என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, March 24, 2011

12 புலன் விசாரணை பாகம்- 5

முந்தைய பாகங்கள் 
"நிஜமாத்தான்  சொல்றீங்களா?"

"சத்தியமா நான் சொல்லுறது நிஜம் சார்...ஆனா அதுக்காக அவரு கொலை வரை போயிருக்க மாட்டாருன்னு நான் நினைக்கிறேன்"

"எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க...."

"அப்படி சொன்னதுக்கு அடுத்த நாள் அவரு ஷூட்டிங்க்காக வெளிநாடு போயிட்டாரு....இன்னும் வரல....ஸ்ரீமதி கொல்லப்பட்ட அன்னைக்கும் அவரு வெளிநாட்டுலதான் இருந்தாரு..."

"விளங்கித்தான் பேசுறீங்களா தரன்....இன்னைக்கு ஐநூறு ஆயிரத்துக்கு எல்லாம்  கொலை பண்ணுற கூலிப்படைகள் நாட்டுல பெருகிட்டாங்க...அதுல ஒரு படைய ஏற்பாடு பண்ணிட்டு இவரு நல்லபிள்ளையாட்டம் வெளிநாட்டுக்கு போயிருக்கலாம் இல்லையா?"

"அப்படி இல்லை சார்....அவரு இன்னிக்கு தமிழ் சினிமாவுல டாப் டென் டைரக்டர்....அவரு போயி....."

"உங்களுக்கு குருபக்தி அதிகம்னு ஒத்துக்கிறேன். இப்போ யாரையும் நாங்க குற்றம் சாட்டல.....விசாரணை மட்டுதான்....யாரு உண்மையான குற்றவாளின்னு இன்னும் கொஞ்ச நாள்ல தெரியத்தான் போகுது....அடிக்கடி நாங்க விசாரணைக்கு உங்கட்ட வருவோம்....ஷூட்டிங்காக வெளில போறதா இருந்தா எனக்கு ஒரு வார்த்த போன்ல தகவல் சொல்லிடுங்க....இப்ப ரெட்டி எங்கே இருக்காரு....."

"இன்னும் வெளிநாட்டுலேர்ந்து திரும்பல....அனேகமா இந்த வாரம் வரலாம்..."

"தகவலுக்கு நன்றி நாங்க கிளம்பறோம்...ஆங்...ரெட்டி வந்ததும் எனக்கு தகவல்  கொடுங்க..."

===========================

போலீஸ் ஸ்டேசன்.

இன்ஸ்பெக்டர் தில்லையம்பலம் கான்ஸ்டபிளிடம்.....

"எதுக்குத்தான் இந்த எழவெடுத்த வேலைக்கு வந்தோம்ன்னு இருக்கு.....எந்த நாயோ அந்த நடிகைய கொன்னு போட்டுட்டு போயிட்டான். நம்ம கிடந்தது லோள் பட வேண்டியிருக்கு...சே....நிம்மதியா சாப்பிட முடியல....தூங்க முடியல...நேத்திக்கு பாரு.....எங்க அக்கா பொண்ணுக்கு நல்ல வரனா வந்திருக்கு....வாடா போயி பையன பார்த்துட்டு வருவோம்ன்னு எங்க அக்கா கூப்பிட்டுச்சு....அதுக்கு கூட போக முடியல....எங்கேயோ ரொம்ப தூரமா இருந்தாலும் பரவாயில்லை...இங்கே இருக்க சோளிங்கநல்லூர் தான் மாப்பிள்ளை வீடு. அதுக்கு போக முடியல....எங்கக்கா வேற....நிலைமை புரியாம .... நீ இந்த வேலைய கட்டிக்கு  அழு.....உனக்கு சொந்தம் பந்தம்லாம் எதுக்குன்னு கோப படுத்து....மனசுக்கு கஷ்டமா இருக்கு..."

"சார் அதான் விசாரணை பண்ணிட்டு இருக்கோமே....சீக்கிரம் கொலைகாரனை பிடிச்சிடலாம் சார்...."

"எங்கே....இவனை கேட்டா அவங்கறான்....அவன கேட்டா இவங்கறான்....இந்த டைரக்டர் ரெட்டி யார சொல்லப்போறானோ...அந்த நாள் சினிமா மாதிரி ஆகிருச்சு இந்த விசாரணை....பார்ப்போம்...."

அப்போது தில்லையம்பலத்தின் செல்போன் அடித்தது...

"ஹலோ.....தில்லையம்பலம் ஸ்பீக்கிங்...."

"....................................."

"சொல்லுங்க தரன்"
"........................."

"அப்படியா....எப்ப வந்தாரு..."

"......................................."

"ஓகே....ஓகே...நான் பார்த்துக்கிறேன்..."

"கான்ஸ்டபில் டைரக்டர் ரெட்டி வந்துட்டாராம்.....தரன் சொன்னான்....அவர பார்க்க கிளம்புவோம் வாங்க..."

----------------------------------------------------------------------

டைரக்டர் ரெட்டி வீடு.....

"வணக்கம் சார்...."

"வாங்க....என்னை தேடிட்டு வந்துருக்கீங்க...."

"நடிகை ஸ்ரீமதி கொலை வழக்குல உங்கள கொஞ்சம் விசாரிக்கணும்..."

"ஓ....தாராளமா....அவ ஒரு நல்ல நடிகை. டைரக்டர் ஆர்டிஸ்ட்ன்னு பேரெடுத்தவ....அவ போனது சினிமா பீல்டுக்கே பெரிய இழப்புன்னு சொல்லலாம்...அதை விட எனக்கு பெரிய இழப்பு....இன்னைக்கு நன்றி விசுவாசம்ன்னா என்னன்னு கேட்குற
சினிமா உலகத்துல...அவ என்மேல வச்சிருந்த குருபக்தி அபரிதமானது...."

"அப்படிப்பட்ட ஒருத்திய எதுக்கு சார் கொலை செஞ்சீங்க?"

என்று திடீரென்று இன்ஸ்பெக்டர் தில்லையம்பலம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த டைரக்டர் ரெட்டி 

"என்ன இன்ஸ்பெக்டர் முட்டாள்தனமான கேள்விய கேக்கறீங்க?"

"சார் எங்களுக்கு கிடைச்ச தகவல்கள் அடிப்படியில் தான் கேட்கறேன்"

"என்ன பெரிய பொடலங்கா தகவல் உங்களுக்கு கிடைச்சிருச்சு....நான் எதுக்கு அவள கொல்லனும்?....."

"அதத்தான் மிஸ்டர் ரெட்டி நானும் கேக்கறேன்....நீங்க எதுக்கு அவள கொன்னீங்க?"

விசாரணை வரும் வியாழன் தொடரும்............Post Comment

இதையும் படிக்கலாமே:


12 comments:

 1. நல்லாயிருக்கு  இன்னைக்கு நம்ம பதிவு

  சொர்க்கம் கண்டவன்
  http://speedsays.blogspot.com/2011/03/blog-post_24.html

  ReplyDelete
 2. ஐ வடை எனக்கே

  ReplyDelete
 3. நலமா? கதை நல்லா போகுதுங்கோ....

  ReplyDelete
 4. கதை நல்லாபோயிட்டு இருக்கு.

  ReplyDelete
 5. சாரி நண்பா இந்தக் கதையோட ஏனைய பகுதிகளைப் படித்துவிட்டுத்தான், இதனைப்படிக்கலாம் என்று இருக்கிறேன்! இல்லைன்னா எதுவுமே புரியாதுல்ல!

  ReplyDelete
 6. கதை நல்லா இருக்குங்க.

  ReplyDelete
 7. கதை நல்லாயிருக்கு நண்பா...

  ReplyDelete
 8. இன்னும் 5 பாகம் இழுத்துடுவீங்கன்னு நினைக்கறேன்.. ஹி ஹி

  ReplyDelete
 9. நல்லாயிருக்கு சார்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.