என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, March 31, 2011

34 என் கனவில் வந்து அழுத எம்.ஜி.ஆர். -உண்மையை போட்டு உடைத்த விஜயகாந்த்

இப்போது ஆனந்தவிகடனில் வெளிவரும் பேட்டியை வைத்துக்கொண்டு ஆளாளுக்கு காமடி பண்ணுவதே ட்ரென்ட் ஆகிவிட்டது. இதோ...அதே பாணியில் கேள்விகளை மட்டும் விகடனிலிருந்து சுட்டு பதில்களை என் பாணியில் யோசித்ததின் விளைவு இந்த பதிவு..... சி.பி., நல்லநேரம் சதீஷ் குமார் ஆகியோர் மன்னிப்பார்களாக...

 1.மக்களுடன் கூட்டணி என சொன்ன நீங்க அ.தி.மு.க வுடன் கூட்டணி போட்டது ஏன்..?

நான் மக்களுடனும்,தெய்வத்துடனும்தான் கூட்டணி என்ற கொள்கையிலிருந்து மாறாமல் தான் இருந்தேன். ஒரு மாசத்துக்கு முன்னாடி நல்லா தூங்கிட்டு இருந்தேன். அப்ப என் கனவுல இதயதெய்வம், புரட்சி தலைவர் வெள்ளை எம்.ஜி.ஆர்-ரும், ஜானகி அம்மையாரும் ஒண்ணா வந்து....நீ அண்ணா.தி.மு.க-வோடு தான் கூட்டணி வச்சுக்கணும். அழிந்து வரும் என் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கணும்ன்னு ஒரே அழுகை. அதான் நான் தெய்வமா மதிக்கிற எம்.ஜி.ஆர்- அவர்களே சொல்லிட்டாரேன்னு தெய்வத்தோட கட்சியுடன் கூட்டணி வச்சுக்கிட்டேன்.2. ''அ.தி.மு.க-வுடன் நீங்கள் கூட்டணி அமைத்தது சந்தர்ப்பவாதம் என்று சொல்லப்படுகிறதே?''

இந்த கேள்வியை கேட்டு நீங்க என்னை கேவலபடுத்தல...அறிஞர் அண்ணாவை கேவலப்படுத்துறீங்க....பின்னே...அவரோட ஆவி சொன்னதாலதான கூட்டணி வச்சிருக்கேன். இதை எப்படி சந்தர்ப்ப வாதம்ன்னு சொல்ல முடியும்


'3. 'நீங்கள் மானஸ்தர் என்றும் அ.தி.மு.க கூட்டணிக்கு நிச்சயம் போக மாட்டீர்கள் என்றும் அழகிரி சத்தியம் செய்து வந்தாரே?''

நான் என்னிக்காவது மானஸ்தன்னு அழகிரிகிட்ட சொல்லியிருக்கேனா? நான் மானஸ்தன்னு அவரா நினைச்சுக்கிட்டா நான் என்ன பண்றது?
4. '' 'அ.தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பேசியது உண்டா?’ என்று மு.க.ஸ்டாலின் கேட்கிறாரே?''

எங்கள் கூட்டணி கட்சியினர் அனைவரும் போயஸ் கார்டனில் போய் ஒன்றாக பேசினோமே...அதுவே பெரிய சாதனைதானே.....போயஸ் கார்டனில் போய் பேசும் வாய்ப்பு காலம் காலமாக இருந்த வைகோவிற்கே கிடைக்கலியே...5. ''தி.மு.க-வினர் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கிறார்கள். தங்களால் பயன் அடைந்தவர்கள் வாக்கு அளித்தாலே போதும் என்கிறார்களே?'' 

அதுக்காக நீரா ராடியா இங்கே வந்து வாக்களிக்க முடியாதே...6. ''இதுவரைக்கும் நீங்க போய்ப் பார்த்த இடங்களில் மக்கள் மனோபாவம் எப்படி இருக்கிறது?''

வெயில் கடுமையா இருக்குன்னு கூட ரெண்டு ரவுண்டு ஊத்திக்கு போறேனா...அதுனால மக்கள்லாம் என் கண்ணுக்கு தெளிவில்லாமல் தெரியுறாங்க...அவங்க மனோபாவத்த கணிக்கவே முடியல...

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக முந்தைய பதிவு 

புலன் விசாரணை பாகம்- 6Post Comment

இதையும் படிக்கலாமே:


34 comments:

 1. எல்லாக் கற்பனையும் 13ம் தேதி வரைக்கும் தானே ! தூள் கெளப்பூங்க - கஸாலி வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  ReplyDelete
 2. தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக கொடிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அகற்ற சொன்னதால், அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து விஜயகாந்த்துக்கு எதிராக கோஷங்கள் எழுந்ததால், பிரச்சாரம் செய்யாமல் அவர் திரும்பினார்.  அரியலூர் பேருந்து நிலையம் அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுக தொண்டர்கள் தங்களது கட்சி கொடிகளை


  தூக்கி காட்டிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த விஜயகாந்த், அதிமுக கொடிகளை அகற்றுமாறு கூறினார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக தொண்டர்கள் கூச்சல் எழுப்பினர். சத்தம் போடுகிறவர்களை பிடியுங்கள் என விஜயகாந்த் கூறினார். இருப்பினும் அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பிக்கொண்டிருந்ததால், பிரச்சாரம் செய்யாமல் திரும்பினார் விஜயகாந்த்

  ReplyDelete
 3. 2 வலைப்பூவிலும் மாறி மாறி போஸ்ட் போடறீங்களே.. ? அது எப்படி?

  ReplyDelete
 4. >>இப்போது ஆனந்தவிகடனில் வெளிவரும் பேட்டியை வைத்துக்கொண்டு ஆளாளுக்கு காமடி பண்ணுவதே ட்ரென்ட் ஆகிவிட்டது


  நான் எதையும் கண்டுக்க மாட்டேன்.. இத சதீஷ் படிச்சா என்ன ஆகும்.. ? அப்படின்னு நினைச்சா எனக்கு பயமா இருக்கு.. ஏன்னா சதீஷ் என்னை மாதிரி கிடையாது.. கோபக்காரர்.. ஹி ஹி

  ReplyDelete
 5. நல்ல கற்பனைதான்

  ReplyDelete
 6. ////////சி.பி.செந்தில்குமார் said...
  >>இப்போது ஆனந்தவிகடனில் வெளிவரும் பேட்டியை வைத்துக்கொண்டு ஆளாளுக்கு காமடி பண்ணுவதே ட்ரென்ட் ஆகிவிட்டது


  நான் எதையும் கண்டுக்க மாட்டேன்.. இத சதீஷ் படிச்சா என்ன ஆகும்.. ? அப்படின்னு நினைச்சா எனக்கு பயமா இருக்கு.. ஏன்னா சதீஷ் என்னை மாதிரி கிடையாது.. கோபக்காரர்.. ஹி ஹி////////

  அவரு கண்டுக்கலைன்னாலும் நீங்க விடமாட்டீங்க போல...? நடக்கட்டும் நடக்கட்டும்.........

  ReplyDelete
 7. ///// சி.பி.செந்தில்குமார் said...
  2 வலைப்பூவிலும் மாறி மாறி போஸ்ட் போடறீங்களே.. ? அது எப்படி?
  //////

  எத்தன ப்ளாக் வெச்சிருந்தாலும், போஸ்ட் கையால தானே போடனும்.... ?

  ReplyDelete
 8. யோவ் மாப்ள நீ எத்தன போஸ்டு போட்டாலும் ஓட்டும் கமன்டும் போடுறவங்க தளத்துக்கு ஒழுங்கா வந்துட்டு போகணும் இல்ல சிபி கணக்கா ஆயிரும் ஹிஹி!

  ReplyDelete
 9. வடிவேலை விட இவர் காமடி வர வர ஜாஸ்தி ஆய்டுச்சி .........

  ReplyDelete
 10. இன்னைக்கு ரொம்ப லேட்டுங்க....
  இருந்தாலும் வந்துட்டேன்...

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. ஹி..ஹி...ஹி.. செம கலக்கலான கற்பனை தலைவா..!!! சூப்பரு.

  ReplyDelete
 13. http://jmdtamil.blogspot.com/2011/03/blog-post_31.html

  இறுதி போட்டிக்கு வருகிறான்! இனவெறி பிடித்தவன்!

  உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி! மும்பையில் ஏப்ரல் 2 -ம் தேதி நடக்க இருக்கிறது!
  இறுதி போட்டியில் இந்தியாவும், இலங்கையும் களம் காணுகின்றன.... பாதுகாப்பு பலபபடுத்தப்பட்டுள்ளது, போட்டியை காண பெரிய வி. வி.ஐ.பி. கள் வருகின்றனர்,

  அது மட்டும் இல்லை, இன வெறி பிடித்த இலங்கை அதிபர் ராசபக்சே- வும் வருகிறார்.
  இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செய்தி தொடர்பாளர் பந்துலா ஜெயசேகரா இதை தெரிவித்துள்ளார்.

  டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியை காண வந்த ராஜபக்சேவுக்கு எதிராக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தமிழின உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதைப்போல மும்பையில் நடைபெறும் இந்த போட்டியை காண வரும் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்த தமிழின உணர்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
  இதைவைத்து தமிழக அரசியலும் அரங்கேருமாம்!..
  இனத்தை அழித்தவனக்கு!
  இன்முக வரவேற்ப்பா!

  ReplyDelete
 14. கேள்வி மட்டும் விகடனா..ம் நடத்துங்க

  ReplyDelete
 15. எல்லாக் கற்பனையும் 13ம் தேதி வரைக்கும் தானே ! //
  சீனா அண்ணன் நச்

  ReplyDelete
 16. சிபி பதிவை விட, இது நல்லாயிருக்கு!..(பத்த வச்சுட்டியே பரட்டை!)

  ReplyDelete
 17. நீங்க அரசியல் இடுகைகளை அள்ளித் தெளிப்பதை பார்த்தால் நீங்க சி.எம் ஆயிடுவீங்க போல இருக்கே...

  ReplyDelete
 18. //வெயில் கடுமையா இருக்குன்னு கூட ரெண்டு ரவுண்டு ஊத்திக்கு போறேனா...அதுனால மக்கள்லாம் என் கண்ணுக்கு தெளிவில்லாமல் தெரியுறாங்க...அவங்க மனோபாவத்த கணிக்கவே முடியல..//

  உண்மைதானுங்க.. சொந்தக் கூட்டணிக் கட்சிக் கொடியே எதுனு தெரியாமா கத்தினாரே அதுவே சாட்சி ! அவர் மப்புல உலா வரார்னு

  ReplyDelete
 19. நான் மக்களுடனும்,தெய்வத்துடனும்தான் கூட்டணி என்ற கொள்கையிலிருந்து மாறாமல் தான் இருந்தேன். ஒரு மாசத்துக்கு முன்னாடி நல்லா தூங்கிட்டு இருந்தேன். அப்ப என் கனவுல இதயதெய்வம், புரட்சி தலைவர் வெள்ளை எம்.ஜி.ஆர்-ரும், ஜானகி அம்மையாரும் ஒண்ணா வந்து....நீ அண்ணா.தி.மு.க-வோடு தான் கூட்டணி வச்சுக்கணும். அழிந்து வரும் என் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கணும்ன்னு ஒரே அழுகை. அதான் நான் தெய்வமா மதிக்கிற எம்.ஜி.ஆர்- அவர்களே சொல்லிட்டாரேன்னு தெய்வத்தோட கட்சியுடன் கூட்டணி வச்சுக்கிட்டேன்.//

  ஆஹா.....ஆஹா.. குடிச்சாலும் நம்ம ஆளுங்க போதையிலை நிதானம் தவற மாட்டாங்க எனும் வகையில் விஜயகாந் குடித்து விட்டுத் தூங்கும் போது கனவு வந்தாதா ஒரு காமெடி. ரசிக்கிறேன். ரசிக்கிறேன்.

  ReplyDelete
 20. இந்த கேள்வியை கேட்டு நீங்க என்னை கேவலபடுத்தல...அறிஞர் அண்ணாவை கேவலப்படுத்துறீங்க....பின்னே...அவரோட ஆவி சொன்னதாலதான கூட்டணி வச்சிருக்கேன். இதை எப்படி சந்தர்ப்ப வாதம்ன்னு சொல்ல முடியும்//

  ஆஹா.. ஆஹா.. பாவம் விஜயகாந்.. ஆளாளுக்கு பிரிச்சு மேயுறங்க.

  ReplyDelete
 21. நான் என்னிக்காவது மானஸ்தன்னு அழகிரிகிட்ட சொல்லியிருக்கேனா? நான் மானஸ்தன்னு அவரா நினைச்சுக்கிட்டா நான் என்ன பண்றது?//

  இவ் இடத்தில் விஜயகாந்திற்காக பதிலளிக்கும் நண்பர் ரஹீமின் சமயோசிதத்தைப் பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 22. வெயில் கடுமையா இருக்குன்னு கூட ரெண்டு ரவுண்டு ஊத்திக்கு போறேனா...அதுனால மக்கள்லாம் என் கண்ணுக்கு தெளிவில்லாமல் தெரியுறாங்க...அவங்க மனோபாவத்த கணிக்கவே முடியல...//

  சகோதரம், அருமையான கிண்டல்கள்...


  இறுதி வரிகளை படிக்கப் படிக்க சிரிப்புத் தானா வருகுது.

  இன்னும் கொஞ்சம் நகைச்சுவைகளை சேர்த்திருந்தால் பதிவு செம ரகளையா றவுண்டு கட்டியிருக்கும்.

  ReplyDelete
 23. உங்களின் முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. தேசிய முர்ப்போக்கு திராவிட கழகம் வெற்றி

  ReplyDelete
 25. ஏற்கனவே திமுக அதிமுக படுத்துற பாடு பத்தாதுன்னு இந்த மனுஷன் (தண்ணி பார்ட்டி) வேற . .. .நம்மள வெச்சு காமெடி பண்ற விஜயகாந்த் சீக்கிரம் அரசியல் ல நல்ல ஒரு காமெடியான வருவார் என்று எதிர்பார்கிறேன்

  ReplyDelete
 26. செம ரவுசு.. நல்லா வருவார்னு நெனச்ச விஜயகாந்த் இப்படி காமெடி பீசா மாறுவார்னு நேனைக்கலை..

  ReplyDelete
 27. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ///// சி.பி.செந்தில்குமார் said...
  2 வலைப்பூவிலும் மாறி மாறி போஸ்ட் போடறீங்களே.. ? அது எப்படி?
  //////

  எத்தன ப்ளாக் வெச்சிருந்தாலும், போஸ்ட் கையால தானே போடனும்.... ?//

  ரிப்ப்பீட்டே...

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.