என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, May 12, 2011

30 கலைஞர் அப்படி என்னய்யா தப்பு பண்ணிட்டாரு?....


இன்று காலை நண்பர் நல்லநேரம் சதீஷ்குமார் தன் தளத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் சமீபத்தில் உடம் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினியை, மருத்துவமனைக்கே  போய் நலம் விசாரித்தாராம் கலைஞர் ....அடுத்து, இயக்குனர் பாலச்சந்தர் தனக்கு பால்கே விருது வழங்கப்பட்டுள்ளதால் கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றாராம்.

இதில் என்ன தவறு என்று விளங்கவில்லை எனக்கு....
ஒருவர் உடல்நலமில்லாமல் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அப்படி அனுமதிக்கப்பட்டவருக்கு நம்மைவிட வயது கம்மியாக இருந்தாலும் அவரை மருத்துவமனைக்கே சென்று நலம் விசாரிப்பதுதானே முறை, பண்பாடு, நாகாரீகம்.


அதை விடுத்து உடல் நலமில்லாமல் இருக்கும் ரஜினிகாந்தே ஒரு ஸ்ட்ரெக்சரில் படுத்துக்கொண்டா போய்  கலைஞரை  பார்ப்பார். நல்லவேளையாக தேர்தலுக்கு முன்பு ரஜினிக்கு இப்படி உடல்நலமில்லாமல் போய், அப்போது கலைஞர் மருத்துவமனைக்கு  போய் நலம் விசாரித்திருந்தால்....ஓட்டுக்காக ரஜினி ரசிகர்களை ஏமாற்ற கலைஞர் போடும் நாடகம் என்றிருப்பார்கள்.

ரஜினி வாக்களித்த பின் கலைஞரின் அரசுக்கும், கலைஞருக்கும்   எதிரான மன நிலையிலேயே பேசினார். அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை கூட மீடியாக்கள் வெளிச்சம் போட்டு காட்டியது.அப்படி இருந்தும் கலைஞர் ரஜினியை,  இந்த தள்ளாத வயதிலும் போய் பார்க்கிறார் அது அவரின் பெருந்தன்மையைத்தான் காட்டுகிறது.

நியாயமாக பார்த்தால் தேர்தல் அன்று,  மக்களுக்கு ஒரு மாற்றம் வேண்டும் என ஒரு பேட்டியின் மூலம் கூறி  தன் ரசிகர்களை ஜெயலலிதாவின் பக்கம் மறைமுகமாக திரும்ப  வைத்த ரஜினியை, ஜெயலலிதாதான் நலம் விசாரித்திருக்க  வேண்டும். அதை விடுத்து  பிரச்சாரம் என்ற பெயரில் ஒருமாதம் இந்த வேகாத வெயிலில் அலைந்ததால் சூடாகவும், கறுத்தும் போன தன் தேகத்தை குளிர்விக்க குளுகுளு கொடநாடு போய் விட்டார்.

சரி...அவரால்  நலம் விசாரிக்க போக முடியாவிட்டாலும், அண்ணா.தி.மு.க இரண்டாம் கட்ட தலையாட்டிகளை மன்னிக்கவும் தலைவர்களையாவது மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கலாம். அட...அதுகூட வேண்டாம், ரஜினி நலம் பெற வாழ்த்துகிறேன் என்று ஒரு தந்தி அல்லது அறிக்கையாவது விட்டிருக்கலாம். பாவம் அதற்கு அவருக்கு நேரம் எது? அவர்தான்  சினிமாவிலும், நேரிலும் அம்மா, ஆட்டுக்குட்டி, பசு என்று  புராணம் பாடிய  நடிகர் ராமராஜனையே போய் பார்க்கவில்லையே?அடுத்து இயக்குனர் பாலச்சந்தர்.....
பாலச்சந்தர் இந்த தள்ளாத வயதில்  கலைஞர் இல்லம் தேடிப்போய் வாழ்த்து பெற்றாராம். இதில் என்ன தவறு இருக்கிறது? கலைஞரை விட நல்ல ஆரோக்கியமாகத்தானே இருக்கிறார் பாலச்சந்தர்? அவர் நேரில் போனால் என்ன தப்பு?

ஒருவர் தனது  பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேச நாட்களிலும், இதை போல ஏதாவது விருது பெறும்போதும் அந்த மகிழ்ச்சியை தன்னைவிட மூத்தவர்களிடம் பகிர்ந்து கொள்வதும், வாழ்த்து பெறுவதும் சகஜமான ஒரு நிகழ்வுதான்.இதில் என்ன தவறிருக்கிறது?


பாலச்சந்தர் ஒன்றும் ஸ்டாலினையோ, அழகிரியையோ தேடிப்போய் வாழ்த்து பெறவில்லை...அப்படி போயிருந்தால் தவறு என கூறலாம். அதேநேரம், ஜெயலலிதாவின்  இரண்டாவது படத்தை இயக்கிய தனக்கு மரியாதைக்கு கூட வாழ்த்து சொல்லவில்லை என்று கடந்த வார விகடனில் தனது ஆதங்கத்தை கொட்டியிருந்தாரே பாலச்சந்தர்?

அடப்போங்கப்பா....பிடிக்காத மாமியார் கை பட்டால் குற்றம்,கால்பட்டால் குற்றம் என்று சொல்வது போல....பிடிக்காத கலைஞர் ரஜினியை மருத்துவமனைக்கு போய் நலம் விசாரித்தாலும் தவறு....கலைஞரை சந்தித்து பாலச்சந்தர் வாழ்த்து பெற்றாலும் தவறு.....

அண்ணா.தி.மு.க ஆதரவு பதிவர்களிடம் இதைத்தவிர வேறு எந்த நாகரீகத்தை  எதிர்பார்க்க முடியும்?....தலைவி எவ்வழி தொண்டன் அவ்வழி


Post Comment

இதையும் படிக்கலாமே:


30 comments:

 1. சதீஷ்குமார் நண்பராக இருந்தும், அவரது கருத்து தவறெனப்பட்டால் எதிர்கருத்து இடுவேன் என்று சூளுரைத்துள்ள கஸாலி யே.... பட் உங்க நேர்மை எனக்கு புடிச்சு இருக்கு

  ReplyDelete
 2. ஓகே அடுத்த புயல் ஸ்டார்ட் ஆகிடுச்சு

  ReplyDelete
 3. என்ன இங்க சண்ட

  என்ன இங்க சண்ட

  ReplyDelete
 4. இதிலும் ரஜினி தேவையா? அவரை(ரஜினியை) அவர் போக்கில் விடுங்கப்பா :-).

  ReplyDelete
 5. ஸ்டாலின் பாலச்சந்தர் வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்தினார்.

  இதற்கு நடுவில் சதீஷ் இன்னொரு பிட்டைப் போட்டிருந்தார். ரஜினி கட்சி ஆரம்பித்து விடுவாரோ என்ற பயத்தில்தான் கலைஞர் போய்ப் பார்த்தாராம். காக்கா உட்காரப் பனம் பழம் விழுந்த கதையாக இவர் குரல் 1996 ல் பலித்ததை வைத்து உளறும் இவர்கள் அதற்குப் பிந்தைய தேர்தல்களில் ரஜினி குரலுக்கு என்ன மதிப்பு இருந்தது என்பதைப் பேசுவதில்லை.

  இது வரைக்கும் உருப்படியான விடயங்கள் எதையும் செய்யாத ஜெ வுக்கு கிடைக்கும் ஆதரவு எனக்கு வியப்பளிக்கிறது. ஒன்றும் செய்யாமல் பெயர் வாங்கவும் ஒரு யோகம் வேண்டும். ஜெ ஆதரவாளர்களின் மூக்குடைபடுமாறு நாளை தேர்தல் முடிவுகள் வருமென்று எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 6. ?????.??.??.? ????? ???????????? ????????? ???? ???? ?????????? ???????????? ?????????....????? ?????? ??????? ?????? //?????????????.

  ReplyDelete
 7. அண்ணா.தி.மு.க ஆதரவு பதிவர்களிடம் இதைத்தவிர வேறு எந்த நாகரீகத்தை எதிர்பார்க்க முடியும்?....தலைவி எவ்வழி தொண்டன் அவ்வழி //

  வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 8. ரொம்ப கோவமான பதிவு. நடுநிலைமையை நிலைநாட்டியது சரியே

  ReplyDelete
 9. //கலைஞரை விட நல்ல ஆரோக்கியமாகத்தானே இருக்கிறார் பாலச்சந்தர்?//அப்ப கலைஞர விட ரஜினிக்கு ஆரோக்கியம் குறைவா இருக்கு அப்படின்னு சொல்றீங்களா..இது தேவைதான் ரஜினிக்கு..:)))))

  ReplyDelete
 10. வணக்கம் நண்பரே,இதெல்லாம் அரசியலில் சகஜம்தானே!!!.எல்லாம் நாளை தெரிந்துவிடும்.நன்றி.

  ReplyDelete
 11. ஆரோக்கியமாக இல்லாத...வீல் சேரில் கொண்டு செல்லப்படும் கருணாநிதிக்கு பதவி ஒரு கேடா?

  என்னா ஒரு பதவி வெறி?

  ReplyDelete
 12. //இந்த வேகாத வெயிலில் அலைந்ததால்//

  அட கொய்யாலே கசாலி., நீயும் உன் பார்வையும், ஒரு நாள் கூட ஒழுங்கா டிவியில
  பாக்கலையா., வெயிலே படாத மாதிரிதான் அவங்க வேன் செய்து (A.C) அதில் இருந்து கொண்டுதான் அதிகம் பேசினாங்க., விஜயகாந்தை வேண்டுமானால் அப்படி சொல்லலாம்.,


  எங்கள் தானை தலைவரான சதீச்குமாரை எதிர்க்கும் யாருக்கும் இந்த முடிவுதான் இனி.,

  ஹி ஹி ஹி ஹி டரிய்லாயிட்டியா கஸ்ஸாலி!

  ReplyDelete
 13. என்ன கஸாலி பொங்கீட்டீங்க..முடிந்தவரை எதிர்பதிவைத் தவிருங்களேன்..

  ReplyDelete
 14. ஆஹா புயல் கேளம்பிரிச்சே...

  ReplyDelete
 15. இலங்கையில் ஈழம்,அரசியல் என்று பதிவுகள் வந்தால் நான் கமென்ட் போட போவதில்லை..
  காரணம் பிரச்சனைகள் வேண்டாமே என்று தான்./.
  ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்து இருக்கும்...
  மாற்றுக் கருத்தோடு பொய் கொளுவுவதை விட அந்த பதிவை விட்டு விலகி இருப்பதே மேல் என்பது என் பாலிசி ஹிஹி

  ReplyDelete
 16. விடுங்க பாஸ்.. சதீஷ்க்கு எப்பவும் கலைஞ்சர் மேல கொல வெறி.. இப்போ வர எக்சிட் போல் பார்த்து வெறி இன்னும் அதிகமா போய் இருக்கும்

  இராவணன் - கருணாநிதி பிடிக்கவில்லை என்பது சரி, அதற்கு என் இவ்வளவு வக்கிரம்? நம் வீட்டில் இருப்பவர்களுக்கு முதுமை வரும், உடல் நலம் குன்றும். உடல் முடியாத நிலையிலும் எம் ஜி ஆர் கூட தான் தேர்தலில் நின்று முதல்வர் ஆனார் . அவர் என்ன அரசியலை விட்டு விலகினாரா என்ன?

  ReplyDelete
 17. சதீஷ் குமாரு கோவக்கார புள்ள போல இருக்கு :)

  ReplyDelete
 18. //இது வரைக்கும் உருப்படியான விடயங்கள் எதையும் செய்யாத ஜெ // அப்படியா? லாட்டரியை ஒழித்தது,மழை நீர் சேகரிப்பு திட்டம்,கந்து வட்டி கொடுமையை குறைத்தது, வீரப்பன் வேட்டை, தனியாருக்கு சென்ற சாராய வருமானத்தை அரசுக்கு திருப்பியது, சென்னைக்கு தண்ணீர் பிரச்சனையை பெருமளவு தீர்த்தது (புதிய வீராணம்)
  இதில் எதுவுமே உண்மை இல்லை என்கிறீர்களா?

  ReplyDelete
 19. ????.??.??.? ????? ???????????? ????????? ???? ???? ?????????? ???????????? ?????????....????? ?????? ??????? ?????? //?????????????.

  ReplyDelete
 20. நீங்கள் சொன்னது நியாயமனது.

  ReplyDelete
 21. தட்ஸ் கரெக்ட்........... நன்றி கெட்டஉலகம் .....நன்றி மறந்த மனிதர்கள்.......

  ReplyDelete
 22. அரசியல் தற்ச்சார்புள்ள பதிவின் மீதான ஒரு நாகரிகமான பதில் பதிவு தோழர்.,

  ReplyDelete
 23. அவன் தஞ்சாவூர் பெரிய கொவில பத்தி கேன தனமா எழுதுனவன்.... அந்த கோவிலுக்கு போனா பதவி போயிடுமாம் உயிர் போயிடுமாம்... இவர் கிட்ட போய் சோசியம் பார்த்தா எல்லாம் வெலங்கிடுமாம்! இவனுன்கலாம் தினமலத்த மாதிரியான ஆளுங்க! எல்லாத்துலயும் அவனுங்களோட சோசியம், நம்பர் ஏமாத்து வேலைய புகுத்தி இருப்பான் பாருங்க.. எல்லா பதிவுலயும் நம்பர் பிராட் தனத்த புகுத்தி அதுமேல நம்பிக்க வர வச்சு... அவன் கிட்ட வந்து சோசியம் பார்க்க வைக்ரதுக்கு தான் இந்த பிராட்தனம்! அந்த டோண்டு பய இந்த நல்லநேர பய.. இவனுங்கள மாதிரி நெறய சுத்துதுங்க... தெனாவட்ட பேசுனா நம்பிடுவானுங்கனு நெனப்பு! வெவஸ்த கெட்டவனுங்க!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.