என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Sunday, May 08, 2011

7 புலன் விசாரணை-பாகம்-10


முந்தைய பாகங்கள் போலீஸ் வாகனம் கிளப்பியது. அது போய் நின்ற இடம் இயக்குனர் மாணிக்கராஜாவின் அலுவலகம்.

"வாங்க இன்ஸ்பெக்டர். என்ன என்னை தேடி வந்திருக்கீங்க? மறுபடியும் விசாரணையா?"

"இல்ல சார்....விசாரணை முடிஞ்சிருச்சு...இனி கைது படலம்தான்"...

"வெரி குட்....அப்படின்னா யாரு அக்யூஸ்ட் ன்னு தெரிஞ்சிருக்கும்.யாரு?"

"அதுக்குத்தான் உங்களை தேடி வந்திருக்கேன்"

"அதுக்கு என்னை தேடிவரவேண்டிய அவசியம்?"

"குற்றவாளி உங்க ஆபீஸ்லதானே  இருக்கான்."

"என்ன இன்ஸ்பெக்டர் புதிர் போடறீங்க.கொலைகாரன் என்னோட ஆபீஸ்ல இருக்கானா? யாரு?"

"உங்க அசிஸ்டென்ட் தான்"...

"அப்படியா? பெரிய அதிர்ச்சியா இருக்கே? என்கிட்டே பத்து அசிஸ்டென்ட் இருக்காங்க...நீங்க யாரை சொல்றீங்க?"

"கொலை நடந்த அன்னிக்கு எனக்கு தகவல் சொன்னானே அவன்தான்"...

"வாட்...சேகரா? இருக்காது இன்ஸ்பெக்டர் நீங்க தவறான தகவல் அடிப்படையில் வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்."

"இல்ல சார்...சரிதான்...இந்த போட்டோவை பாருங்க புரியும்"...

போட்டோவை பார்த்த இயக்குனர் மாணிக்கராஜா அதிர்ந்தார்.

"சார்...அவன் பேரு என்னன்னு சொன்னீங்க?"

"சேகர்"....

"இப்ப அவன் எங்கே இருக்கான்?"

"இங்கேதான்....என் ஆபீஸ்லதான் இருக்கான்...வெளியில அவன் பிரண்ட பார்க்க போயிருக்கான்....இப்போ வந்திடுவான்."

"ஒரு போன் போட்டு கூப்பிட முடியுமா? "

"இருங்க கூப்பிடுறேன்"...

மாணிக்கராஜா தன அலைபேசியை எடுத்து அழைத்தார்.

"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...அவன் இங்கதான் வந்துக்கு இருக்கான்"

?சார் அவன் கேரக்டர்?"

"ரொம்ப நல்ல பையன் இன்ஸ்பெக்டர் அவன்...ரெண்டு வருசத்துக்கு முன்னாடி என்கிட்டே வந்து சேர்ந்தான்...ரொம்ப திறமையானவனும் கூட....அவன் எதுக்கு இப்படி பண்ணிருப்பான்னு தெரியலியே?"

"அவனிடம் விசாரணை பண்ணினா சரியா இருக்கும்..."

"எப்படியோ..என் பேரை கெடுத்துட்டான் அந்த ராஸ்கல்...இதுவரை நான் கட்டி காப்பாற்றிய மரியாதை எல்லாம் போச்சு"....

அப்போது சேகர் உள்ளே நுழைந்தான்...போலீசை பார்த்ததும் மிரண்டான்..

"வா சேகர்....நான் நேரிடையாகவே விஷயத்திற்கு வாரேன்....நீ ஸ்ரீமதிய கொலை பண்ணியதா இன்பெக்டர் சொல்றார்...."

"ஐயோ நான் கொலை பண்ணலை...எனக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை..."

"அப்படின்னா....இந்த போட்டோவுக்கும்  உங்களுக்குமாவது சம்பந்தம் இருக்கா?"

போட்டோவை கையில் வாங்கி பார்த்தவன் நடுங்கினான்....

"இப்போ உண்மைய சொல்லுங்க...எதுக்கு ஸ்ரீமதிய கொலை செஞ்சீங்க...".

"சார்....சத்தியமா ஸ்ரீமதிய நான் கொலை செய்யல...."

"அப்படின்னா இந்த லெட்டர்?"

"அது...அது...ஒரு ஆளு கொடுத்து பாடிக்கு பக்கத்துல போட சொன்னார்..."

நம்புறமாதிரி இல்லையே? அவரு கொடுத்தா நீ வாங்கி போட்டிருவியா? இப்படிலாம் கேட்டா உண்மைய சொல்ல மாட்டான்...வழக்கமா எங்க ட்ரீட்மெண்ட காட்டிற வேண்டியதுதான்....கான்ஸ்டபில் இந்தாளை ஸ்டேசனுக்கு இழுத்துக்கு வாங்க...போடற போடுல உண்மைய தானா கக்குவான்"

"ஐயோ...சார் நான் சொல்வது நிஜம்....சத்தியமா இது நான் எழுதியது இல்லை...அவருதான் கொடுத்தாரு..."

"அப்படினா அந்த ஆளு யாரு..."

"அவரு...அவரு....?"


எவரு அவரு? வரும் ஞாயிறு தெரியும்Post Comment

இதையும் படிக்கலாமே:


7 comments:

 1. யோவ், யாருய்யா அந்த அவரு?..வாரா வாரம் இப்படி எங்களை தவிக்க விடுறதே வேலையாப் போச்சு..

  ReplyDelete
 2. முதல் ஒட்டு போட்ட சந்தோசம் எனக்கு ... ஹையா

  ReplyDelete
 3. அவரோட பேர சீக்கிரம் சொல்லுங்க! சஸ்பென்ஸ் தாங்க முடியல! ஒரு நல்ல தேர்ந்த கிரைம் எழுத்தாளரின் நடை உங்க கிட்ட இருக்கு!

  ReplyDelete
 4. விறுவிறுப்பை கூட்டுகிறது....அருமை ..

  ReplyDelete
 5. பத்து பாகம் ஓடி விட்டதே....பதிவுலகில் தொடர்கதை ஒரு புதுமைதான்...

  ReplyDelete
 6. எவரு அவரு? வரும் ஞாயிறு தெரியும்

  எவரு அவரு? வரும் ஞாயிறு தெரியும்
  காத்திருக்கிறோம்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.