என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, December 07, 2010

4 பாவத்தின் சம்பளம்

நான் வலைப்பதிவுலகிற்கு வந்த புதிதில் நான் பிரபலமில்லாத காரணத்தினால் (பெருவாரியான வாசகர்களிடம் சென்றடையாத)  என்  சிறுகதைகளில் ஒன்று. இப்போது மீண்டும் மீள் பதிவு செய்துள்ளேன்
ப்போது பெய்த மழையால் அந்த ஆட்டோ ஸ்டாண்டே குளித்திருந்தது. மின்சாரம் வேறு விடுமுறை எடுத்திருந்தது. தீபா அந்த ஆட்டோ ஸ்டாண்டினுள் நுழைந்தாள். ஒரேயொரு ஆட்டோ மட்டுமே அங்கு நின்றிருந்தது.
"வள்ளுவர் நகர் ஆட்டோ வருமா?"
"வராதுமா"
"தயவு செஞ்சு வாங்க. ரொம்ப அவசரம்."
"நல்லா மழை பேஞ்சுருக்கு. கரண்ட் வேற இல்லை. ஹைவேஸ்காரன் எங்கெங்கே பள்ளம் வெட்டிப்போட்டிருக்கானோ யாருக்கு தெரியும்? ஏம்மா ரிஸ்க்."
"சார் டபுள் சார்ஜ் தாரேன். பிளீஸ்..."
"ஏம்மா சொன்னா விளங்காதா உனக்கு. படிச்சவ மாதிரி தெரியுறே. ரொம்ப அவசரம்னா ஒன்னு பண்ணு. இப்படியே கொஞ்ச தூரம் நடந்து போனீன்னா ஒரு பஸ் ஸ்டாப் இருக்கு. அங்கேதான் வள்ளுவர் நகருக்கு போற டவுன் பஸ் வரும். அங்கே போயி
ஏறிக்கம்மா."
"அங்காவது ஆட்டோல இறக்கிவிடுங்க சார்."
"என்னம்மா உன்னோட பெரிய தொந்தரவா இருக்கு. ஆட்டோல ஹெட்லைட் வேலை செய்யலம்மா அதான் வீட்டுக்குக்கூட போகாம இங்கே நிக்கிறேன். இப்படியே நடம்மா."
"ரொம்ப தூரமா சார்?"
"அட இல்லம்மா. அரை கிலோ மீட்டர்கூட வராது."
"ரொம்ப நன்றி சார்."
நடக்க ஆரம்பித்தாள் தீபா. இருட்டு மசமசவென்று இருந்தது. சிறிது தூரமே சென்றிருப்பாள். மூன்று பேர் வழி மறித்தார்கள்.
"என்ன பாப்பா தனியா போகுது?" - என்று கேட்டவனின் பேச்சில் மதுவின் வாடை தூக்கலாக இருந்தது.
"நாங்க வேணும்னா துணைக்கு வரட்டுமா?" - இது இன்னொருவன்.
விபரீதத்தை உணர்ந்த தீபா ஓடலானாள். அவர்களும் சளைக்காமல் ஓடி அவளை பிடித்தார்கள்.
"ஏண்டி யாருட்ட போக்கு காட்டுறே? நாங்கல்லாம் ஓட்டப்பந்தயத்துல தங்கப்பதக்கம் வாங்காததுதான் குறை."
"அய்யய்ய யாருடா நீ, அவட்ட போயி நம்ம பெருமைய சொல்லிட்டு. தூக்குடா அவள" - இன்னொருவன் கோபப்பட்டான்.
"என்ன விட்டுருங்க பிளீஸ். ஹெல்ப்....ஹெல்ப்....."
"பாப்பா நீ இங்க்லீஸ்ல மட்டுமில்ல... உலகத்துல இருக்க எல்லா மொழிகள்ளையும் கரடியா கத்தினாலும் ஒரு காக்கா, குருவிகூட எட்டிப்பாக்காது!"
"தயவு செஞ்சு என்னை விட்டுருங்க. எனக்கு........"
வாயில் துணியை வைத்து அடைத்தான் ஒருவன். பின் அவளின் கதறல் யாருக்கும் கேட்கவே இல்லை.
சிறிது நேரம் கழிந்தது.
அவள் வாயில் இருக்கும் துணி உருவப்பட்டது.
"ரொம்ப நன்றி பாப்பா. நீ என்ன சொல்றதா இருந்தாலும் இப்ப சொல்லு"
"அடப்பாவீங்களா சொல்லசொல்ல கேக்காம இப்படி சாகப்போறீங்களே"
"டே, பாப்பா என்னடா புதுசா சொல்லுது. நீ என்ன சொல்லுறே?"
"ஆமாடா நீங்க சாக தாண்டா போறீங்க. எனக்கு எய்ட்ஸ் இருக்குடா."

Post Comment

இதையும் படிக்கலாமே:


4 comments:

 1. நல்லாயிருக்குங்க..
  வாழ்த்துக்கள்.
  இது மாதிரி நிறைய நல்ல பதிவுகள் இருக்கக்கூடுமோ,
  அதிகமானவர்களால் படிக்கப்படாமல் ?

  ReplyDelete
 2. க்ளைமர்க்ஸ் சூப்பர்

  ReplyDelete
 3. நல்ல கதை.....உங்களின் பழைய கதைகளை மேலும் எதிபார்க்கிறேன்....

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.