என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Sunday, March 06, 2011

64 காங்கிரசுடன் கூட்டணிக்கு தயார்-ஜெயலலிதா அதிரடி அறிக்கை.

இன்று காலை ஜெயலலிதாவிடமிருந்து எங்களின் கப்சா நாளிதழுக்கு ஒரு அறிக்கை வந்திருந்தது. அதில் கூறப்பட்டிருப்பதாவது........


காங்கிரசோடு கூட்டணிக்கு தயார்- ஜெயலலிதா அறிக்கை.


தி.மு.க-கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலக்கப்பட்டிருப்பதை அல்லது விலகியதை நான் வரவேற்கிறேன். 
இவ்வளவு நாளாக காத்திருந்தது இப்போது நடந்துவிட்டது கண்டு என் மனம் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது. 

அவர்கள் உங்களிடமிருந்து விலகினால் என் கட்சி எம்பிக்கள் உங்கள் ஆட்சி கவிழாமல் இருப்பதற்கு உங்களை ஆதரிப்பார்கள்.
கடந்த காலங்களில் நான் பா.ஜ.க.- அரசிற்கும் , வாஜ்பாயி அவர்களுக்கும் வழங்கிய நிபந்தனையற்ற அதே ஆதரவை உங்களுக்கு வழங்க தயாராக இருக்கிறேன். 

மேலும், நண்பர் சோ அவர்களிடம் சொல்லி பா.ஜ.க-எம்பிக்களின் ஆதரவையும் உங்களுக்கு வாங்கித்தருகிறேன் என்று இந்த நேரத்தில் நான் கூறிக்கொள்கிறேன். 

ஏற்கனவே எங்களின் வாக்கு வங்கியிடமிருந்து எட்டு சதவிகிதத்தை பிரித்து சென்ற விஜயகாந்த் மீண்டும் எங்களிடமே வந்து விட்டதால், நாங்கள்தான் இப்போது பலமான கூட்டணி, அடுத்து எங்கள் ஆட்சிதான் என்ற மாயத்தோற்றம் மக்களிடம் மன்னிக்கவும் வலைப்பதிவர்களிடம் ஏற்பட்டு விட்டதால் நீங்களும் அந்த ஜோதியில் ஐக்கியமாகிக்கொள்ளுங்கள்.

வைகோ, கம்யூனிஸ்ட் போன்றவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்களை கருணாநிதியிடம் அனுப்பிவிடுவோம். 

மேலும் நம் கூட்டணி ஜெயித்து நான் ஆட்சிக்கு வந்தால்.....மாதம் ஒரு காங்கிரஸ் கோஷ்டி தலைவரை மந்திரியாக்கி விடுகிறேன்.....ஐந்து வருடத்தில் அறுபது பேரும் மந்திரியாகி இருப்பார்கள். 

கடந்த முறை என் ஆட்சியில் இப்படித்தான் மாதந்தோறும் ஒருவரை மந்திரிசபையிலிருந்து நீக்கிவிட்டு புதியவர்களை மந்திரியாக்கி எங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் பாதிப்பேரை  மந்திரி சுகத்தை அனுபவிக்கவைத்து புதிய சாதனை படைத்தேன்.

இப்போதும் அந்த சாதனை தொடர நீங்கள் எங்கள் கூட்டணிக்கு வாருங்கள். தேர்தல் நேரம் நெருங்கிவிட்டதால் சோனியா, ராகுல், குலாம் நபி, சிதம்பரம்,வாசன் போன்றோருக்கு என் இல்ல கதவு திறந்தே இருக்கும். வாசலிலேயே உங்களை காக்க வைக்க கூடாது என்பதற்காக வாட்ச் மேனுக்குக்கூட விடுமுறை கொடுத்து அனுப்பிவிட்டேன்.

அண்ணா(வுக்கு) நாமம் (போட்டு) வாழ்க.....
புரட்சி தலைவரு(க்கு) நாமம் (போட்டு) வாழ்க....என்று கூறி வடை விடை பெறுகிறேன்.நாளை  நமதே.
என்பதாக அந்த அறிக்கையில் குறிப்படப்பட்டிருந்தது.


Post Comment

இதையும் படிக்கலாமே:


64 comments:

 1. நாசமா போச்சு !!! குத்துங்கைய்யா ஒட்டுகளை சுயேட்சைகளுக்கு இந்த கருமாந்திர கட்சிகளை நம்பி துளி பிரயோசனம் இல்லைங்க .............

  ReplyDelete
 2. >>>
  அண்ணா(வுக்கு) நாமம் (போட்டு) வாழ்க.....
  புரட்சி தலைவரு(க்கு) நாமம் (போட்டு) வாழ்க....என்று கூறி வடை விடை பெறுகிறேன்.நாளை நமதே.

  கலக்கல் பதிவு. இந்த வாரத்தின் மிகச்சிறந்த கற்பனை. டைமிங்க். (டேய் சி பி நோட் பண்ணிக்கோ, கத்துக்கோ..)

  ReplyDelete
 3. கப்ஸாவா..நான்கூட உண்மையோன்னு பயந்துட்டேன்..

  ReplyDelete
 4. கலக்குறீங்க பாஸ்...நான் இத உண்மைனே நினைத்துவிட்டேன் முதலில்....அப்புறம் பார்த்த கப்ஸா... எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது.....

  ReplyDelete
 5. இதெல்லாம் நடந்தாலும் நடக்குமுங்க..

  ReplyDelete
 6. தேர்தல் நெருங்க இன்னும் பல காட்சிகள் அரேங்கேறும். நாமும் வாயைப் பிளந்து வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.http://tmaideen.blogspot.com/2011/03/blog-post.html கொஞ்சம் நம்ம பக்கமும் வாங்க

  ReplyDelete
 7. இந்த அரசியல்வாதிகள இன்னுமா நம்பிக்கிட்டு இருக்கீங்க...

  சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ

  ReplyDelete
 8. அரசியலில் இதெல்லாம் சகஜம் சார்
  நல்லாவே அலசுறிங்க


  நம்ம வீட்டுக்குழந்தைகளும் உங்களை அதிர்பார்க்கிறார்கள்
  நன்றி தோழரே...

  ReplyDelete
 9. சி.பி.செந்தில்குமார் said...

  போட்றா முத வெட்டை
  பார்த்து வெட்டுங்க அண்ணாச்சி கம்ப்யூட்டர் ஒடஞ்சிட போகுது

  ReplyDelete
 10. இக்பால் செல்வன் said...

  நாசமா போச்சு !!! குத்துங்கைய்யா ஒட்டுகளை சுயேட்சைகளுக்கு இந்த கருமாந்திர கட்சிகளை நம்பி துளி பிரயோசனம் இல்லைங்க .............
  அதைத்தான் நான் சொல்றேன், யாரை நம்பியும் பிரயோஜனம் இல்லை

  ReplyDelete
 11. சி.பி.செந்தில்குமார் said...

  >>>
  அண்ணா(வுக்கு) நாமம் (போட்டு) வாழ்க.....
  புரட்சி தலைவரு(க்கு) நாமம் (போட்டு) வாழ்க....என்று கூறி வடை விடை பெறுகிறேன்.நாளை நமதே.

  கலக்கல் பதிவு. இந்த வாரத்தின் மிகச்சிறந்த கற்பனை. டைமிங்க். (டேய் சி பி நோட் பண்ணிக்கோ, கத்துக்கோ..)/////

  நன்றி அண்ணாச்சி

  ReplyDelete
 12. செங்கோவி said... கப்ஸாவா..நான்கூட உண்மையோன்னு பயந்துட்டேன்..////அடடே....இதுக்கே பயந்தா எப்படி செங்.....

  ReplyDelete
 13. Pari T Moorthy said... கலக்குறீங்க பாஸ்...நான் இத உண்மைனே நினைத்துவிட்டேன் முதலில்....அப்புறம் பார்த்த கப்ஸா... எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது.....
  காசா பணமா கற்பனைதானே....உங்களாலும் முடியும்.வருகைக்கு நன்றி பாரி.

  ReplyDelete
 14. தம்பி கூர்மதியன் said... இதெல்லாம் நடந்தாலும் நடக்குமுங்க../////
  ஆமா....ஆமா....

  ReplyDelete
 15. மைதீன் said... தேர்தல் நெருங்க இன்னும் பல காட்சிகள் அரேங்கேறும். நாமும் வாயைப் பிளந்து வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.http://tmaideen.blogspot.com/2011/03/blog-post.html கொஞ்சம் நம்ம பக்கமும் வாங்க
  இப்பத்தானே ஆட்டமே ஆரம்பிச்சுருக்கு.....உங்க பக்கமும் வர்றேன்

  ReplyDelete
 16. தமிழ்வாசி - Prakash said...

  இந்த அரசியல்வாதிகள இன்னுமா நம்பிக்கிட்டு இருக்கீங்க.../////////
  யாரு நம்புறா இப்போ....

  ReplyDelete
 17. நேசமுடன் ஹாசிம் said... 9 அரசியலில் இதெல்லாம் சகஜம் சார் நல்லாவே அலசுறிங்க நம்ம வீட்டுக்குழந்தைகளும் உங்களை அதிர்பார்க்கிறார்கள் நன்றி தோழரே.../////
  வருகைக்கு நன்றி சார்....

  ReplyDelete
 18. நான் கூட உண்மையோ என்று நினைச்சு பதறிட்டேங்க...
  ஐயோ ஐயோ...
  டக்கால்டிக்கே டகுல் பாஷா வேலை காமிச்சிட்டீங்களே

  ReplyDelete
 19. செம செம செம உண்மையில் ரசித்தேன்

  ReplyDelete
 20. டக்கால்டி said... 19 நான் கூட உண்மையோ என்று நினைச்சு பதறிட்டேங்க... ஐயோ ஐயோ... டக்கால்டிக்கே டகுல் பாஷா வேலை காமிச்சிட்டீங்களே/////
  வாங்க....டகால்டி...முதன்முதல் நம்ம பக்கம் வந்துருக்கீங்க....அடிக்கடி வாங்க

  ReplyDelete
 21. சௌந்தர் said... 20 செம செம செம உண்மையில் ரசித்தேன்

  வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி நண்பா....

  ReplyDelete
 22. தொர நமக்கு அரசியல் ஆவாதுங்கோவ்! ஒட்டு போட்டுட்டு கேளம்புறேனுங்கோவ்!!

  ReplyDelete
 23. ஓட்ட வட நாராயணன் said...

  தொர நமக்கு அரசியல் ஆவாதுங்கோவ்! ஒட்டு போட்டுட்டு கேளம்புறேனுங்கோவ்!!
  என்ன ஓட்டவட இப்படி சொல்லிட்டீங்க ....நம்ம நாட்டுல ரொம்ப பேருக்கு அரசியல்தாங்க வயிற்று பொழப்பு

  ReplyDelete
 24. //தேர்தல் நேரம் நெருங்கிவிட்டதால் சோனியா, ராகுல், குலாம் நபி, சிதம்பரம்,வாசன் போன்றோருக்கு என் இல்ல கதவு திறந்தே இருக்கும். வாசலிலேயே உங்களை காக்க வைக்க கூடாது என்பதற்காக வாட்ச் மேனுக்குக்கூட விடுமுறை கொடுத்து அனுப்பிவிட்டேன்//

  ஹிஹி...ஹிஹி..

  செம கற்பனை.

  ReplyDelete
 25. தமிழ் 007 said...

  //தேர்தல் நேரம் நெருங்கிவிட்டதால் சோனியா, ராகுல், குலாம் நபி, சிதம்பரம்,வாசன் போன்றோருக்கு என் இல்ல கதவு திறந்தே இருக்கும். வாசலிலேயே உங்களை காக்க வைக்க கூடாது என்பதற்காக வாட்ச் மேனுக்குக்கூட விடுமுறை கொடுத்து அனுப்பிவிட்டேன்//

  ஹிஹி...ஹிஹி..

  செம கற்பனை.///
  வாங்க தமிழ் தங்களின் முதல் வருகைக்கு நன்றி....அடிக்கடி வந்து ஆதரவு தருக

  ReplyDelete
 26. இவனுங்கெல்லாம ஏன் இப்படி பண்ணுரானுங்கன்னா!

  நாம எந்தப்பக்கம் போனாலும் நம்ம இ.வா. மக்கள் நமக்குத்தான் ஓட்டு போடுவானுங்க அப்டீன்னு ஒரு நம்பிக்கை.

  நாம தான் நண்பரே முதல்ல திருந்தனும். தே.மு.தி.க. வுல நேத்து அம்மா மோசமான ஆளுன்னு சொன்னானுங்க. இன்னிக்கு அம்மாவுக்கு ஆதரவுன்னு சொல்லுரானுங்க.

  ReplyDelete
 27. கற்பனை உண்மையில் நடந்தாலும் நடக்கலாம்.. யார் கண்டது?

  ReplyDelete
 28. தமிழ் 007 said... 27தே.மு.தி.க. வுல நேத்து அம்மா மோசமான ஆளுன்னு சொன்னானுங்க. இன்னிக்கு அம்மாவுக்கு ஆதரவுன்னு சொல்லுரானுங்க.
  ஆம்...நண்பரே நிஜம்தான் என் நேற்றைய பதிவு இதை பற்றித்தான் போட்டிருந்தேன் பாருங்கள்...

  ReplyDelete
 29. பாரத்... பாரதி... said... 28 கற்பனை உண்மையில் நடந்தாலும் நடக்கலாம்.. யார் கண்டது?நாளைக்கே இது நிஜமானாலும் ஆகலாம்

  ReplyDelete
 30. நம்ம கடை இனிமேல் எலக்ஸன் வரைக்கும் களைகட்டும் போலிருக்கே...
  கலக்குங்க...

  ReplyDelete
 31. அதிர வைக்கும் கப்சா நியுஸ் வாங்கி விட்டீர்களா!

  ReplyDelete
 32. மக்கா.. இது நடக்க வாய்ப்பிருக்கு...


  ஆனா ஒரு நல்ல சேதி.. இப்பவே மத்திய அரசு, முறைகேடாக தேர்தல் நடக்காமல் இருக்க மத்திய ரிசர்வ் படைகளைக் குவிப்பதாகக் கேள்வி.. சோனியாவின் அடுத்த செக். நீ என்னைக் கவிழ்த்தால் நான் உன்னைக் கவிழ்ப்பேன்.. முதல்படியாக ஐயாயிரம் போலீஸ் வருகிறதாம். அடுத்ததாக பதினைந்தாயிரம் பேர் வர இருக்கிறார்களாம்.. நமக்குக் கொண்டாட்டம் தான்..

  ReplyDelete
 33. வேடந்தாங்கல் - கருன் said... 31 நம்ம கடை இனிமேல் எலக்ஸன் வரைக்கும் களைகட்டும் போலிருக்கே... கலக்குங்க...
  ஆமா தல....உங்க ஆதரவை தொடர்ந்து தாங்க....

  ReplyDelete
 34. விக்கி உலகம் said... அதிர வைக்கும் கப்சா நியுஸ் வாங்கி விட்டீர்களா!/////

  நீங்க வாங்கி படிச்சிட்டீங்க போல....ரொம்ப நன்றி

  ReplyDelete
 35. சாமக்கோடங்கி said...

  மக்கா.. இது நடக்க வாய்ப்பிருக்கு...


  ஆனா ஒரு நல்ல சேதி.. இப்பவே மத்திய அரசு, முறைகேடாக தேர்தல் நடக்காமல் இருக்க மத்திய ரிசர்வ் படைகளைக் குவிப்பதாகக் கேள்வி.. சோனியாவின் அடுத்த செக். நீ என்னைக் கவிழ்த்தால் நான் உன்னைக் கவிழ்ப்பேன்.. முதல்படியாக ஐயாயிரம் போலீஸ் வருகிறதாம். அடுத்ததாக பதினைந்தாயிரம் பேர் வர இருக்கிறார்களாம்.. நமக்குக் கொண்டாட்டம் தான்..///
  வச்சுட்டாய்ங்களா ஆப்பு

  ReplyDelete
 36. சரி!சரி!!, எதுக்கு இப்போ டென்ஷன் ஆவுறீங்க?சமாளிபிகேஷன் பண்ணலாம்கிறாங்க?

  ReplyDelete
 37. நான் ஸ்டாப்பா பின்றீங்க

  ReplyDelete
 38. இதுவே உண்மையாகலாம் யார் கண்டது? :-)

  ReplyDelete
 39. இனி தேர்தல் முடிகிற வரை செய்திகளுக்கு பஞ்சமில்லை..

  நாளை பகல் முழுவதும் மின்தடை உள்ளது..
  அதான் இன்னிக்கு..

  ReplyDelete
 40. நா எதோ உண்மைன்னு நெனச்சா, கப்சாவா?

  ReplyDelete
 41. கூட்டணின்னா என்னாங்க?

  ReplyDelete
 42. கடந்த 7 நாட்களில் அதிக இடுகைகள் மகுடம் பெற்ற சாதனைக்கு வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 43. கப்சா நாளிதழில் வந்த கற்பனை பேட்டி,
  நல்ல நகைச்சுவையுடன் நாகரீகமாக
  இருந்தது.!
  -கலையன்பன்.

  (இது பாடல் பற்றிய தேடல்!)
  'வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது...)

  ReplyDelete
 44. Yoga.s.FR said... 37 சரி!சரி!!, எதுக்கு இப்போ டென்ஷன் ஆவுறீங்க?சமாளிபிகேஷன் பண்ணலாம்கிறாங்க?
  டெண்சன்லாம் ஆகல பாசு....டெண்சன குறைக்கத்தான் இந்த பதிவே....

  ReplyDelete
 45. ஆர்.கே.சதீஷ்குமார் said... 38 நான் ஸ்டாப்பா பின்றீங்க///
  உங்களை விடவா நான் பின்னிட்டேன்

  ReplyDelete
 46. ஜீ... said... 39 இதுவே உண்மையாகலாம் யார் கண்டது? :-)ஆமாம்....ஆகலாம்

  ReplyDelete
 47. ஓட்ட வட நாராயணன் said...

  WONDERFUL THINKING MY DEAR FRIEND....

  இரண்டாவது வருகைக்கு நன்றி

  ReplyDelete
 48. # கவிதை வீதி # சௌந்தர் said...

  இனி தேர்தல் முடிகிற வரை செய்திகளுக்கு பஞ்சமில்லை..///
  நிச்சயமாக....

  ReplyDelete
 49. N.H.பிரசாத் said... 42 நா எதோ உண்மைன்னு நெனச்சா, கப்சாவா?
  கப்சாவேதான்.ஆனால்...நாளைக்கு நிஜமானாலும் ஆகலாம்

  ReplyDelete
 50. Enna irunthalum karunanaithy sanakiyan thaaaan.

  ReplyDelete
 51. FOOD said... 43 கூட்டணின்னா என்னாங்க?////
  உங்களின் இந்த கேள்வி அறிவாலயத்திற்கும், சத்தியமூர்த்தி பவனுக்கும் அனுப்ப படுகிறது

  ReplyDelete
 52. சி.பி.செந்தில்குமார் said... 44 கடந்த 7 நாட்களில் அதிக இடுகைகள் மகுடம் பெற்ற சாதனைக்கு வாழ்த்துக்கள் நண்பாஅதற்கு காரணமாக இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
 53. கலையன்பன் said... 45 கப்சா நாளிதழில் வந்த கற்பனை பேட்டி, நல்ல நகைச்சுவையுடன் நாகரீகமாக இருந்தது.! -கலையன்பன்.
  நன்றி நண்பரே.....

  ReplyDelete
 54. மாணவன் said...
  :))
  வருகைக்கு நன்றி மாணவன்

  ReplyDelete
 55. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 49 சூப்பர்/////
  வாங்க சிரிப்பு போலீசு....கடைசி நேரத்துல வந்து போலீசுன்னு நிரூபிக்கிறீங்களே..........

  ReplyDelete
 56. shiva said... 54 Enna irunthalum karunanaithy sanakiyan thaaaan.
  அதை இப்பவே முடிவு பண்ணிட்டா எப்படி? இன்னும் பல்டிக்கு வாய்பிருக்கிறதே...

  ReplyDelete
 57. அரசியலில் இதெல்லாம் சகஜம் சார்

  ReplyDelete
 58. இப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை,,

  ReplyDelete
 59. rajvel said... 61 அரசியலில் இதெல்லாம் சகஜம் சார்////
  அதானே பார்த்தேன் இன்னும் யாரும் சொல்லலியேன்னு நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க

  ReplyDelete
 60. வசந்தா நடேசன் said...

  இப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை,,
  அரசியலில் எது வேணுமானாலும் நடக்கலாம்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.