என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, March 22, 2011

36 தன்மானம்ன்னா கிலோ எவ்வளவுங்க?-நீங்களாவது சொல்லுங்களேன்.....அண்ணா.தி.மு.க-கூட்டணியிலிருந்து தன்மானமில்லையென்று ம.தி.மு.க-விலகியுள்ளது  பற்றித்தான் கடந்த மூன்று நாட்களாக பேச்சு. வைகோவின் தன்மானத்தை கொஞ்சம் திரும்பி பார்ப்போமா?

கடந்த 1993-ஆம் ஆண்டு தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வைகோ......கட்சியையும், கொடியையும் கைப்பற்றும்  முயற்சில் இறங்கி தோல்விகண்டு பின்னர் மறுமலர்ச்சி(?) தி.மு.க.-வை நிறுவினர். அன்று அவரோடு தோள்கொடுத்த பலர் இன்று அவருடன் இல்லை என்பது வேறுவிஷயம்.

அப்போது ஆட்சியிலிருந்த ஜெயலலிதாவை எதிர்த்து  கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரையிலும், கோவை, சேலம் வழியாக, 1500 கிலோமீட்டர் தொலைவு 51 நாள்கள், பல்லாயிரக்கணக்கான தோழர்களுடன் செருப்புதேய, கால்கடுக்க  நடைப்பயணம் சென்றார். நீண்ட தூரம் நடந்ததால் காலில் ஏற்பட்டிருந்த கொப்புளங்களுக்கு  1998 - ஆம் ஆண்டு போயஸ் கார்டனில் களிம்பு வாங்கி பூசி ரணத்தை ஆற்றினார்....
அப்போது எங்கே போயிருந்தது இவரின் தன்மானம்?

அதன் பிறகு மத்தியில் அமைந்திருந்த பா.ஜ.க- கூட்டணி ஆட்சியிலிருந்து ஜெயலலிதா வாபஸ் வாங்கியவுடன் அந்த கூட்டணிக்கு தன் பரம எதிரியான தி.மு.க. வந்து சேர்ந்தது. அப்போதும் இந்த தன்மான புலி அந்த கூட்டணில் தொடர்ந்தார். அதன் பிறகு 1999-ஆம் ஆண்டு நடந்த  நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க.கூட்டணியிலேயே நீடித்தார் 

எந்த கட்சியால் கொலைப்பழி சுமத்தி நீக்கப்பட்டாரோ....
எந்த கட்சிக்கு எதிராக நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோர் உயிரை மாய்த்துகொண்டார்களோ...அதே கட்சியுடன் கூட்டணி வைக்கும்போது நெருடலாக தெரியவில்லை இவருக்கு.....அப்போது எங்கே போனதாம் இவரின் தன்மானம்?

அதன்பிறகு 2001 சட்டசபை தேர்தலில் ஒரு சில சீட் பிரச்சினைக்காக தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியாகி தனித்து போட்டியிட்டு டெபாசிட் இழந்த போது இவருடன் இருந்த தன்மானம், மீண்டும் தி.மு.க-கூட்டணில் சேர்ந்து 2004  நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டபோது எங்கே போயிற்று?

பொடா சட்டத்தின் கீழ் ஜெயலலிதா அரசு இவரை கைது செய்தது. ஓரிரு மாதத்தில் வெளியேறி பாசிச ஜெயலலிதாவை ஆட்சியிலிருந்து அகற்றுவேன் என்று கூறிய வைகோ....கலைஞரிடம்  23 தொகுதிகள் கேட்டு, கலைஞர் 22 தொகுதிகள் தர முன்வந்தும்   ஒரே  ஒரு தொகுதிக்காக, நாங்கள் ஒ பாசிடிவ் ரத்தம் போன்றவர்கள் யாருடனும் கூட்டு சேருவோம் என்று கூறிவிட்டு  தி.மு.க கூட்டணியிலிருந்து விலகும் போது இவருடன் இருந்தது தன்மானமா? சீட் பேரமா?

முதல்நாள் வரை பாசிசஜெயலலிதா என்று கூறிவிட்டு அடுத்த நாள் அன்பு சகோதரி என்று பாசமழை பொழிந்து 35 சீட் வாங்கிய போது எங்கே போச்சாம் இவரின் தன்மானம்.


அட போங்க சார்....தன்மானமாவது...புடலங்காயாவது...அரசியல் செய்ய  அந்த எலவுலாம் எதுக்கு?.....Post Comment

இதையும் படிக்கலாமே:


36 comments:

 1. அரசியல்ல இதெல்லாம் சகஜம் நண்பரே..

  ReplyDelete
 2. ம்ம்ம்...இப்ப பொலம்பி என்னா செய்றது... பாவம் வை.கோ. எப்படி இருந்த வை.கோ, இப்ப இப்படி ஆயிட்டாரு.

  எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

  ReplyDelete
 3. அரசியல்ல இதெல்லாம் சகசமப்பா

  ReplyDelete
 4. நீர் அடித்து நீர் விலகாது என்று முன்பு விரட்டிய அதே கலைஞர் மீண்டும் அழைகிறாரே அதை என்னவென்று சொல்வது,

  பாசம் அப்படியே இருக்கும் என்கிறாரே இப்போது விரட்டிய அதே ஜெயலலிதா அதனை என்னவென்று சொல்வது,

  ReplyDelete
 5. சிலருக்கு தன்மானம் என்பது 41 சீட்களை, சிலருக்கு 63 சீட்களை பெறுவது.

  ReplyDelete
 6. இந்த விபரங்கள் என் நினைவில் இல்லை. வைகோ ஏன் இப்படி ஆகிப்போனார் என்ற ஆதங்கம் மனதில் ஓடும். இப்போது கிளியர். நிலை இல்லாத, தீர்மானம் அற்ற அவருடைய அணுகுமுறைதான். தன்மானம்-----வெங்காயம்.

  ReplyDelete
 7. இதெல்லாம் சரி நாங்க அரசியல் பதிவு போட்டா மட்டும் என்னமோ வந்தமா போனமான்னு இருக்கீங்களே.........என்னா விஷயம் முதலில் இதை விளக்கவும் ஹிஹி!

  ReplyDelete
 8. இப்படி ஆட்கள் இருக்கும் போது ராமதாசை மட்டும் குறை சொல்வது தவறு. அரசியல்வாதிகள், அரசியல்வாதிகளே....

  ReplyDelete
 9. ஹலோ தன்ராஜா..... சொல்லுங்க சொல்லுங்க...........

  ReplyDelete
 10. >>விக்கி உலகம் said...

  இதெல்லாம் சரி நாங்க அரசியல் பதிவு போட்டா மட்டும் என்னமோ வந்தமா போனமான்னு இருக்கீங்களே.........என்னா விஷயம் முதலில் இதை விளக்கவும் ஹிஹி!

  ஹா ஹா செம கேள்வி

  ReplyDelete
 11. உண்மையில் என்னதான் ஆயிற்று வைகோவிற்கு..

  ReplyDelete
 12. மணமகள் தேவை உதவ முடியுமா..

  விவரம் அறிய கவிதை வீதி வாங்க...

  http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_22.html

  ReplyDelete
 13. //அட போங்க சார்....தன்மானமாவது...புடலங்காயாவது...அரசியல் செய்ய அந்த எலவுலாம் எதுக்கு?.//
  இது..இது.. இது... பேச்சு! :-)

  ReplyDelete
 14. //தன்மானமாவது...புடலங்காயாவது...அரசியல் செய்ய அந்த எலவுலாம் எதுக்கு?.....//

  நல்ல பேர் வாங்கத்தான்...

  ReplyDelete
 15. பாவம் வைகோ!

  அவரை விடுங்கப்பா!

  ReplyDelete
 16. திருப்பியும் ஜெ எப்பொழுது கூப்பிடுவார் என்று ஏங்கி இருக்கும் அவலம் இந்த வைகோ. கட்சியை இவரே மூட நல்ல ஏற்பாடு செய்துள்ளார். உணர்ச்சி பேச்சு பேசும் இவர் ஒரு வெற்று.

  ReplyDelete
 17. //அட போங்க சார்....தன்மானமாவது...புடலங்காயாவது...அரசியல் செய்ய அந்த எலவுலாம் எதுக்கு?.....//

  ரொம்ப சரி!
  இன்று என் பதிவு
  ”கூட்டு இல்லை!அம்மா அறிவிப்பு!!தலைவர் வருத்தம்!!”

  ReplyDelete
 18. அவசரத்துல தமன்னா கிலோ என்ன விலைனு படிச்சு தொலைச்சிட்டேன்

  தன்மானம் மிக்க சகோ வாழ்க

  ReplyDelete
 19. இன்னாப்பா இத்த பட்ச்சா மன்சு தாங்கலப்பா! அல்லாமே கரிக்கிட்டா இருக்குது ! நம்ம அரசியலே இப்படித்தான் கீது !
  இத்த நெனச்சா படா பேஜாரா கீதுப்பா ! இன்னா பண்றது.

  ReplyDelete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. ஹா,ஹா,ஹா.............இன்னும் பாருங்க என்ன என்ன நடக்கப் போகுதுன்னு

  ReplyDelete
 22. indraya nilayil vaiko avarkal veliyeriyathu unmaiyil avarukku ulla hanmanaththin karanamakaththan avar thanmanam vittu panam mattume kurikkol ena irunthu irunthal ippadi thanimaamaga irunthu irukka vendiyathillai .

  ReplyDelete
 23. ஸலாம்ஸ் டு யூ சகோ.கஸாலி.

  தன்மானம் மட்டுமா...

  வெட்கம்,
  வாய்மை,
  நன்நம்பிக்கை,
  சொல்லிய வண்ணம் செயல்,
  பிறர் சொத்துக்கு ஆசைப்படாமை,
  கொள்கை,
  பிறர்நலன்,
  சமுதாய எதிர்காலம்,
  நடுநிலைமை,
  சமநீதி வழங்கல்,
  நேர்மை,
  கடும் உழைப்பு,
  பட்டப்படிப்பறிவு,
  பிறர்க்கின்னா செய்யாமை,
  பொதுநல நோக்கு,
  பணத்தாசை இல்லாமை,
  கொடையுள்ளம்,
  .....இப்படி எதற்குமே 'கிலோ எவ்வளவு' என்று தெரியாதவர்களே மிகச்சிறந்த அரசியல்வாதிகள்.

  இவ்வுலகில் என்னை யாராவது... "போடா... அரசியல்வாதியே"--என்று திட்டினால்... உலகிலேயே மிக மிக மோசமான திட்டு அதுதான் எனக்கு..!

  ReplyDelete
 24. அட பாவம் நண்பா அவரு செவுத்துல முட்டி முட்டி அழுதுக்கிட்டு இருக்காரு

  ReplyDelete
 25. சரியான அலசலுங்க.... நண்பரே..!!!

  ReplyDelete
 26. தன்மானம் கிலோ கணக்கில் விற்பதில்லை. தன்மானத்தில் விலை 21 சீட்டு.

  ReplyDelete
 27. சொன்னது தான் சொன்னீங்க. அவருக்கு ஆறுதலா ரெண்டு வார்த்தை சொன்னீங்களா?? ஒன்ற வருஷம் ஜெயில்ல இருந்த மகா புண்ணியவான் அவர். சகோதரி பட்டாடை போர்த்தியவுடன் எல்லாமே மறந்த மகான் அவர். அட போங்க சார்.

  ReplyDelete
 28. தன்மானம் இல்லை ஒரு இழவும் இல்லை, விஷயம் என்னன்னா தொகுதி கொடுத்திட்டு செலவும் அம்மாவே பண்ணனும்னா நடக்கிற காரியமா..?

  ReplyDelete
 29. தன்மானம் இல்லை ஒரு இழவும் இல்லை, விஷயம் என்னன்னா தொகுதி கொடுத்திட்டு செலவும் அம்மாவே பண்ணனும்னா நடக்கிற காரியமா..?

  ReplyDelete
 30. தன்மானமா,அப்படின்னா.........?

  ReplyDelete
 31. எப்படி டெய்லி ஒரு விஷயம் சிக்கிடுது உங்களுக்கு..???

  ReplyDelete
 32. Vaiko is not a good politician when we saw he activity.He always talk with a sentimate and cry .For all parties seeing sentimate where Vaiko in alliance that alliance defeated in past elections.So J.J throw him away.I am asking 1 question anybody can give answer.In MDMK advise 10 peoples name who well known in tamil nadu atleast in some districts.I know Vaiko, nanchil Sampath other 8 members can anybody try to tell the name include Vaiko also can tell.Vaiko decisions all wrong into the party and alliance in all times.He can work as a manager to any company that company will grow well.Unfortunately he is owner of a company so he can't run

  ReplyDelete
 33. தன்மானம் தான் தாயக்கட்டை விளையாடுதே....

  ஆமாம், அரசியல்ல இதெல்லாம் சகஜம்னு எல்லாருக்கும் தெரியுமே...

  இதோ இன்னொரு தன்மானத்தை பற்றிய பதிவு, படியுங்கள் இங்கே :

  தைலாபுரம்..கோபாலபுரம்..சந்தர்ப்பவாத கூட்டணி கிச்சு கிச்சு
  http://edakumadaku.blogspot.com/2011/02/blog-post.html

  ReplyDelete
 34. வைகோ ...அவர் எப்பொழுதும் 'கோ' தான் செல்வம், ராஜ்கோட், குஜராத்

  ReplyDelete
 35. தன்மானமெல்லாம் காசுக்கு இல்லைங்க அதுவும் இலவசமா கிடைக்குது பாருங்க..

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.