என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, March 30, 2011

22 எவ்வளவு நாளுக்குத்தான் அரசியல் பதிவே போடுறது? மனுஷனுக்கு ரிலாக்ஸ் வேணாம் 18+


‘ஃபேர் எவர்’ விளம்பரத்தில் நடித்து வந்த அசினுக்கு மார்ச் மாதத்திலிருந்து மங்களம் பாடிவிட்டது கம்பெனி. எட்டிப் பிடிக்கிற தூரத்தில் இருந்தாலும், தட்டிப் பறிச்ச நடிகையை ஒண்ணுமே செய்ய முடியாமல் இருக்கிறாராம் அசின். ஏன்? பல இடங்களில் அவர் வாய்ப்பை இவரும் தட்டிப் பறித்திருக்கிறார், அதனால்தான்! சரி, நடிகை யாரு? நம்ம த்ரிஷாவேதான்! அடடா... வண்ணத்துப் பூச்சிங்க சண்டையிது. என்னத்தை சொல்லி விலக்குறது?  
திரிசங்கு திவ்யா!
திவ்யாவை ‘குத்து’ ரம்யா என்றால், நம்முடைய ரசிகர்களுக்கு புரியும். சமீபத்தில் தன்னுடைய காஸ்ட்யூமரின் கன்னத்தில் அறைந்து, ‘பளீரென’ மீடியாவைக் கவர்ந்தவர். கன்னடத்தில் மட்டுமல்ல... தமிழிலும் சிம்பு, சூர்யா, தனுஷ், ஜீவா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த திவ்யாவுக்கு தொடர்ந்து கன்னட மொழி படங்களில் பிரச்னை. இவர் நடித்த ‘தண்டம் தஷகுணம்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு போகவில்லையாம் இவர். அந்த நேரத்தில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தாராம். சங்கத்தில் புகார் கொடுத்து விட்டார் தயாரிப்பாளர் கணேஷ். அதையும் மதிக்காத திவ்யா, விசாரணைக்கெல்லாம் வர முடியாது. வேணும்னா, நான் கன்னட படவுலகத்திலிருந்தே விலகிக்கிறேன் என்று கூறிவிட்டார். மொழி வெறி பிடித்த திவ்யாவுக்கு தமிழில் நடிக்க தடை போட வேண்டும் என்று பல மாதங்களாக நடிகர் சங்கத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கும் இந்து மக்கள் கட்சியும் இந்தப் பக்கம் வர விடாது போலிருக்கிறது. அப்ப திவ்யாவின் நிலைமை? கரண்டுக்கு தப்புன பல்லி கிரைண்டர்ல விழுந்த கதைதான்.  

மகளுக்காக..!
படிப்போ, அரசியலோ, இரு துறைக்குமே இது எக்ஸாம் டைம்! ஷூட்டிங்காக இருந்தாலும் சரி, அது மீட்டிங்காக இருந்தாலும் சரி, ஒரு குறிப்பிட்ட நாளில் என்னை வீட்டுக்கு போக அனுமதிக்கணும் என்று கேட்டுக் கொண்டாராம் குஷ்பு. அது மகளின் இந்தி பரிட்சைக்கான நாள்! வாரிசுக்கு இந்தி சொல்லித் தருவதற்காகத்தான் இந்த முன்னேற்பாடு.

விளம்பரமும், களேபரமும்!
திடீரென்று ஒருநாள் ‘காவலன்’ படத்தின் விளம்பரம் வரவில்லை, எந்த செய்திதாளிலும். டெல்லியில் ‘வேலாயுதம்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யின் காதுக்கு விஷயம் போனது. என்னன்னு உடனே பாருங்கப்பா... என்றாராம் எஸ்.ஏ.சி.யிடம். தயாரிப்பாளரோ, ‘‘நஷ்டம். முடியாது’’ என்று கைவிரிக்க, அந்தச் செலவு இப்போது விஜய் பாக்கெட்டிலிருந்து!


எஸ்.எஸ்.ஆரின் பெருமூச்சு!
‘எத்தன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.- நடையில தடுமாற்றம் இருந்தாலும் நாக்குல அதே கம்பீரம். ‘இப்பல்லாம் ஒரு ஷாட் முடிஞ்சதும் கேரவனுக்குள்ளே போய் படுத்துக்குறாங்க ஹீரோக்கள். எங்க காலத்துல சிவாஜி, எம்.ஜி.ஆரெல்லாம் கூட அடுத்தவங்க நடிக்கிறப்போ அவங்க எப்படி நடிக்கிறாங்கன்னு ஆர்வமா கவனிப்போம். ஹ்ம்ம்... அதெல்லாம் அந்த காலம்’ என்று சொல்லி பெருமூச்சுவிட்டார். 


டிஸ்கி: என்னடா இவன் மூணு நடிகைகள் படம் போட்டவன், ரெண்டு நடிகர்கள் படம் போடலையேன்னு பார்க்கறீங்களா?....எவ்வளவு தேடியும் அவர்களின் போட்டோ கூகிள் இமேஜ்ல சிக்கவேயில்லை...ஹி..ஹி... 

 
நேற்று படிக்காமல் தவற விட்டவர்களுக்காக........

அண்ணா.தி.மு.க-கூட்டணி144 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும்-பரபரப்பான புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள்Post Comment

இதையும் படிக்கலாமே:


22 comments:

 1. மாப்ள உன் ஸ்டைல்ல நல்லா சொல்லி இருக்க

  ReplyDelete
 2. விக்கி உலகம் said... 1 மாப்ள உன் ஸ்டைல்ல நல்லா சொல்லி இருக்க
  நம்ம ஸ்டையில் இல்ல மாம்ஸ்..... சுட்ட செய்தி இது

  ReplyDelete
 3. ஹூம்.. அண்ணன் நேத்து வரைக்கும் நல்லாத்தான் இருந்தாரு..

  ReplyDelete
 4. சரி, நடிகை யாரு? நம்ம த்ரிஷாவேதான்!//

  இந்த பொண்ணுக்குள்ள என்னமோ இருந்திருக்கு பாருங்களேன்?

  ReplyDelete
 5. சிபி சார் மாதிரியே ஆகிட்டீங்க போல :-)

  ReplyDelete
 6. ஆஹா...

  இவ்வளவு அரசியல் பரபரப்புக்கிடையிலும் மக்களை மகிழ்விக்க கிளுகிளு பதிவு போட்ட அண்ணன் ரஹீம் கஸாலி அவர்கள் வாழ்க....

  ReplyDelete
 7. ஹி ஹி .ஜொள்ளுங்க ஜொள்ளுங்க நல்ல ஜொள்ளுங்க.......நீங்க என்ன ஜோன்னாலும் கேக்குறோம்

  ReplyDelete
 8. என்னடா இவன் மூணு நடிகைகள் படம் போட்டவன், ரெண்டு நடிகர்கள் படம் போடலையேன்னு பார்க்கறீங்களா?....

  இல்லையே நமக்கெதுக்கு நடிகர்கள் படம்? நாம கேக்கவே இல்லையே?

  ReplyDelete
 9. கரண்டுக்கு தப்புன பல்லி கிரைண்டர்ல விழுந்த கதைதான்.

  ஐ இது புதுசா இருக்கே!

  ReplyDelete
 10. ////////கரண்டுக்கு தப்புன பல்லி கிரைண்டர்ல விழுந்த கதைதான். ///////

  யோவ் அத பாத்தா சும்மா கில்லி மாதிரி இருக்கு, அதப் போயி பல்லி, கிரைண்டருன்னுக்கிட்டு.........

  ReplyDelete
 11. குஷ்பூ ஸ்டில்லு ரொம்ப பழசுதான்... இருந்தாலும்........

  ReplyDelete
 12. ///////தயாரிப்பாளரோ, ‘‘நஷ்டம். முடியாது’’ என்று கைவிரிக்க, அந்தச் செலவு இப்போது விஜய் பாக்கெட்டிலிருந்து! ///////

  என்னய்யா கொழப்புறீங்க, அப்போ காவலன் வெற்றி, வெற்றின்னு சொல்றதெல்லாம் டுபாக்கூரா...?

  ReplyDelete
 13. அய்யய்யோ! அசின் இப்பிடி...?

  ReplyDelete
 14. 18+ பயங்கரமா இருக்கே

  ஆப்புன்னா என்னா?

  http://speedsays.blogspot.com/2011/03/blog-post_30.html

  ReplyDelete
 15. "என்னடா இவன் மூணு நடிகைகள் படம் போட்டவன், ரெண்டு நடிகர்கள் படம் போடலையேன்னு பார்க்கறீங்களா?....எவ்வளவு தேடியும் அவர்களின் போட்டோ கூகிள் இமேஜ்ல சிக்கவேயில்லை...ஹி..ஹி..."

  நாங்களும் அப்படியே நம்பிட்டோமில்ல...

  நல்லவேளை, இன்னும் 2 நடிகைப் பற்றிய செய்தி வந்திருந்தால் ஏகப்பட்ட பேருக்கு ஜில் தட்டி ஜன்னி வந்திருக்கும் பாஸ்...

  ReplyDelete
 16. நம்ம த்ரிஷாவேதான்! அடடா... வண்ணத்துப் பூச்சிங்க சண்டையிது. என்னத்தை சொல்லி விலக்குறது?//

  இதெல்லாம் கண்டுக்கப்படாது சகோ.

  முதலாவது படத்திலை இருக்கிறது அசினா. ஆய் நம்பவே முடியலை.

  ReplyDelete
 17. திரிசங்கு திவ்யா!//

  நம்மா ஆட்கள் எடுத்ததெல்லாவற்றுக்கும் புறக்கணிப்பு போர்க் கொடி என்று புறப்பட்டு, இவற்றுக்கு இப்போதே அர்த்தம் இல்லாமல் போய் விட்டது.


  மகளுக்காக..!//

  பாசக்கார அம்மா. அடடே குஷ்பூவா அது.


  விளம்பரமும், களேபரமும்! //

  விஜய் சொந்தச் செலவிலை சூனியம் வைக்க தயாரிகிட்டாரு..
  அந்தப் பணத்தை ஏழைகளுக்கு வழங்கியிருக்கலாம்.


  எஸ்.எஸ்.ஆரின் பெருமூச்சு! //

  காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி,

  ReplyDelete
 18. கரெக்ட் கஸாலி..படிக்கிறவங்களும் எத்தனை நாளைக்குத் தான் அரசியலையே படிக்கிறது..ஸ்டில்ஸ் சூப்பர்!

  ReplyDelete
 19. எவ்வளவு முக்கியமான செய்திகளை எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள்.. கலர்ஃபுல்லா போட்டாவெல்லாம் போட்டு அசத்தி... உண்மையிலேயே ரிலாக்ஸ்...நன்றி பகிர்வுக்கு..

  ReplyDelete
 20. விஜய் இப்ப மட்டுமா சுயவிளம்பரம் பண்ணுறார்? இவர் எப்பவுமே இப்படி தான் பாஸ்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.