என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, March 15, 2011

63 ஜெயலலிதாவிடம் கேப்டன் சோல்ஜரான சோர வரலாறு


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணியின் புண்ணியத்தில் ஒரு சுபயோக சுப தினத்தில் அரசியலுக்கு காலடி எடுத்து வைத்தவர் விஜயகாந்த்.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கும், அன்புமணிக்கும் என்ன சம்பந்தம் என்றால்?.....
சம்பந்தம் இருக்கிறது....


ஒரு எம்.பி.-யாக கூட இல்லாத நிலையில் 2004-ஆம் ஆண்டு ,மத்தியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அமையப்பெற்ற அமைச்சரவையில் சுகாதாரத்துறை கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றார் அன்புமணி.
அதன் பிறகே அவசரம் அவசரமாக தி.மு.க. உதவியுடன் ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கப்பட்டார்.


அப்படிப்பட்ட அன்புமணியை எதிர்த்து கொல்லைப்புறம் வழியாக அமைச்சரவையில்  நுழைந்தவர் என்று
விஜயகாந்த் கமண்ட் அடித்தார்.

இது போதாதா பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு?
சும்மாவே சினிமாக்காரர்களுக்கு எதிராக போராடும் பா.ம.க-வினர்களை அந்த பேச்சு உசுப்பேற்றியது. விஜயகாந்தை பழிவாங்க வசதியாக கொஞ்ச நாளில் விஜயகாந்த் நடித்த கஜேந்த்ரா படம் வெளியானது.

இழவு காத்த கிளியாக இருந்த பா.ம.க.வினர்களுக்கு அடித்தது யோகம். ஏற்கனவே ரஜினி நடித்த பாபா திரைப்பட பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடி அனுபவம் பெற்றவர்களுக்கு கஜேந்த்ரா படப்பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடுவது சிரமமாக இருக்கவில்லை.

அப்போது தி.மு.க கூட்டணியில் பா.ம.க -இருந்ததால், தி.மு.க-வும் இந்த விஷயத்தில் அலட்டிக்கொள்ளவில்லை.


இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த விஜயகாந்த்....இனிமேல் நம் படப்பெட்டி ஓடாமல் நம் படம் ஓடவேண்டுமானால் அரசியல் ரீதியாக
நமக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற உத்வேகத்தில் 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள், தான் பிறந்த மண்ணான மதுரையில்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை துவங்கினார். இதுதான் விஜயகாந்தின்  அரசியல் பிரவேசத்திற்கான முன்கதை சுருக்கம்.


அதுவரை தி.மு.க-வின் அனுதாபியாக பார்க்கப்பட்ட விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தது தி.மு.க-தலைமையையும் அதிர வைத்தது.
எம்.ஜி.ஆர் பாதையை தனக்கான பாதையாக வகுத்துக்கொண்ட விஜயகாந்த், கருப்பு எம்.ஜி.ஆர் என்ற பெயரோடு எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் இரத்தங்களையும் கவர ஆரம்பித்தார்.
அது  அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த  ஜெயலலிதாவையும் கடுப்பேற்றியது.


விஜயகாந்தின் கட்சியை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி, பாக்யராஜின் எம்.ஜி.ஆர்.மக்கள் முன்னேற்ற கழகம், விஜய டி.ராஜேந்தரின் தாயக மறுமலர்ச்சி கழகம் போன்றவற்றோடு ஒப்பிட்டு நகைத்தனர் அரசியல் பார்வையாளர்களும், மற்ற கட்சியினரும். ஆனால், நடந்ததோ வேறு....


கட்சி ஆரம்பித்த ஐந்தே மாதங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வந்தது.

அந்த தேர்தலில் 234- தொகுதிகளிலும் யாருடனும் கூட்டணியில்லாமல் சுயேட்சையாகவே   அதிரடியாக வேட்பாளர்களை நிறுத்தினார். அதில் இரண்டு தொகுதியில் வேட்பாளர்கள் விலை போய் விட்டதால் மீதமுள்ள 232- தொகுதிகளில் கேப்டனின் படை வீரர்கள் களம் கண்டனர்.

ஆஹா....இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக ஒருவர் வந்துவிட்டார் என்று தமிழகமே நினைத்தது.  இப்போது பேசுவது போல் அதிரடியாகவெல்லாம் அந்த தேர்தலில் தி.மு.க-வை தாக்கவில்லை. இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றுதான் பிரச்சாரம் செய்தார்.

தி.மு.க.,அண்ணா.தி.மு.க என்று மாறிமாறி ஆட்சியிலமர்த்தி வஞ்சிக்கப்பட்டிருந்த மக்களுக்கும், நடுநிலையாளர்களுக்கும்
அப்போது ஆளுங்கட்சியாக இருந்த ஜெயலலிதா மீது வெறுப்பு கொண்டிருந்த மக்களுக்கும் விஜயகாந்தின் வருகை மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது.

 இரு கழகங்களுக்கும்   மாற்று சக்தியாக விஜயகாந்தை நினைத்து அவரின் பின்னால் அணி திரண்டனர்...

அவர் காட்டிய வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர்.தேர்தல் முடிவு வந்தது போட்டியிட்ட 232 தொகுதிகளில் விஜயகாந்த் தவிர மீதமுள்ள 231 தொகுதிகளிலும்   தோல்வியை தழுவினார்கள்.

அதேநேரம் 27,64,223 வாக்குகளுடன்   8.32%  சதவிகிதம் பெற்று தனிப்பெரும் சக்தியாக விளங்கி கிண்டலடித்த அரசியல் நோக்கர்களையும்,மற்ற  கட்சிகளையும் வாயடைக்க வைத்தது.


அதன்பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும்   கணிசமான வாக்குகள் வாங்கினார் விஜயகாந்த்.

அதன் பிறகு 2009-ஆம் ஆண்டு நடந்த நாடாளு மன்றதேர்தலில் 30,73,479  வாக்குகள் வாங்கி காட்டி தமிழக அரசியலில் தனக்கான இடத்தை தக்கவைத்தார்.

ஆனால், தொடர் தோல்விகளாலும், பண விரயத்தினாலும்  சோர்ந்து போயிருந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும், கட்சி தொண்டர்களும் கூட்டணி முடிவை நோக்கி நகர்ந்தார்கள். விஜயகாந்த் மனதையும் கரைத்தார்கள்.

2011-நம் லட்சியம், அதை வெல்வது நிச்சயம் என்ற ஸ்லோகத்துடன்  வலம்  வந்த ஒரு முதலமைச்சர் வேட்பாளர்,  வெறும் 41-சீட்டுக்காக அ.தி.மு.க-வுடன் கூட்டணி  வைத்து விட்டார். 

நாளைய முதல்வர் என்ற கனவில் திரிந்த விஜயகாந்த் இனி ஜெயலலிதா முதல்வராக காவடி தூக்கி காமடி பீஸ் ஆவார்.

விஜயகாந்த் அ.தி.மு.க-கூட்டணியில் இணைந்ததால் யாருக்கு லாபம்?
விஜயகாந்த் வருகையால் யாருமே வெல்ல முடியாத பலம் வாய்ந்த கூட்டணியாக அ.தி.மு.க-கூட்டணி திகழ்கிறதா? என்று நாளை அலசுவோம்.


டிஸ்கி: பதிவின் நீளம் படிப்பவர்களை சோர்வடைய செய்யும் என்பதால் இந்த பதிவை இரண்டு பகுதிகளாக்கி இருக்கிறேன்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


63 comments:

 1. அட விடுங்க...அவரு பாவம் ஏற்கனவே தனியாநின்னு நிறைய இழந்துட்டார். அதான் கூட்டணில நின்னு கொஞ்சம் சம்பாதிக்கலாம்னு பாக்குறார்.....

  ReplyDelete
 2. எப்ப ஐயா இந்த தேர்தல் முடியுமுண்ணு கிடக்குது...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

  ReplyDelete
 3. >>>இழவு காத்த கிளியாக இருந்த பா.ம.க.வினர்களுக்கு அடித்தது யோகம்

  உண்மையில் இலவு காத்த கிளி தான்.. ஆனால் திருத்த வேண்டாம்... பா ம கவுக்கு அது பொருத்தமே..

  ReplyDelete
 4. கேப்டன் எடுத்த முடிவு கரெக்ட் தான்.. காங்கிரசோட கூட்டணி சேர வாய்ப்பில்லை என தெரிந்ததும் உடனே அம்மா கூட அலையன்ஸ் வெச்சுக்கிட்டார்.. இது அவரது பிற்கால அரசியலுக்கு யூஸ் ஆகும்..

  ReplyDelete
 5. Pari T Moorthy said... 1 me first/////
  வாங்க பாரி....நல்வரவு

  ReplyDelete
 6. Pari T Moorthy said... 2 அட விடுங்க...அவரு பாவம் ஏற்கனவே தனியாநின்னு நிறைய இழந்துட்டார். அதான் கூட்டணில நின்னு கொஞ்சம் சம்பாதிக்கலாம்னு பாக்குறார்.....
  உண்மை

  ReplyDelete
 7. ♔ம.தி.சுதா♔ said... 3 எப்ப ஐயா இந்த தேர்தல் முடியுமுண்ணு கிடக்குது...
  இன்னும் ரெண்டு மாசத்துக்கு இப்படித்தான்

  ReplyDelete
 8. சி.பி.செந்தில்குமார் said... 4 >>>இழவு காத்த கிளியாக இருந்த பா.ம.க.வினர்களுக்கு அடித்தது யோகம் உண்மையில் இலவு காத்த கிளி தான்.. ஆனால் திருத்த வேண்டாம்... பா ம கவுக்கு அது பொருத்தமே..
  அண்ணன் சொன்னா சரிதான்

  ReplyDelete
 9. சி.பி.செந்தில்குமார் said... 5

  கேப்டன் எடுத்த முடிவு கரெக்ட் தான்.. காங்கிரசோட கூட்டணி சேர வாய்ப்பில்லை என தெரிந்ததும் உடனே அம்மா கூட அலையன்ஸ் வெச்சுக்கிட்டார்.. இது அவரது பிற்கால அரசியலுக்கு யூஸ் ஆகும்..

  கட்சியை காப்பாற்ற விஜயகாந்த் எடுத்த முடிவு சரிதான். ஆனால், முதலமைச்சர் வேட்பாளரா அவரு தோத்துட்டார். எதிர்காலத்தில்....வைகோவின் நிலை ஏற்படலாம்

  ReplyDelete
 10. ///விஜயகாந்த் வருகையால் யாருமே வெல்ல முடியாத பலம் வாய்ந்த கூட்டணியாக அ.தி.மு.க-கூட்டணி திகழ்கிறதா? என்று நாளை அலசுவோம்.///

  அலசுறதுக்கு என்ன யூஸ் பண்ணப் போறீங்க?

  பவர் சோப்பா? சர்ப் பவுடரா?

  ReplyDelete
 11. தமிழ் 007 said...
  அலசுறதுக்கு என்ன யூஸ் பண்ணப் போறீங்க?பவர் சோப்பா? சர்ப் பவுடரா?
  விஜயகாந்தை பற்றி அலச அதெல்லாம் தேவையில்லை. வெறும் [co="yellow"]தண்ணீரே[/co] போதும்.

  ReplyDelete
 12. தமிழ் 007 said...
  அலசுறதுக்கு என்ன யூஸ் பண்ணப் போறீங்க?பவர் சோப்பா? சர்ப் பவுடரா?
  விஜயகாந்தை பற்றி அலச அதெல்லாம் தேவையில்லை. வெறும் [co="yellow"]தண்ணீரே[/co] போதும்.

  ReplyDelete
 13. அன்பின் ரஹீம் கஸாலி

  நல்லதொரு அலசல் - அருமையான ஆய்வுக் கட்டுரை. அவர் அங்கு சென்றதற்கு முக்கிய காரணம் இதுவரை விரையமான பணமே !

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 14. அவர் இவ்வளவு நாளா தனியா நின்னதுக்கு காரணமே காங்கிரசுதான்னு ஒரு பேச்சு அடிபடுதே? உண்மையா?

  ReplyDelete
 15. //இழவு காத்த கிளியாக இருந்த பா.ம.க.வினர்களுக்கு அடித்தது யோகம்// அட்ரா சக்க..அட்ரா சக்க! கலக்கலான அலசல்!

  ReplyDelete
 16. கேப்டன் இந்த முறை தனியாக நிற்காதது சரியான முடிவு...

  தேமுதிக தனியாக நின்றால் இம்முறையும் 1 அல்லது 2 சீட்டுக்கள் மட்டுமே வெற்றி பெற்று இருக்க முடியும். அவ்வாறு 2 சீட் வெற்றி பெற்றால் தொண்டர்கள் சோர்வடைந்து விடுவார்கள்.

  தற்போது கேப்டன் கூட்டணியில் மட்டுமே உள்ளார் ஆட்சியில் கூட்டணியில் இல்லை... அம்மாவுடன் கூட்டணி சேர்ந்ததால் 15 சீட்டுக்கும் அதிகமாக வெற்றி பெற வாய்ப்பு அதிகம்...

  பாமகவின் எதாவது ஒரு கோட்டையில் தான் இம்முறை கேப்டன் நிற்பார் என எதிர்பார்க்கலாம்...

  ReplyDelete
 17. வேடந்தாங்கல் - கருன் said... 14 நான் வந்துட்டேன்..////
  வாங்க சார்....

  ReplyDelete
 18. cheena (சீனா) said... 15 அன்பின் ரஹீம் கஸாலி நல்லதொரு அலசல் - அருமையான ஆய்வுக் கட்டுரை. அவர் அங்கு சென்றதற்கு முக்கிய காரணம் இதுவரை விரையமான பணமே ! நல்வாழ்த்துகள் நட்புடன் சீனா
  தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அய்யா....

  ReplyDelete
 19. பாலா said... 16 அவர் இவ்வளவு நாளா தனியா நின்னதுக்கு காரணமே காங்கிரசுதான்னு ஒரு பேச்சு அடிபடுதே? உண்மையா?
  அப்படியா இருங்க...கேட்டு சொல்றேன்

  ReplyDelete
 20. செங்கோவி said... 17 //இழவு காத்த கிளியாக இருந்த பா.ம.க.வினர்களுக்கு அடித்தது யோகம்// அட்ரா சக்க..அட்ரா சக்க! கலக்கலான அலசல்!
  வருகைக்கு நன்றி செங்கோவி

  ReplyDelete
 21. சங்கவி said... 18

  கேப்டன் இந்த முறை தனியாக நிற்காதது சரியான முடிவு...


  நாளைய பதிவே இது பற்றித்தான்....தொடர்ந்து வாங்க...

  ReplyDelete
 22. பொறுத்து இருந்து பார்ப்போம் விஜயகாந்து கால சுழட்டி சுழட்டி அடிகிறாரா .. இல்லை பம்முறாரானு...

  ReplyDelete
 23. தனித்து நிற்க ஆசைபட்டாலும் அது இனிமேல் முடியாது ஒரு முறை பதவியை ருசித்துவிட்டவர்கள் அதை இழக்க எப்போதும் விரும்ப மாட்டார்கள் ........இனிமேல் கட்சி காரர்கள் இழுக்கும் பக்கம் எல்லாம் இவர் போக வேண்டி இருக்கும் ................

  ReplyDelete
 24. //////அப்படிப்பட்ட அன்புமணியை எதிர்த்து கொல்லைப்புறம் வழியாக அமைச்சரவையில் நுழைந்தவர் என்று
  விஜயகாந்த் கமண்ட் அடித்தார். //////

  இந்தக் கமெண்ட்டுதான் கேப்டனை இவ்வளவு தூரம் கொண்டு வந்துடுச்சா?

  ReplyDelete
 25. ///////இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த விஜயகாந்த்....இனிமேல் நம் படப்பெட்டி ஓடாமல் நம் படம் ஓடவேண்டுமானால் அரசியல் ரீதியாக
  நமக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற உத்வேகத்தில் 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள், தான் பிறந்த மண்ணான மதுரையில்
  தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை துவங்கினார். ////////

  அதுவும் சரிதான், இப்போ இதே ஃபார்முலாவைத்தான் நம்ம சின்ன டாகுடர் விஜய்யும் யூஸ் பண்றாரு போல?

  ReplyDelete
 26. /////cheena (சீனா) said...
  அன்பின் ரஹீம் கஸாலி

  நல்லதொரு அலசல் - அருமையான ஆய்வுக் கட்டுரை. அவர் அங்கு சென்றதற்கு முக்கிய காரணம் இதுவரை விரையமான பணமே ! ////////

  இதுதான் முக்கியமான காரணம். தேமுதிகவினரால் மற்ற கழகங்கள் போல் நிதி வசூல் வேட்டை நடத்த முடியவில்லை. எத்தனை நாள்தான் கைக் காசை போட்டு அரசியல் செய்யமுடியும்? போன தேர்தலிலேயே அதற்காகத்தான் பண முதலைகளை தேடிப் பிடித்து சீட்டு கொடுத்தார் கேப்டன். இப்போதும் தேர்தல் செல்வுக்காகவென அம்மாவிடம் இருந்து பெரிய தொகை ஒன்றை பெற்றிருப்பார்!

  ReplyDelete
 27. //////அஞ்சா சிங்கம் said...
  தனித்து நிற்க ஆசைபட்டாலும் அது இனிமேல் முடியாது ஒரு முறை பதவியை ருசித்துவிட்டவர்கள் அதை இழக்க எப்போதும் விரும்ப மாட்டார்கள் ........இனிமேல் கட்சி காரர்கள் இழுக்கும் பக்கம் எல்லாம் இவர் போக வேண்டி இருக்கும் ................///////

  இதுதான் நடக்கப் போகிறது.....! தேமுதிக, இன்னொரு தமிழகத்தின் பாமக/மதிமுக வாக மாறிடும் நாள் வெகுதூரத்தில் இல்லை!

  ReplyDelete
 28. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  //////அப்படிப்பட்ட அன்புமணியை எதிர்த்து கொல்லைப்புறம் வழியாக அமைச்சரவையில் நுழைந்தவர் என்று
  விஜயகாந்த் கமண்ட் அடித்தார். //////

  இந்தக் கமெண்ட்டுதான் கேப்டனை இவ்வளவு தூரம் கொண்டு வந்துடுச்சா?

  அதற்கு முன்பிருந்தே அரசியல் ஆசை இருந்தாலும்,,,அந்த சம்பவத்திற்கு பிறகுதான் கட்சி ஆரம்பித்தார்.

  ReplyDelete
 29. கேப்டனுடைய டாக்டர் பட்டம் டுபாக்கூர் பட்டம்னு பேசிக்கிறாங்களே?

  ReplyDelete
 30. அதுவும் சரிதான், இப்போ இதே பன்னிக்குட்டி ராம்சாமி said
  ஃபார்முலாவைத்தான் நம்ம சின்ன டாகுடர் விஜய்யும் யூஸ் பண்றாரு போல?///

  ஆம்..எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்....அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றதும் அரசியலில் இறங்குவார்கள்.மக்களின் ரட்சகனாக காட்டிக்கொள்வார்கள்

  ReplyDelete
 31. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  கேப்டனுடைய டாக்டர் பட்டம் டுபாக்கூர் பட்டம்னு பேசிக்கிறாங்களே?
  இருக்கலாம் நம்ம கக்கு மாணிக்கம் சார் கொடுத்தது போல....

  ReplyDelete
 32. அண்ணன் கேப்டனுடைய கட்சியை ஒரு அலசு அலசிட்டீங்க. ஒரு கிளாஸ் குடித்தாலும் மேன் மக்கள் மேன் மக்களே! நாளை மீதியையும் சொல்லுங்க தல!

  ReplyDelete
 33. ஓட்டு மட்டும் தான் கமென்ட் கிடயாது ஏன் ஏன்னு தெரியும்ல!!! !♥♥♥

  ReplyDelete
 34. //முதலமைச்சர் வேட்பாளரா அவரு தோத்துட்டார். //

  இந்த தேர்தல்ல ஜெயிக்கணும்னுதான் எல்லோரும் விரும்புவாங்க..

  ஆமா கூட்டணி சேர்ந்ததில் தவறு என்ன? பழம் தின்னு கொட்டை போட்ட கலைஞரே தனியா நிற்க தைரியமில்லை.

  அப்புறம் எதுக்கு தேமுதிக தனியா நிற்கணும். வெறும் 41 க்கா அப்படிங்கறீங்க.,

  ஒருவேளை கலைஞர் கூட்டணியில் சேர்ந்திருந்தா அதிகமா கிடைச்சிருக்கலாமோ.. அப்ப இந்த வாதம் எல்லாம் பண்ணமாட்டீங்க:))

  ReplyDelete
 35. ஒரே பிஸ் பிஸ் அப்புறமா வரேன் ஹி ஹி!

  ReplyDelete
 36. எம்.சி.யார் இப்புடி ஓட்டு கேக்கலையே? கேப்டனு அம்மா காலுல வுழுவாரா? நாப்பத்து ஒண்ணுல ஒன்னாச்சும் கெலிப்பாரா?அடசீ,ஜெயிப்பாரா?

  ReplyDelete
 37. நாளைய முதல்வர் என்ற கனவில் திரிந்த விஜயகாந்த் இனி ஜெயலலிதா முதல்வராக காவடி தூக்கி காமடி பீஸ் ஆவார்.///

  என்னுடைய கணிப்பின்படி விஜயகாந்தின் குணம் இதுவல்ல.. :))

  ReplyDelete
 38. விஜயகாந்தின் இந்த படம் ரொம்ப நல்லா இருக்கு

  ReplyDelete
 39. இக்பால் செல்வன் said... 24 பொறுத்து இருந்து பார்ப்போம் விஜயகாந்து கால சுழட்டி சுழட்டி அடிகிறாரா .. இல்லை பம்முறாரானு...////
  வழக்கமா ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்திருப்பவர்கள் என்ன பண்ணுவார்களோ அதுதான்

  ReplyDelete
 40. எம் அப்துல் காதர் said... 34 அண்ணன் கேப்டனுடைய கட்சியை ஒரு அலசு அலசிட்டீங்க. ஒரு கிளாஸ் குடித்தாலும் மேன் மக்கள் மேன் மக்களே! நாளை மீதியையும் சொல்லுங்க தல!
  சொல்லிட்டா போச்சு

  ReplyDelete
 41. Jiyath ahamed said... 35 ஓட்டு மட்டும் தான் கமென்ட் கிடயாது ஏன் ஏன்னு தெரியும்ல!!! ஏன்னா....
  அரசியலுக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம் அப்படித்தானே?

  ReplyDelete
 42. நிகழ்காலத்தில்... said... 36

  //முதலமைச்சர் வேட்பாளரா அவரு தோத்துட்டார். //

  இந்த தேர்தல்ல ஜெயிக்கணும்னுதான் எல்லோரும் விரும்புவாங்க..

  ஆமா கூட்டணி சேர்ந்ததில் தவறு என்ன? பழம் தின்னு கொட்டை போட்ட கலைஞரே தனியா நிற்க தைரியமில்லை.

  அப்புறம் எதுக்கு தேமுதிக தனியா நிற்கணும். வெறும் 41 க்கா அப்படிங்கறீங்க.,

  ஒருவேளை கலைஞர் கூட்டணியில் சேர்ந்திருந்தா அதிகமா கிடைச்சிருக்கலாமோ.. அப்ப இந்த வாதம் எல்லாம் பண்ணமாட்டீங்க:))
  வாங்க நிகழ்காலத்தில்.....
  கலைஞர் தைரியமில்லாமல் கூட்டணி வைக்கிறார் என்று ஒத்துக்கொண்டாலும்....அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர். நேற்று வரை முதல்வர் வேட்பாளர் நான் என்று சொல்லிய விஜயகாந்தால் அது முடியாதே? அவர் கலைஞர் கூட மட்டுமல்ல வேறு யார்கூட கூட்டணி வைத்திருந்தாலும் ஒரு முதலமைச்சர் வேட்பாளர் என்ற மட்டில் தோல்விதான்.

  ReplyDelete
 43. விக்கி உலகம் said... 37 ஒரே பிஸ் பிஸ் அப்புறமா வரேன் ஹி ஹி!
  ஓகே...நாளைக்கு வாங்க...

  ReplyDelete
 44. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

  present sir
  thank you sir

  ReplyDelete
 45. Yoga.s.FR said... 39 எம்.சி.யார் இப்புடி ஓட்டு கேக்கலையே? கேப்டனு அம்மா காலுல வுழுவாரா? நாப்பத்து ஒண்ணுல ஒன்னாச்சும் கெலிப்பாரா?அடசீ,ஜெயிப்பாரா?///பார்க்கலாம்
  இந்த முறை எத்தனைன்னு

  ReplyDelete
 46. வைகை said... என்னுடைய கணிப்பின்படி விஜயகாந்தின் குணம் இதுவல்ல.. :))///
  உங்க கணிப்பையும் சொல்லிருக்கலாம்

  ReplyDelete
 47. ஆர்.கே.சதீஷ்குமார் said... 41

  விஜயகாந்தின் இந்த படம் ரொம்ப நல்லா இருக்கு///

  அடேங்கப்பா...எவ்வளவு சந்தோசம்? நான்தான் அடுத்த முதல்வருன்னு சொல்லி தனக்கு போட்டியா இருந்த விஜயகாந்தை 41 சீட்டுல அடச்சுப்புட்டாரே...ஜெயலலிதா?

  ReplyDelete
 48. http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_9252.html கொங்கு இளைஞர் பேரவையுடன் மார்க்சிஸ்டுகள் திருப்பூரில் போட்டுள்ள ஊழல் கூட்டணி - சிபிஎம் தோழர்களை பதில் சொல்ல வைத்து விடுவாரா எனத் தெரிய‌வில்லையே

  ReplyDelete
 49. http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_9252.html கொங்கு இளைஞர் பேரவையுடன் மார்க்சிஸ்டுகள் திருப்பூரில் போட்டுள்ள ஊழல் கூட்டணி - சிபிஎம் தோழர்களை பதில் சொல்ல வைத்து விடுவாரா எனத் தெரிய‌வில்லையே

  ReplyDelete
 50. கோபிக்காதீங்க நண்பரே நான் கமெண்டு போட கொஞ்ச நாட்களாகும்....
  இது கூட டெம்ளேட் கமெண்டு தான்

  ReplyDelete
 51. ”தொடர் தோல்விகளாலும், பண விரயத்தினாலும் சோர்ந்து போயிருந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும், கட்சி தொண்டர்களும் கூட்டணி முடிவை நோக்கி நகர்ந்தார்கள். விஜயகாந்த் மனதையும் கரைத்தார்கள்.

  வருவாயே இல்லாமல் எத்தனை முறைதான் தொண்டன் செலவழிப்பான்? ஓட்டுச் சீட்டு தேர்தல் அரசியலே பிழைப்புக்கானது. விஜய்காந்த் கட்சி நடத்தினால் மட்டும் இது மாறிவிடுமா என்ன?

  கேப்டனைப் பற்றி மேலும் அறிய...
  கேப்டன் கேடட் ஆன கதை!

  http://hooraan.blogspot.com/2011/03/blog-post_06.html

  ReplyDelete
 52. புலிகளை ஆதரித்து பேசலாம் சரி - என்ன பேசுவது தமிழ்தேசிய வாதிகளே ! http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_15.html

  ReplyDelete
 53. தனியாக நின்றபோது எவனும் ஓட்டுபோடவில்லை. இப்போது யாருடனாவது கூட்டணி என்றால் துள்ளிக்குதிப்பது எதனால்?

  ராமதாஸ், வைகோ, விஜயகாந்து மூவரும் தனியாக நின்று தமிழ்நாட்டு மக்களின் சொரணையை சோதித்துவிட்டார்கள். பெரும்பான்மை மக்களுக்குச் சொரணை இல்லை என்றவுடன் அவர்கள் கூட்டணி என்ற சுழலில் சிக்கிவிட்டார்கள்.

  இவர்கள் கூட்டணி மாறுவதைப் பற்றிப் பேச யாருக்கும் அருகதை இல்லை.

  ReplyDelete
 54. இரவு வானம் said... 51 அடுத்தது என்ன??
  நாளைக்கு பாருங்கள்

  ReplyDelete
 55. மைந்தன் சிவா said... 54 கோபிக்காதீங்க நண்பரே நான் கமெண்டு போட கொஞ்ச நாட்களாகும்.... இது கூட டெம்ளேட் கமெண்டு தான்////
  பராவாயில்லை நண்பா...

  ReplyDelete
 56. ஊரான் said... 55

  ”தொடர் தோல்விகளாலும், பண விரயத்தினாலும் சோர்ந்து போயிருந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும், கட்சி தொண்டர்களும் கூட்டணி முடிவை நோக்கி நகர்ந்தார்கள். விஜயகாந்த் மனதையும் கரைத்தார்கள்.

  வருவாயே இல்லாமல் எத்தனை முறைதான் தொண்டன் செலவழிப்பான்? ஓட்டுச் சீட்டு தேர்தல் அரசியலே பிழைப்புக்கானது. விஜய்காந்த் கட்சி நடத்தினால் மட்டும் இது மாறிவிடுமா என்ன?

  கேப்டனைப் பற்றி மேலும் அறிய...
  கேப்டன் கேடட் ஆன கதை!////

  போன முறை இவரின் வேட்பாளர்களில் பலர் பசையுள பார்ட்டிகள் தான். அதனால் சிலவளித்தது அவர்கள்தான். தொண்டர்களல்ல,,,

  ReplyDelete
 57. ராவணன் said... 57

  தனியாக நின்றபோது எவனும் ஓட்டுபோடவில்லை. இப்போது யாருடனாவது கூட்டணி என்றால் துள்ளிக்குதிப்பது எதனால்?

  ராமதாஸ், வைகோ, விஜயகாந்து மூவரும் தனியாக நின்று தமிழ்நாட்டு மக்களின் சொரணையை சோதித்துவிட்டார்கள். பெரும்பான்மை மக்களுக்குச் சொரணை இல்லை என்றவுடன் அவர்கள் கூட்டணி என்ற சுழலில் சிக்கிவிட்டார்கள்.

  இவர்கள் கூட்டணி மாறுவதைப் பற்றிப் பேச யாருக்கும் அருகதை இல்லை.////

  தனியாக நின்றதால் யாரும் ஓட்டுப்போடவில்லை என்பதே தவறான வாதம். வோட்டு போடாமலா 27 லட்சம் வோட்டு வாங்கினார். அல்லது மிசினில் ஏதும் தில்லுமுல்லு பண்ணினாரா? அந்த வோட்டை வைத்துதானே இப்போது பேரம் பேசினார். யாரும் இங்கு துள்ளி குதிக்கவில்லை... நான்தான் அடுத்த முதலமைச்சர் என்று சொன்னவர் இப்போது இன்னொருவர் முதலமைச்சர் ஆக பல்லக்கு தூக்குகிறாரே என்ற ஆதங்கம் தான் இது.

  ReplyDelete
 58. @ரஹீம் கஸாலி
  நான் இங்கே தொண்டன் என்று குறிப்பிட்டது பசையுள்ள பார்ட்டிகளைத்தான். அடிமட்டத் தொண்டனை அல்ல.
  நன்றி!

  ReplyDelete
 59. விஜயகாந் வரும் காலத்தில் அ.தி.மு.க தலைவராய் வருவது உறுதி.

  tamillinux

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.