என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, May 05, 2011

30 கே.ஆர்.பி.செந்திலும், கேபிள் சங்கரும் பின்னே நானும்....

போன மாசத்துல ஒரு நாள்..... சென்னையில பொட்டிதட்டுற 
அதாங்க சாஃப்ட்வேரு இஞ்சினியரா இருக்கும் என் நண்பன் சமீபத்தில் டீக்கடை திறந்து வடை..பஜ்ஜி விக்கிற  (அட...இது அவனோட வலைப்பூ பேருங்க)...சிராஜிடமிருந்து எனக்கு அழைப்பு.
என் மனைவி குழந்தைகளெல்லாம் நம்ம ஊருக்கு வந்துட்டாங்க...இப்ப நான் மட்டுந்தான் வீட்டுல தனியா இருக்கேன்...நீயும் சும்மாதானே இருக்கே...கொஞ்ச நாளைக்கு சென்னைக்கு வாவேன்னு கூப்பிட்டான்.நானும் யோசிச்சு சொல்றேன்னு சொன்னேன்.மறுபடியும் அடுத்த நாள் கூப்பிட்டான் வாடான்னு...(அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் ரேஞ்சுக்கு என்பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு கூவாததுதான் பாக்கி). பார்க்கலாம்ன்னு சொன்னேன்.

ரொம்ப பிகு பண்ணாதே வாடா நாயேன்னு அன்பா கூப்பிட்டான்...இதுக்கு மேல நம்ம மரியாதை தேஞ்சிரும்ன்னு நினைச்சு சரின்னு சொல்லி வச்சேன்.அடுத்த சில நாள்ல அவன் தன் மனைவி குழந்தைகளை பார்க்க ஊருக்கே கிளம்பி வந்துட்டான்...திரும்பவும் அவன் சென்னைக்கு கிளம்பும்போது என்னிடம் கூட கேக்காம எனக்கும் சேர்த்தும் டிக்கெட் புக் பண்ணிட்டான்...வேறு வழியில்லாமல் நானும் கிளம்பினேன் சென்னை சுற்றுப்பயணத்துக்கு(ஆமா...இவரு பெரிய ஜனாதிபதி....சுற்றுபயணம் போறாரு)...
திங்கள்கிழமை ராத்திரி ஊர்லேர்ந்து கிளம்பி...செவ்வாய்கிழமை காலைல சென்னையை அடைந்தோம். வீட்டுக்கு போயி நல்லா தூங்கி மத்தியானம்தான் எந்திருச்சேன்...அப்போ திடீர்ன்னு எனக்கொரு யோசனை....சென்னையில் இருக்கும் நமக்கு பழக்கமான பதிவர்களை சந்திச்சா என்னவென்று?.....
ஆனா யாரு போன் நம்பரும் என்கிட்டே இல்லை...
அட்ராசக்க சி.பி.-யிடம் போன்போட்டு நான் இப்போது சென்னையில் இருக்கிறேன்...சென்னை பதிவர்கள் யார் நம்பராவது கொடுக்க முடியுமா என்று கேட்ட போது, அவர் பதிவர் பிலாசபி பிரபாகரன் நம்பரை கொடுத்தார்...எனக்கு பிரபாகரனிடம் பேசி பழக்கமில்லாத காரணத்தால் அவருக்கு போன் போட்டு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நான் சென்னையில் இருக்கும் விஷயத்தை சொன்னேன்.
பிரபாவுக்கு ரொம்ப சந்தோசம்....எப்ப திரும்ப உங்க ஊருக்கு கிளம்புவீங்கன்னு கேட்டார்...இன்னும் ரெண்டு மூணு நாள் கழிச்சு கிளம்புவேன்னு சொன்னேன்..இல்லை சனிக்கிழமை வரை இருங்க....நான் உங்களை சந்திக்கிறேன்னு சொன்ன பிரபாகரன்..நம்ம சேர்ந்து சில பிரபல பதிவர்களை சந்திக்கலாம்ன்னு சொன்னார்....நானும் சரியென்று சொன்னேன்...பின்னர் அவரே அஞ்சா சிங்கம்  செல்வின் போன் நம்பர் கொடுத்தார்...
நான் செல்வினிடமும் பேசினேன். அப்படி பேசியபோது பிராபாகரன் சொன்ன சனிக்கிழமை சந்திப்பை பற்றி சொன்னேன். அவரும் வருவதாக சொன்னார்..பின்னர் அவர் மெட்ராஸ் பவன் ஓனர் நண்பேன்டா  சிவக்குமார் நம்பரை தந்தார்...அவரிடமும் பேசி சனிக்கிழமை சந்திப்புக்கு நேரம் குறித்தோம்..
பிறகு கே.ஆர்.பி. செந்திலின் தளத்தில் இருந்த அவரின் போன் நம்பரை பார்த்து அவரையும் தொடர்புகொண்டு பேசினேன்...விஷயத்தை சொன்னேன்.அவரும் சந்தோசத்துடன் சம்மதித்தார்...

ஆஹா......சென்னைவந்தது ரொம்ப பிரயோஜனமா போச்சு....இத்தனை பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சிருச்சேன்னு  நினைச்சேன்...ஆனால் விதி வேறு விதமாக விளையாட போவதை அறியாமல்....அது என்னன்னா........                                                                                                                                                                                                                                  சொல்றேன்.....


படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

அப்படியே என் நண்பனின் டீக்கடைக்கும் போங்க...அங்கே இன்றைய சூடான  வடை பஜ்ஜி.........

 

 Post Comment

இதையும் படிக்கலாமே:


30 comments:

 1. அண்ணனோட எண்ணம் என்னன்னா ஒரு பதிவுல எல்லா பதிவர்கள் பெயரையும் கொண்டு வந்துடனும்.. அப்போ எல்லாரும் வந்து படிச்சுடுவாங்களே... ஐடியா ஓக்கே..

  ReplyDelete
 2. ahaa.. டென்ஷன்ல விட்டுட்டீங்களே..

  ReplyDelete
 3. யோவ் இப்புடியா முக்கிய இடத்துல நிறுத்துறது? அப்புறம் என்னாச்சு?

  ReplyDelete
 4. அப்புறம் சொன்னதுக்கப்புறம் நானு பதில் சொல்றேன்

  ReplyDelete
 5. " A joke " visit http://rajamelaiyur.blogspot.com/2011/05/blog-post_586.html

  ReplyDelete
 6. சென்னை இல் ஒரு கெட்டகாலம்மா?

  ReplyDelete
 7. ஆஹா ஆரம்பிச்சிட்டிங்களா...

  அப்புறம் பார்க்கல போகல..
  அப்படின்னு முடிச்சிங்க அவ்வளவுதான்...

  பார்ட்டி உண்டா பாஸ்...

  ReplyDelete
 8. மீண்டும் எப்போ? விட்ட கதை?

  ReplyDelete
 9. தெரியாமப் போச்சே.

  - எம்.எம்.அப்துல்லா.

  ReplyDelete
 10. தொடரட்டும், நாங்களும் தொடர்கிறோம்.

  ReplyDelete
 11. விதி உங்களை இன்னும் விடவில்லையா?

  ReplyDelete
 12. ஹே.ஹே.ஹே.............. சென்னையா ??? ஓகே,ஓகே........

  ReplyDelete
 13. //அது என்னன்னா........ சொல்றேன்....// ஏன் இந்த பில்டப்பு அத இன்னக்கே சொல்ல வேண்டியதுதான .

  ReplyDelete
 14. சன் டிவி மெகா தொடர் அதிகம் பார்பீங்களோ...

  ReplyDelete
 15. இந்த பதிவோட தொடர்ச்சி எப்போ?

  ReplyDelete
 16. இதுல கூட ஒரு டுவிஸ்ட் வச்சு தொடரும்னு போடுறீங்களே, நீங்க ஏன் பேசாம ஒரு மெகா சீரியல் எடுக்க கூடாது?

  ReplyDelete
 17. இப்போதான் நேரம் கிடைச்சுதா..சென்னை அனுபவங்கள் நல்லாருக்கு..

  ReplyDelete
 18. தொடருமா அப்ப அங்க பண்ணின டகால்ட்டி வேலையும் வரும் போல

  ReplyDelete
 19. ஆஹா....ஒரு சுவாரசியமான மேட்டரை, விதி என்ற சாட்டைச் சொல்லி..
  இப்பூடி முடிச்சிட்டீங்களே..
  அடுத்த பகுதியை இன்னைக்கே போடுங்க.

  ReplyDelete
 20. //தெரியாமப் போச்சே.//

  அண்ணே அப்ப தேர்தல் பணியாக புதுகையில் இருந்தீங்க!

  ReplyDelete
 21. அட என்ன சார் இவளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு என்னவென்று சொல்லாம போயிட்டிங்களே !?????

  ReplyDelete
 22. ////.சென்னைவந்தது ரொம்ப பிரயோஜனமா போச்சு....இத்தனை பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சிருச்சேன்னு நினைச்சேன்/////

  எனக்கும் ரொம்ப ஆசையுங்க...

  ReplyDelete
 23. அதை மட்டும் சொல்லிராதீங்க..அடிச்சு கேப்பாங்க..அப்பவும் சொல்லிராதீங்க.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.