என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, March 19, 2011

17 நான் வைகோவை புறக்கணித்தேனா?-மறுக்கிறார் ஜெயலலிதா

கடந்த ஐந்து நாட்களாக நமது கப்சா புலனாய்வு இதழுக்காக அண்ணா.தி.மு.க-வின் பொது செயலாளர் செல்வி ஜெயலலிதாவிடம் பேட்டி    கேட்டிருந்தோம். நீண்ட போராட்டங்களுக்கு பிறகு நேற்று மாலை போயஸ் கார்டன் கேட்டில் வாட்ச்மேன் அருகிலிருந்த இன்டர்காம் மூலம் பேட்டி தந்தார். இனி நமது  கேள்விகளும், அவரின்  பதில்களும்.........கேள்வி : தன்னிச்சையாக நீங்கள் வேட்பாளரை  அறிவித்ததால் உங்களின் கூட்டணி கட்சிகள் மூன்றாவது அணி வரை போய்விட்டார்களே?....

ஜெயலலிதா: அது நானே எதிர்பார்க்கவில்லை. வழக்கமா நான் வேட்பாளர்களை அறிவித்தால் நான் தான் அதை மாற்றிக்கொண்டே இருப்பேன். இந்த முறை கூட்டணி கட்சியினர் மாற்ற சொன்னார்கள். கொஞ்சம் பிடிவாதமாக இருந்தால்...அம்மா நீங்க பார்த்து ஏதாவது செய்யுங்கன்னு கெஞ்சுவாங்க நம்ம கொடுக்கறதை கொடுத்து விடுவோம்ன்னு நினைச்சேன். ஆனா அவங்க எல்லோரும் சேர்ந்து விஜயகாந்த் ஆபிசுக்கு போயி மூணாவது அணின்னு மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்க....
கேள்வி: அப்புறம் எப்படி நிலைமையை சமாளிச்சீங்க?

ஜெயலலிதா: அது பெரிய கதை. அந்த 160 -பேரும் வேட்பாளருங்க இல்லை...நான் மாற்ற நினைச்சிருந்த ஒன்றிய செயலாளர்கள் லிஸ்ட்.... வேட்பாளர் பட்டியலுக்கு பதிலா தவறுதலா சசிகலா அந்த பட்டியலை எடுத்து கொடுத்துட்டாங்கன்னு சொல்லி சமாளிச்சுட்டேன்.


கேள்வி : இத்தனை நாளா உங்க கூட்டணியில் இருந்த வைகோவிற்கு சீட் கொடுக்காம புறக்கணித்து  விட்டுட்டீங்களே?.......

ஜெயலலிதா:நான் அன்பு சகோதரர் வைகோவை புறக்கணித்தேன் என்று சொல்வதே தவறு. நடந்தது என்னன்னா..... அவரோட கட்சிய மறந்துட்டு எங்க கட்சியோட கிளை செயலாளரு போல வைகோ நடந்துகிட்டதால....செங்கோட்டையன், ஒ.பன்னீர்செல்வம் முன்னிலையில அண்ணா.தி.மு.க-வில இணைஞ்சுட்டாறு போலன்னு இவ்வளவு நாளா நினைச்சுக்கு இருந்தேன். இப்பத்தான் தெரியுது அவருக்கு கட்சின்னு ஒன்னு இருக்கற விஷயமே....

 
கேள்வி : அடிக்கடி வேட்பாளர மாத்துவீங்களே...இப்ப எப்படி? 
 
ஜெயலலிதா: வழக்கம்போல்தான்....


 
கேள்வி : எதுக்கு அடிக்கடி இப்படி வேட்பாளர மாத்துறீங்க....அதனால அவங்க நம்பகத்தன்மை கெட்டுப்போயிடாதா?

ஜெயலலிதா: யார் சொன்னது? அப்போது  நான் வெளியிடுவது  வேட்பாளர் பட்டியலே கிடையாது. அது டம்மி லிஸ்ட். முதலில் வேட்பாளர்கள் என்று ஒரு லிஸ்டை வெளியிடுவேன். அந்த லிஸ்டுக்கு மக்களும் எனது கட்சிக்காரர்களும் என்ன மாதிரி வரவேற்பு கொடுக்கிறார்கள், யார் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள், யார்யாரை மாற்ற சொல்லி போராடுகிறார்கள்  என்று பார்ப்பேன். அதன் பிறகு வேட்பாளர்களையும் போராட்டம் செய்பவர்களையும்  மாற்றிவிடுவேன். இது ஒரு வகையில் ராஜதந்திரம்.

கேள்வி : வேட்பாளர்களை மாற்றுவீர்கள் சரி....போராடுபவர்களை ஏன் மாற்றுகிறீர்கள்?

ஜெயலலிதா: பின்னே...நான் ஒருவரை அறிவித்தால் இதயதெய்வம்,புரட்சித்தலைவி,   அம்மாவின்  ஆணை என்று அதை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும் அதை விட்டுவிட்டு போராடினால் எப்படி?

ஓகே....தொகுதி பங்கீடு பற்றி பேச கூட்டணி கட்சியினர் வந்துட்டாங்க.....பேட்டியை நிறைவு செய்வோம்....

அண்ணா நாமம் வாழ்க....புரட்சி தலைவர் நாமம் வாழ்க....


Post Comment

இதையும் படிக்கலாமே:


17 comments:

 1. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!இன்னும் சிரிப்பு நிக்கல...

  ReplyDelete
 2. மாப்ள நீர் அந்த உலக்க சீ உலக தலைவியோட மனசாட்சி கிட்ட பேட்டி எடுத்தியோன்னு ஒரு டவுட்டு ஹி ஹி!

  ReplyDelete
 3. அம்மா என்றழைக்காத அடிமை இல்லையே.. அம்மாவை கூழைக்கும்பிடு போடாமல் சீட்டில்லையே

  ReplyDelete
 4. அன்பின் ரஹீம் கஸாலி

  கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது - ஒடம்பு எப்படி இருக்கு ? ஆட்டோ அவ்ளோ தூரம் வராதுன்னு நெனெப்பா ? சாக்கிரத - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  ReplyDelete
 5. எல்லாம் ஒரு கணக்குதாங்க..

  ReplyDelete
 6. இதல்லொம் அரசியல் சகஜமப்பா...

  ReplyDelete
 7. எப்படியால்லாம் லிங்க கொடுக்காரங்கப்பா..

  ReplyDelete
 8. //அந்த 160 -பேரும் வேட்பாளருங்க இல்லை...நான் மாற்ற நினைச்சிருந்த ஒன்றிய செயலாளர்கள் லிஸ்ட்.... // இது கலக்கல் கஸாலி.

  ReplyDelete
 9. என்ன ஆளுயா??
  கடி கடி...
  உடம்பெல்லாம் புண்ணாகி விட்டது....
  அம்மா பாத்தாங்க எண்டால் உங்களுக்கு அஞ்சு தொகுதி ஒதுக்கிட போறாங்க...

  ReplyDelete
 10. வாழ்க அண்ணா நாமம் ....
  வாழ்க புரட்சி தலைவர் நாமம் ....


  நமக்கு பட்டை நாமம்.......

  ReplyDelete
 11. 160-ம் செய்லாளர்களா? யோவ் கடைசில நெஜமாவே அப்படித்தான்யா இருக்கப் போவுது....

  ReplyDelete
 12. பன்னிக்குட்டி ராம்சாமி said... 10

  வாழ்க அண்ணா நாமம் ....
  வாழ்க புரட்சி தலைவர் நாமம் ....


  நமக்கு பட்டை நாமம்.......//////////////

  ரொம்ப கரைக்ட்டு மாப்பு ஏ ..........டண்டணக்கா டனக்குனக்கா.............................

  ReplyDelete
 13. வரிசையா போட்டு தாக்குறீங்க..

  ReplyDelete
 14. அன்பின் ரஹீம் கஸாலி

  கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது - ஒடம்பு எப்படி இருக்கு ? ஆட்டோ அவ்ளோ தூரம் வராதுன்னு நெனெப்பா ? சாக்கிரத - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா//
  அனுபவமா அய்யா

  ReplyDelete
 15. இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு.

  ReplyDelete
 16. நமக்கும் போட போகும் நாமம் வாழ்க..

  ReplyDelete
 17. Eppudi kirikkatvilayttil neenga etu sonnalum nammuvangala.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.