என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, March 08, 2011

27 அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை. நிரந்தர நண்பனுமில்லை.(குறிப்பு: இந்த சிறுகதை கடந்த 2009 வருடம்  விகடனில் வெளிவந்த என்னுடைய படைப்புகளில் ஓன்று.மீள் பதிவு )


'ந்தசாமி எம்.எல்.ஏ., பதவியிலிருந்து விலகல். கட்சியிலிருந்தும் விலகினார்' என்று டி.வி-யில் பிளாஷ் நியூஸ் ஓடியது. தொண்டர்கள், மக்கள், பத்திரிகையாளர்கள் என கந்தசாமியின் வீடே நிரம்பி வழிந்தது.

கந்தசாமி வெளியில் வந்தார். அவரை நிருபர்கள் மொய்த்தனர்.

"ஏன் சார் திடீரென்று இந்த ராஜினாமா?"

"நான் கடந்த மூன்று வருடமா எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருக்கேன். ஆனால், என்னை நம்பிவாக்களித்த மக்களுக்கு என்னால் எதுவுமே செய்ய முடியல. மக்களுக்கு பயன்படாத இந்த பதவி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன என்று முடிவு செய்து ராஜினாமா செய்து விட்டேன்."

"கட்சியிலிருந்தும் விலகியிருக்கீங்களே?"

"நான் என் முடிவை என் கட்சி தலைமையிடம் சொன்னபோது என் தலைமை அதை ரசிக்கவில்லை. மாறாக, நான் ஆளுங்கட்சியிடம் விலை போய்விட்டதாக என் மீது குற்றம் சுமத்தியது. இத்தனை வருடம் இந்த கட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் விசுவாசமாக உழைத்த என்னை, துரோகி என்ற பட்டம் கொடுத்து களங்கப்படுத்தி விட்டார்களே என்ற ஆதங்கத்தில் கனத்த இதயத்துடன் அந்த கட்சியிலிருந்து விலகிவிட்டேன்."

"உங்கள் அடுத்த முடிவு என்ன?"

"என் ஆதரவாளர்களிடம் கலந்து பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிக்கிறேன்."

"ஆளுங்கட்சியில் இணைவீர்களா?"

"எதுவும் நடக்கலாம். போய் வாருங்கள்."

வீட்டுக்கு வெளியில் நின்ற மக்கள், 'செய்யாதே செய்யாதே ராஜினாமா செய்யாதே. வாபஸ் வாங்கு வாபஸ் வாங்கு ராஜினாமாவை வாபஸ் வாங்கு' என்று கோஷமிட்டனர்.

அவர்களிடம் போன கந்தசாமி, "தயவு செய்து என்னை புரிஞ்சுக்கங்க. நான் ராஜினாமா செய்தது உங்களுக்காகத்தான்.
உங்களுக்கு நல்லது செய்ய முடியலைங்கிற போது எனக்கு எதுக்கு பதவி? சீக்கிரம் நல்ல முடிவை சொல்றேன். நான் என்ன முடிவெடுத்தாலும் நீங்க அதுக்கு கட்டுப்படுவீங்கள்ள?"

"கட்டுப்படுவோம், கட்டுப்படுவோம்" - கூட்டம் தலையாட்டியது.

"இது போதும் எனக்கு. இப்ப நீங்க வீட்டுக்கு போங்க."

கூட்டம் கலைந்தது.

கந்தசாமி வீட்டினுள் நுழைந்தார். அங்கே அவர் மனைவி, மகன் ஆகியோர் இருந்தனர்.

"ஏன்ப்பா இந்த முடிவு? அதுவும் எங்ககிட்ட கூட சொல்லாம? நீங்க ராஜினாமா பண்ணியிருக்கக் கூடாதுப்பா. யாராவது பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து பார்க்க நினைப்பாங்களா?"

"டே உனக்கு இந்த அரசியல் புரியாது. எம்.எல்.ஏ. பதவிங்கறது தங்க முட்டையிடற வாத்துங்கறதை நான் ஒத்துக்கறேன். ஆனா, மந்திரி பதவிங்கறது முட்டையிடுற அந்த வாத்தே தங்கம் என்பது மாதிரி. நான் தங்க முட்டையா இருக்க ஆசைப்படல. தங்க வாத்தா இருக்க ஆசைபடறேன்."

"என்னப்பா சொல்லறீங்க?"

"நான் ஏற்கனவே ஆளுங்கட்சியிடம் பேசி முடிச்சுட்டேன். நான் ராஜினாமா பண்ணிட்டு ஆளுங்கட்சியில் போயி சேர்ந்தா... இங்கே நடக்குற இடைத்தேர்தலில் மறுபடியும் எனக்கு சீட் தந்து, ஜெயிச்சதும் மந்திரி பதவி தர்றதா வாக்கு தந்துட்டாங்க"

"மக்களுக்கு எதுவும் செய்ய முடியாததால ராஜினாமா செஞ்சதா சொன்னீங்களே?"

"அது ஒரு நாடகம். இப்படியெல்லாம் சொல்லிட்டு ராஜினாமா பண்ணினால்தான், மக்களுக்கு இவன் ரொம்ப நல்லவன்னு என் மேல ஒரு நம்பிக்கை வரும். இவன் நமக்காக ராஜினாமா செய்தவங்கற அனுதாபமும் வரும்.மறுபடி தேர்தலில் நிற்கும் போது அந்த நம்பிக்கையும் அனுதாபமும் வாக்குகளா மாறி என்னை ஜெயிக்க வச்சுடும். இது சைக்காலஜி மாதிரி எலக்சனாலஜி. எப்படி நம்ம ஐடியா?"

"அப்பா, நீங்க மந்திரியா மட்டுமல்ல... விட்டா முதலமைச்சராக்கூட ஆகிருவீங்க. சரி, இவ்வளவு நாளா விமர்சனம் பண்ணிட்டு இப்பப்போயி ஆளுங்கட்சியில போயி சேர்ந்தா மக்கள் அதை ஒத்துக்குவாங்களா?"

"அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை. நிரந்தர நண்பனுமில்லை. நான் என் தாய்க் கழகத்தில் இணைவது காலத்தின் கட்டாயம்ன்னு ஒரு அறிக்கை விட்டா சரியாப்போச்சு. எங்க மாதிரி அரசியல்வாதிகளுக்காகத்தானே இந்த ரெண்டு வார்த்தையும் அகராதியில் இடம்பெற்றிருக்கு. சரி நேரமாச்சு. நான் போயி சி.எம்-மை பார்ர்க்கணும். கிளம்பறேன்".Post Comment

இதையும் படிக்கலாமே:


27 comments:

 1. அந்தநாள் ஞாபகம் வந்ததே..

  சரியான நேரத்தில் சரியான பதிவு...

  ReplyDelete
 2. அரசியல்வாதின்னாலே துட்டுக்கும், பதவிக்குக்கும் எது வேணா விப்பாங்களா நண்பரே!

  ReplyDelete
 3. கேள்விப்பட்ட தலைப்பு...புதுக் கதை...ம்ம் அரசியல் அண்ணல் ரஹீம் வாழ்க!!

  ReplyDelete
 4. //அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை. நிரந்தர நண்பனுமில்லை.//

  இதே தலைப்பில் பதிவு எழுதலாம் என்று நினைத்தேன். பொருத்தமான தலைப்பு

  ReplyDelete
 5. "அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை. நிரந்தர நண்பனுமில்லை. நான் என் தாய்க் கழகத்தில் இணைவது காலத்தின் கட்டாயம்ன்னு ஒரு அறிக்கை விட்டா சரியாப்போச்சு. எங்க மாதிரி அரசியல்வாதிகளுக்காகத்தானே இந்த ரெண்டு வார்த்தையும் அகராதியில் இடம்பெற்றிருக்கு.


  .........அப்படியே உண்மை நிலையை படம் பிடிச்சு காட்டு இருக்கீங்க... 2009 ல சொன்னது, இப்போ 2011 க்கும் பொருத்தமாக இருக்குதே. விகடனில் வெளியான இந்த கதைக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. கதையா..அப்புறமா படிக்கிறேன்..இப்போதைக்கு ஓட்டு!

  ReplyDelete
 7. காலம் கடந்து வந்த கதையா இருந்தாலும் எக்காலத்துக்கும் ஏற்ற கதைதான். விகடனில் வந்தத்தற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. சூப்பர் கதை நண்பரே!

  ReplyDelete
 9. சகோதரா இதற்கு முன்னரே கருத்திட்டுள்ளேன் என நினைக்கிறேன்...

  மீண்டும் படித்தேன் அதே சுவை அப்படியே இருக்கிறது...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

  ReplyDelete
 10. ///அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை. நிரந்தர நண்பனுமில்லை.///

  காங்கிரஸ், தி.மு.க மீண்டும் கூட்டணியாமே...தெரியுமா சேதி?

  வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்,
  மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

  ReplyDelete
 11. அருமை வாழ்த்துகள் தோழரே....

  ReplyDelete
 12. நல்லா இருக்கு அனைத்து அரசியல்வாதியும் இப்படி தான்

  ReplyDelete
 13. எங்க மாதிரி அரசியல்வாதிகளுக்காகத்தானே இந்த ரெண்டு வார்த்தையும் அகராதியில் இடம்பெற்றிருக்கு

  ReplyDelete
 14. வேடந்தாங்கல் - கருன் said... 2 அந்தநாள் ஞாபகம் வந்ததே.. சரியான நேரத்தில் சரியான பதிவு...இன்றைக்கு நம்ம கடையில் முதல் போனி நீங்கதான். நன்றி

  ReplyDelete
 15. விக்கி உலகம் said... 3 அரசியல்வாதின்னாலே துட்டுக்கும், பதவிக்குக்கும் எது வேணா விப்பாங்களா நண்பரே!
  எல்லோரையும் அப்படி சொல்ல முடியாது....சில நல்லவர்களும் இருக்கிறார்களே

  ReplyDelete
 16. மைந்தன் சிவா said... 4 கேள்விப்பட்ட தலைப்பு...புதுக் கதை...ம்ம் அரசியல் அண்ணல் ரஹீம் வாழ்க!!
  என்னப்பாஇன்னிக்கு கோஷம் பலமா இருக்கு

  ReplyDelete
 17. THOPPITHOPPI said... 5 //அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை. நிரந்தர நண்பனுமில்லை.// இதே தலைப்பில் பதிவு எழுதலாம் என்று நினைத்தேன். பொருத்தமான தலைப்பு
  இது சிறுகதைதான். நீங்க பதிவு எழுதுங்க....

  ReplyDelete
 18. Chitra said... 6 .........அப்படியே உண்மை நிலையை படம் பிடிச்சு காட்டு இருக்கீங்க... 2009 ல சொன்னது, இப்போ 2011 க்கும் பொருத்தமாக இருக்குதே. விகடனில் வெளியான இந்த கதைக்கு வாழ்த்துக்கள்!////
  இன்னும் நூறு ஆண்டு கழிந்தாலும் அரசியல்வாதிகள் இந்த வார்த்தையை விடமாட்டாங்க மேடம்

  ReplyDelete
 19. செங்கோவி said... 7 கதையா..அப்புறமா படிக்கிறேன்..இப்போதைக்கு ஓட்டு!மறக்காம வந்துடுங்க

  ReplyDelete
 20. சி.பி.செந்தில்குமார் said... 8 காலம் கடந்து வந்த கதையா இருந்தாலும் எக்காலத்துக்கும் ஏற்ற கதைதான். விகடனில் வந்தத்தற்கு வாழ்த்துக்கள்
  வருகைக்கு நன்றி தல....

  ReplyDelete
 21. தமிழ் 007 said... 9 சூப்பர் கதை நண்பரே!
  வருகைக்கு நன்றி நண்பா...தொடர்ந்து வருகை தாருங்கள்

  ReplyDelete
 22. ♔ம.தி.சுதா♔ said... 10 சகோதரா இதற்கு முன்னரே கருத்திட்டுள்ளேன் என நினைக்கிறேன்... மீண்டும் படித்தேன் அதே சுவை அப்படியே இருக்கிறது...
  மீண்டுமொருமுறை படித்தமைக்கு நன்றி சகோ...

  ReplyDelete
 23. தமிழ்வாசி - Prakash said... 11 ///அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை. நிரந்தர நண்பனுமில்லை./// காங்கிரஸ், தி.மு.க மீண்டும் கூட்டணியாமே...தெரியுமா சேதி?
  நாடகம் அனைவரும் அறிந்ததுதான்

  ReplyDelete
 24. நேசமுடன் ஹாசிம் said... 12 அருமை வாழ்த்துகள் தோழரே....
  தங்களின் வருகைக்கு நன்றி தோழரே....

  ReplyDelete
 25. சௌந்தர் said... 13

  நல்லா இருக்கு அனைத்து அரசியல்வாதியும் இப்படி தான்
  அப்படியல்ல...சில நல்லவர்களும் இருக்கிறார்கள்

  ReplyDelete
 26. rajvel said... 14 எங்க மாதிரி அரசியல்வாதிகளுக்காகத்தானே இந்த ரெண்டு வார்த்தையும் அகராதியில் இடம்பெற்றிருக்கு...
  ஆமா...ஆமா...அதான உண்மை

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.