என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, May 04, 2011

25 அக்சய திரிதியை அன்னிக்கு நகை வாங்கினா யாருக்கு நல்லது?


அந்த நகைக்கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.....
கடை முதலாளி கடை ஊழியர்களிடம் வேலை வாங்கியபடி இருந்தார்.வருகை தந்தவர்களை வரவேற்றபடி....

"தம்பி அக்காவுக்கு அந்த புது டிசைன் நெக்லச காட்டு....வாங்கம்மா வாங்க....டேய் அம்மாவுக்கு நேத்து வந்த லேட்டஸ்ட் மாடல் தோடு எடுத்து காட்டு....தங்கச்சிக்கு அந்த வளையல காட்டு...." என்றபடி பிசியாக இருந்தார்.

"எல்லோரும் வாங்க....அக்சய திரிதியை அன்னைக்கு  நகை வாங்கினா வீட்டுல செல்வம் கொழிக்கும்ன்னு  சொல்லுவாங்க...மற்ற கடையை விட நம்ம கடையில விலை ரொம்ப கம்மி, செய்கூலி சேதரமேல்லாம் நியாயமா இருக்கும்...." என்று வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லியபடியே இருந்தார்...

அப்போது அவரின் மனைவி கடைக்குள் நுழைந்தாள்...

"வா...நீ எங்கே..இங்கே...."

"இவ என் சித்தி மக...ஊர் பாண்டிச்சேரி. அதான் உங்களுக்கு தெரியுமே..நாம கூட கல்யாணம் ஆன புதுசுல  இவங்க வீட்டுக்கு போயிருக்கோமே?"

"அட...ஆமா....மறந்தே போயிட்டேன்..என்ன விஷயமா இங்கே வந்திருக்கா..."

"அக்சய திரிதியை அன்னிக்கு நகைகள் வாங்கனும்ன்னு சொன்னா....அதான்...நம்ம கடைக்கு கூட்டிக்கு வந்தேன்."

"அடி பைத்தியக்காரி அதுக்கு இன்னைக்குத்தான் வரணுமா?"

"என்னங்க சொல்றீங்க...அக்சய திரிதியை அன்னிக்கு நகைகள் வாங்கின நல்லதுன்னு சொன்னாங்களே?..."

"நல்லதுதான்...ஆனா உங்களுக்கு இல்லை...நகைக்கடை காரங்களுக்கு....ஆமாடி...இந்த பழைய நகைகளை தள்ளி விட நாங்க கிளப்பிவிட்ட வியாபார உத்திடி இது...இதப்போயி உண்மைன்னு நம்பிக்கு வந்திருக்கா  பாரு....அக்சய திரிதியை அன்னிக்கு நிறைய நகைகள் இருக்கறது  நல்லதுன்னு நினைச்சா....எல்லா நகைக்கடைகாரங்களும் விக்காம சேர்த்து வைக்க வேண்டியதுதானே...அப்புறம் எதுக்கு கூவி கூவி விக்கிறோம்...இதுக்கு முன்னாடி புடவைக்கடை காரங்க ஸ்டாக்க கிளியர் பண்ண பச்சை புடைவை வாங்குனா  நல்லதுன்னு சொல்லி வித்தாங்கல்ல அதுமாதிதான் இதுவும்...போ...போயி...சமையல கவனி...நான் சாப்பிடவாறேன்.."

 

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


25 comments:

 1. இதுல என்ன சந்தேகம்? கடைக்காரனுக்குத்தான்

  ReplyDelete
 2. திடீர்னு கெளப்பி வுட்டானுங்க - 6 / 7 வருசம் முன்னாடி - என்ன பண்றது

  ReplyDelete
 3. நகை கடை காரங்க காதில் புகை .....

  ReplyDelete
 4. இதையெல்லாம் இந்த பெண்கள் எங்கே புரிந்து கொள்ள போகிறார்கள்...

  ReplyDelete
 5. செந்திலின் கருத்தை நானும் வழிமொழிகிறேன் ஹஸா!

  ReplyDelete
 6. உண்மைதாங்க ...

  ReplyDelete
 7. ஏங்க ஜனங்களை குழப்பியாச்சா...

  இதெல்லாம் நகைகடைக்காரங்க கிளம்பிப்விட்ட விஷயங்க...

  ஜனங்க இனி மாறமாட்டாங்க...

  ReplyDelete
 8. என்னத்த சொன்னாலும் இதுமாதிரி நடந்துகிட்டேதான் இருக்கும்...தலைவரே....

  ReplyDelete
 9. இதுபோல எல்லோரும் நிறைய எழுத வேண்டும் கஸாலி.தொடருங்கள்.

  ReplyDelete
 10. ஒவ்வொரு ஆண்டும் கூட்டம் அதிகமாயிக்கிட்டேதான் இருக்கிறது,நகைக்கடைகளில்!

  ReplyDelete
 11. மொத்தத்துல நகையே வேணாங்கிற அளவுக்கு தாக்கிட்டிங்க தலைவா!வாழ்க,உங்கள் தாராள மனசு!நீங்க எப்புடித் தான் எழுதி கிழித்தாலும் நம்ம பொண்ணுங்க திருந்திடவா போறாங்க?

  ReplyDelete
 12. ///அக்சய திரிதியை அன்னிக்கு நகை வாங்கினா யாருக்கு நல்லது?/// கடைக்காரனுக்கு தான் ஹிஹிஹி

  ReplyDelete
 13. அக்சய திருதியை அன்று தானம் தர்மம் செய்யலாம்...காசு நிறைய இருப்பவர்கள் நகை வாங்கலாம் அது அவர்கள் விருப்பம்..ஏழைகள் நல்லது எது செய்தாலும் நல்லதே நடக்கும் பெருகும்..

  ReplyDelete
 14. "ஹல்லோ TJK ஜுவல்லரியா. உங்க கடை வியாபாரம் சரியில்லைன்னு அழுதீங்களே. அதுக்கு காரணம் கஸாலின்னு ஒருத்தர்தான். நம்பர் தர்றேன் நோட் பண்ணிக்கங்க. 997........

  ReplyDelete
 15. பாட்டாவே படிச்சுட்டியான்னு கமல் கேப்பாரே அது போல உங்க ஸ்டைல்ல கதையாவே சொல்லிட்டீங்க கருத்தை.

  ReplyDelete
 16. //திடீர்னு கெளப்பி வுட்டானுங்க - 6 / 7 வருசம் முன்னாடி - என்ன பண்றது//பதிவு எழுதின கஸாலி பங்காளிக்கும் சீனா ஐயாவும் வீட்டுல சரியா அட்சய திர்தி அன்னைக்கு சரியா மாடிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

  பதிவு சூப்பர் பங்காளி

  ReplyDelete
 17. சந்தேகமின்றி கடைக்காரனுக்குதான்!

  ReplyDelete
 18. //ஒவ்வொரு ஆண்டும் கூட்டம் அதிகமாயிக்கிட்டேதான் இருக்கிறது,நகைக்கடைகளில்!//


  என்று தீரும் இந்த மயக்கம்?

  ReplyDelete
 19. திடீர்னு இப்படி ஒன்னை ஆரம்பிச்சு, நம்ம உசுரை எடுக்காங்களே...நல்ல பதிவு கஸாலி!

  ReplyDelete
 20. டோக்கன் வாங்கி வைத்துக் கொண்டு நகை வாங்குகிறார்கள் ...அதுவும் இப்ப ஒரு விளம்பரம் வருது பிளாட்டினம் வாங்கனும்ன்னு ..பால் ,மல்லிகை அப்புறம் பிளாட்டினம்ன்னு ..(புல் ஸ்க்ரீன்ல பாக்கும் போது தமாஷா இருக்குது ...)ஏன் அலுமினியம் ,வெள்ளி ,ஸ்டீல் இதெல்லாம் கூட வெள்ளை நிறம் தானே ?தங்கம் விக்கிற விலையையும் நாட்டுல செயின் அறுக்குற வேகத்தையும் பாத்தா பாண்டி பஜார்ல போயி டிசைன் டிசைன்னா வாங்கி மாட்டிக்கிறது தான் பெஸ்ட்

  ReplyDelete
 21. ஹும், என்னத்த சொல்ல?

  ReplyDelete
 22. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது ! http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.