என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, March 01, 2011

41 கலைஞரின் பேச்சும் எடக்கு மடக்கான எனது கேள்விகளும்பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பேரன் சுகந்தனின் திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கலைஞர் அவர்கள் நேற்று ஆற்றிய உரையின் சில பகுதிகளும் என் கேள்விகளும்.

பாட்டாளி மக்கள் கட்சியினுடைய நிறுவனத் தலைவரும், சமூக நீதிக் காவலரும், என்னுடைய அன்பிற்குரிய நண்பரும், என்றென்றும் திராவிட சமுதாயத்திலே சுயமரியாதை உணர்வை உருவாக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்று அயராமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற டாக்டர் ராமதாஸ் அவர்களே, அவருடைய அன்புச் செல்வன், என்னுடைய அன்புத் தம்பி அன்புமணி ராமதாஸ் அவர்களே, /////

உங்கள் கூட்டணியில் ராமதாஸ்  இல்லாமல் போயிருந்தால் நீங்கள் மேற்சொன்ன முறையில் ராமதாசையும், அன்புமணியும் அழைப்பீர்களா? அல்லது வேறுமுறையில் அழைப்பீர்களா?


 எதிர்க்கட்சித் தலைவராக, எதிர்க் கட்சித் துணைத் தலைவராக, எதிர்க் கட்சி கொறடாவாக, அண்ணா அமைச்சரவையிலே அமைச்சராக, பிறகு முதலமைச்சராக என்று இப்படி 56, 60 ஆண்டுகளில் நான் வகித்த பதவிகளையெல்லாம் சொன்னார். அந்தப் பதவிகளையெல்லாம் விட இன்றைக்கு இந்தத் திருமண விழாவிலே புரோகிதராக அமர்ந்திருக்கின்ற, இந்தத் திருமணத்தை நடத்தி வைக்கின்ற இந்தப் பணியைத்தான் பெரும் பதவியாக நான் கருதுகிறேன்./////

அப்படியானால் வருங்காலத்தில் முதலமைச்சர் பதவியை மறுத்து இதே புரோகிதர் பணியை பதவியாக கருதி செய்வீர்களா?குடும்பம் என்றால் இடையிலே சில பிணக்குகள் வரக் கூடும். என்ன தான் நான் மணமகனாக, ராமதாஸ் மணமகளாக இருந்தாலும் எங்கள் குடும்பத்திற்குள்ளே பிணக்குகள் வரும், போகும். ////

நீங்கள் கூறியுள்ளது போல, உங்கள் மணமகள் ராமதாஸ் ஒவ்வொரு தேர்தலின் போதும் வேறொரு ஆளிடம் குடும்பம் நடத்திவிட்டு திரும்ப உங்களிடமே வரும்போது உங்களுக்கு என்ன தோணும் ?


டிஸ்கி: இதில் ஊதா எழுத்தில் உள்ளது கலைஞர் பேசியது. 
மஞ்சள் பின்னணியில் உள்ளது அடியேனின் கேள்விகள்.

##########################################################Post Comment

இதையும் படிக்கலாமே:


41 comments:

 1. இந்தக் கேள்விகள் இந்திய அளவில் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தும் நண்பரே.

  ReplyDelete
 2. வணக்கம் நண்பரே,

  //"கலைஞரின் பேச்சும் எடைக்கு மடக்கான எனது கேள்விகளும்//

  இதில் “எடைக்கு” என்பது எடக்கு என்று வருமா??

  ReplyDelete
 3. வெட்க்கமென்றால் கிலோ என்ன விலை?
  இப்படிக்கு,
  மணமகன் - மணமகள்

  ReplyDelete
 4. பரபரப்பாக டைட்டில் வைப்பது எப்படி? அணுகவும் ரஹீம் கஸாலி டியூசன் செண்ட்டர்

  ReplyDelete
 5. >>>இதில் ஊதா எழுத்தில் உள்ளது கலைஞர் பேசியது.
  மஞ்சள் பின்னணியில் உள்ளது அடியேனின் கேள்விகள்.

  டேய்.. சி பி.. இந்த ஐடியாவை எல்லாம் நோட் பண்ணிக்கோ...

  ReplyDelete
 6. ஒவ்வொரு மனிதரிடமும் கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்று இருக்கும்.அண்ணன் கிட்டே ஏகப்பட்ட மேட்டர் கத்துக்கலாம் போல இருக்கே...ரைட்டு

  ReplyDelete
 7. சி.பி.செந்தில்குமார் said... 4 பரபரப்பாக டைட்டில் வைப்பது எப்படி? அணுகவும் ரஹீம் கஸாலி டியூசன் செண்ட்டர்////
  இதற்கெல்லாம் குரு நீங்கதான் தல....

  ReplyDelete
 8. சி.பி.செந்தில்குமார் said... 6 ஒவ்வொரு மனிதரிடமும் கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்று இருக்கும்.அண்ணன் கிட்டே ஏகப்பட்ட மேட்டர் கத்துக்கலாம் போல இருக்கே...ரைட்டு///
  யார்கிட்ட..கலைஞர் கிட்டதானே...ஆமாண்ணே கத்துக்க அவர்ட்ட நிறைய மேட்டர் இருக்குன்னே

  ReplyDelete
 9. ஹா ஹா ஹா லாஸ்ட் கேள்வி தான் டாப் .....கலக்குங்க நண்பா

  ReplyDelete
 10. அது சரி கடைசி கேள்விக்கு பதிலு இப்படி இருக்குமா - நான் வாழனும்னா என்ன நடந்தாலும் பொறுத்துப்பேன் ஹி ஹி!

  ReplyDelete
 11. கடைசி கமெண்ட் சூப்ப்ர்!

  ReplyDelete
 12. சி பி கிட்ட ரஹீம் ஹசாலியும்,ரஹீம் கிட்ட சி பி யும் எத்தனையோ பாடங்கள் கத்துக்கிறீங்க போல??
  நாமளும் வரலாமா கிளாசுக்கு?

  ReplyDelete
 13. நல்ல கேள்வி கலக்குங்க...

  ReplyDelete
 14. கடைசி கேள்வி கிளாஸ் ! உங்க பாணியில பதில் சொல்லி இருந்தா இன்னும் நல்லா இருக்கும் :))

  நீங்க நகைசுவையாக சொல்லி இருந்தாலும், இவர்களின் செயல்களை நினைக்கும் போது எரிச்சலாக இருக்கிறது.

  ReplyDelete
 15. நீங்கள் கூறியுள்ளது போல, உங்கள் மணமகள் ராமதாஸ் ஒவ்வொரு தேர்தலின் போதும் வேறொரு ஆளிடம் குடும்பம் நடத்திவிட்டு திரும்ப உங்களிடமே வரும்போது உங்களுக்கு என்ன தோணும் ?

  நல்ல கேள்வி... பதில் சொல்லத் தான் தலைவருக்கு தெரியாதே....
  கலக்குங்கள்

  ReplyDelete
 16. //இதில் ஊதா எழுத்தில் உள்ளது கலைஞர் பேசியது. மஞ்சள் பின்னணியில் உள்ளது அடியேனின் கேள்விகள். //மாத்தி போட்டுடீன்களே மக்கா ...மஞ்சள் தான் கலைஞருக்கு பிடிச்ச கலரு ..ஹி ..ஹி

  ReplyDelete
 17. இம்சைஅரசன் பாபு.. said...

  //இதில் ஊதா எழுத்தில் உள்ளது கலைஞர் பேசியது. மஞ்சள் பின்னணியில் உள்ளது அடியேனின் கேள்விகள். //மாத்தி போட்டுடீன்களே மக்கா ...மஞ்சள் தான் கலைஞருக்கு பிடிச்ச கலரு ..ஹி ..ஹி
  அவருதான் கலரா மாத்த மாட்டேன்னு அடம் பிடிக்கிறாரு....நம்மளாவது மாத்துவோம்ன்னுதான்.

  ReplyDelete
 18. அந்தப் பதவிகளையெல்லாம் விட இன்றைக்கு இந்தத் திருமண விழாவிலே புரோகிதராக அமர்ந்திருக்கின்ற, இந்தத் திருமணத்தை நடத்தி வைக்கின்ற இந்தப் பணியைத்தான் பெரும் பதவியாக நான் கருதுகிறேன்./////

  அப்படியானால் வருங்காலத்தில் முதலமைச்சர் பதவியை மறுத்து இதே புரோகிதர் பணியை பதவியாக கருதி செய்வீர்களா?


  .......சரியாகத்தான் கேள்வி கேக்குறீங்க... எல்லாம் ஒரு பேச்சு flow வுல அப்படியே சொல்லி இருப்பாங்க!

  ReplyDelete
 19. உங்கள் மணமகள் ராமதாஸ் ஒவ்வொரு தேர்தலின் போதும் வேறொரு ஆளிடம் குடும்பம் நடத்திவிட்டு திரும்ப உங்களிடமே வரும்போது உங்களுக்கு என்ன தோணும் ?...//////////////////////

  இது கேள்வி ......................

  ReplyDelete
 20. அரசியல்லா இதெல்லாம் சகஜமப்பா

  ReplyDelete
 21. இந்த கேள்வியெல்லாம் ரூம் போட்டு யோசனை பன்னிங்களா நண்பரே...

  ReplyDelete
 22. கேள்விகள் சூப்பர். குறிப்பாக இரண்டாவது மற்றும் முன்றாவது கேள்விகள் சூப்பரோ சூப்பர்

  அன்புடன்
  பாரி தாண்டவமூர்த்தி

  ReplyDelete
 23. மன்னிக்கணும் சகோதரா இவருக்காக கரத்திட விரும்பல... வாக்க மட்டுமே...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  காணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.

  ReplyDelete
 24. நல்ல கேள்விகள்தான்!அதென்ன கேள்விகளுக்கெல்லாம் மஞ்சள் நிறம்?

  பாருங்கள் என் இன்றைய பதிவு”சூரியாஸ்தமனம்”(கவிதை)

  ReplyDelete
 25. நீங்கள் கூறியுள்ளது போல, உங்கள் மணமகள் ராமதாஸ் ஒவ்வொரு தேர்தலின் போதும் வேறொரு ஆளிடம் குடும்பம் நடத்திவிட்டு திரும்ப உங்களிடமே வரும்போது உங்களுக்கு என்ன தோணும் ?
  //
  செம கலக்கல்

  ReplyDelete
 26. இன்னும் நிறைய கேட்டிருக்கலாம்

  ReplyDelete
 27. உங்களுக்கு குசும்பு அதிகம் ஹிஹி

  ReplyDelete
 28. நம்மால் கேள்விகள் மட்டும் தான் கேட்டுக் கொள்ள வேண்டும்..
  இதில் யார் திருந்தப் போகிறார்கள்..

  தமிழ்மணம் 25

  ReplyDelete
 29. உண்மைதான் உங்களிடம் கற்க வேண்டியது அதிகமிருக்கிறது

  ReplyDelete
 30. கலக்கல் கல கல

  ReplyDelete
 31. //நீங்கள் கூறியுள்ளது போல, உங்கள் மணமகள் ராமதாஸ் ஒவ்வொரு தேர்தலின் போதும் வேறொரு ஆளிடம் குடும்பம் நடத்திவிட்டு திரும்ப உங்களிடமே வரும்போது உங்களுக்கு என்ன தோணும் ?//

  நச்..

  ReplyDelete
 32. http://powrnamy.blogspot.com/2011/03/blog-post.html

  பட்டது போதுமா ! பழ நெடுமாறா !

  ReplyDelete
 33. இதுகெல்லாம் அசருவாரா தலைவரு....?

  ReplyDelete
 34. \\
  நீங்கள் கூறியுள்ளது போல, உங்கள் மணமகள் ராமதாஸ் ஒவ்வொரு தேர்தலின் போதும் வேறொரு ஆளிடம் குடும்பம் நடத்திவிட்டு திரும்ப உங்களிடமே வரும்போது உங்களுக்கு என்ன தோணும் ?\\ஹா...ஹா...ஹா...

  ReplyDelete
 35. பாஸ்....

  இந்த வெட்கம், மானம், சூடு, சொரணை இதற்கும் ராமதாஸ், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்...

  இருவரின் முகமூடியை கிழித்த என் பதிவை படியுங்களேன்...

  தைலாபுரம்..கோபாலபுரம்..சந்தர்ப்பவாத கூட்டணி கிச்சு கிச்சு http://edakumadaku.blogspot.com/2011/02/blog-post.html

  ReplyDelete
 36. 1967-ல் தி மு க ஆட்சிக்கு வந்தபோது பக்தவத்சலம் வைரஸ் தமிழகத்தை பீடித்துவிட்டது என்று சொன்னார் . அந்த வைரஸ் இன்னும் நம்மை விட்ட பாடில்லை, என்று மடியும் இந்த திராவிட மோகம் .கீர்த்தி

  ReplyDelete
 37. 1967-ல் தி மு க ஆட்சிக்கு வந்தபோது பக்தவத்சலம் வைரஸ் தமிழகத்தை பீடித்துவிட்டது என்று சொன்னார் . அந்த வைரஸ் இன்னும் நம்மை விட்ட பாடில்லை, என்று மடியும் இந்த திராவிட மோகம் .கீர்த்தி

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.