என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Sunday, March 13, 2011

22 தமிழ்நாட்டுக்கு இன்னொரு டாக்டரும் ரெடி

பெரிய டாக்டர் விஜயகாந்த், சின்ன டாக்டர் விஜய் வரிசையில் நடிகர் விக்ரமும் சேர்ந்திருக்கிறார். 


ஆம் விக்ரமுக்கு இத்தாலியிலுள்ள மிலன் பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க உள்ளது. 


இந்தியாவிலேயே அதிக அளவு கவுரவ டாக்டர் பட்டங்கள் பெற்றிருப்பது தமிழ் சினிமா நடிகர்கள்தான். நடிகர்கள் கமல்ஹாஸன், மனோரமா,விஜயகாந்த்,  விஜய், இயக்குநர் ஷங்கர் உள்பட பலருக்கு பல்வேறு தனியார் பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. ஒரு வெளிநாட்டு பல்கலைக் கழகம் முதன் முதலாக ஒரு தமிழ் நடிகருக்கு வழங்கும் டாக்டர் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சவாலான கதாபத்திரங்களை ஏற்று நடித்ததற்காக விக்ரமை கௌரவப் படுத்தும் வகையில் இவ்விருதினை அளிப்பதாக அந்த பல்கலைகழகம் அறிவித்துள்ளது. போகிறப்போக்கை பார்த்தால் தமிழ்நாட்டில் கலைமாமணி பட்டம் பெற்றவர்களை விட,கவுரவ  டாக்டர் பட்டம் பெற்றவர்கள் அதிகமாக இருப்பார்கள் போல....கஷ்டப்பட்டு மருத்துவம் படிப்பவர்களும் டாக்டர்கள் தான் , ஒரு ஆராய்ச்சி பண்ணுவதற்காக ஆய்வுக்கட்டுரை சமர்பிப்பவர்களும் டாக்டர்தான், நோகாமல் இருக்கும் நடிகைகளும் டாக்டர்தானாம் என்ன கொடுமை இது?

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அழகப்பா, சத்யபாமா மற்றும் ஒரு அமெரிக்க பல்கலைக்கழகம் உள்ளிட்ட மூன்று கல்வி அமைப்புகள் டாக்டர் பட்டங்களை அளிக்க முன்வந்தன. ஆனால் அவற்றைப் பெற்றுக் கொள்ள அவர் மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.Post Comment

இதையும் படிக்கலாமே:


22 comments:

 1. கொடுக்கட்டும் ரஹீம் சார்,ஜனத்தொகை அதிகமான நாடு,டாக்டர்களுக்கு பஞ்சம் தீரலே

  ReplyDelete
 2. டாக்குடரு மேட்டரு ஓகே ஓகே!

  ReplyDelete
 3. விஜய்க்கே கொடுக்கிம்போது விக்ரமுக்கு கொடுப்பது தவறில்லை..இவர் நோகாமல் நொங்கு எடுப்பவர் இல்லையே கஸாலி!

  ReplyDelete
 4. டாக்டர்.தமிழ்007

  அட, யாராவது எனக்கு டாக்டர் பட்டம் கொடுங்கப்பா!

  ReplyDelete
 5. //சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அழகப்பா, சத்யபாமா மற்றும் ஒரு அமெரிக்க பல்கலைக்கழகம் உள்ளிட்ட மூன்று கல்வி அமைப்புகள் டாக்டர் பட்டங்களை அளிக்க முன்வந்தன// சூப்பர் ஸ்டார் பட்டமே அவரை நெளிய வைக்கக் கூடிய பட்டம்

  ReplyDelete
 6. //சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அழகப்பா, சத்யபாமா மற்றும் ஒரு அமெரிக்க பல்கலைக்கழகம் உள்ளிட்ட மூன்று கல்வி அமைப்புகள் டாக்டர் பட்டங்களை அளிக்க முன்வந்தன. ஆனால் அவற்றைப் பெற்றுக் கொள்ள அவர் மறுத்துவிட்டது நினைவிருக்கலாம். //

  ********

  சூப்பர்....

  இந்த குணம் தான் அவரை இன்னமும் உயரத்திற்கு இட்டு செல்கிறது...

  பட்டம், பதவி, புகழ் போன்றவை பின்னால் அவர் ஓடுவதில்லை...

  ReplyDelete
 7. அட போய் தொலையிராரு விடுங்க.. யாருப்பா அது எனக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறேன்னு சொல்றது... என்ன அசிங்கபடுத்துற வேலையெல்லாம் வேணாம்..

  ReplyDelete
 8. ///////செங்கோவி said...
  விஜய்க்கே கொடுக்கிம்போது விக்ரமுக்கு கொடுப்பது தவறில்லை..இவர் நோகாமல் நொங்கு எடுப்பவர் இல்லையே கஸாலி!////////

  அதானே?

  ReplyDelete
 9. shanmugavel said... 1 கொடுக்கட்டும் ரஹீம் சார்,ஜனத்தொகை அதிகமான நாடு,டாக்டர்களுக்கு பஞ்சம் தீரலே/////
  இவங்க டாக்டரா இருந்து என்ன பயன்? மக்கள்லாம் இன்னும் பேசண்டா தானே இருக்காங்க

  ReplyDelete
 10. விக்கி உலகம் said... 2 டாக்குடரு மேட்டரு ஓகே ஓகே!
  வருகைக்கு நன்றி வெங்கட்

  ReplyDelete
 11. செங்கோவி said... 3 விஜய்க்கே கொடுக்கிம்போது விக்ரமுக்கு கொடுப்பது தவறில்லை..இவர் நோகாமல் நொங்கு எடுப்பவர் இல்லையே கஸாலி!////
  அது நடிகர்கள் என்ற பொதுவான பதத்தில் சொல்லப்பட்ட கருத்து...விஜய்,விக்ரம் என்று சொல்லவில்லை

  ReplyDelete
 12. தமிழ் 007 said... 4 டாக்டர்.தமிழ்007 அட, யாராவது எனக்கு டாக்டர் பட்டம் கொடுங்கப்பா!
  நீங்கள் கக்கு மாணிக்கம் அவர்களை தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு டாக்டர் பட்டம் நிச்சயம்

  ReplyDelete
 13. Blogger ஆகாயமனிதன்.. said... சூப்பர் ஸ்டார் பட்டமே அவரை நெளிய வைக்கக் கூடிய பட்டம்////
  ஆம் நிஜம்தான்

  ReplyDelete
 14. R.Gopi said... சூப்பர்.... இந்த குணம் தான் அவரை இன்னமும் உயரத்திற்கு இட்டு செல்கிறது... பட்டம், பதவி, புகழ் போன்றவை பின்னால் அவர் ஓடுவதில்லை...////
  உண்மையான கருத்து

  ReplyDelete
 15. தீபிகா said... 7 அட போய் தொலையிராரு விடுங்க.. யாருப்பா அது எனக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறேன்னு சொல்றது... என்ன அசிங்கபடுத்துற வேலையெல்லாம் வேணாம்..///
  அப்படி போடுங்க

  ReplyDelete
 16. பன்னிக்குட்டி ராம்சாமி said... 8 ///////செங்கோவி said... விஜய்க்கே கொடுக்கிம்போது விக்ரமுக்கு கொடுப்பது தவறில்லை..இவர் நோகாமல் நொங்கு எடுப்பவர் இல்லையே கஸாலி!//////// அதானே?
  செங்கோவிக்கான என் பின்னூட்டத்தை பார்க்கவும்

  ReplyDelete
 17. //ஒரு வெளிநாட்டு பல்கலைக் கழகம் முதன் முதலாக ஒரு தமிழ் நடிகருக்கு வழங்கும் டாக்டர் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.//
  போகட்டும் விடுங்க.
  உணவு உலகத்தில், "இன்று திருநெல்வேலி எழுச்சி நாள்."http://unavuulagam.blogspot.com/2011/03/blog-post_13.html

  ReplyDelete
 18. //போகிறப்போக்கை பார்த்தால் தமிழ்நாட்டில் கலைமாமணி பட்டம் பெற்றவர்களை விட,கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர்கள் அதிகமாக இருப்பார்கள் போல....//


  நீங்க கூட ஒரு டாக்டர் பட்டம் வாங்கியிருக்கீங்க... அப்புறம் என்ன பொறாமை...

  ReplyDelete
 19. போகிறப்போக்கை பார்த்தால் தமிழ்நாட்டில் கலைமாமணி பட்டம் பெற்றவர்களை விட,கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர்கள் அதிகமாக இருப்பார்கள் போல....

  முற்றிலும் சரி

  ReplyDelete
 20. இண்ட்லியில் மிகக்குறைவான வாக்குகளே பெற்றிருபது என்னை யோசிக்க வைக்கிறது

  ReplyDelete
 21. ///சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அழகப்பா, சத்யபாமா மற்றும் ஒரு அமெரிக்க பல்கலைக்கழகம் உள்ளிட்ட மூன்று கல்வி அமைப்புகள் டாக்டர் பட்டங்களை அளிக்க முன்வந்தன. ஆனால் அவற்றைப் பெற்றுக் கொள்ள அவர் மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்///


  அது தான் சூப்பர் ஸ்டார்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.