என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Sunday, May 29, 2011

11 கம்பீரக்குரலை இழந்த நம்ம சூப்பர் ஸ்டாரு....


நான் ஒரு தடவை சொன்னா.....
ஆண்டவன் சொல்றான் இந்த.....
போன்ற பஞ்ச் டயலாக் களை ரஜினிகாந்தின் கம்பீரமான குரலில் கேட்டு பழகிய நமக்கு நேற்று பெரிய அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.
ஆம்...., நேற்று மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற ரஜினி ஒரு பேட்டி அளித்துவிட்டு சென்றிருந்தார். அந்த பேட்டியில்.....

‘’ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுறேன். ஹா..ஹா...ஹா....  ஹேப்பியா போய்கிட்டு வந்துகிட்டு இருக்குறேன் நானு.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுறேன் ராஜாக்களா. நீங்க கொடுக்கிற ஒரு அன்புக்கு நான் என்னத்த திருப்பி கொடுக்கிறது.
பணம் வாங்குறேன்... ஆக்ட் பண்றேன்... அதுக்கே இவ்வளவு அன்பு கொடுக்கிறீங்கன்னா, இதுக்கெல்லாம் நான் என்னத்த திருப்பி கொடுக்கிறது.
டெஃபனெட்டடா நீங்க எல்லோரும் தலை நிமிர்ந்து வாழும்படி, எங்க fans through out the world, தலை நிமிர்ந்து வாழும்படி நான் நடந்துக்கிறேன் கண்ணா. கடவுள் கிருபை என் மேல் இருக்கு. என் குருவின் கிருபை என் மேல் இருக்கு.
எல்லாத்துக்கும் மேல கடவுள் ரூபத்துல இருக்குற உங்களோட கிருபை எல்லாம் என் மேல, என் மேல இருக்கு. நான் சீக்கிரம் வந்துடறேன். 
ஓகே. பாய். குட்’’ 

 தெரிவித்திருந்தார்...... அதில் வழக்காமான ரஜினியின் கம்பீரம் இல்லாமல் அவர் குரல் உடைந்து போயிருந்தது. 

சிங்கத்தின் குரலைபோல கம்பீரமாக இருந்த சிரிப்பு கூட சுரத்தேயில்லாமல் இருந்தது. இதை கேட்டதும் அவரது ரசிகர்கள் அவரது குரலை போலவே உடைந்து போயிருப்பார்கள். 

ரஜினியின் உடல்நலக்குறைவிற்கு பின்  அவரின் லட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பலவிதமான சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கும் பட்சத்திலும் கூட , அவரின் மிடுக்கான  நடையையும், கம்பீரமான குரலையும் அவர்கள் மாற்றி கற்பனை செய்து பார்த்ததேயில்லை நேற்றுவரை....

அதற்கெல்லாம் பங்கம் வருவது போல நேற்றைய ரஜினியின் பேட்டி அமைந்துள்ளது. ஏற்கனவே ரஜினி பற்றி ஏகப்பட்ட வதந்திகள் ரெக்கை கட்டி பறக்கும் இவ்வேளையில் இது அவரின் ரசிகர்களுக்கு மத்தியில் பெருத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

என் கருத்து என்னவென்றால்....
இப்படி பேட்டியை வெளியிட்டு ரசிகர்களின் வயிற்றில் ஆசிட்டை வார்த்திருப்பதை விடுத்து பேசாமல் ரஜினியின் பேட்டியை வெளியிடாமலே சென்றிருக்கலாம்.  ரசிகர்கள் கொஞ்சமாவது நிம்மதியாக இருந்திருப்பார்கள்.

Post Comment

இதையும் படிக்கலாமே:


11 comments:

 1. ஒரு தடவை சொன்னா....


  ச்சே அந்த வாய்ஸ் உண்மையிலேயே கிக்தான்

  ReplyDelete
 2. ////இப்படி பேட்டியை வெளியிட்டு ரசிகர்களின் வயிற்றில் ஆசிட்டை வார்த்திருப்பதை விடுத்து பேசாமல் ரஜினியின் பேட்டியை வெளியிடாமலே சென்றிருக்கலாம். ரசிகர்கள் கொஞ்சமாவது நிம்மதியாக இருந்திருப்பார்கள்.//// என் வருத்தமும் இதுதான்

  ReplyDelete
 3. வயசாயிடுச்சி ராஜா ........எல்லாம் சரியாகி அவர் மீண்டும் வருவார் .

  ReplyDelete
 4. அதற்கு இதை வெளியிடாமலே சென்று இருக்கலாம்...ஆனால் அது ரஜினியின் குரல்தானா?

  ReplyDelete
 5. அமாங்க தலைவர் ரொம்பவே பாதிக்கபட்டிடாறு .

  ReplyDelete
 6. நெசம்தான் பாஸ்...மனதை ரொம்பவே padutiruchu

  ReplyDelete
 7. விரைவில் நலம் பெறட்டும்

  ReplyDelete
 8. உண்மைதான் ரஹீம் அவரின் இந்த பேட்டிஅவரின் பல லட்ச கணக்கான ரசிகர்களை கவலை கொள்ளவே செய்திருக்கிறது

  ReplyDelete
 9. நானும் இந்த குரலை கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். நலமடைவார்..! நம்பிக்கை வைப்போம்..!

  -
  DREAMER

  ReplyDelete
 10. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.