என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, May 02, 2011

24 இறந்தது லேடனே அல்ல- பரபரப்பு உண்மைகள்


வாங்க நண்பர்களே....தலைப்பை  பார்த்ததும் இங்கே வருவீங்கன்னு தெரியும்....இது ஒரு மொக்கை பதிவு...ஆனாலும் சில விளக்கங்கள் இருக்கும்....என்ன விளக்கம்ன்னு இப்போ பார்ப்போம்.

வழக்கமாகவே அரபு நாடுகளிலும், இஸ்லாமிய நாடுகளிலும் தன் பெயருக்கு பின்னால் தன் தந்தையின் பெயரை சேர்த்துக்கொள்வது வழக்கம்...அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரியே.....

இங்கு போல் பெண்கள் தன் பேருக்கு பின்னால் கணவர் பெயரை சேர்ப்பது அங்கு இல்லை...அப்படி ஆண்கள் தன் பெயரை முதலிலும், தன் தந்தை பெயரை அடுத்தும் வைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு இங்கு ஸ்டாலின் S/O. கருணாநிதி என்றும், கனிமொழி D/O. கருணாநிதி என்றும் அழைப்பதையே அரபு நாடுகளில்  ஸ்டாலின் பின் கருணாநிதி, கனிமொழி பிந்தி கருணாநிதி என்று அழைப்பார்கள் இதில் பின் என்பது SON/OF-என்பதையும், பிந்தி என்பது DAUGHTER/OF - என்பதயும் குறிக்கும்...

இப்போது விஷயத்திற்கு வருவோம்...இன்று அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட ஒசாமாவை நிறைய செய்திகளில் லேடன் என்றும், பின் லேடன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். பின் லேடன் என்பதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம்....(லேடனின் மகனென்று அர்த்தம் வரும்...ஒசாமா என்பவர் லேடனின் மகன்தானே)....ஆனால், வெறும் லேடன் என்று குறிப்பிடுவதை எப்படி ஏற்றுக்கொள்வது? லேடன் அதாவது ஒசாமாவின் தந்தை இறந்துதான் பல வருடங்கள் ஆகியிருக்குமே....அப்படியானால் இன்று இறந்தது ஒசாமாவா? லேடனா?


படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


24 comments:

 1. நியாயமான சந்தேகம்தான்.

  ReplyDelete
 2. யோவ் நல்லவேள மொத பாராவுலேயே இது மொக்கை பதிவுன்னு சொல்லிட்டீங்க, இல்லேன்னா இன்னிக்கு நடக்குறதே வேற......!

  ReplyDelete
 3. நீயே சொல்லு இந்த பதிவு போட்டதுக்கு உன்னை என்ன பண்ணலாம்ன்னு ?

  ReplyDelete
 4. ஹி..ஹி..ஹி.. உதாரணம்லாம் ரொம்ப ரணகளமா இருக்கே..!! ம்ம்.. டவுட்டு கிளியர்.

  ReplyDelete
 5. இறந்தது ஒசாமாவே இல்லை...ஒசாமாவைப் போல் ஏழுபேரு இருக்கின்றார்கள்.

  இது எப்படி,,,,,,,,,,?

  ReplyDelete
 6. யோவ் கஸாலி - நான் இனிமே உன் பதிவு பக்கமே வர மாட்டேன் .ம்ம்ம். பி பிந்தி இப்படி எல்லாம் பொருளிருக்கா - அது சரி

  ReplyDelete
 7. எல்லா மரணங்களுக்கு பின்னும் ஒரு சந்தேகமா?

  ReplyDelete
 8. சரியான நேரத்தில் சரியான விளக்கம்....... பின் ரஹீம் .....

  ReplyDelete
 9. ஹிஹி பண்ணி சொன்னது தான்..
  இல்லைன்னு சொன்னாக்கா ட்ரவுசர் கிழிஞ்சிராது??

  ReplyDelete
 10. இந்தாளு புள்ளை பேருக்கும் நைனா பேருக்கும் வித்தியாசம் சொல்லியே ஓஞ்சுபோயிடுவாரு போலிருக்கே..

  ReplyDelete
 11. சந்தேகங்கள் பலவிதம். அதில் ஒரு விதம். ஆனால், பலரது வயிற்றில் புளியைக் கரைக்கும்!

  ReplyDelete
 12. இப்படி மொக்கையா ஜோசிக்கலாமா?

  ReplyDelete
 13. பரபரப்பை கிளப்பிவிட்டீர்களே?

  ReplyDelete
 14. அண்ணே நீங்க அறிவு கொளுந்துனே

  ReplyDelete
 15. சகோ, என்னதிது, உட்கார்ந்து யோசிச்சதா....

  ReplyDelete
 16. அடிகிக்கிற சுனாமில இது ஒரு டவுட்டா? ஹ்ம்ம்ம் சூப்பரு

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. Yepppidi ya ippidilAm yosika modiyuthu.......

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.