என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, December 10, 2010

31 ஜெயலலிதாவை சந்தித்தார் விஜய்-பரபரப்பு தகவல்கள்.

ன்று புரட்சித்தலைவலி செல்வி ஜெயலலிதாவை இளைய தலைவலி  டாக்டர் விஜய்  கொடநாட்டில் ரகசியமாக சந்தித்ததாக, கொடநாட்டிலேயே கூடாரமடித்து தங்கியிருக்கும் எமது புலனாய்வு புலி கப்சா பாண்டி நமக்கு தகவல் அனுப்பியுள்ளார். மேலும் அவர்கள் என்ன பேசினார்கள் என்று அவர்களுக்கு தெரியாமல் நம்ம கப்சா  பாண்டி தனது  அலைபேசியின்  ரெக்கார்ட் பட்டனை தட்டி அதை விஜயின் கோட்டில் வைத்து மிகவும் துணிச்சலாக பதிவு செய்துள்ளார்.  விக்கிலீக்ஸ் போல விஜய் லீக்ஸ் என்று இந்த ஆப்பரேசனுக்கு பெயர் சூட்டியுள்ளார். அவர்களின் உரையாடல்களை உலக தமிழ் வலைபதிவு வரலாற்றில் முதன் முறையாக தருவதில் நாம் பெருமை கொள்கிறோம். இனி.....

ஜெ என்று வருமிடத்தில் ஜெயலலிதா என்றும், வி என்று வருமிடத்தில் விஜய் என்றும்  அர்த்தம் செய்து கொள்ளுங்கள்.

ஜெ: அடடே வாங்க....விஜய்,  எப்படி இருக்கீங்க....
வி: வணக்கம் மேடம்.

ஜெ: என்ன விஷேசம். இவ்வளவு தூரம் வந்துருக்கீங்க....
வி: சும்மாதான் மேடம், ஒரு இருபது நாளா உங்கள சந்திக்க போயஸ்   கார்டன்  போய்  வாசல்லையே நானும்,எங்கப்பாவும்  உக்கார்ந்து  இருந்தோம் . யாருமே  வந்து கதவை திறக்கல.....

ஜெ: நான் இருந்தாத்தானே கதவ திறப்பாங்க....நீங்க எதுக்கு அங்கே போனீங்க....நான் தேர்தலுக்கு தேர்தல்தான் அங்கே வருவேன்னு உங்களுக்கு தெரியாதா?
வி: நீங்க எந்த கூட்டணி கட்சித்தலைவர் வந்தாலும் வாசலிலே காக்க வச்சு அப்புறம்தான் கதவ திறப்பீங்கன்னு சொன்னாங்க...அதான் நீங்க உள்ளே இருந்துக்கு கதவ திறக்கலியோன்னு நினைச்சோம். நேத்துக்கூட பாருங்க....காலையிலேர்ந்து பச்சத்தண்ணி குடிக்காம போயி உக்கார்ந்திருந்தோம். உங்க வாட்ச்மேன்தான் பரிதாபப்பட்டு ரெண்டு வடையும் டீயும் வாங்கித்தந்தாரு. அப்பறம் அவரு சொல்லித்தான் நீங்க இங்கே இருக்கற விஷயம் தெரியும்.

ஜெ; அடப்பாவமே....சரி...நடந்தது நடந்துருச்சு...இப்ப என்ன செய்தின்னு.....
வி: அதுவந்து மேடம்....நான் நடிச்ச காவலன் படத்தை வெளியிட விடாம இந்த தி.மு.க-காரங்க சதி பண்ணுறாங்க....தமிழ்நாட்டுல இருக்க எல்லா தியேட்டரையும்  அவங்க குத்தகைக்கு எடுத்ததுக்கு எங்களுக்கு ஒரு தியேட்டரு கூட தராம  அழிச்சாட்டியம் பன்றாங்கமேடம்.

ஜெ: உங்க படத்தைவிட இது ரொம்ப கொடுமையா இருக்கே....நீங்க நேரா ஹோம் தியேட்டருல ரிலீஸ் பண்ணிடுங்களேன்....
வி: ஹோம்  தியேட்டரா?

ஜெ: ஆமாங்க....நேரடியா டி.வி.டி. ரிலீஸ் பண்ணிடுங்க....எல்லோரும் அவங்கவங்க ஹோம்  தியேட்டருல பார்த்துக்கட்டும்.
வி: மேடம் பட்ஜெட் கொஞ்சம் பெருசு....டி.வி.டி-ல ரிலீஸ் பண்ணா நிறையா நட்டப்படும்.

ஜெ: என்ன நீங்க புரியாம பேசிட்டு இருக்கீங்க....உங்க படத்த யாரு தியேட்டருக்கு வந்து பார்க்கறாங்க....திருட்டு டி.வி.டி வாங்கித்தான் பார்க்கறாங்க...அதுக்கு நேரடியாவே டி.வி.டி- ரிலீஸ் பண்ணிடலாமேன்னு சொன்னேன். சரி...இப்படி பண்ணினா என்ன?
வி : எப்படி மேடம்?

ஜெ: தேர்தல் அறிவிச்ச உடனே படத்தை வெளியிடுங்கள் என்று ஒரு ஒப்பந்தத்தோடு நீங்க கலைஞர் டி.வி-க்கு வித்துடுங்களேன்.
வி: மேடம் நீங்க போயி அந்த டி.வி-க்கு.....

ஜெ:காரணத்தோட தான் சொல்றேன். தேர்தல் சமயத்துல அவங்க  டி.வி-ல  உங்க படத்தை போட்டா,நீங்க நடிச்சுருக்கத பார்த்து  மக்கள்லாம் கருணாநிதிமேல கடுப்பயிடுவாங்க...அதை பயன்படுத்தி காவலன் படத்தை கலைஞர் டி.வி-யில் வெளியிட்டு மக்களை கொல்லப்பார்த்த கருணாநிதிக்கா உங்க வோட்டுன்னு ஒரு அறிக்கைய விட்டு ஓட்டை அள்ளிட மாட்டோம்.
வி: மேடம் அத விடுங்க...நான் உங்க கட்சியோடு....கூட்டணி வச்சுக்கலாம்ன்னு....

ஜெ: கூட்டணியா....நீங்க கட்சியே ஆரம்பிக்கலயே....
வி:நீங்க கூட்டணிக்கு ஒத்துக்கிட்டா நாளைக்கே ஆரம்பிச்சுட வேண்டியதுதான் மேடம்.

ஜெ : உங்கள நம்பி யாரு ஓட்டு போடுவாங்க...
வி: மேடம் இன்னைக்கு ரஜினிக்கு அடுத்து எனக்குத்தான் மாஸ்

ஜெ: அப்படியா? சந்தோசம். ஓட்டு போடுவாங்களா?
வி: என்ன மேடம் இப்படி கேட்டுட்டீங்க....நான் அரசியலுக்கு வர்றேன்னு ஒரு அறிக்கை விட்டா போதும். அப்புறம் பாருங்க மக்கள் என் பக்கம்தான்.

ஜெ: எப்படி இவ்வளவு நம்பிக்கையா சொல்றீங்க...

அப்போது சசிகலா குறுக்கிட்டு.....
ஆமாக்கா நிஜம்தான். இவரு சினிமாவுல  நடிச்சு மக்களை  தொந்தரவு பண்றாரு, அரசியலுக்கு வந்துட்டா சினிமா பக்கம் வரமாட்டாருல்ல, அதுக்காக வாச்சும் ஓட்டு போடுவாங்க...பேசாம நாம இவரோடவே  கூட்டணி வச்சுக்கலாம்கா...
.
ஜெ: அப்படியா சொல்றே சசி...ஓகே...நம்ம கூட்டணி வச்சுக்கலாம்....

அதன் பிறகு நடந்த திகுதிகு பேரங்கள்....யாருக்கு எத்தனை சீட் போன்ற விபரங்கள் நாளை தொடரும்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


31 comments:

 1. அப்பாடா வடை எனக்குதான்.....

  #ஜெ: உங்க படத்தைவிட இது ரொம்ப கொடுமையா இருக்கே#

  கடுமையான காமெடி போங்க.....

  ReplyDelete
 2. அய்யகோ..!!! என்ன கொடுமை இது..!! வடைக்கு இவ்வளவு தட்டுப்பாடு ஏற்படுகிறதே.,!!
  அடடா...!!
  மறுபடியும் வடை போச்சே..!!

  ReplyDelete
 3. செம்ம கலக்கல்... :-))தொடருங்கள்.......

  ReplyDelete
 4. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு.

  ReplyDelete
 5. //உங்க வாட்ச்மேன்தான் பரிதாபப்பட்டு ரெண்டு வடையும் டீயும் வாங்கித்தந்தாரு. //

  அடடா..! இங்கேயும்..
  டீ வடை யா..!! இப்ப வடைதான் எங்க பார்த்தாலும் பேமஸா.. இருக்கு..!! பேசாம ஒரு வடை கம்பெனி ஆரம்பிக்கலாம் போலிருக்கிறேதே..!!! ஹி..ஹி..ஹி...

  ReplyDelete
 6. அண்ணாத்த... மெய்யாலுமே..!! சொல்லுறேன்.,!!! ஹெ..ஹெ..ஹே.. பதிவு செம கலக்கல்.. படிக்கும் போதே.. லக்க.. லக... லகனு சிரிப்பு வருதுன்னா.. பார்த்துக்கோங்க... சூப்பரோ.,! சூப்பர்..! தொடருங்கள்..!

  ReplyDelete
 7. ரைட்டு.... நல்லாவே நடக்கட்டும்..

  ReplyDelete
 8. //வடைக்கு இவ்வளவு தட்டுப்பாடு ஏற்படுகிறதே.,!!//

  ReplyDelete
 9. கலக்கல் .... பின்னிரிங்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. //வடைக்கு இவ்வளவு தட்டுப்பாடு ஏற்படுகிறதே.,!!////ஹி ஹி ஹி

  ReplyDelete
 11. :) :) :) :) :) :) :) :) :) :) :) :)........

  ReplyDelete
 12. புரட்சித்தலைவிக்கு இப்படி ஒரு சோதனை

  ReplyDelete
 13. புரட்சித்தலைவிக்கு இப்படி ஒரு சோதனை

  ReplyDelete
 14. புரட்சித்தலைவிக்கு இப்படி ஒரு சோதனை

  ReplyDelete
 15. புரட்சித்தலைவிக்கு இப்படி ஒரு சோதனை

  ReplyDelete
 16. டைட்டில் டாப்பு,மேட்டர் டூப்பு,செம கலக்கல் மாப்பு

  ReplyDelete
 17. மாங்கு மாங்குன்னு என்னத்த எழுதினாலும் ஓட்டுதான் போட மாட்டேங்குறீங்க...காசா பணமா ஒரு கருத்தையாவது சொல்லிட்டு போங்களேன்

  நக்கலு?

  ReplyDelete
 18. சி.பி.செந்தில்குமார்டைட்டில் டாப்பு///[MA]பரபரப்பா டைட்டில் வைப்பது எப்படின்னு உங்களைப்போன்ற பதிவுல ஜாம்பவான்களிடம் கத்துக்கொண்டதுதான் தல....[/MA]

  ReplyDelete
 19. //ஜெ: உங்க படத்தைவிட இது ரொம்ப கொடுமையா இருக்கே....நீங்க நேரா ஹோம் தியேட்டருல ரிலீஸ் பண்ணிடுங்களேன்....//
  super! :-))

  ReplyDelete
 20. //வி: மேடம் இன்னைக்கு ரஜினிக்கு அடுத்து எனக்குத்தான் மாஸ்//

  கடவுளே.......

  ReplyDelete
 21. கடுமையான காமெடி போங்க....//மிக மிக

  ReplyDelete
 22. வடைக்கி ரொம்ப கிராக்கி போல. பக்கத்திலேயே ஒரு வட கட போட்டுட்டா:)))

  ReplyDelete
 23. விஜய்யின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும்..........

  ReplyDelete
 24. நல்ல காமெடி வாழ்த்த்கள்

  ReplyDelete
 25. எங்க சங்கத்து ஆள அடிச்சவன் எவன்?!!!

  ReplyDelete
 26. மொக்கை விமர்சனம்

  ReplyDelete
 27. ரெண்டு வடையும் டீயும் வாங்கித்தந்தாரு////
  இப்போ நம்ம கோமாளி செல்வா ஓடி வருவான் பாருங்க வடை திங்க....

  ReplyDelete
 28. இளைய தலைவலிஇவன் ஒரு வேஸ்ட்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.