என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, May 02, 2011

14 இதை கவிதையா நினைச்சுக்கங்க பிளீஸ்....


காத்து,கருப்பு
பேய், பிசாசு இல்லை
பில்லியாவது, சூனியமாவது
எல்லாம் சுத்த ஹம்பக்-என்று
எப்போதும் மூட நம்பிக்கைகளுக்கு
எதிராகவே பேசிவந்த
மூலை வீட்டு தாத்தா
திடீரென்று ரத்தம் கக்கி
செத்துப்போனார்  போனார்...
அவருக்கு யாரோ சூன்யம் வைத்து
 சாகடித்து விட்டார்களாம்
அவர் இப்போ  ஆவியா  அலைகிறார்
 என்றெல்லாம்  ஊரில் பேசிக்கொள்கிறார்கள்.
ஆனால் தாத்தாவுக்கு மட்டுமே தெரியும்
 தன்னை கவனிக்க ஆளில்லையே என்ற
கவலையில் மருந்து குடித்து
 செத்துப்போன விஷயம்...
ஊர்க்காரர்களிடம் கற்பனைகளை
உலவவிட்டுவிட்டு
பாவம் உண்மையும் அவரோடு சேர்த்து
மரித்து போய் புதைக்கப்பட்டது


படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


14 comments:

 1. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  (இதை கமெண்ட்டா நினைச்சுக்கங்க ப்ளீச்.. ஹா ஹா )

  ReplyDelete
 2. இப்படியும் கவிதை எழுதலாமா?

  ReplyDelete
 3. இங்கே என்ன நடக்கிறது...

  ReplyDelete
 4. சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளினைச் சுட்டியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 5. கவனிக்கப்படால் போகும் பல முதியோரின் ஆதங்கம்..

  இப்படித்தான்...

  அதை கவிதையாக்கிய தங்களுக்கு என் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 6. உங்களுக்காக...
  அத்திக்காய் ஆலங்காய் வெண்ணிலவே.....

  http://tamilpaatu.blogspot.com/2011/05/blog-post.html

  ReplyDelete
 7. அன்பின் கஸாலி

  என்ன செய்வது - நம்மில் பெரும்பாலோரால் முதியவர்களைக் கவனிக்க இயலவில்லையே - ம்ம்ம்ம் - நல்ல கவிதை(??? )- நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 8. அய்யா சாமிகளா.......தயவு செய்து இப்படி கவ்ஜை எழுதி கடுபேத்தாதீர்கள். சொல்வதை எளிமையாக வழக்கம்போல சொல்லுங்களேன். ஒருவர் எழுதினா பிறகு அத்தனை பேரும் அதையே பிடித்துக்கொண்டு அலையும் கோடம்பாக்கம் சினிமாகாரர்கள் போலத்தான் தமிழ் பதிவர்களும் ஆகிவிடுவார்கள்.

  ReplyDelete
 9. ஆதங்கம் கவிதையாக்...

  ReplyDelete
 10. நன்றி:செங்கோவியின் ‘கவிதை எழுதுவது எப்படி’பதிவு-என்று போடாததற்கு கடும் கண்டனங்கள்!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.