விஜயகாந்த் எங்கப்பாவாலதான் மேல  வந்தாரு...அதுனால எங்கப்பா சொல்றத கேப்பாருன்னு சொல்றாரு...
.
ச: உண்மைதான் மேடம் என்கிட்டே நூறு சீட்  கொடுத்திடுங்க...விஜயகாந்துக்கு ஒரு அஞ்சோ பத்தோ கொடுத்துட்டு மீதிய நாங்களே வச்சுக்கவோம்.

ஜெ: நூறா அதெல்லாம் முடியாது...முப்பதுதான் தருவேன். எங்ககிட்டேயும் நிறைய கட்சி கூட்டணியில இருக்கு. வைகோவுக்கு இருபது சீட்டாவதும் கொடுத்தாகணும்.

ச: அவருக்கு எதுக்கு அவ்வளவு சீட்டு...சீட்டும் கொடுத்து வேட்பாளரும் நீங்கதான் கொடுக்கறமாதிரி இருக்கும், போட்டிபோட அவரு கட்சியில ஆளே இல்லையே...

ஜெ: அவரோட சின்சியாரிட்டுக்கு முன்னால ஒ. பன்னீர்செல்வம் கூட நிக்கமுடியாது....அவருக்கு ஒரு கட்சி இருக்கதையே மறந்துட்டு, அவரு அறிவிக்கப்படாத எங்க கட்சியோட கொள்கை பரப்பு செயலாளர் போல நடந்துக்கறார் தெரியுமா? இப்பக்கூட பாருங்க கலிங்கப்பட்டியில ஆளே இல்லாத ஒரு முட்டு சந்துல மீட்டிங் போட்டு கருனாநிதிய திட்டிக்கு இருக்கிறதா ரபி பெர்னாட் சொன்னாரு....அவரோட விசுவாசத்துக்காக வேண்டி இருபது சீட் கொடுக்கத்தான் வேணும். 

ச: அப்படின்னா..ஜெயிச்சதும் துணை  முதல்வரா விஜயை அறிவிச்சுடுங்க.....

ஜெ: அதெல்லாம் முடியாது வேணும்னா கால்நடைத்துறை மந்திரியாக்குறேன்.

ச: அப்படியா சந்தோசம் மேடம், அப்படியே என்னையும் ஒரு மந்திரியா......

ஜெ: ஸ்டாப்.....இதுஎன்ன  கருணாநிதி குடும்பமா எல்லோரையும் மந்திரியாக்குறதுக்கு...சரி...சரி...கேட்டுட்டீங்க....உங்கள சபாநாயகர்  ஆக்கிடுறேன். ....ஆனா ஒரு கண்டிசன்...சசிகலா எப்பவாவது சட்டசபைக்கு வந்தா..நீங்க எந்திரிச்சு உங்க சபாநாயகர் நாற்காலியை  அவங்களுக்கு விட்டுத்தரனும்.

ச; அதெப்படி மேடம் முடியும்...அது தவறான முன்னுதாரணமா ஆகிடுமே...
.
ஜெ: அதுபத்திஎல்லாம் நீங்க கவலை படாதீங்க...இதுக்கு முன்னாடி சபாநாயகரா இருந்த சேடப்பட்டி முத்தையா அப்படித்தான் பண்ணுவாரு...சரியா?

ச: எதுக்கும் விஜய் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டு....

ஜெ: ஓகே....நீங்க தாராளமா கிளம்பலாம். முடிவு பண்ணி வையுங்க....நான் செங்கோட்டையனை அனுப்பறேன்...

ச: ரொம்ப நன்றி மேடம்.....

இதற்க்கு  முந்தைய விஜய்-ஜெயலலிதா சந்திப்பு பற்றிய செய்திக்கு இங்கே கிளிக் பண்ணவும்  

Post Comment

இதையும் படிக்கலாமே:


16 comments:

 1. நடிகர் விஜய் - ஒரு சுவையான பயோடேட்டா.

  http://bharathbharathi.blogspot.com/2010/12/blog-post_12.html

  ReplyDelete
 2. சினிமா, அரசியல் இரண்டையும் ஒரே பதிவில் கலாய்ச்சிடிங்க.. ...
  ரைட்டு... நடக்கட்டும்..

  ReplyDelete
 3. ஒரே நாளில் இரண்டு பதிவுகள்...
  nice

  ReplyDelete
 4. நல்ல நகைச்சுவையா எழுதறீங்க கஸாலி. தொடர்ந்து இந்த மாதிரி எழுதுங்க.

  ReplyDelete
 5. //ஜெ :ஏன் உங்க மகன் லூசா?//
  ha ha ha :-)

  ReplyDelete
 6. //ச: அவருக்கு பீகார்ல ஒரு சிலை திறக்கறாங்க...அதான் அங்கே போயிட்டாரு....அப்படியே பத்துநாள் வெளிநாட்டு டூர் போயிடுவாரு...//

  எஸ்.ஏ.சி. டப்பு குடுத்தா ஆபிரிக்காவிலையும் சிலை திறப்பாங்க!!

  ReplyDelete
 7. செம காமெடி ....... கலக்கிறிங்க ஒரே நாளில் இரு பதிவு ...அருமை ...தொடரட்டும் .....

  ReplyDelete
 8. #காவலன் ஓடும் தியேட்டர் வாசல்ல ஆம்புலன்ஸ் நிறுத்தி வப்பீங்களா...படம் பாக்கறவங்களுக்கு எதாச்சும் ஆச்சுன்னா என்னபன்றதுன்னு ஒரு நாளைக்கு ஆயிரம் எஸ்.எம்.எஸ். வந்துக்கே இருக்கு. அதான் இந்த தொல்லைலாம் வேணாம்ன்னு கிளம்பிட்டாரு...#  எப்படி இப்படி எல்லாம் எழுதுறிங்க......

  ReplyDelete
 9. ச: அவரு முடிவெடுத்திட்டா அவரு பேச்ச அவரே கேக்க மாட்டாரு...ஜெ :ஏன் உங்க மகன் லூசா?

  ReplyDelete
 10. an da Naye ne oluga ve unmaya elutha matiya apram ethuku ne appasama elutha venamunu vera soldra first ne unmaya elutha palagu mathavanuku advise panu ippa ne manusana illa panniya nu unaku terium

  ReplyDelete
 11. @allavudeenஎது உண்மை, எது கற்பனைன்னு தெரிஞ்சுக்காம படிச்ச உன்னை மாதிரி வென்னைகளை நினைச்சா சிரிப்புதாண்டா வருது.

  ReplyDelete
 12. செம காமெடி பாஸ்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.