என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Sunday, March 20, 2011

21 வாழ்க கலைஞர், வாழ்க கலைஞரின் கதாநாயகி


நேற்று வெளியிடப்பட்ட தி.மு.க.தேர்தல் அறிக்கையும் என் மனதில் தோன்றியவையும்

ஈழத் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு சமமான நிலையை ஏற்படுத்தி, அரசியல் தீர்வை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க திமுக தொடர்ந்து வலியுறுத்தும். ஈழத் தமிழர்கள் அமைதியான சூழலில் வாழ தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுக்க வலியுறுத்துவோம்.

தந்தி அடித்து தானே வலியுறுத்துவீங்க.....


சென்னை கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனை போல திருச்சியிலும், மதுரையிலும் மன நல மருத்துவமனைகள் அமைப்போம்.

அப்படியே தமிழ்நாடு முழுதும் அமச்சீங்கன்னா....இந்த அரசியல்வாதிங்க அடிக்கும் கூத்தினால் சட்டையை பிச்சுக்கு திரியும் பொதுமக்கள் சேர்வதுக்கு வசதியா இருக்கும்

====================================

மூத்த குடிமக்களுக்கு மாதம் ஒருமுறை மருத்துவர்களே வீட்டுக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை சிகிச்சை செய்யும் முறையை சிறப்பாக செயல்படுத்துவோம்.


முதல்ல அரசு மருத்துவமனையில் எல்லா நேரமும் மருத்துவர்கள் இருக்குமாறு செய்யுங்க....
 
==========================================

அரசுக் கல்லூரிகளிலும், தொழில்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு, முதலாவது ஆண்டிலேயே இலவசமாக லேப்டாப் வழங்கப்படும்.


கொடுக்கறதுதான் கொடுக்கறீங்க நெட் கணக்சனையும் சேர்த்து கொடுங்க....

==================================================

மூத்த குடிமக்களுக்கு இலவசப் பேருந்து. 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும், உள்ளூர் பேருந்துகளில் கட்டணமில்லாத இலவச பயணம்.


முதல்ல அவங்க உட்கார நாலு சீட் ஏற்பாடு பண்ணுங்க....
 
======================================

கந்து வட்டிக் கொடுமையை நீக்க வழி வகை காணப்படும்.


டாஸ்மாக் போல அரசே கந்து வட்டிக்கடையும் நடத்துமா?
 
==============================

பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் கிலோ 1 ரூபாய் வீதம் வழங்கப்படும் 30 கிலோ அரிசி இனி இலவசமாக வழங்கப்படும்.


இலவச மின்சாரம் பயன்படுத்தும் பரம ஏழைகளை போலவா?


============================================

குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ அயோடின் கலந்த உப்பு மானிய விலையில் வழங்கப்படும்

உப்பா கொடுக்கப்போறீங்க...பார்த்து மக்களுக்கு ரோசம் வந்துடப்போகுது 

=========================================


பெண்களுக்கு இலவச கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும். பெண்கள் எதைக் கோருகிறார்களோ அதைப் பொறுத்து கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும்.


அதை இயக்க கரண்டு இருக்குமா?

=====================================

அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகள் உடனடியாக தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர்.

அரசு அலுவலகங்களில் மட்டும்தான்.ஸ்பெக்ட்ரம் பற்றி பேசக்கூடாது.


Post Comment

இதையும் படிக்கலாமே:


21 comments:

 1. அடடா அடடா அடடடடா ஸ் ஸ் ஸ் கொல்றாங்களே கொல்றாங்களே ஹி ஹி பழச மறக்கக்கூடாது ஹிஹி!

  ReplyDelete
 2. அடடா... இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்..

  ReplyDelete
 3. தேர்தல் அறிக்கை - கிண்டலாப் போச்சூல்ல - வாழ்க வாழ்க - நட்புடன் சீனா

  ReplyDelete
 4. கந்து வட்டிக் கொடுமையை நீக்க வழி வகை காணப்படும். டாஸ்மாக் போல அரசே கந்து வட்டிக்கடையும் நடத்துமா?//////////////

  செஞ்சாலும் செய்வானுங்க பாஸ்.... ஹி ஹி ஹி ...

  ReplyDelete
 5. இப்போ ஏன் இந்த கிண்டல் ....

  ReplyDelete
 6. பதிவர்களுக்கெல்லாம் இலவச நெட் கனெக்‌ஷென் கொடுப்பாருன்னு நினைச்சேன். ஆனா பெரிய ஏமாற்றம். பார்ப்போம் அம்மாவாவது இந்த திட்டத்தை அறிவிக்கிறாங்களான்னு!

  ReplyDelete
 7. வாழ்க கலைஞர்..வாழாத தமிழன்

  ReplyDelete
 8. அட..கலைஞரை கிண்டலும் பண்ணுவீங்களா

  ReplyDelete
 9. தந்தி அடித்து தானே வலியுறுத்துவீங்க.....///////////////////என்னது தந்தியா ? அது சீக்கிரம் போயி சேரும் நாங்க கடிதம் மட்டும் தான் எழுதுவோம்

  ReplyDelete
 10. ///டாஸ்மாக் போல அரசே கந்து வட்டிக்கடையும் நடத்துமா?///

  ஹா...ஹா...ஹா.... என்னா நக்கல்...


  எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

  ReplyDelete
 11. வரிக்கு வரி கமென்ட் சூப்பருங்க!

  ReplyDelete
 12. ஈழத் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு சமமான நிலையை ஏற்படுத்தி, அரசியல் தீர்வை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க திமுக தொடர்ந்து வலியுறுத்தும். ஈழத் தமிழர்கள் அமைதியான சூழலில் வாழ தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுக்க வலியுறுத்துவோம்.
  தந்தி அடித்து தானே வலியுறுத்துவீங்க.....

  ஹி..........ஹி...........ஹி........ நல்ல கேள்வி!

  ReplyDelete
 13. எல்லாம் சரி, இதெல்லாத்தையும் ஏற்கனவே பண்ணி இருக்கலாமே, ஏன் தேர்தல் வரைக்கும் வெயிட் பண்ணீங்க?

  ReplyDelete
 14. /////////கந்து வட்டிக் கொடுமையை நீக்க வழி வகை காணப்படும்.

  டாஸ்மாக் போல அரசே கந்து வட்டிக்கடையும் நடத்துமா? /////////

  டாஸ்மாக்லேயே அதையும் பண்ணிட்டா மக்கள் பணத்த வாங்கி பாதுகாப்பா அப்படியே பயன்படுத்திக்குவாங்கள்ல?

  ReplyDelete
 15. ////////அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகள் உடனடியாக தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர். ////////

  அய்யய்யோ அப்ப்போ அரசு ஊழியர்கள் ஓட்டு என்னாகுறது?

  ReplyDelete
 16. இலவச திட்டங்கள் என்று ஒழியுமோ அன்று தான் தமிழகத்தின் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்க முடியும். சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த பதிவு.

  ReplyDelete
 17. எனது இணைய இணைப்பில் கொஞ்சம் பிரச்சினை..சரியாக 2-3 நாள் ஆகலாம்..அதுவரை பிறருக்கு நோ பின்னூட்டம் + ஓட்டு..ஓசி நெட்டில் என் வலைப்பூ மட்டும் கவனிக்கப்படும்..ஹி..ஹி!

  ReplyDelete
 18. >>அதை இயக்க கரண்டு இருக்குமா?

  haa haa செம

  ReplyDelete
 19. உலகத்திலேயே மிக எளிதானது அடுத்தவன் திட்டத்தை குறைகூறுவது .

  ReplyDelete
 20. இது நல்லா இருக்கே...

  ReplyDelete
 21. உங்க கமெண்ட்ஸ் சூப்பர்..

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.