என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, March 09, 2011

66 கலைஞரின் ராஜினாமா நாடகமும், அழகிரியின் மனசாட்சியும்


கடந்த இரண்டு நாட்களாக நடந்த ராஜினாமா நாடகத்தை முடிவிற்கு கொண்டு வந்துள்ளார் கலைஞர். அதை தொடர்ந்து இவர்களின் மன சாட்சி என்ன நினைக்கும் ஒரு கற்பனை அழகிரி:நான் மந்திரியா இருக்கப்போயித்தானே இந்த எதிர்கட்சிகாரனுங்க ஹிந்திலேயும்,இங்க்லீஷ்லேயும் கேள்வியா கேட்டு கொல்லுறாங்க... எப்படியாவது மந்திரி பதவியை ராஜினாமா செஞ்சு எஸ்கேப் ஆகிடலாம்ன்னு பார்த்தா விடமாட்டாரு போல தலைவரு

ஸ்டாலின்; அப்பாடி.....ராஜினாமாவ வாபஸ் வாங்கி என் வயித்துல பால வார்த்துட்டாறு...இல்லாட்டி அழகிரி தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்து நமக்கு போட்டியா உட்கார்ந்துடுவாறு.....

கனிமொழி: அம்மாடியோ....தப்பிச்சேன்....காங்கிரஸ்காரங்கள பகைச்சா நமக்கும் திகார்ல ஒரு செல்ல ரெடிபண்ணிருப்பாங்க


ராசாத்தியம்மாள்: நல்லவேளை நானும் தப்பிச்சேன்....வயசான காலத்துல இந்த சி.பி.ஐ., விசாரணை, ரைடுன்னு அலைய  முடியுமா?


ராசா: எங்கே காங்கிரஸ் காரங்க உறவை  வெட்டிவிட்டு...நம்மள திகார்லையே நிரந்தரமா இருக்க விட்டுருவாரோன்னு ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன் . அப்படி ஏதும் நடக்கல சீக்கிரம் வெளியே வந்துடலாம். 


T.R.பாலு: நான் கட்சியில சீனியரு. நான் எம்.பி.யாவே இருக்கேன். நேற்று வந்தவுங்க மந்திரியாகிட்டாங்க...எல்லோரும் ராஜினாமான்னதும் எனக்கு கிடைக்காத பதவி யாருக்கும் இல்லேன்னு சந்தோஷ பட்டேன்.இப்படி வாபஸ் வாங்கி என் நினைப்பில மண்ணை போட்டுட்டாரே.......


திருமா: கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டோமோ....


வீரமணி: இவரு நாடகத்தை உண்மைன்னு நம்பி தன்மானம் அது இதுன்னு பேசிட்டேன்.இப்ப இவரு ராஜினாமாவ வாபஸ்  வாங்கி  என் மூஞ்சில கரிய பூசிட்டாரே....


E.V.K.S.இளங்கோவன்: அடடா....தி.மு.க.ட்டேர்ந்து காங்கிரஸ்காரங்களுக்கு விடுதலை கிடைச்சுருச்சுன்னு நினைச்சேன்.வாபஸ் வாங்கிட்டாரே...மறுபடியும் நம்ம அடிமைதானா?

ராமதாஸ்: கலைஞரு கோவணத்த உருவுவதுல  கெட்டிக்காரு....நல்லவேளை நமக்கு ஒரு தொகுதியோட போச்சு....


ஜெயலலிதா: காங்கிரஸ்காரங்க வருவாங்கன்னு வைகோ...கம்யூனிஸ்ட்களுக்கு  இடம் ஒதுக்காம காத்திருந்தேன்.
இப்படி கவுத்துட்டாங்களே....நல்லவேளை வைகோ...கம்யூனிஸ்ட்லாம் இதை அவமானமா நினைக்கலே....

வைகோ: நல்லவேளை காங்கிரசோடு இந்தம்மா கூட்டணி வச்சுக்கு நம்மள அம்போன்னு விட்டுடோம்ன்னு பயந்துட்டேன். அது நடக்கல...

பி.ஜே.பி: சே...காங்கிரஸ் காரங்க எல்லா தொகுதியிலும்  தனியா நின்னு டெபாசிட் இழந்து, நமக்கு துணையா இருப்பாங்கன்னு பார்த்தேன்...வடை போச்சே....


Post Comment

இதையும் படிக்கலாமே:


66 comments:

 1. முதல் மழை எனை நனைத்ததே...

  ReplyDelete
 2. >>
  திருமா: கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டோமோ....

  இது செம.. அப்புறம் ஜெ மேட்டரை பச்சை கலர்ல போட்டது உங்களோட டைமிங்க் சென்சை காட்டுது..

  ReplyDelete
 3. எல்லாமே செம நக்கல்... ஆனா இது உண்மையாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது!

  ReplyDelete
 4. இவனுங்கள நினைச்சாலே எரிச்சலா இருக்கு

  ReplyDelete
 5. இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்..Ha..ha..ha..ha..ha..

  ReplyDelete
 6. வீரமணி கமெண்ட் தான் சூப்பர்..கலக்கிட்டீங்க!

  ReplyDelete
 7. நச் கமெண்ட்.... சூப்பரு...

  ReplyDelete
 8. தங்களது பதிவை எமது தமிழ்க்குறிஞ்சி இணைய இதழில்வலைப்பூக்கள் பகுதியில் இணைத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அன்புடன்,தமிழ்க்குறிஞ்சி

  ReplyDelete
 9. அப்படி போடு நண்பா.............

  ReplyDelete
 10. //வீரமணி: இவரு நாடகத்தை உண்மைன்னு நம்பி தன்மானம் அது இதுன்னு பேசிட்டேன்.இப்ப இவரு ராஜினாமாவாபஸ் பண்ணி என் மூஞ்சில கரிய பூசிட்டாரே...//
  அடிக்கடி பூசுறாங்க..இது கூட தெரியாம........

  ReplyDelete
 11. .//நல்லவேளை வைகோ...கம்யூனிஸ்ட்லாம் இதை அவமானமா நினைக்கலே..../
  ஹிஹி

  ReplyDelete
 12. ஆகா நல்லா கற்பனை பண்ரீங்கப்பா

  ReplyDelete
 13. பகிர்வுக்கு நன்றிங்க...

  ReplyDelete
 14. சி.பி.செந்தில்குமார் said... 1 முதல் மழை எனை நனைத்ததே...///
  புதுசு புதுசா ஏதாவது கண்டு பிடிங்க...

  ReplyDelete
 15. சி.பி.செந்தில்குமார் said... 2 >> திருமா: கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டோமோ.... இது செம.. அப்புறம் ஜெ மேட்டரை பச்சை கலர்ல போட்டது உங்களோட டைமிங்க் சென்சை காட்டுது..
  எல்லாம் உங்கள மாதிரி ஆளுங்க கிட்ட கத்துக்கிட்டதுதான்

  ReplyDelete
 16. வைகை said... 3 எல்லாமே செம நக்கல்... ஆனா இது உண்மையாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது!
  இப்படியும் நினைச்சிருக்கலாம் யார் கண்டா.....

  ReplyDelete
 17. THOPPITHOPPI said... 4 இவனுங்கள நினைச்சாலே எரிச்சலா இருக்கு
  ஆமாங்க....நம்மள கேனையனா ஆக்குறாங்க...

  ReplyDelete
 18. //பி.ஜே.பி: சே...காங்கிரஸ் காரங்க எல்லா தொகுதியிலும் தனியா நின்னு டெபாசிட் இழந்து, நமக்கு துணையா இருப்பாங்கன்னு பார்த்தேன்...வடை போச்சே....//
  ஃப்னிசிங் டச் பிரமாதம் !

  ReplyDelete
 19. வேடந்தாங்கல் - கருன் said... 5 இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்..Ha..ha..ha..ha..ha..///ரொம்ப சிரிக்காதீங்க பாஸ்...பள்ளி மாணவிகள் பயந்திட போறாங்க...

  ReplyDelete
 20. நல்லா கற்பனை

  ReplyDelete
 21. செங்கோவி said... 6 வீரமணி கமெண்ட் தான் சூப்பர்..கலக்கிட்டீங்க!
  அப்படியா...ரொம்ப நன்றி செங்கோவி

  ReplyDelete
 22. சங்கவி said... 7 நச் கமெண்ட்.... சூப்பரு...
  ரொம்ப நன்றி சார்

  ReplyDelete
 23. தமிழ்குறிஞ்சி said... 8 தங்களது பதிவை எமது தமிழ்க்குறிஞ்சி இணைய இதழில்வலைப்பூக்கள் பகுதியில் இணைத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அன்புடன்,தமிழ்க்குறிஞ்சிரொம்ப நன்றிங்கோ....

  ReplyDelete
 24. விக்கி உலகம் said... 9 அப்படி போடு நண்பா.............
  போட்டுட்டேன் நண்பா

  ReplyDelete
 25. மைந்தன் சிவா said... 10 //வீரமணி: இவரு நாடகத்தை உண்மைன்னு நம்பி தன்மானம் அது இதுன்னு பேசிட்டேன்.இப்ப இவரு ராஜினாமாவாபஸ் பண்ணி என் மூஞ்சில கரிய பூசிட்டாரே...// அடிக்கடி பூசுறாங்க..இது கூட தெரியாம......../////
  பழகி போச்சு போல....

  ReplyDelete
 26. மைந்தன் சிவா said... 11 .//நல்லவேளை வைகோ...கம்யூனிஸ்ட்லாம் இதை அவமானமா நினைக்கலே..../ ஹிஹி///
  சொரணை இருந்தாத்தானே...

  ReplyDelete
 27. cheena (சீனா) said... 12

  ஆகா நல்லா கற்பனை பண்ரீங்கப்பா
  உங்களின் வருகைக்கு நன்றிஅய்யா...

  ReplyDelete
 28. Chitra said... 13 பகிர்வுக்கு நன்றிங்க...///
  வருகைக்கு நன்றி மேடம்

  ReplyDelete
 29. ஆகாயமனிதன்.. said... 18 //பி.ஜே.பி: சே...காங்கிரஸ் காரங்க எல்லா தொகுதியிலும் தனியா நின்னு டெபாசிட் இழந்து, நமக்கு துணையா இருப்பாங்கன்னு பார்த்தேன்...வடை போச்சே....// ஃப்னிசிங் டச் பிரமாதம் !/////
  தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 30. Reddiyur said... 20 நல்லா கற்பனை
  வருகைக்கு நன்றி ரெட்டியூர் நண்பரே...

  ReplyDelete
 31. யாருக்கும் வெட்கம் இல்லை ................

  ReplyDelete
 32. வீரமணியும், திருமா- வும் தான் பாவம்..

  ReplyDelete
 33. நல்ல நகைச்சுவையான கற்பனை.

  ReplyDelete
 34. கலைஞரு கோவணத்த உருவுவதுல கெட்டிக்காரு//
  haha

  ReplyDelete
 35. //பி.ஜே.பி: சே...காங்கிரஸ் காரங்க எல்லா தொகுதியிலும் தனியா நின்னு டெபாசிட் இழந்து, நமக்கு துணையா இருப்பாங்கன்னு பார்த்தேன்...வடை போச்சே.

  ஹா ஹா வடை போச்சே

  ReplyDelete
 36. இவரு நாடகத்தை உண்மைன்னு நம்பி தன்மானம் அது இதுன்னு பேசிட்டேன்.இப்ப இவரு ராஜினாமாவ வாபஸ் வாங்கி என் மூஞ்சில கரிய பூசிட்டாரே....//இது யாரு?.. அட நம்ம குஞ்சாமணி?...

  ReplyDelete
 37. இதுக்கும் நெகடிவ் ஓட்டுப்போட்ட குஞ்சாமணி யாரு பாஸ்?..

  ReplyDelete
 38. செம கமெண்ட்ஸ் பாஸ், எனக்கென்னமோ இதெல்லாம் உண்மையிலேயே அப்படித்தான் இருந்திருக்கும்னு தோனுது.........!

  ReplyDelete
 39. எப்படில்லாம் யோசிக்கரீங்க? நல்லாவே நக்கலடிக்கிரீங்க.

  ReplyDelete
 40. அறுபத்து முன்று நாயன்மார் அல்ல!
  கசாப்பு கடை ஆடுகள்

  ReplyDelete
 41. அஞ்சா சிங்கம் said... 31 யாருக்கும் வெட்கம் இல்லை ................////
  இத தனியா வேறு சொல்லனுமாக்கும்

  ReplyDelete
 42. பாரத்... பாரதி... said... 32 வீரமணியும், திருமா- வும் தான் பாவம்..////
  மக்களும்தாங்க பாவம்

  ReplyDelete
 43. N.H.பிரசாத் said... 33 நல்ல நகைச்சுவையான கற்பனை.
  வருகைக்கு நன்றி நண்பரே...

  ReplyDelete
 44. ஆர்.கே.சதீஷ்குமார் said... 34 கலைஞரு கோவணத்த உருவுவதுல கெட்டிக்காரு// ஹஹா
  இதை நான் சொல்லலே....ராமதாஸ்தான் ஒருதடவை சொன்னாரு

  ReplyDelete
 45. Speed Master said... 35 //பி.ஜே.பி: சே...காங்கிரஸ் காரங்க எல்லா தொகுதியிலும் தனியா நின்னு டெபாசிட் இழந்து, நமக்கு துணையா இருப்பாங்கன்னு பார்த்தேன்...வடை போச்சே. ஹா ஹா வடை போச்சே
  அடடா வடை போச்சே

  ReplyDelete
 46. பட்டாபட்டி.... said... 36 இவரு நாடகத்தை உண்மைன்னு நம்பி தன்மானம் அது இதுன்னு பேசிட்டேன்.இப்ப இவரு ராஜினாமாவ வாபஸ் வாங்கி என் மூஞ்சில கரிய பூசிட்டாரே....//இது யாரு?.. அட நம்ம குஞ்சாமணி?...///
  அவரேதான் பாஸ்

  ReplyDelete
 47. பட்டாபட்டி.... said... 37 இதுக்கும் நெகடிவ் ஓட்டுப்போட்ட குஞ்சாமணி யாரு பாஸ்?..//
  அதுதான் தெரியல....சரி விடுங்க பாஸ்...இப்பல்லாம் நெகடிவ் ஒட்டு விழுந்தாதான் பிரபல பதிவராம். அண்ணன் சி.பி. சொன்னாரு

  ReplyDelete
 48. பன்னிக்குட்டி ராம்சாமி said... 38 செம கமெண்ட்ஸ் பாஸ், எனக்கென்னமோ இதெல்லாம் உண்மையிலேயே அப்படித்தான் இருந்திருக்கும்னு தோனுது.........!
  எனக்கும் அப்படித்தான் தோனுச்சு பாஸ் ....எழுதிட்டேன்

  ReplyDelete
 49. Lakshmi said... 39 எப்படில்லாம் யோசிக்கரீங்க? நல்லாவே நக்கலடிக்கிரீங்க.
  அக்காவின் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 50. ttpian said... 40 அறுபத்து முன்று நாயன்மார் அல்ல! கசாப்பு கடை ஆடுகள்
  அதான் கரக்டா சொல்றீங்களே...

  ReplyDelete
 51. எல்லாமே செம நக்கல்... ஆனா இது உண்மையாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது!

  ReplyDelete
 52. உண்மையிலேயே இவங்க எல்லாரும் அப்படித்தான் நினைச்சிருப்பாங்க நண்பா :-)))))0

  ReplyDelete
 53. முந்தா நாள் ராத்திரி என்னமோ சொல்லனுமின்னு வந்தேன்.உங்க பின்னூட்டம் பூட்டு போட்டிருந்துச்சு:)

  ReplyDelete
 54. ஆட்சியில கனவு காணுறது இயல்பு தான். உங்களின் கற்பனை அபாரம் தல!

  ReplyDelete
 55. இவர்களுக்கு மனசாட்சின்னா என்னன்னு தெரியுமா?

  ReplyDelete
 56. அனைத்தும் அசத்தல் ...
  ரொம்ப ரசிச்சேன் ...
  ரொம்ப சிரிச்சேன்

  ReplyDelete
 57. நல்ல கற்பனை.. வீடு எங்கன்னு சொன்னீங்கன்னா, ஆட்டோ அனுப்ப வசதியா இருக்கும்.. கமென்ட் போடும் இடத்துக்குக் கீழ "அனுப்பவும்" னு ஒரு பட்டன் இருக்கே, அதை அமுக்கினா போதுமா... ஆட்டோவைதானே குறிப்பிடுகிறீர் அதில்..??

  ReplyDelete
 58. ஒவ்.. கலைஞரும் உங்க பதிவ படிக்கிராறு போல.. நெகட்டிவ் ஓட்டு விழுந்திருக்கே..

  ச்சே ச்சே.. கலைஞரே இதைப் படிச்சிட்டு பாசிடிவ் தான் குத்தி இருப்பாரு..

  இது அந்த வீணாப் போன மணி யாத்தான் இருக்கும்.. தலைவரு டைவ் அடிப்பதை உணராமல் கத்திக் கத்திக் குரல் போச்சு..

  ReplyDelete
 59. இதுக்குத் தான் எதக்கும் சினிமா அனுபவம் வேணங்கிறது...

  /////எனக்கு இன்னும் இந்த கல்யாணம் ஆச்சர்யமாக புரியாத புதிரா உறுத்திகிட்டே இருக்கு. தெரிஞ்சவர்கள் விளக்கம் சொல்லுங்களேன்..//////

  அதிகமில்லை ஒரு 10 வருசம் பொறுங்க அனுபவம் வந்ததும் சொல்றேன்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

  ReplyDelete
 60. அட்டகாசம் தல
  அவங்களாம் உண்மைலேயே இப்படித்தான் நெனச்சிருப்பாங்க :-))

  ReplyDelete
 61. சோனியா: கனிமொழிக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தா 90 கிடைசிருக்குமோ

  ReplyDelete
 62. NADAGAM MUDINDHADHU.
  KANI & RAJA JAIL.....
  EPPO KEDAIKKUM BAIL../.

  ReplyDelete
 63. dummy... dmk team kadhai mudivukku kondu vandhar......mummy.........

  ReplyDelete
 64. ennum kuttani vennuma bossssss........

  ReplyDelete
 65. dmk team kulla fight tu.....
  aiadmk team eppo weight tu......

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.