என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, March 03, 2011

27 புலன் விசாரணை - பாகம்-2"இந்த லட்டர் எங்கே கெடச்சிச்சு" 
"பாடியோட சைடுல சார்"
"ஓகே.நன் பார்த்துக்கறேன்."
"சார் அந்த லட்டர்ல என்ன எழுதிருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?"- என்று கேட்டார் இயக்குனர் மாணிக்கராஜா

"தொடர்ந்து நடிகைகளை கொலைசெய்வோம்ன்னு போட்டிருக்கு"
"போச்சுடா கலாச்சாரம் அதுஇதுன்னு நம்ம பொண்ணுங்க நடிக்க வரமாட்டேங்குறாங்க..அதுக்குத்தான் நாங்க வடநாட்டுலேர்ந்து ஆளு பிடிச்சுக்கு வாரோம்...இப்ப அதுக்கும் ஆப்பா? இனிமேல வெளிநாட்டுலேர்ந்துதான் நடிகைகளை கூட்டி வரணும் போலிருக்கு"
"உங்க கவலை உங்களுக்கு ...எங்களுக்கு அந்த கொலைகாரனை பிடிக்கனும்ன்னு கவலை....சார் உங்கட்ட பர்சனல கொஞ்சம் விசாரிக்கணும் இந்த நடிகைய பத்தி....எப்ப சார் பிரியா இருப்பீங்க..."
"இன்னைக்கு மதியம் சூட்டிங்காக அவுட்டோர் போறேன். மூணு நாள்ல வந்துடுவேன். வந்ததும் நானே கூப்பிடுறேன்".
"நடிகைதான் இறந்துட்டாங்களே...என்ன பண்ணுவீங்க இப்போ...."
"அவங்க போர்ஷன் ரெண்டுநாளாத்தான் எடுத்ததுக்கு இருக்கேன். கொஞ்சம்தான் வந்திருக்கு....வெட்டி எறிஞ்சுட்டு வேற நடிகைய வச்சு எடுத்துக்க வேண்டியதுதான். என்ன... புரடியூசருக்கு கொஞ்சம் நட்டம். "
"யாருசார் புரடியூசர்?"
"வேற யாரு என் பொண்டாட்டிதான்"- சிரித்தார் இயக்குனர்.
---------------------------------


மூன்று நாட்களுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் தில்லையம்பலத்திற்கு இயக்குனர் மாணிக்கராஜாவிடமிருந்து அழைப்பு வந்தது. இன்ஸ்பெக்டர் தில்லையம்பலம் உடனே புறப்பட்டு மாணிக்கராஜாவின் அலுவலகத்திற்கு சென்றார்.


"வாங்க இன்ஸ்பெக்டர்..விசாரணை எந்த அளவில் இருக்கு?"
"எங்கே சார்?....இன்னும் ஒரு பிடியும் கிடைக்கல....மீடியாக்காரங்களும், சினிமாக்காரங்களும் ஒரே பிரசர்...நிம்மதியா சாப்பிடக்கூட முடியல..."
"என்கிட்டே ஏதோ விசாரிக்கணும்ன்னு சொன்னீங்களே?"
"ஆமா சார்....அந்த நடிகை கேரக்டர் எப்படி சார்?"
"எல்லார்ட்டயும் நல்லா பழகும் அந்த பொண்ணு....பெரிய நடிகைன்ற பந்தாவெல்லாம் கிடையாது"
"அவங்களுக்கு திருமணம் ஆயிருச்சா?"
"இல்லேசார்"
"பீல்டுக்கு தெரியாம ரகசிய திருமணம் ஏதும்.....எதுக்கு கேக்கறேன்னா....இப்பலாம் மார்க்கட் போயிடும்ன்னு திருமணத்தை மறச்சு வச்சுக்கறாங்க....."
"அப்படி ஒண்ணு நடந்ததா இதுவரை கிசுகிசுவாக்கூட தகவல் வரல..."
வேறு யாரோடவாவது லிவிங் டுகெதர் முறையில...."
"தெரியல சார்....எதுக்கு இதெல்லாம் கேக்கறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?"
"சொல்றேன் சார்...."
"இன்ஸ்பெக்டர் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வந்துருச்சா?"
"வந்துருச்சு டைரக்டர் சார்..அது சம்பந்தமாத்தான் கேள்வி கேட்டுக்கு இருக்கேன்"
"எப்படி மரணம்ன்னு.....ரிப்போர்ட் கொடுத்துருக்காங்க"
"கழுத்து நெறிபட்டு இறந்திருக்காங்க...."
"வேறு ஏதாவது ரேப் அட்டம்ப்ட் அதுமாதிரி?"
"அப்படிலாம் இல்ல.....ஆனா எந்த ஒரு தடயமும் வைக்காம கொலை பண்ணிருக்கான்..கை ரேகை கூட கிடைக்கலைன்னா பாருங்களே"
"அப்படின்னா...கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டமாச்சே?"
"ஆமா சார்....அதான் ஒரே தலைவலியா இருக்கு....ஆனா போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டுல ஒரேயொரு நூல் கிடைச்சுருக்கு..."
"அப்படியா....என்னசார் அது?"
"இறந்துபோன நடிகை ஸ்ரீ மதி மூணுமாச கர்ப்பம்"

(விசாரணை தொடரும்)
கழுகின் பார்வையில் இன்று


Post Comment

இதையும் படிக்கலாமே:


27 comments:

 1. அடிச்சி ஆடு நண்பா!

  இடைவேளைக்கு வருந்துகிறேன் ஹி ஹி!

  ReplyDelete
 2. விறுவிறுப்பான தொடர்.

  ReplyDelete
 3. முதல் விசாரணை பாகம் லிங்க்கை ஓப்பனிங்க்லயே குடுங்க...பொண்ணு பார்க போறப்ப முதல்ல பொண்ணைக்காட்டிடனும்.. சாப்பிட்டு கிளம்பறப்ப காட்டினா எப்படி? ஹி ஹி

  ReplyDelete
 4. கலக்குங்க..இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்...

  ReplyDelete
 5. >>>"அப்படி ஒண்ணு நடந்ததா இதுவரை கிசுகிசாக்கூட தகவல் வரல..."

  கிசுகிசுவாக்கூட...

  ReplyDelete
 6. தொடர்ந்து படிக்கிறோம் பாஸ்..

  ReplyDelete
 7. >>>>"இறந்துபோன நடிகை ஸ்ரீ மதி மூணுமாச கர்ப்பமா இருந்திருக்காங்க..."  அவங்க 3 மாசம் கர்ப்பம். போதும் ஷார்ட் & ஸ்வீட்

  ReplyDelete
 8. நடத்துங்க நண்பா நடத்துங்க..

  ReplyDelete
 9. தொடருங்கள் தொடரருமை...

  ReplyDelete
 10. கதை நல்லா விறுவிறுப்பா போகுது நல்லா இருக்கு தொடருங்கள் ....

  ReplyDelete
 11. மிக அருமை.இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமோ
  என அனைவரும் எண்ணுமளவு சுவாரஸ்யமான நடை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. ஹி ஹி நான் எதிர்பார்த்த மாதிரியேதான் கதை போகுது

  அந்த கர்பம் மேட்டர் நான் யோசிச்சேன்

  ReplyDelete
 13. ம்ம்ம்... விறு விறு விறுவுக்கு பஞ்சமே இல்லையே. அருமை

  வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் . மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

  ReplyDelete
 14. நானும் வந்துட்டேன் ...........

  ReplyDelete
 15. தொடரும் உங்கள் விசாரணை தொடரட்டும்!!

  ReplyDelete
 16. ஜெட் வேகத்தில் பறக்கும் கதை

  ReplyDelete
 17. speed master சொன்னதப்போல் எதிர்பார்த்த மாதிரியெல்லாம் இல்லை, இருந்தாலும் க்ரைம் க‌தைக‌ளைப்பொறுத்த‌வரை சம்பவங்கள் ஒரேமாதிரியானவையா இருந்தாலும்
  முடிச்ச‌விழ்ப்ப‌திதான் எழுத்த‌ரோட‌ திற‌ன் தெரியும் காத்திருப்போம். வாழ்த்துக்க‌ள்.

  ReplyDelete
 18. இரண்டு பாகத்தையும் படிச்சாச்சு.அடுத்தது எப்போ?

  ReplyDelete
 19. என்ன நண்பரே இரண்டு வலைத்தளம் வைத்து இரண்டிலும் விளாசி தள்ளுகிறீர்கள்!

  ReplyDelete
 20. முதல் பாகத்தை தவறவிட்ட தவறை இனி செய்ய மாட்டேன். அந்த அளவிற்கு சத்தமின்றி புலன்விசாரணை செல்கிறது.

  ReplyDelete
 21. தொடர் விறு, விறுப்பாகச்செல்கிரது.தொடருங்கள்.

  ReplyDelete
 22. அடுத்த பகுதி எப்போ எழுதுவீங்க?

  ReplyDelete
 23. தொடர் தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. லேட்டாயிடுச்சுங்க, சரியா சரியான இடத்துல தொடரும் போட்டுட்டீங்க, ஆனா நான் கொஞ்சம் கெஸ் பண்ணிட்டேன்..... தொடர்ந்து கலக்குங்க...... !

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.