என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, December 08, 2010

24 ரஜினிகாந்தின் வில்லன்கள்.


இப்போது எனக்கு பிடித்த பத்து படங்கள், பாடல்கள், இசையமைப்பாளர்கள். அது இது என்று பதிவுலகமே தொடர் பதிவு பித்து பிடித்துப்போயிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நானும் ஒரு புதிய தலைப்பில் இதோ எழுத வந்துள்ளேன். அதற்காக நன் எடுத்துக்கொண்ட தலைப்பு ரஜினிகாந்தின் பத்து வில்லன்கள். அட ஏப்பா ரஜினியையே சுத்தி வாறீங்க? வேறு ஏதாவது எழுதுங்கப்பான்னு சொல்றீங்களா?
இன்னும் சில தினங்களில் ரஜினியோட பிறந்த நாள் வருதுல்ல...அதான்.

ரகுவரன்
ரஜினிகாந்தோடு எத்தனையோ பேர் நடித்திருந்தாலும் இவர் தான் ஸ்பெசல் எனக்கு. தன் இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். ரஜினியோடு சுமார் பத்து படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் இவர் நடிப்பில் எனக்கு மிக பிடித்தபடம் பாட்சா.அந்தப்படத்தில் இடைவேளைக்கு பின்னால் இவர் வந்தாலும் ரஜினிக்கு சமமான கேரக்டர் இவருக்கு. ஆண்டனி என்ற கேரக்டரில் வெளுத்து வாங்கியிருப்பார்.சத்யராஜ்
இவரும் ரஜினியுடன் அதிகம் நடித்தவர். மிஸ்டர் பாரத் படத்தில் நடித்திருந்தாலும் இவர் நடிப்பில் எனக்கு பிடித்த படம் நம்ம இளைய டாக்குடரு விஜய்யின் அப்பா இயக்கிய நான் சிகப்பு மனிதன். ஒரு வித்தியாசமான கேரக்டரில் கலக்கியிருப்பார்.
 செந்தாமரை
ரஜினியின் மூன்று முகம் படத்தில் அலக்ஸ் பாண்டியனுக்கு எகாம்பரமாகவும், மற்ற ரஜினிகளுக்கு அம்பர்நாத்ஆகவும் இரண்டு முகத்தில் கலக்கியிருப்பார்.
சுமன்
ரஜினிகாந்தின் தீ படத்தில் தம்பியாக நடித்த அதே சுமன் சிவாஜியில் வில்லனாக நடித்திருப்பார். எந்த நேரமும் வெள்ளையும் சொல்லையுமாகவே படம் முழுவதும் இருப்பார். இந்த கேரக்டருக்கு சத்யராஜை நடிப்பதற்காக கேட்டு அவர் மறுத்த பின்னர் சுமனிடம் போனது. சத்யராஜ் எப்படி நடித்திருப்பாரோ தெரியாது. ஆனால், சுமன் நன்றாகவே நடித்திருந்தார்.சிரஞ்சீவி
ரஜினியின் கல்லூரி தோழனாகவும் , ஒற்றைக்கண்ணனாகவும் ராணுவ வீரனில் நடித்திருப்பார் சிரஞ்சீவி.அதற்க்கு முன் வேறு படங்களில் வில்லனாக இந்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் நடித்திருக்கிராறாவென்று தெரியவில்லை. ரஜினிக்கு ஒரு வித்தியாசமான வில்லனாக சிரஞ்சீவியை எனக்கு பிடிக்கும்.
 


நெப்போலியன்
எஜமான் படத்தில் ரஜினிக்கு சமமான ஒரு வித்தியாசமான வில்லனாக நடித்திருப்பார் இவர். அந்தப்படத்தில் இவர் பேசும் கல்யாண வீடா  இருந்தா நான்தான் மாப்பிள்ளையா இருக்கணும். சாவு வீடா இருந்தா நான்தான் பொணமா  இருக்கணும் என்ற வசனம் அப்போது ரொம்ப பிரபலம்.

ஜெய்சங்கர்
அதுவரை ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும் கலக்கிவந்த இந்த ஜேம்ஸ் பாண்ட் வில்லனானது முரட்டுக்காளையில். வில்லனாகவும் முத்திரை பதித்திருப்பார்.அம்ரிஷ்பூரி
தளபதியில் கொடூரமான வில்லனாக இவர் கலக்கியிருப்பார். கிளைமேக்சில் ரஜினியிடம் அடிவாங்கும் காட்சியில் அருமையாக நடித்திருப்பார்.மணிவண்ணன்
பாரதி ராஜா இயக்கிய கொடிப்பறக்குது படம் தான் நடிகராக இவரின் முதல் படம். தன் சிஷ்யன் மணிவன்னனுக்காக குரலையும் இரவலாக கொடுத்திருப்பார் பாரதிராஜா.

இறுதியாக.......
ரஜினிகாந்த். 
என்னது ரஜினிக்கு ரஜினியே வில்லனா? ஆம்
நெற்றிக்கண் படத்தில் கலக்கியிருப்பார்.


அம்புட்டுத்தாங்க......
 இந்த பதிவை தொடர நான் அழைப்பது
நம்ம  மாப்ள ஹரிஸ்
நம்ம எம்.எல்.ஏ நாகராஜ சோழன்
நம்ம நண்பர் நல்லநேரம் சதீஸ்
அப்புறம் நம்ம பிரியமுடன் ரமேஷ்

.
கடைசியில் எல்லோரும் சொல்லுவாங்களே அது என்ன...டிஸ்கியோ...விஸ்கியோ....எதோ ஒண்ணு...
பின்னூட்டம் போடும் யாருக்கும் வடையோ, சுடுசோறோ கொடுக்கப்படாது. காரணம்......
பின்னூட்டத்தை பாருங்க தெரியும். 


Post Comment

இதையும் படிக்கலாமே:


24 comments:

 1. [si="3"][co="yellow"]சுடு சோறும் வடையும் யாருக்கும் இல்லை. அதையெல்லாம் நானே வாங்கிகிட்டேன். [/co][/si][ma]இப்ப என்ன செய்விங்க..இப்ப என்ன செய்விங்க...[/ma]

  ReplyDelete
 2. இல்லை நாம செஞ்சி நாமளே சாப்பிட்டு பாத்தா அது டேஸ்ட் பாத்த மாதிரிதான்.. அது சாப்டதா கணக்கு கிடயாது

  ReplyDelete
 3. அதனால இன்னிக்கு சுடு சோறு எனக்குத்தான்..

  சரி அதை விடுங்க..
  நல்லாருக்கு உங்க தொகுப்பு... முதல் நான்கு அப்புறம் ஜெய்சங்கர் எனக்கு பிடிச்சிருக்கு இதுல.. என்னையும் தொடர்பதிவு எழுத அழைத்தமைக்கு மிக்க நன்றி....

  ReplyDelete
 4. போட்டுட்டம்! இன்ட்லில இணைக்கல?

  ReplyDelete
 5. நம்ம நீலாம்பரிய விட்டுடீங்களே ... பதிவு சூப்பர்

  ReplyDelete
 6. வெரைட்டியான தலைப்பு.......வெளுத்து கட்டுங்கள்....

  ReplyDelete
 7. //இல்லை நாம செஞ்சி நாமளே சாப்பிட்டு பாத்தா அது டேஸ்ட் பாத்த மாதிரிதான்.. அது சாப்டதா கணக்கு கிடயாது//
  உண்மைதான்..

  ReplyDelete
 8. கலக்கல் சீன்ஸ் !

  ReplyDelete
 9. தலைவர் வில்லன்கள் கட்டுரை, தலைவர் படம் பார்ப்பது போல உற்சாகமாக இருந்தது

  ReplyDelete
 10. நல்லாயிருக்குங்க, எனக்கு ரொம்ப புடிச்ச வில்லன்னா வீரா பட வில்லந்தான், பேரு தெரியாது

  ReplyDelete
 11. ம்ம்ம் .அடுத்து ஒரு தொடங்கி வச்சுட்டீங்க .கலக்குங்க

  ReplyDelete
 12. அருமையான தேர்வு நண்பரே,சிறப்பாக எழுதியுள்ளீர்கள் தொடரட்டும் உங்கள் பணி

  ReplyDelete
 13. உங்கள் எழுத்து நடை நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது...

  ReplyDelete
 14. [ma] வடையும் சுடுசோறும் சாப்பிட்ட உங்களுக்கு வயித்தால போகட்டும்... [/ma]

  ReplyDelete
 15. நேற்றே பார்த்தும் படித்துவிட்டேன் நண்பா..பின்னூட்டமிடுவதற்க்குள் ஆணி வந்துவிட்டது..புடுங்கிட்டு வரலாம் என்று இருந்தேன்,,

  வீடியோவோட அழகா தொகுத்திருக்கீங்க..என்னை தொடர அழைத்ததுக்கு நன்றி..உங்க அளவுக்கு இல்லைன்னாலும் நம்மாள முடிஞ்ச அளவுக்கு ட்ரை பண்ணுறேன்..

  ReplyDelete
 16. [si="4"][co="yellow"]பிரியமுடன் ரமேஷ், பாரத்....பாரதி...ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க பிரபாகரனின் சாபத்திற்கு பயந்து நானே எடுத்துக்கொண்ட வடையும், சுடுசோறும் நண்பர் பிரியமுடன் ரமேஷ் அவர்களுக்கு மனப்பூர்வமாக வழங்கப்படுகிறது.[/co][/si]

  ReplyDelete
 17. எல்லாமே சூப்பரான தெர்வு..நேத்தே ஓட்டு போட்டுட்டேன்

  ReplyDelete
 18. என்னை அழைத்த நல்ல உள்ளத்தஇற்கு நன்றி சீக்கிரமே எழுதறேன்

  ReplyDelete
 19. மேலே ஒரு நண்பர் கூறியதை போன்று "நீலாம்பரி" ரம்யா கிருஷ்ணன் மட்டுமே மிஸ்ஸிங். கலக்கல் தெரிவு.... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. சீன்கள் அருமை.

  ReplyDelete
 21. வித்தியாசமான கலக்கல் பதிவு...

  நண்பர்கள் குறிப்பிட்டுள்ளது போல், படையப்பா நீலாம்பரியை மறந்தது ஏனோ?

  சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்காக நான் எழுதிய சிறப்பு பிறந்த நாள் வாழ்த்துப்பா இதோ :

  அரிமா…. அரிமா… நீயோ…. ஆயிரம் அரிமா!!! http://edakumadaku.blogspot.com/2010/12/blog-post.html

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.