என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, May 11, 2011

23 ஜாக்கிசேகரும்,கேபிள் சங்கரும் பின்னே நானும்....


அடுத்தநாள் புதன்கிழமை...
கிழக்கு பதிப்பகத்தில் புத்தகங்கள் வாங்கலாமென்று முடிவு செய்து நண்பர் கே.ஆர்.பி.செந்திலிடம் போன் செய்து கேட்டேன்...அவரும் மதியத்திற்கு மேல் தி.நகரில் இருக்கும் என்னுடைய  ஆபீசுக்கு  வாங்க சேர்ந்து போகலாமென்று சொன்னார்.
இதற்கிடையில் சீக்கிரமே வேலைமுடித்து திரும்பிய என் நண்பன் சிராஜும் போகலாம்  என்று சொன்னான்.மாலை நான்கு மணிக்கு வரலாமாவென்று கே.ஆர்.பி-இடம் போன் போட்டு கேட்டதற்கு திடீரென்று ஒரு பதிவர் சந்திப்பு  வந்துவிட்டதால் நான் இப்போது சைதாப்பேட்டையில் இருக்கிறேன்...முடிந்தால் அங்கு வாருங்கள் சந்திப்போம். கிழக்கு பதிப்பகத்திற்கு இன்னொரு நாள் போகலாம் என்றார்.
பதிவர் சந்திப்பு என்றதும் நானும் சந்தோசமாக ஒப்புக்கொண்டு அவரிடம் சரியான முகவரியை கேட்டுக்கொண்டு அங்கு சென்றோம்....


அங்கு பிரபல பதிவர்கள் ஜாக்கி சேகர், கேபிள் சங்கர், தண்டோரா மணிஜி மற்றும் விந்தைமனிதன் ராஜாராம் ஆகியோருடன் சந்திப்பில் இருந்தார் கே.ஆர்.பி., அறிமுக படலம் முடிந்ததும் சிறிது நேரம் அரசியல், சினிமா என்று அனைத்தையுமே அலசிக்கொண்டிருந்தோம்...ரெண்டு மணிநேரம் கழிந்தது...பின்னர் ஆளுக்கு ஒரு டி குடித்துவிட்டு (கவனிக்கவும் டீ மட்டும்தான்) சனிக்கிழமை பதிவர் சந்திப்புக்கு நேரம் குறித்து விட்டு கிளம்பினோம்...(பின்னர்தான் தெரிந்தது நாங்கள் சந்தித்த இடம் தண்டோரா மணிஜி அவர்களின் அலுவலகம் என்று).

நான் ஆவலுடன் எதிர்பார்த்த சனிக்கிழமையும் வந்தது. தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருக்கும் விந்தைமனிதன் ராஜாராம் அவர்களின் அலுவலகத்தில் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் நான், சிராஜ், கே.ஆர்.பி., கேபிள்சங்கர், விந்தைமனிதன், அஞ்சாசிங்கம் செல்வின் ஆகியோர் சந்தித்தோம்.  தவிர்க்க முடியாத காரணத்தால் பிலாசபி பிரபாகரன் கலந்து கொள்ள முடியவில்லை என்று தகவல் சொன்னார். அவர்தான் இந்த சந்திப்புக்கே வித்திட்டது...கடைசியில் அவரால் வரமுடியவில்லை.

மதிய சாப்பாட்டிற்காக  ரங்கநாதான் தெருவில் இருக்கும் ஒரு அசைவ உணவகத்திற்கு எங்களை அழைத்து சென்றார் கே.ஆர்.பி.,கேபிளை தவிர நாங்கள் எல்லோரும் சென்றோம்...கேபிள் வீட்டிற்கு சென்று விட்டார்....அங்கு ஒரு அருமையான சாப்பாடு சாப்பிட்டோம்....(உணவு உபயம்: கே.ஆர்.பி.)
இதற்கு மேல் அந்த உணவகத்தை பற்றி எழுதினால் சாப்பாட்டுக்கடை பற்றி எழுதும் கேபிள் கோவித்து கொள்வார் என்பதால்  இத்துடன்  நிறுத்தி கொள்கிறேன். 
இந்த இடத்தில் இதன் முந்தைய பதிவில்  குறிப்பிட்ட விதியில் விளையாட்டை சொல்லித்தான் ஆகவேண்டும். 

என் நண்பன் சிராஜ், அவன் மனைவி சமைக்கும் போது கூடவே இருந்து பார்த்திருப்பான் போல....இப்போது தனியாக இருக்கும்போது வெளியில் சாப்பிட்டால் வயிற்ருக்கும், பர்சுக்கும் ஆபத்து என்று சொந்தமாகவே சமைப்போம் என்றான்.நான் கூட சமையலுக்கு வேறு ஆளை ஏற்பாடு பண்ணியிருப்பான் போலவென்று நம்பி சரியென்று தலையாட்டினேன். கடைசியில் பார்த்தால் நான்தான்  சமைக்கப்போகிறேன் என்று வயிற்றில் ஆசிட்டை வார்த்தான் படுபாவி....இறைவா....எனக்கு ஏன் இந்த சோதனை?....இவனை நம்பி சென்னைக்கு வந்ததற்கு நல்ல தண்டனையை கொடுத்துவிட்டே.....என்னை எப்படியாவது ஊருக்கு ஆரோக்கியமாக அனுப்பிடு என்று பிரார்த்தித்து அரைமனதுடன் தலையாட்டினேன். அவனும் சமைக்கிறேன் பேர்வழி என்று அவன் அரைகுறை சமையல் திறமையை என்னை வைத்தே பரிசோதித்து பார்த்துவிட்டான். 
நல்லவேளையாக அவன் கன்னி சமையலும் நன்றாகத்தான் இருந்தது....இல்லாவிட்டால் இந்த கட்டுரையை நான் எழுத முடிந்திருக்காது....இந்நேரம் ஏதேனும் ஒரு ஆஸ்பிட்டலில் வாந்தி பேதின்னு உயிருக்கு   போராடிக்கொண்டு இருந்திருப்பேன். நான் மட்டும் என்ன இளிச்சவாயா? நான் நல்லா மீன் குழம்பு வைப்பேன்னு சொல்லி, மீன் குழம்பும் வைத்து அவனை பலி வாங்கிட்டுத்தான் வந்தேன்....ஓகே...கடந்த வார சஸ்பென்ஸ் முடிந்தது..சரி விசயத்திற்கு வருகிறேன்....சாப்பிட்டு முடித்து விட்டு (அட...சிராஜின் சமையலை இல்லீங்க....ஹோட்டலில்தான்) அங்கிருக்கும் கிழக்கு பதிப்பகம் சென்று சில புத்தகங்களை வாங்கிகொண்டு மீண்டும் விந்தை  மனிதன் அலுவலகத்திற்கே திருப்பினோம்.
அங்கு எங்களுக்காக காத்திருந்தார் மெட்ராஸ் பவன் ஓனர் நண்பன்டா சிவக்குமார் @ சிவா...

சாப்பிட்ட தெம்பில் சற்று சுறுசுறுப்புடன் சில விவாதங்கள் நடந்தது...கே.ஆர்.பி, அஞ்சாசிங்கம், விந்தைமனிதனுடன் கடவுளை பற்றிய விவாதத்தில் சிராஜ் ஈடுபட்டான். மேல் விபரங்களுக்கு சிவக்குமாரின் தளத்தில் பார்க்கவும். சிறிது நேரத்தில் கேபிளும்  வந்துவிட்டார். அவரையும் விடவில்லை சிராஜ்..அவரோடு வியாபார தந்திரம் பற்றி ஒரு சிறிய விவாதம்...இப்படியே இரவு பத்து மணியாகிவிட்டது...பின்னர் கேபிள் எழுதிய மீண்டும் ஒரு காதல்கதை, சினிமா வியாபாரம், கே.ஆர்.பி. செந்தில் எழுதிய பணம் போன்ற புத்தகங்களை வாங்கிக்கொண்டு அங்கிருந்து விடை பெற்றோம்.
(கே.ஆர்.பி.செந்திலின் பணம் புத்தகத்திற்கான எனது விமர்சனத்தை இங்கு போய் படித்துக்கொள்ளவும்

  அடுத்த நாள் ஞாயிற்று கிழமை நான் ஊருக்கு திரும்புவதாக பிளான். ஆனால் தேர்தல் நேரமென்பதால் பஸ், ட்ரெயின் என்று எதற்குமே டிக்கட் கிடைக்கவில்லை. திங்கள் கிழமை இரவுக்குத்தான் டிக்கட் இருந்தது. அதுகூட ஒரேயொரு டிக்கட்தான். வேறுவழியின்றி திங்கள் கிழமை இரவுக்கான டிக்கட்டை புக் செய்துவிட்டு
ஞாயிற்றுக்கிழமை மதியம் சிவாவிற்கு(மெட்ராஸ் பவன் சிவக்குமார் இனி சிவா) போன் செய்து விஷயத்தை சொன்னேன்...ஆனால்...அதற்கு பிறகு சிவாவின் வடிவில் மீண்டும் ஒரு முறை விதி விளையாடியது....கடந்து முறையை போலல்லாமல் இந்த முறை கொஞ்சம் சீரியசாகவே....
அது என்னன்னா?  சொல்றேன்.......

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


23 comments:

 1. ஒரு பதிவர் சந்திப்பை தொடராக எழுத உங்களால் மட்டுமே சாத்தியம் கசாலி..

  ReplyDelete
 2. தமிழ்மணத்துல நீங்க ஒட்டு போடா முன்னாடியே நான் போட்டுட்டேன்! இது எப்படி இருக்கு?

  ReplyDelete
 3. ..ஆனால்...அதற்கு பிறகு சிவாவின் வடிவில் மீண்டும் ஒரு முறை விதி விளையாடியது....கடந்து முறையை போலல்லாமல் இந்த முறை கொஞ்சம் சீரியசாகவே....அது என்னன்னா? சொல்றேன்.......//

  அட இங்கும் சஸ்பென்சா?

  ReplyDelete
 4. ரைட்டு.. அடுத்த சஸ்பென்ஸ் ஆரம்பிச்சாச்சு ?

  ReplyDelete
 5. இம்புட்டு நடந்திருக்கா...

  ReplyDelete
 6. பதிவர் சந்திப்பு பற்றிய பதிவு நல்லா இருக்குது. தொடருங்க... சுவாரசியமாக எழுதுறீங்க.

  ReplyDelete
 7. சென்ற வார சஸ்பென்ஸ் காரசாரமா முடிஞ்சது .. அப்பாடா !!!அட மறுபடியுமா

  ReplyDelete
 8. நல்லது....ஹி ஹி..சும்மா ஒரு வார்த்தை .....தொடருங்கள்....

  ReplyDelete
 9. ஒரு பதிவர் சந்திப்பினை இப்படி தொடராக எழுத கஸாலியால் தான் இயலும். நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 10. பதிவர் சந்திப்புக்கே தொடரா?

  ReplyDelete
 11. பதிவர் சந்திப்பை பல்சுவையுடன் கூற உங்களால்தான் முடியும். சொல்லுங்க.

  ReplyDelete
 12. பதிவர் சந்திப்பு அருமை.... தொடருங்கள்

  ReplyDelete
 13. அடுத்து என்ன சஸ்பென்ஸ்ன்னு அனக்குத் தெரியுமே..பொச தானே?

  ReplyDelete
 14. சிக்கரம் இதோட தொடர்ச்சிய வெளியிடுங்க.

  ReplyDelete
 15. // அவர்தான் இந்த சந்திப்புக்கே வித்திட்டது... //

  இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா...

  ReplyDelete
 16. ஆவலைத் தூண்டும் வகையில் எழுதுகிறீர்கள்.

  ReplyDelete
 17. ஏனப்பா கஸாலி உனக்காக கஷ்டப்பட்டு சமைச்சு போட்டா அத கிண்டல் பன்றியே, அப்புறம் ஏண்டா சாப்பாட அந்த வெட்டு வெட்டின???

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.