என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, May 03, 2011

12 சுலபமான வழியில் கவிதை எழுதலாம் வாங்க (மீ.ப)....

(வாலி வைரமுத்து வகையறாக்கள் என்னை மன்னிப்பார்களாக....).
என் பார்வையில் கவிதை எழுதுவது ரொம்ப சுலபம். எப்படின்னா?........

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கங்க.....ஏதாவது ரெண்டு வரி  இருபது வார்த்தைக்கு மிகாமல் எழுதுங்க....எழுதிட்டீங்களா?

இப்ப மறுபடியும் மூன்று வார்த்தைக்கு ஒரு வரி என்று ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதவும். ஆறு அல்லது ஏழு வரி வந்திருக்கும். அப்படி ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதும்போது
வார்த்தைகளை அதன் அர்த்தம் மாறாமல் லேசாக கலைத்து போடுவது ரொம்ப முக்கியம்.கடைசி வரியில் ஒரு ட்விஸ்ட் இருப்பத்து ரொம்ப ரொம்ப முக்கியம்.  இப்போது நீங்கள் எழுதியதை படித்து பாருங்கள். உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். அட அதுதாங்க கவிதை. மூன்று வரிக்குள் ஏழெட்டு வார்த்தைகளை உங்களுக்கு  அடக்க தெரிந்தால்.... சந்தேகமே வேண்டாம் அதற்க்கு பெயர் ஹைக்கூ.

உதாரணத்திற்கு இந்த சுட்டியை கிளிக்கவும் 

(அட எல்லோரும் ரெடியாகிட்டீங்க போல கவிதை எழுத....என்னது என்னை அடிக்க ரெடியாகிட்டீங்களா....அய்யய்யோ இந்த ஆட்டத்துக்கு நான் வரல....விடு ஜூட்..... )

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


12 comments:

 1. ஜிங்சக்க ஜிங்சக்க
  ஜிங்சக்க

  ஜீஞ்சனக்கா

  எப்படி நம்ம கவிதை

  ReplyDelete
 2. கவிதை எழுதறவங்க பதிவுலகுல 1200 பேர் இருக்காங்க. பார்ப்போம் எத்தனை மைனஸ் ஓட்டு விழுதுன்னு ,.. ஆனா அண்ணன் சாமார்த்திய சாலி.. ஒவ்வொருத்தர் தனி மெயில்லயும் போய்.. அண்ணே இது உங்களத்தாக்கி எழுதப்பட்ட பதிவு அல்ல அப்டினு சமாளிச்சுடுவாரு..

  ReplyDelete
 3. நிறைய கவிதைகள் (எனதையும் சேர்த்து தான்) நீங்கள் சொல்வது போலவே எழுதப்படுகின்றன. கவிதைகளை விட பெண்கள் அழகு என்பதால் இப்போது கவிதைகள் படிப்பதை விட்டுவிட்டேன்.

  ReplyDelete
 4. மாப்ள உனக்கு என்னைப்போல எதோ தட்டுப்பாடு போல ஹிஹி!

  ReplyDelete
 5. இதிலை உள் குத்து இல்லையே...
  யாருக்கோ, கவிதை எழுதுவது என்றால் என்ன என்று கற்பிக்கிற மாதிரி இருக்கே..அவ்......

  ReplyDelete
 6. உருபடிய ப்ளாக் எழுதுவது எப்படி ? ஐடியா தேவை ? கால் 55878945521

  ReplyDelete
 7. அடாடா இதுக்கு எல்லாமா ரியுசன் எடுக்குறீங்கா?கொடுமைடா !!!

  ReplyDelete
 8. இந்தப் பதிவு எனக்காக இல்லை அப்படிதானே?

  ReplyDelete
 9. ரைட்டு..
  இன்னிக்கு இம்புட்டுதான்...

  ReplyDelete
 10. மிகவும்
  உபயோகமான
  பதிவு!

  ReplyDelete
 11. இதுவரை புதுக்கவிதை எப்படி எழுதுவது எனதெரியாமை துன்பப் பட்டேன். அதை அறியச்செய்துவிட்டீர் நன்றி புலவர் சா இராமாநுசம் சென்னை 24

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.