என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, March 05, 2011

44 விஜயகாந்த் vs ஜெயலலிதா =மக்களின் மறதி

அண்ணா.தி.மு.க.கூட்டணில் தே.மு.தி.க- இணைந்து 41 இடங்களை பெற்றுள்ளது. ஒருகாலத்தில் குடித்துவிட்டு சட்டசபைக்கு வருகிறார் விஜயகாந்த் என்று ஜெயலலிதாவும்,  
ஆமாம், ஜெயலலிதாதான் ஊற்றி கொடுத்தார் என்று விஜயகாந்தும் பரஸ்பரம் குற்றம் சாற்றியத்தை யாரும் மறந்திருக்க முடியாது.
அதன் பிறகு நடந்த பேச்சுக்கள் இதோ....ஒரு பிளாஷ்பேக்...

''பெண்கள் மீதும், தாய்மார்கள் மீதும் நான் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவன். என்னைப் பற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பழி சொல்லி அறிக்கை விட்டிருப்பதை நான் ச‌ற்றும் எதிர்பார்க்கவில்லை.

இரவு பகல் பாராமல் கடந்த ஓராண்டு காலமாக பொதுமக்களையும், தொண்டர்களையும் தமிழ்நாடு முழுவதும் தேர்தலில் நான் சந்தித்துள்ளேன். நான் எப்படிப்பட்டவன் என்பதை பொது மக்கள் நேரிலேயே பார்த்து வருகின்றனர்.

                                                                                                                              விஜயகாந்த்''அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெயரைக் குறிப்பிடாமல் பொதுவாக சொன்னதை, தன்னைத்தான் சொன்னார் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல அறிக்கை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த். அ.தி.மு.க.வை தனது அரசின் சாதனைகளால் உலகம் முழுவதும் அறியும் வகையில், அடையாளம் காட்டிஎம்.ஜி.ஆருக்குப் புகழ் சேர்த்தவர் ஜெயலலிதா. இவையெல்லாம் நேற்று கட்சி தொடங்கிய விஜயகாந்த்துக்குதெரியாமல் இருப்பதில் வியப்பே இல்லை. எம்.ஜி.ஆரின் ரசிகன் என கூறிக் கொள்ளும் விஜயகாந்த், சோதனைக் கட்டத்தின் போது எங்கிருந்தார்?அ.தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் அவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது. விஜயகாந்த்துக்கு ஜெயலலிதாவைக் குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை. வரலாறுகளை எல்லாம் இனிமேலாவது அவர் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்''
செங்கோட்டையன்தே.மு.தி.க. சாதித்து விட்டது என்கிறார்கள். அந்தக் கட்சி வெறும் 3 சதவீத இடங்களில்தான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. இதே 3 சதவீத இடங்களை நமது தோழமைக் கட்சியான ம.தி.மு.க. கூட பெற்றிருக்கிறது. ஊழலை ஒழிப்பேன், வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை வழங்குவேன் என்று கூறுவதெல்லாம் குடிகாரன் பேச்சைப் போன்றதுதான். நான் யாரைச் சொல்கிறேன் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும்.
ஜெயலலிதா


இந்த சாம்பிள்கள் போதுமே.......

 இதோ இருவரும்  சேர்ந்து சிரிப்பதை பாருங்கள்

டிஸ்கி: தயவுசெய்து அரசியலில் இதெல்லாம் சகஜம்ன்னு டெம்ப்ளேட் கமென்ட் போடவேண்டாம். ஏதாவது கருத்து சொல்லிட்டு போங்க....இல்லாவிட்டால் ஏதும் சொல்லாமல் போங்க பரவாயில்லை. 


கழுகின் பார்வையில் இன்று


Post Comment

இதையும் படிக்கலாமே:


44 comments:

 1. அரசியலில் இதெல்லாம் சகஜம்ன்னு சொல்லலாம்னு வந்தேன்..அதுவும் சொல்லக்கூடாதா..சர், முத வடையோட கிளம்புறேன்..இன்னும் எதுலயும் இணைக்கலையா..எப்புடி ஓட்டு போடறது..

  ReplyDelete
 2. கமெண்ட் போட முடியாட்டியும், நானே இணைச்சு ஓட்டும் போட்ருக்கென்..அப்போ எனக்கும் 41 வடை தருவீகளா?

  ReplyDelete
 3. நன்றி செங்கோவி......அரசியலில் இதெல்லாம் சகஜம் என்ற வார்த்தைகளை வைத்துக்கொண்டுதான் சில நாதாரிகள் இப்படி பண்ணுகிறார்கள். மக்களும் அந்த வார்த்தையை சொல்லி தனக்குத்தானே சமாதானப்படுத்திக்கொள்கிறார்கள்.

  ReplyDelete
 4. பச்சோந்தி என்பதை சிம்பாலிக்காக உணர்த்தத்தான் அம்மா பச்சைக்க்லர் டிரஸ் ரெகுலரைஸ் பண்ணீட்டாங்கலோ? #டவுட்டு

  ReplyDelete
 5. அம்மா கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு உரிய மரியாதை தர்றாரு..சோபால உக்கார சொல்றாரு# எலக்‌ஷன் முடியட்டும்,இருக்கு கச்சேரி

  ReplyDelete
 6. சி.பி.செந்தில்குமார் said...

  பச்சோந்தி என்பதை சிம்பாலிக்காக உணர்த்தத்தான் அம்மா பச்சைக்க்லர் டிரஸ் ரெகுலரைஸ் பண்ணீட்டாங்கலோ? #டவுட்டு
  அண்ணே....அது எதேச்சையாய் அமைந்தது. நீங்கள் குறிப்பிட்ட பின்புதான் அப்படி ஒரு கோணம் இருப்பது தெரிகிறது,

  ReplyDelete
 7. எப்போதும் மப்பில் இருப்பவர் VS அருகில் இருந்து ஊற்றிக்குடுத்தாரா? இருவரும் கூட்டணி #உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா?@பொதுமக்கள்

  ReplyDelete
 8. 2011 டூ 2016 அம்மா ஆட்சி நடப்பது உறுதி.என்ன?கொள்ளை அடிப்பது இப்போ அம்மா முறை அவ்வளவுதான்#தமிழனின் ஞாபக மறதிக்கு ஒரு ஓ போடுவோம்

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. சி.பி.செந்தில்குமார் said... 7

  எப்போதும் மப்பில் இருப்பவர் VS அருகில் இருந்து ஊற்றிக்குடுத்தாரா? இருவரும் கூட்டணி #உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா?@பொதுமக்கள்
  அண்ணே டைட்டில் நல்லாத்தான் இருக்கு.....இனிமேல பதிவு போடுவதற்கு முன்பு. உங்களிடம் சொல்லி டைட்டில் வைக்க சொல்லணும் போல....

  ReplyDelete
 11. இல்லாவிட்டால் ஏதும் சொல்லாமல் போங்க............சொல்லாமலே கெளம்புறேன்

  ReplyDelete
 12. A/C பாரும் டாஸ்மாக் கடையும் சந்தித்துக்கொண்டன அடடே கேள்விக்குறி? ஹி ஹி!

  ReplyDelete
 13. கடுந்தவம் புரிந்தும் காண இயலாத கடவுளை கண்டுபிடித்ததோடு அதனுடன் கூட்டணியை வைத்துக் கொண்ட பக்தனை, மகானை, ஆன்மிகவாதியை இப்படியா தாறுமாறாக கிழிப்பது? சிவ, சிவா.... துக்கம் தொண்டையை அடைக்கின்றது. எந்த சரக்குப் போட்டால் தெளியும் என்று ஊற்றிக்கொடுத்த தெய்வமோ அல்லது அவ்வமுதத்தை பருகியதாகக் கூறும் பக்தனோ கூறினால் எம் போன்ற குடிமக்களுக்கு நலமாக இருக்கும்!

  ReplyDelete
 14. இந்திராகாந்திக்கு விதவை உதவி திட்டத்தில் உதவ தயார் என கலைஞர் அறிவித்தார் இன்று வெட்கமில்லாமல் காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கிறதே அது போலத்தான் இதுவும்

  ReplyDelete
 15. ஆர்.கே.சதீஷ்குமார் said...

  இந்திராகாந்திக்கு விதவை உதவி திட்டத்தில் உதவ தயார் என கலைஞர் அறிவித்தார் இன்று வெட்கமில்லாமல் காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கிறதே அது போலத்தான் இதுவும்
  அதுமட்டுமா சொன்னாங்க....இந்திரா மதுரையில் தாக்கப்பட்ட போது வந்த ரத்தத்தை பார்த்து....இது பெண்களுக்கு மாதந்தோறும் வரும் உபாதை என்றும் சொன்னார்கள். இங்குதான் யாருக்குமே வெட்கமில்லையே....நாம் உட்பட.... அதற்காக இன்று விஜயகாந்த்-ஜெ பேசியதை நியாயப்படுத்த முடியாது.

  ReplyDelete
 16. சொல்லலனாலும் அதுதாங்க உண்மை. நேத்து அசிங்க அசிங்கமா திட்டிகிறது. அப்புறம் இன்னிக்கி இதெல்லாம் சகஜம்நு சொல்லுறது. இவங்களுக்கும வேற வேல இல்ல. நமக்கும் வேற வழி இல்ல இத கேகுரத விட்ட

  ReplyDelete
 17. தயவுசெய்து அரசியலில் இதெல்லாம் சகஜம்ன்னு டெம்ப்ளேட் கமென்ட் போடவேண்டாம். ஏதாவது கருத்து சொல்லிட்டு போங்க....இல்லாவிட்டால் ஏதும் சொல்லாமல் போங்க பரவாயில்லை.


  ..... ok...

  ReplyDelete
 18. பாஸ் உங்களுக்கு நான் சொல்லனுமா?

  அரசியல்ல இதெல்லாம் ஜகஜம் பாஸ்..

  ReplyDelete
 19. சரி மானங்கெட்டு போய் அரசுஊழியனுங்க மாதிரி தி மு க வுக்கு ஓட்டு போட்டுடலாமா ?

  ReplyDelete
 20. இவருக்கு வேறு வழியில்லை கூட்டணி வைத்தால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் அதான் காரணம்

  ReplyDelete
 21. அம்மா கூட்டணியில் கேப்டனுக்கு 41 சீட்டு# இரண்டு ''பெரிய'' கைகள் சேர்ந்து நாசம் பண்ண போகுதா.???

  ReplyDelete
 22. சட்டமன்ற தேர்தலில் தேமுதிக-அதிமுக கூட்டணி#கசாப்பு கடையில வந்து ஒரு கருப்பு ஆடு கதகளி ஆடுது..பாத்து ரொம்ப ஆட்டிடாதீங்க கேப்டன்..

  ReplyDelete
 23. நம்மள கிறுக்கங்க நினைச்சுகிட்டு பண்றாங்க....ம்ம் பார்க்கலாம்

  ReplyDelete
 24. எப்படி விஜயகாந்த் Vs ஜெயலலிதா = மக்களின் மறதியோ அதே போல், பின்வரும் சுட்டியில் உள்ள பதிவை படியுங்கள், அது என்ன என்று சொல்லுங்கள் :

  தைலாபுரம்..கோபாலபுரம்..சந்தர்ப்பவாத கூட்டணி கிச்சு கிச்சு http://edakumadaku.blogspot.com/2011/02/blog-post.html

  ReplyDelete
 25. இது சந்தர்ப்ப வாதக் கூட்டணி என்றாலும், இன்றைய நிலைமையில், இதனுடைய கட்டாயத்தை விஜயகாந்த் உணர்ந்தே இருக்கக் கூடும்.

  கட்டாயம் ஆளுங்கட்சி வீழும்... ஆனால் நல்லாட்சி வருமா என்பது தான் கேள்விக் குறி..

  இப்போதே கோல்மால் வேலைகளைப் பற்றி ஆளுங்கட்சி சிந்திக்கத் தொடங்கி விட்டது. அனால் இதைப் பற்றி ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் உணராமல் இல்லை. தேர்தலில் கடைசி ஆயுதமாக இதையும் கையில் எடுப்பார்கள் பாருங்கள்..

  ReplyDelete
 26. எதிரியின் எதிரி நண்பன்தானே! கொஞ்சகாலமாவது. தமிழர்கள் ஒரு மாற்றாக நம்பிய வை.கோ. இப்படித்தான் தடம் புரண்டார் ஒரு முறை அல்ல. இருமுறைகள். இன்று அவரின் நிலை பரிதாபமாக உள்ளது. விஜகாந்த கட்சி ஒரு வேலை வளர்ந்தாலும் அது நிச்சயம் தி.மு.க. - அ.இ. அ.தி.மு.க. இவைகளுக்கு மாற்றாக ஒருபோதும் செயல்படாது.

  ReplyDelete
 27. // தமிழனின் ஞாபக மறதிக்கு ஒரு ஓ போடுவோம் //

  ஆமாங்க பேச்சு பராக்ல நானும் மறந்துட்டேன்! நல்லவேளை ஞாபாகப் படுத்தினீங்க!! ஆமா ஹி..ஹி..யாருக்கு ஒட்டு போடணும்? அதையும் சொல்லிடக் கூடாதா? 'மக்கள்ஸ்' மறந்துவிட்டு (அல்லது பணத்தை வாங்கிக் கொண்டு) எதிர் ஓட்டாவது போடுவாங்கள்ள??

  ReplyDelete
 28. ஏதோ 41 கிடைச்ச சந்தோசத்துல தலை கால் புரியாமல் இருக்கும்போது கடவுளுடனும், மக்களுடனும் கூட்டணி எல்லாம் மறந்துரும் சார், இப்ப அம்மா தான் கடவுள் போல.

  ReplyDelete
 29. ஒருவேளை டாக்டர் கேப்டன் அவர்கள் தனித்து நின்று பெரிய மாற்று சக்தியாக உருவெடுத்து விடுவாரோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்.
  நல்லவேளை அம்மா கூட சேர்ந்து, தானும் இன்னொரு வைகோ, ராமதாஸ் ஆகிவிட சிறப்பான அடித்தளம் அமைத்துள்ளார். வெற்றி வெற்றி.......!

  ReplyDelete
 30. இது அரசியல் என்கிறார்கள் . கூட்டணி என்பது கட்டாயம் கொள்கை அளவில் இல்லை சந்தர்ப்பவாதம் மட்டுமே .ஆனால் வருங்கலத்தில் கூட்டணி என்பதற்கு அகராதில் இடம் தவிர்க்கப்படலாம் .

  ReplyDelete
 31. வணக்கம் தல. சரியா ஞாபகம் வைத்திருந்து சரியான சமயத்துல நினைவு கூர்ந்து இருக்கீங்க. நம்மால் செய்ய முடியும் தல.
  நம்ம கடமைக்கு இப்படி ஏதாவது விவாதம் செய்வதை தவிர வேறு என்ன செய்ய இயலும்..?? அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை எங்கோயோ.. கேட்டது இப்ப ஞாபகம் வருகிறது.

  ReplyDelete
 32. //இல்லாவிட்டால் ஏதும் சொல்லாமல் போங்க பரவாயில்லை. //

  ஹிஹிஹி............

  ReplyDelete
 33. இப்ப மட்டும்தான் அம்மா கூட சேர்ந்து உட்கார முடியும் :-)

  ReplyDelete
 34. இதெல்லாம் வெறும் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்கான கூட்டணி...

  சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ

  ReplyDelete
 35. ரொம்மப லேட்டா வந்துட்டேன் பரவாயிவ்லையா..

  ReplyDelete
 36. அரசியலில் நிரந்த எதிரியும் இல்லை..
  நிரந்தர நண்பரும் இல்லை...

  அதுதாங்க அரசியல்..
  வெற என்னசொல்ல...

  ReplyDelete
 37. ரெண்டு பெரும் சேந்து கருணாநிதியை கீழ இறக்க முயற்சி செய்றாங்க

  ReplyDelete
 38. நடிகருங்க!

  ReplyDelete
 39. எமெர்ஜென்சி யில் நம்மை போட்டு மிதி மிதியென மிதித்த நேருவின் மகளுடேனேயே நிலையான ஆட்சி காண கூட்டு சேர்ந்தோம் ,afterall ஜெயலலிதாவும்,விசயகாந்தும் வாயில் தானே திட்டிகொண்டார்கள்.அவர்களைவிட நமக்கு தோல் மொத்தம்.

  ReplyDelete
 40. ஏனுங்க கலைஞர் மற்ற கட்சிக்காரங்களை திட்டிய அளவு யாரும் திட்டியது இல்லை. அவரே தேவைப்பட்டா கூட்டணி வைத்துப்பார் இல்லாட்டி திட்டுவார். அவ்வளவு ஏங்க அவர் ஆட்சிக்கு வராட்டி

  "சோற்றால் அடித்த பிண்டங்கள்" இப்படி தமிழக மக்களை சொன்னதே இல்லையா ???

  ReplyDelete
 41. ".இல்லாவிட்டால் ஏதும் சொல்லாமல் போங்க பரவாயில்லை"அது எப்படிங்க சொல்லாம போறது சொல்லிட்டே போறேன். "போயிட்டு வாரேன்".

  ReplyDelete
 42. பரிதாபத்திற்கு உரியவர்கள் நாம் தான்..அல்லது சுரணையற்றவர்கள்...வேறு என்ன சொல்ல..இவர்கள் தான் நம் தலைவர்கள்

  ReplyDelete
 43. யார் யாருக்கோ ஒட்டு போட்டு பார்த்தாச்சு . இப்ப அதிமுக &தேமுதிக கூட்டணிக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு நல்லதாவது செய்ய மாட்டங்களா, ஒரு தடவ ஒட்டு போடுவோம்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.