என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, March 30, 2011

23 ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான தலைவரு விஜயகாந்த் வாழ்க....பொது இடத்துல எப்படி நடந்துக்க வேணும்ன்னு கூட வருங்கால முதலமைச்சருன்னு சொல்லிட்டு திரிஞ்ச  விஜயகாந்துக்கு தெரியல...அதைவிட கொடுமை அவரு வேட்பாளரு பேருகூட தெரியல...

தர்மபுரியில இவரு கட்சி வேட்பாளரா பாஸ்கருங்கறவர் போட்டியிடறாரு...ஆனா பிரச்சாரத்துக்கு அங்கே போன விஜயகாந்த் நெப்போலியனை அதாங்க சரக்க உள்ள விட்டுகிட்டு பாஸ்கருங்கற பேர பாண்டியன்னு மாத்தி சொல்லிட்டாரு...உடனே வண்டிக்குள்ள இருந்த வேட்பாளர் எந்திருச்சு என் பேரு பாண்டியன் இல்லை பாஸ்கருன்னு சொன்னதுதான் தாமதம் நம்ம விஜயகாந்துக்கு வந்துச்சு பாருங்க கோவம், உங்க கோவம் எங்க கோவமில்லை. பொது இடம்ன்னு கூட பாக்காம நச்சு நச்சுன்னு அந்த வேட்பாளரோட நடு மண்டையில நாலு போடு போட்டாரு...பாவங்க வேட்பாளரு...அப்படியே பேஸ்தடிச்சு போயிட்டாரு...மக்களும் அதிர்ச்சியாயிட்டாங்க....

இப்படி கேனத்தனமா ஏதாவது தப்பு பண்ணா மாட்டிவிடும் பிளான்ல கண்ணுல எண்ணைய விட்டுக்கு  இந்தாளு கூடவே வீடியோ கேமராவோட திரியற மக்கள் தொலைக்காட்சிக்கு நல்ல தீனி கிடச்சிடுச்சுன்னு அதை அப்படியே சூட் பண்ணிட்டு வந்து ஒளிபரப்பு செஞ்சுட்டாங்க...

 ஜெயலலிதா பரவாயில்லை யாரையாவது திட்டறதும் குட்டறதும் நாலு சுவத்துககுள்ளதான் நடத்துவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறேன் ....ஆனா இந்தாளு முன்னூறு  நானூறு பேருக்கு மத்தியில இதை பண்ணுறாரு...இப்படி நடந்துக்கறது புதுசில்ல நம்ம விஜயகாந்துக்கு....

இதுக்கு முன்னாடி திருச்சியில ஒருத்தர இப்படி பளார்ன்னு அறைஞ்சு மாட்டிக்கிட்டாரு....கேட்டதுக்கு நானும் அவனும் பால்ய நண்பர்கள். அதான் அறைஞ்சு அறைஞ்சு விளையாடிக்கிட்டோம்ன்னு சொன்னாரு...

அப்புறம் ஒரு கோயம்புத்தூர் நிர்வகிய இப்படித்தான் அடிச்சாரு...அவரு மானஸ்தன் அப்பவே கட்சிய விட்டு போயிட்டாரு....இப்ப வேட்பாளரு....இந்த ஆளுகிட்ட இவங்க மாட்டிக்கு முழிக்கிறத நினைச்சா பாவமா இருக்கு.....இந்த ஆள நம்பி ஆட்சிய ஒப்படச்சா விளங்குன மாதிரிதான்.

இதுலேர்ந்து ஒன்னே ஒன்னு எனக்கு விளங்குது....எதையும் ஒளிச்சு மறச்சு பண்ண தெரியாத நேர்மையான தலைவரு நம்ம கேப்டன்தான்னு..... இப்படி ஒரு ஆளு அரசியல்ல கிடைக்க நம்ம கொடுத்து வச்சிருக்கணும் ....ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான தலைவரு நம்ம கேப்டனுக்கு ஒரு ஓ போடுங்கப்பா.....

கீழே இருக்கும் அந்த அருமையான காட்சிய கண்டு ரசிக்கறதும் ....சிரிக்கறதும் ...காறி துப்பறதும்  உங்க விருப்பம் 


முந்தைய பதிவு நீங்க படிக்க..... 

எவ்வளவு நாளுக்குத்தான் அரசியல் பதிவே போடுறது? மனுஷனுக்கு ரிலாக்ஸ் வேணாம் 18+Post Comment

இதையும் படிக்கலாமே:


23 comments:

 1. அண்ணன் இன்னைக்கு ஒரு முடிவோட தான் இருக்கார் போல.. ஹா ஹா

  ReplyDelete
 2. இப்படி கேனத்தனமா ஏதாவது தப்பு பண்ணா மாட்டிவிடும் பிளான்ல கண்ணுல எண்ணைய விட்டுக்கு இந்தாளு கூடவே வீடியோ கேமராவோட திரியற மக்கள் தொலைக்காட்சிக்கு நல்ல தீனி கிடச்சிடுச்சுன்னு அதை அப்படியே சூட் பண்ணிட்டு வந்து ஒளிபரப்பு செஞ்சுட்டாங்க...//

  இப்படியும் அலையுறாங்களோ?
  உள் வீட்டிலை ஏனைய அரசியல் வாதிகள் செய்வதை கப்டன் உலக மக்கள் பார்க்க வேணும் என்பதற்காக வெளியில் வைத்துச் செய்திருக்கிறார்.

  ReplyDelete
 3. இதுக்கு முன்னாடி திருச்சியில ஒருத்தர இப்படி பளார்ன்னு அறைஞ்சு மாட்டிக்கிட்டாரு....கேட்டதுக்கு நானும் அவனும் பால்ய நண்பர்கள். அதான் அறைஞ்சு அறைஞ்சு விளையாடிக்கிட்டோம்ன்னு சொன்னாரு...//

  ஆஹா...ஆஹா... இப்புடியும் றீலு விடுறாரா நம்ம கப்டன்!

  ஒழிவு மறைவு இல்லாத நம்ம கப்டனுக்கு ஒரு ஓ..............!

  ஒரு ஓ...........
  (ஓ என்றால் ஒழிக என்று அர்த்தம் ஆகாதோ?)

  ReplyDelete
 4. தலைவர் வந்திருக்கிற போது பாண்டியனா இருந்தா என்ன பாஸ்கரனா இருந்தா என்ன ? ஏதோ ஒரு பேர்னு விட வேண்டியதுதானே ..!! ஹி ஹி

  ReplyDelete
 5. \\.ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான தலைவரு நம்ம கேப்டனுக்கு ஒரு ஓ போடுங்கப்பா...//..

  ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான தலைவரு நம்ம கேப்டனுக்கு ஒரு கிளாஸ் ஊத்தி கொடுங்கப்பா.....[இதுதான் கரெக்ட்]

  ReplyDelete
 6. mmmmm என்ன செய்வது - தலவர்களூம் தடுமாறுகிறார்கள். நாம் இருப்பது பொது இடம் - பல பேர் முன்னிலை என்பதெல்லாம் எளிதில் மறட்ந்ஹு விடுகிறார்கள். ம்ம்ம்ம்ம்ம் - வாழ்க வளமுடன் கஸாலி - நட்புடன் சீனா

  ReplyDelete
 7. கேப்டன் குனியவெச்சிதானே..அடிக்கிறாரு..உங்களை யாருய்யா உயரமான இடத்துல இருந்து படம் எடுக்க சொன்னது?

  ReplyDelete
 8. குத்துங்க கேப்டன்..குத்துங்க..இவனுக எப்பவும் இப்படித்தான்!

  ReplyDelete
 9. எம்.ஜி.ஆர் ராமவரம் தோட்டத்துக்கு கூப்பிட்டு உதைப்பாரு..கறுப்பு எம்.ஜி.ஆர் நடு ரோட்டிலியே உதைக்காரு.....

  ReplyDelete
 10. ஹா...ஹா...ஹா...

  அரசியல்ல இதெல்லாம் சகஜம் தல...

  -************

  தண்ணி மேல மெதக்கற கப்பல ஓட்டறவன் தான் கேப்டன்... எந்நேரமும் தண்ணியில மெதக்கறவன் பேரு கேப்டன் இல்ல....

  வடிவேல், விஜயகாந்த் பற்றி சொன்னது

  ReplyDelete
 11. இவங்கல்லாம் ஒரு அரசியல் வாதிங்க. இவங்கள நம்பி கூடுகிற கூட்டத்துக்கு எப்பதான் புத்தி தெளியுமோ?

  ReplyDelete
 12. ரைட்டு காலை வேனில் வைத்து லெப்ட்டு காலால் சுழட்டி சுழட்டி அடிக்கவில்லை என்று அந்த வேட்பாளர்.சந்தோஷ பட்டுக்க வேண்டியதுதான் ..............சோ பெட்டி பார்த்தீர்களா?இதெல்லாம் பெரிய விஷயம் இல்லையாம் .சாதாரணமாக நடப்பதுதானாம்

  ReplyDelete
 13. கேப்டன் இந்த தேர்தல்ல ஒட்டு வாங்குவாரா?

  ReplyDelete
 14. சின்னக் கவுண்டர் வழங்கும் ரோஷக்காரன் தா.பா. http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_30.html

  ReplyDelete
 15. http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_8238.html இன்று கிரிக்கெட்டில் இந்தியா தோற்றால் கசாப்புக்கு தூக்கு

  ReplyDelete
 16. அரசியல் டென்சனைக் குறைக்க 18ப்ளஸ் வேண்டாம்..கேப்டனே போதும்!

  ReplyDelete
 17. நினைப்பு பொழப்பை கெடுக்க போவுதோ!!!!

  ReplyDelete
 18. கீழ காலால ஒதச்சதையும் எடுத்து போட்டிருக்கலாம்.....!

  ReplyDelete
 19. அவரு கைய்யால அடி வாங்குனா மகராஜா ஆயிடுவாங்கன்னு சொல்லி இருக்காருய்யா பாத்துக்க..............!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.