என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, December 28, 2010

28 வெங்காயமும்-ராசாவும்

 நான் இப்ப உங்களுக்கு ஒரு கத சொல்லப்போறேன்.
ஒரு நாட்டுல ஒரு வெங்காய யாவாரி.சொந்தமா  வெங்காய விவசாயம் பண்ணி யாவாரம் பண்ணிக்கிட்டு இருந்தான். இப்பத்தான் வெங்காய வெல ஏறிப்போச்சா ஒருத்தன் கூட வாங்கல. அப்ப பக்கத்து நாட்டுல வெங்காயம்ன்னா என்னன்னே தெரியாம இருக்காங்கன்னு கூகல்ல தேடிட்டு இருக்கும்போது எதார்த்தமா கண்டுபுடுச்சான். அங்கே போயி யாவாரம் பன்னுவோம்ன்னு மூட்ட மூட்டையா வெங்காயத்த  எடுத்ததுக்கு கிளம்புனான். அங்கே போயி யாவாரம்  பண்ண ஆரம்பிக்கையில ரெண்டு பேரு வந்து
"தம்பி நீ இந்த நாட்டுக்காரனா?"
"இல்லன்னே...நான் பக்கத்து நாடு"
"பக்கத்து நாட்டு காரங்க இங்கே யாவாரம் பண்ணனும்னா எங்க ராசாட்ட அனுமதி வாங்கணும், தெரியும்ல"
"ராசாட்டயா? அவருதான் சி.பி.ஐ.விசாரணையில இருக்காரே"
"நான் சொல்றது எங்க நாட்டு ராசாட்ட"
உடனே யாவாரி அவ்வளவு வெங்காயத்தையும் எடுத்ததுக்கு அரமனைக்கு போனான். ராசாவ பாக்க...
அங்கேபோய் கேட்டான்
"ராசா இல்லையா?".
"இருக்காரு இந்த ராத்திரி நேரத்துல  எதுக்கு  நீங்க வரை பாக்கணும் "
"யாவார விஷயமா அவர பாக்கணும்"
"அவரு மானாட மயிலாடபாத்துக்கு இருக்காரு "-ன்னு சொல்லிட்டு இருக்கும்போதே கரண்டு போயிருச்சு. ஆனா இன்வெட்டர்ல லைட்டு எரிஞ்சுச்சு. ராசா வெளில வந்தாரு.
"என்ன தம்பி விஷயம்?"
"வெங்காய யாவாரம் பண்ணலாம்ன்னு வந்தேங்க...ஆனா....நான் உங்க நாட்டுல யாவாரம் பண்ணனும்னா  நீங்க பர்மிசன் கொடுக்கணுமாம்"
"ஆமா, வெங்காயம்னா என்ன தம்பி?"
"அதான் தெனமும் டி.வி-ல காட்டுறாங்களே? நீங்க பாத்தது இல்லையா?"
"நமக்கு அதுக்கெல்லாம் எங்கே நேரமிருக்கு...எப்போது நாடகம், கலை நிகழ்ச்சிதான். சரி தம்பி நீயே சொல்லு"
"வெங்காயம்னா....உரிச்சா கண்ணுல தண்ணி   வரும்,  வெலைய கேட்டா நெஞ்சு வலி வரும்"
"தம்பி நான்ராசா. என்கிட்டே வெலைய சொல்லாத....எனக்கு எத்தனை கோடி இருக்கும்ன்னு எனக்கே தெரியாது. ஒரு லட்சம் கோடிக்கு மேல இருக்கு...அதுனால வெலைய பத்தி நீ கவலை படாதே....விஷயத்தை மட்டும் சொல்லு.ஒரு வெங்காயமோ என்னவோ பேரு சொன்னியே அந்த பழத்த எடு சாப்புட்டு பாப்போம்"
"அது பழ ம் இல்லேங்க ராசா"
"அப்படின்னா காயா. பரவாயில்ல ஒன்னு எடு சாப்புடுறேன்"
"இது காயும் இல்ல."
"அப்பனா பூவா?"
"பூவும் இல்ல. உறிக்க உறிக்க ஒண்ணுமே இருக்காது"
"டே...என்ன விளையாடுறியா ஒண்ணுமே இல்லாத ஒன்ன, எங்க மக்கமேல கட்ட பாக்குறியா?யாரங்கே  முதல்ல இவன புடுச்சு தூண்ல கட்டுங்க"
"அய்யய்யோ ராசா கொஞ்சம் இருங்க...இது பூவா காயா பழமான்னு எனக்கே தெரியாது. இத வெறும் வாயில சாப்பிட முடியாது.சமையல்ல போட்டா கமகமன்னு இருக்கும்."
"அப்படியா, அப்படின்னா அது இங்கே இருக்கட்டும். நான் சமையல் செஞ்சு சாப்புட்டு சொல்றேன். உன்னோட போன் நம்பர கொடுத்துட்டு போ...நான் போன் போடுறேன்."
சரின்னு சொல்லிட்டு யாவாரி கிளம்பிட்டான்.
ரெண்டு நாளைக்கு அப்புறம் ராசாட்டேர்ந்து போன் வந்துச்சு. உடனே கிளம்பி வான்னு...இவனும் கிளம்பி போனான்.
"தம்பி உங்க வெங்காயத்தை சாப்பிட்டு பாத்தேன். நல்ல ருசி. நானே எல்லாத்தையும் எடுத்துக்கிறேன். அதுக்கு பதிலா இதை வச்சுக்க"ன்னு ரெண்டு மூட்டைய கொடுத்தாரு...அதுல பாத்தா தங்கமும் பணமும் இருந்துச்சு.
"ராசா.எல்லாம் எனக்குத்தானா? இந்த வெங்காயத்துக்கு இவ்வளவு பரிசா'"\
"என்ன இப்புடி சொல்லிட்டே...தங்கம் வைரத்த விட எனக்கு வெங்காயம் தான் பெருசு....எங்க நாட்டுல விலை மதிக்க முடியாத பொருளா வெங்காயத்தை அறிவிக்க போறேன். இதை எப்படி வெவசாயம் பண்றதுன்னு சொல்லிட்டு போயிரு..."
யாவாரி எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்தான். அவரு கொடுத்த காச வச்சுக்கு ஏகபோகமா வாழ்ந்தான். இத பாத்த பூண்டு யாவாரிக்கு பொறாம வந்துடுச்சு. நம்மளும் ராசாட்ட போயி நம்ம பூண்ட கொடுத்து இவன மாறி பெரிய பணக்காரனா ஆகிடனும்ன்னு     ஆசை வந்துச்சு. அவனும் மூட்ட மூட்டையா பூண்ட எடுத்ததுக்கு போயி ராசாவை பாத்தான். மேலே படிச்ச வெங்காய யாவாரிக்கு நடந்த அத்தனை விசாரணையும் பூண்டு யாவாரிக்கும் நடந்துச்சு. வச்சுட்டு போ சாப்புட்டி பாத்துட்டு உனக்கு போன் பண்ணுறேன்னு அவனை அனுப்பி வச்சாரு ராசா.
ஒரு நாளு அவனுக்கும் ராசாட்டேர்ந்து போன் வந்துச்சு. அவனும் வெங்காய யாவாரிக்கு  மாறி நம்மளுக்கும் நெறையா பரிசு தரப்போராருன்னு ஏகப்பட்ட கற்பனையோடு போனான்.
"தம்பி உங்க பூண்டை சாப்பிட்டு பாத்தேன். சும்மா சொல்லக்கூடாது. வெங்காயத்த விட இது இன்னும் நல்லாருக்கு...அதுனால உங்களுக்கு வெங்காய யாவாரிக்கு கொடுத்ததை விடை வெல உயர்ந்த பரிசை இந்த மூட்டைக்குள்ள வச்சுருக்கேன். எடுத்துக்கங்க"-ன்னு ரெண்டு மூட்டையை கொடுத்தாரு...
பூண்டு  யாவாரி அடடா நம்மளுக்கு அதிஷ்டம் அடிச்சுருச்சுன்னு நெனச்சுக்கு மூட்டைய பிரிச்சு பாத்தான். அங்கே....அவ்வளவும் வெங்காயம்.
"என்ன ராசா, வெல உயர்ந்த பரிசுன்னு சொன்னீங்க..ஆனா, எல்லாம் வெங்காயமா இருக்கு...."-ன்னு பரிதாபமா கேட்டான். அதுக்கு ராசா
"தங்கம், வைரத்த விட எங்க நாட்டுல இப்ப வெல உயர்ந்த, வெல மதிப்பில்லாத  பொருளு இந்த வெங்காயந்தான். அதான்  இதை கொடுத்தேன்"-ன்னு சொன்னாரு....
நீதி; இன்று நாட்டில் விலை மதிக்க முடியாத பொருளாக வெங்காயம்  இருக்கிறது.


Post Comment

இதையும் படிக்கலாமே:


28 comments:

 1. இன்னிக்கு காலைல வடை எனக்குத்தான்...

  ReplyDelete
 2. இந்த கதைய இப்படியும் சொல்லலாமா .......நல்லா இருக்கு .............

  ReplyDelete
 3. அட...

  வெங்காய கதை நல்லாவே இருக்கே!!

  இப்படியும் கதை சொல்லலாமோ?

  வெங்காயமாவது சமையலுக்கு உதவும்.. ஒண்ணுக்கும் உதவாத இந்த ராசாவ இன்னமும் உள்ள தூக்கி போடலியா?

  ReplyDelete
 4. @சங்கவி
  இன்னிக்கு காலைல வடை எனக்குத்தான்//////////////////////////////////////வெங்காய வடை

  ReplyDelete
 5. மண்டையன்,R.Gopi said...

  இந்த கதைய இப்படியும் சொல்லலாமா///
  [MA]சின்னவயதில் சிறுவர் மலரில் படித்த கதையை, இப்போது சூழ்நிலைக்கு பொருந்துவது போல் லேசாக நம் கைசரக்கு சேர்த்துள்ளேன். அவ்வளவுதான்.[/MA]

  ReplyDelete
 6. இன்னைக்கு வெங்காயத்தவிட பூண்டு விலை எகிரிக்கிட்டு போகுது ...

  ReplyDelete
 7. நல்லாருக்கு நண்பரே

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 8. எப்படிங்க இப்படில்லாம் யோசிக்கறீங்க... அசத்தலா இருக்கு..

  ReplyDelete
 9. நல்ல நகைச்சுவை.

  ReplyDelete
 10. இன்றைய நிலையை நகைச்சுவையா சொல்லி இருக்கீங்க...
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. இதாங்க டைமிங் கதை......சூப்பர்....

  ReplyDelete
 12. வெங்காயத்தை விடமாட்டீங்கபோல.

  ReplyDelete
 13. வெங்காயம் எதுக்கு உபயோகப்படுதோ இல்லை பதிவு எழுத ரொம்பவே உபயோகப்படும் போலிருக்கு :-)

  ReplyDelete
 14. பதிவ படிக்கிறவங்களுக்கு ஆளுக்கு ஒரு மூட்ட வெங்காயம் அனுப்புங்க போதும்!

  ReplyDelete
 15. வெங்காய கதை சூப்பர் சகோ

  ReplyDelete
 16. வெங்காய விலை குறைந்து விட்டமையால்,உமக்கே எமது ஓட்டு...
  ----புது நெல்லு... புது நாத்து...

  ReplyDelete
 17. உங்க எழுத்துக்கள்ள naல்ல மாற்றம் தெரியுது. neமப்ர் ஒன இடம் பிடிக்க vaazththukkaL

  ReplyDelete
 18. அருமையான பதிப்பு, படித்து சுவைத்தேன்...வெங்காயத்தை!!!

  ReplyDelete
 19. இங்கு வந்து பின்னூட்டமிட்ட [si="4"]சங்கவி, மண்டையன், R.கோபி,தொப்பிதொப்பி, நண்டு @நொரண்டு -ஈரோடு, ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்), மாணவன், பிரியமுடன் ரமேஷ்,இனியவன்,அரசன்,NKS.ஹாஜா மைதீன், லட்சுமி, இரவு வானம், வைகை, ஆமினா, ...., சி.பி.செந்தில்குமார், அபு நதீம் [/SI]ஆகியோருக்கு வெங்காயம் வழங்கப்படுகிறது. [IM][MA]http://www.freeimagehosting.net/uploads/ead8efb286.jpg[/MA][/IM]

  ReplyDelete
 20. இங்கு வந்து பின்னூட்டமிட்ட [si="4"]சங்கவி, மண்டையன், R.கோபி,தொப்பிதொப்பி, நண்டு @நொரண்டு -ஈரோடு, ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்), மாணவன், பிரியமுடன் ரமேஷ்,இனியவன்,அரசன்,NKS.ஹாஜா மைதீன், லட்சுமி, இரவு வானம், வைகை, ஆமினா, ...., சி.பி.செந்தில்குமார், அபு நதீம் [/SI]ஆகியோருக்கு வெங்காயம் வழங்கப்படுகிறது. [IM][MA]http://www.freeimagehosting.net/uploads/64c4399ce4.jpg[/MA][/IM]

  ReplyDelete
 21. நல்ல இருக்குங்க

  ReplyDelete
 22. அட, நீதிக்கதையெல்லாம் பொருத்தமா சூப்பரா சொல்றீங்க..வெரி குட்.இன்றைய பதிவில் உங்க மேட்டர் ஒன்னு போட்டிருக்கேன்.FYI.

  ----செங்கோவி
  நானா யோசிச்சேன் (டிசம்பர்-2010)

  ReplyDelete
 23. சூப்பர் நண்பரே... அந்த பதிவுத்திருட்டு பற்றி தகவல் கொடுத்ததற்கு நன்றி... தமிழ்மணத்தில் ரேங்க் பின்னாடி வருதே... விடாதீங்க டிச்சு விளையாடுங்க...

  ReplyDelete
 24. வெங்காயம் அதனால பெரும்காயம்

  ReplyDelete
 25. ஹ ஹா நல்ல காமெடி பாய். கடசில முடிவு இப்படியாகும்னு நான் எதிர்பார்க்கலை. கலக்குங்க. :)

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.