என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, March 10, 2011

19 புலன் விசாரணை -பாகம் 3

முந்தைய பாகங்கள்

"என்ன  சார் சொல்றீங்கஇன்ஸ்பெக்டர் ஸ்ரீமதி  கர்ப்பமா இருந்தாங்களா?" அதிர்ச்சியுடன் கேட்டார் இயக்குனர் மாணிக்க ராஜா.


"நான் சொல்லல சார். ரிப்போர்ட் அப்படித்தான் சொல்லுது.....சார் கொஞ்சம் நல்லா யோசனை பண்ணி சொல்லுங்க.....அவங்க தொடர்புகள் ஏதும் தெரியுமா?"

"சார்....எனக்கு சரியா தெரியல.....பத்து நாளுக்கு முன்னாடி எனக்கு சரியா காய்ச்சல். எனக்கு பதிலா என் அசோசியேட் சிவா இறந்து போன ஸ்ரீ மதி சம்பந்தப்பட்ட சீனை சூட் பண்ணினான். அப்ப நடிகர் தரன் அங்கே வந்து ஸ்ரீமதியோட பேசிட்டு இருந்தானாம்.அப்ப திடீர்ன்னு ரெண்டு பேருக்கும் பிரச்சினை வந்துடுச்சாம். இருங்க  நான் சிவாவ வரச்சொல்றேன். மீதிய கேட்டுக்கங்க".... என்றவாறு சிவாவிற்கு போன் செய்தார்.

"அது யாருசார் தரன்?"

"தரன் இப்பத்தான் வளர்ந்து வர்ற ஒரு நடிகர். அவனும் ஸ்ரீமதியும் ஒரே படத்துலதான் அறிமுகம் ஆனாங்க...ஆனா ஸ்ரீமதி குறுகிய காலத்திலேயே முன்னுக்கு வந்துருச்சு...தரன் கிடைக்கிற துண்டு துக்கடா வேஷத்துல நடிச்சு இப்பத்தான் ரெண்டு படத்துல ஹீரோவா நடிச்சுக்கு இருக்கான்"

அப்போது சிவா வந்தான்

"சிவா அன்னிக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல என்ன நடந்துச்சுன்னு சார்ட்ட சொல்லு"
"என்னிக்கு சார்?"

"அதாம்பா....தரன் ஸ்ரீமதியோட சண்டை போட்ட அன்னிக்கு"....

"சார் அன்னிக்கு என்ன நடந்துச்சுன்னா.......ஸ்ரீமதி மேடம் உட்கார்ந்து இருக்கப்ப நடிகர் தரன் அங்கு வந்தாரு...ரெண்டு பேரும் நல்லாத்தான் பேசிக்கு இருந்தாங்க....திடீர்ன்னு அவங்களுக்குள்ள  பிரச்சினையாகிருச்சு. உடனே கோபமா தரன் கிளம்பிட்டாரு....அதுக்கப்புறம் ஸ்ரீமதி மேடம் யார்ட்டையும் பேசாம அமைதியா இருந்தாங்க, கொஞ்ச நேரத்துல சார் எனக்கு மூட் அவுட்டாயிருச்சு....இன்னைக்கு நடிக்க முடியாதுன்னு நினைக்கிறேன். என்னை  மன்னிச்சுருங்க....நாளைக்கு வந்து நடிச்சு தாரேன்னு அவங்களும்  கிளம்பிட்டாங்க...."

"அவங்க ரெண்டுபேரும் என்ன பேசிக்கிட்டாங்கன்னு தெரியுமா?"

"இல்ல சார்.அவங்க பக்கத்துல இருந்த மரத்துக்கு பின்னாடி போயிட்டாங்க....அதான் விளங்கல....ஆனா எல்லாருக்கும் விளங்கர மாதிரி தரன் ஒன்னு சொல்லிட்டு போனாரு..."

"என்னன்னு?"

"என்னடி... மிரட்டுறியா?  நீ உயிரோடவே இருக்க மாட்டேன்னு சத்தமா  சொல்லிட்டு கிளம்பிட்டாரு. "
"அப்படியா....அவரு அட்ரெஸ் கிடைக்குமா?"
"குறிச்சுக்கங்க" என்றவாறு சொல்ல ஆரம்பித்தார் இயக்குனர் மாணிக்க ராஜா....
-----------------------------

நடிகர் தரன் வீடு.....

தரனிடம் விசாரணையில் இறங்கினார் இன்ஸ்பெக்டர் தில்லையம்பலம்.

"மிஸ்டர் தரன் நடிகை ஸ்ரீமதி கொலை பற்றி   உங்கட்ட கொஞ்சம் விசாரிக்கணும்"

"கேளுங்க  சார் "

"உங்களுக்கும் நடிகை ஸ்ரீமதிக்கும் என்ன உறவுன்னு தெரிஞ்சுக்கலாமா?"

"தாராளமா சார். அவங்க ஒரு நடிகை...நான் சக நடிகன்...அதோடு ரெண்டுபேருமே ஒரே படத்துல தான் அறிமுகம் ஆனோம்...அதுனால ஏற்பட்ட  நட்பு...."

"நட்பு மட்டும்தானா...அதைவிட?...."

"இல்ல சார்.நட்பு மட்டும் தான்".

"அவங்கள கடைசியா எப்ப பார்த்தீங்க?..."

"இயக்குனர் மாணிக்க ராஜா பட ஷூட்டிங் ல பார்த்தேன்".

"அங்கே உங்க ரெண்டு பேருக்கும் ஏதோ...பிரச்சினைன்னு...கேள்விபட்டேனே?".

"அ....அப்படிலாம் ஒன்னும் இல்லை சார்.அன்னிக்கு என் பிறந்த நாள்...அதான் அங்க வந்து அவங்கள அன்னைக்கு இரவு நடக்க இருந்த பார்ட்டில கலந்துக்கனும்ன்னு கூப்பிட்டேன்"

"பொய் சொல்ல முயற்சிக்க வேண்டாம் தரன்.எனக்கு எல்லாம் தெரியும்.அன்னிக்கு ஸ்ரீமதிய நீங்க கொலை பண்ணிடுவேன்னு மிரட்டிட்டு போயிருக்கீங்க"

"அது ..அது வந்து...."

"சொல்லுங்க....எதுக்கு அவங்கள கொலை பண்ணுனீங்க?...."

 விசாரணை வரும் வியாழன் தொடரும்


Post Comment

இதையும் படிக்கலாமே:


19 comments:

 1. படித்துவிட்டு வருகிறேன்.

  ReplyDelete
 2. நம்ம கடை பக்கம் வந்து நாளாச்சு..

  ReplyDelete
 3. >>>அவங்க தொடர்புகள் ஏதும் தெரியுமா?"

  1 .. 2 ன்னா எடுத்து சொல்லலாம்.. ஹி ஹி

  ReplyDelete
 4. அப்புறம் படிக்கேன்..இப்போ ஓட்டு மட்டும்!

  ReplyDelete
 5. ...எதுக்கு அவங்கள கொலை பண்ணுனீங்க?...."சொல்லுங்க?????

  ReplyDelete
 6. "சொல்லுங்க....எதுக்கு அவங்கள கொலை பண்ணுனீங்க?...."/////////////////////////////////////////////////////////////////////////////என்னது இந்திரா காந்தியை கொலை பண்ணிட்டான்களா!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 7. சி.பி.செந்தில்குமார் said... 4>>>அவங்க தொடர்புகள் ஏதும் தெரியுமா?"1 .. 2 ன்னா எடுத்து சொல்லலாம்.. ஹி ஹி//


  ஆமா அண்ணந்தான் அவுங்க பி.ஆர்.ஓ ,இவருக்கு எல்லாம் தெரியும்

  இவர மொதலா கேள்வி கேளுங்க போலிஸ்கார்

  ReplyDelete
 8. ம்ம்ம் விசாரணை சூடு பிடிக்குது


  திரும்பிபார்க்கிறேன்

  http://speedsays.blogspot.com/2011/03/blog-post_10.html

  ReplyDelete
 9. முதலிரண்டும் படித்துவிட்டு இதனைப் படிக்கிறேன் தல!

  ReplyDelete
 10. கேப்டன் புலன்விசாரணையா

  ReplyDelete
 11. பின்னூட்டம் எழுதாவிடினும் வழக்கமாக உங்கள் தளங்களை படித்துவிட்டு ஓட்டுகளும் இடுவது என்வழக்கம்.
  பிடித்த தளங்களில் ஒன்று!

  ReplyDelete
 12. மிகவும் சுவாரஸ்யமாக செல்கிறது கதை. கலக்குங்க தல.

  ReplyDelete
 13. போங்க பாஸ் ...அடிக்கடி தொடரும் போட்டு விடுகிறீர்கள் ...

  ReplyDelete
 14. ஜப்பான் சுனாமி நேரடி படங்கள்
  http://www.spicx.com/2011/03/japan-tsunami-live-photos.html#axzz1GIkYZJ00

  ReplyDelete
 15. கதை ஜோரா போகுது, தனி புக்காவே போடலாம்...!

  ReplyDelete
 16. ////// சி.பி.செந்தில்குமார் said...
  >>>அவங்க தொடர்புகள் ஏதும் தெரியுமா?"

  1 .. 2 ன்னா எடுத்து சொல்லலாம்.. ஹி ஹி////////

  இதுக்குத்தான் அததுக்கு ஆளு வேணும்கறது.......!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.