என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, December 16, 2010

14 அதென்ன மிசா அல்லது எமெர்ஜென்சி (இறுதி பாகம்)

 1980 ஜனவரியில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது. மீண்டும் ஆட்சிக்கு வர இது ஒரு அரிய சந்தர்ப்பம் என்பதை இந்திரா உணர்ந்திருந்தார். இந்தியா முழுவதும் மின்னல் வேக சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார். 62 நாட்களில் மொத்தம் 40 ஆயிரம் மைல் சுற்றுப்பயணம் செய்தார். இந்தத் தேர்தலில், இ.காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றது. பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 525 இடங்களில் 351 இடங்களை இ.காங்கிரஸ் கைப்பற்றியது.

அதாவது, மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி கிடைத்தது. பிரதான எதிர்க்கட்சியான சரண்சிங் தலைமையிலான மக்கள் கட்சி (ஜனதா) 41 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி, ஆந்திராவில் உள்ள மேடக் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட இந்திரா காந்தி, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். குறிப்பாக, மேடக் தொகுதியில், 2,19,091 ஓட்டு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். இந்திராவுக்கு 3,01,465 ஓட்டுகளும், எதிர்த்துப் போட்டியிட்ட ஜெய்பால் ரெட்டிக்கு வெறும் 82,374 ஓட்டுகளும் கிடைத்தன. அமேதி தொகுதியில் போட்டியிட்ட சஞ்சய்காந்தி ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பிரதமராக இந்திரா காந்தி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனவரி 14_ந்தேதி மந்திரிசபை பதவி ஏற்பு விழா நடந்தது. ஜெயில்சிங் (உள்துறை), ஆர்.வெங்கட்ராமன் (நிதி), பிரணாப் முகர்ஜி (வர்த்தகம்), பி.வி.நரசிம்மராவ் (வெளி விவகாரம்), ராவ் பிரேந்திரசிங் (விவசாயம்), கமலபதி திருபாதி (ரெயில்வே) உள்பட 14 பேர் காபினெட் மந்திரிகளாகவும், ஆர்.வி.சாமிநாதன் (விவசாயம்), ஜாபர் ஷெரீப் (ரெயில்வே) உள்பட 6 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி சஞ்சீவரெட்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

வருத்தம் தெரிவித்தார்
மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்ற இந்திரா காந்தி, நெருக்கடி நிலையின்போது நடந்த தவறுகளுக்காக வருத்தம் தெரிவித்தார். இனி இப்படிப்பட்ட தவறுகள் நடக்காது என்று உறுதி அளித்தார்.

இந்தத் தேர்தலில், தமிழ்நாட்டில் இ.காங்கிரசும், தி.மு.க.வும் கூட்டு சேர்ந்து போட்டியிட்டன. (அப்போது முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தார்) தி.மு.க _ இ.காங்கிரஸ் கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. 24 இடங்களில் போட்டியிட்ட இ.காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்றது. 16 இடங்களில் போட்டியிட்ட தி.மு.கழகம், 16 இடங்களிலும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. கூட்டணிக்கு 2 இடங்களே கிடைத்தன.

தமிழ்நாடு தவிர மற்றும் 7 மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத அரசுகள் தோல்வி அடைந்தன. தமிழ்நாடு உள்பட 8 மாநில அரசுகளையும் கலைத்து விட்டு தேர்தல் நடத்த, மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி தமிழ்நாட்டில் பதவியிலிருந்த எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசும், மற்றும் 7 மாநில அரசுகளும் கலைக்கப்பட்டன. இந்த மாநிலங்களில் தேர்தல் நடந்தது. தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஒரிசா ஆகிய மாநிலங்களில் இ.காங்கிரஸ் வெற்றி பெற்றது.
 இத்துடன் இந்த தொடர் நிறைவு பெறுகிறது
முந்தைய பாகங்கள்
பாகம்-1 , 2 , 3, 4, 5,6, 7 8
9நண்பர்களே.....சில பத்திரிகைகளில் நான் படித்ததை தொகுத்து, இடையிடையே நான் கேள்விப்பட்ட விஷயங்களையும் சேர்த்து இந்த கட்டுரையை உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.நான் படித்த ஒரு விஷயம் இந்த தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த சிறு முயற்சியை  எடுத்துள்ளேன். தயவுசெய்து காப்பிரைட் பிரச்சினையை எழுப்பவேண்டாம்.
நிறைய நண்பர்கள் இந்த கட்டுரையை நான் எழுதுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது என் எழுத்து நடையே அல்ல....இந்த கட்டுரைக்கு நான் ஒரு தொகுப்பாளர் மட்டுமே....

Post Comment

இதையும் படிக்கலாமே:


14 comments:

 1. பாடம் முடிஞ்சிருச்சு.... அடுத்த வாரம், எக்ஸாம்...
  :-)

  ReplyDelete
 2. கட்டுரைக்கு நான் ஒரு தொகுப்பாளர் மட்டுமே...//
  சொன்ன விதம் அருமை.......
  :)

  ReplyDelete
 3. வணக்கம் புதியதாக ஒரு தளம் ஆரம்பித்துள்ளோம் தங்களின் படைப்புகளை இதில் வெளியிட வேண்டுகிறோம் http://tamilthirati.corank.com/

  ReplyDelete
 4. அழகாக சொல்லியிருக்கறீங்க...

  ReplyDelete
 5. யப்பா........

  பெரிய தொடர் பாடம் முடிஞ்சுச்சு...

  அடுத்த வாரம் எக்ஸாம் வைப்பீங்களா?

  ReplyDelete
 6. தொடர்ந்து எங்களுக்கு பல தகவல்களை தெரியசெய்தமைக்கு நன்றி. தலைப்பில் வேறொன்று எழுதினால் நன்றாக இருக்கும்

  ReplyDelete
 7. நல்ல பல தகவல்கள் அறிய முடிந்தது,,,,,வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 9. அட.... வலைப்பூ கலக்கலா மாறியிருக்கு...

  ReplyDelete
 10. முன்னாடி இருந்ததை விட இது அழகா இருக்கு... ஆனால் அப்பொழுதும் இப்பொழுதும் உங்கள் தளம் திறப்பதற்கு சற்று தாமதம் ஏற்படுகிறது...

  ReplyDelete
 11. நல்ல தொடர். வாழ்த்துகள்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.