என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, September 14, 2011

23 போங்கடா... நீங்களும் உங்க புடுங்கி ஆஃபரும்.............................நான் ஏர்செல் உபயோகிக்கும் வாடிக்கையாளர். அவர்களிடமிருந்து அடிக்கடி எனக்கு மெசேஜ் வரும். அது என்னன்னா...

நீங்கள் 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 50 ரூபாய் கிடைக்கும்
நீங்கள் 70 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 70 ரூபாய் கிடைக்கும்
நீங்கள் 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 100 ரூபாய் கிடைக்கும்
நீங்கள் 150 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 150 ரூபாய் கிடைக்கும்

இப்படி அடிக்கிக்கொண்டே போய்..இறுதியில் இந்த சலுகை(ஆஃபர்) உங்களுக்கு மட்டுமே.....இன்று ஒரு நாள் மட்டுமே என்று குறிப்பிட்டிருப்பார்கள்.
ஆனால், அவர்கள் நமக்கு மட்டும்தான் இந்த சலுகையை வழங்குகிறார்களா என்று பார்த்தால்....அதுதான் இல்லை. ஏர்செல்லை உபயோகிக்கும் என் அம்மாவிற்க்கும் இதை அனுப்பியிருந்தார்கள். என் மனைவி, என் தங்கைகள் என்று அனைவருக்கும் இதே மெசேஜையே அனுப்பியிருந்தார்கள். உங்களுக்கு மட்டும் தான்....உங்களுக்கு மட்டும்தான் என்ற ரீதியில் ஏர்செல்லின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அனுப்புவார்கள் போல....அதோடு விடுவார்களா என்று பார்த்தால்....அதுதான் இல்லை.

இன்று ஒரு நாள் மட்டும்தான் இந்த ஆஃபர் என்று தினமும் அனுப்புகிறார்கள். இன்று ஒரு நாள் மட்டுமே என்று எப்போது அனுப்பினாலும் அந்த நாளை மட்டுமே குறிக்கும் என்பதாலோ என்னவோ....

சரி விஷயத்திற்கு வருவோம்.

ஒரு 50 ரூபாய் பணத்தை கொடுத்து 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் அதற்கு பெயர் ஆஃபராம். சலுகையாம். ஒரு மயிரும் புரியவில்லை எனக்கு....
50 ரூபாய் கொடுத்து அதே 50 ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினால் அதற்கு பெயர் ஆஃபர் இல்லைடா வெண்ணைகளா?
50 ரூபாய் கொடுத்து 60 ரூபாய் மதிப்பிற்கு எதாவது கிடைத்தால்தான் அது ஆஃபர்.
50க்கு 50 கொடுப்பதை எதுக்குடா ஆஃபருன்னு பேரு வச்சிருக்கீங்க திருட்டு பசங்களா?

ஒரு உதாரணத்திற்கு....10 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் ரூபாய் 6.50 தான் கிடைக்கிறது. மீதியை சாப்பிட்டு விடுகிறார்கள்...சில நேரங்களில் ரூ 6 தான் கிடைக்கிறது.

நான் மலேசியாவில் குப்பை கொட்டியவன். அங்கெல்லாம் 10 ரிங்கிட்டுக்கு ரீசார்ஜ் செய்தால் அப்படியே 10 ரிங்கிட்டும் கிடைக்கும். நாம் எவ்வளவு தொகைக்கு ரீ சார்ஜ் செய்கிறோமோ அது ஒரு பைசா கூட பிடித்தமில்லாமல் கிடைக்கும்.

இடையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை போனசும் கொடுப்பார்கள். நாம் அந்த மூன்று மாதத்தில் எவ்வளவு தொகைக்கு ரீசார்ஜ் செய்திருக்கிறோம் என்று கணக்கிட்டு அந்த தொகையை நம் கணக்கில் சேர்ப்பார்கள். உதாரணமாக மூன்று மாதத்தில் 500 ரிங்கிட்டுக்கு ரீ சார்ஜ் செய்திருந்தால் 50 ரிங்கிட் போனசாக கூடுதலக கிடைக்கும். அப்படி கொடுத்தால் அதற்கு பெயர்தான் போனஸ்...ஆஃபர்...சலுகை...எல்லாம்.

நீங்கள் கொடுப்பதுபோல்   50க்கு 50 கொடுப்பதல்ல....

சரி நான் கேட்கிறேன்...50 க்கு 50 கொடுப்பதையே ஆஃபர் என்று சொல்கிறீர்களே...50 க்கு 60 கொடுத்தால் அதுக்கு என்னடா பேர் வைப்பீங்க...மெகா ஆஃபருன்னா?
போங்கடா நீங்களும், உங்க புடுங்கி ஆஃபரும்....

Post Comment

இதையும் படிக்கலாமே:


23 comments:

 1. ஆமா, இவங்க பன்ற லொள்ளு ரொம்பவே அதிகம் தான் . சரியா சொன்னீங்க.

  ReplyDelete
 2. உங்க பணத்தை திரும்ப அப்படியே கொடுக்கராங்களே. அதுதான் ஆப்பரு சாரி ஆபரு

  ReplyDelete
 3. நீங்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை.. இப்படி செய்வது மட்டுமல்லாமல் எதையாவது subscribe செய்தீர்கள் என்று அவ்வப்பொழுது பணம் வேறு எடுத்துக்கொள்வார்கள்...

  ReplyDelete
 4. அண்ணே கொஞ்சம் கோவமா பதிவு போட்டு இருக்கீங்க!!?? உங்க ஆதங்கம் புரியுது ஆனா உங்களுக்கு அவங்க குடுக்குற ஆஃபர் தான் புரியால

  உங்களுக்கு புரியிற மாதிரி சொல்லுறேன் கொவிச்சுக்காதீக

  சர்வீஸ் இண்டஸ்ட்ரி-இல நீங்க எந்த சர்வீஸ் வாங்குனாலும் சர்வீஸ் டாக்ஸ் கட்டணும் 10 .3 % குறைந்த பட்சம்...

  அநேகமா நீங்க போஸ்ட் பெய்டு சர்வீஸ் உபயோகிச்சு இருந்தா பில்லுல தனியா காட்டி இருப்பான்.

  நீங்க உபயோகிக்கிறதோ ப்ரீ பெய்ட், எப்பயுமே நீங்க 50 ரூவாய்க்கு ரிசார்ஜ் பண்ணா 5.15 காசு டாக்ஸ் கட்டணும், அப்ப உங்க டாக் டைம் 44 .85 ரூவா தானே இப்ப சொல்லுங்க உங்களுக்கு லாபம் 5 .15 இது ஆபர் தானே!!

  இந்த இழப்பை அவங்க நீங்க கால் பண்ணும் போது ரௌண்டிங்-ல எடுத்துதுவங்க 58 sec ஒரு நிமிசமா பில் பண்ணிடும் சிஸ்டம் இது ஒரு கால் பண்ணா தெரியாது ௩ நிமிசத்துக்கு மேல பண்ணா தான் தெரியும். நிறைய உள்குத்து இருக்கு அண்ணே!!

  ReplyDelete
 5. நியாயமான ஆதங்கம்தான் நண்பரே..!! என்னதான் பண்ணாலும் இவுங்க திருந்த மாட்டாங்க நாமதான் முடிஞ்ச வரைக்ம் அலர்ட்டா இருக்கனும் பாஸ்..!!

  ReplyDelete
 6. NAMATHU INDIA VIL MADDUM THAN TEX DUBAI RATE: 20Dhs CARD 26Dhs PESALAM/50Dhs-70/100-150/200-320/ithuthandda offear

  ReplyDelete
 7. ஹா...ஹா..அவங்க எப்பவுமே நம்மை கூமுட்டைன்னு தானே நினைக்கிறாங்க..

  ReplyDelete
 8. நீங்கள் சொல்வது சரி
  கோபமாகச் சொல்வது மிகச் சரி
  இவங்க லொல்லு தாங்கலைவிடவும் முடியலை
  எப்படி மிகச் சரியாக இவர்களை
  பயன்படுத்திக் கொள்வது என விவரமறிந்தவர்கள்
  பதிவு போட்டால் தேவலை த.ம 7

  ReplyDelete
 9. யப்பா, நானும் நொந்திருக்கேன் சார்!

  ReplyDelete
 10. ஏர்செல் குடும்பத்தின் கோபம் ஹி ஹி ..

  ReplyDelete
 11. இவனுங்க திருந்தவே மாட்டனுங்க பாஸ்.

  ReplyDelete
 12. மிக சரியாக சொன்னிர்கள்

  ReplyDelete
 13. @PTR

  ஆமாண்ணே, இப்படி இழந்தவை ஏராளம்.. ஏராளம்...!

  ReplyDelete
 14. அதுசரி, அவுகமேல கோவிச்சுகிடுறமாதிரி பதிவை எழுதிவிட்டு, அவிங்களோட "LOGO"வை பதித்து, விளம்பரம் வேறு செஞ்சிருக்கீங்களே தலைவா! ஒருவேளை உங்கள, அவுக தனியா "கவனிப்பாய்ங்களோ" என்னவோ...?

  ReplyDelete
 15. போட்டுத்தாக்குங்க!

  ReplyDelete
 16. //50 ரூபாய் கொடுத்து அதே 50 ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினால் அதற்கு பெயர் ஆஃபர் இல்லைடா வெண்ணைகளா? //

  நீங்கள் வாங்கும் எந்த பொருள் உங்களுக்கு அதே விலைக்கு கிடைத்திருக்கு? நீங்கள் வாங்கும் சட்டை தயாரிப்பு விலைக்குத்தான் உங்களுக்கு கிடைக்கிறதா?

  நீங்கள் வாங்கும் வாகனம் தயாரிப்பு விலைக்குத்தான் உங்களுக்கு கிடைக்கிறதா?

  அப்படி பார்க்கும்போது ஐம்பதுக்கு ஐம்பது ஆஃபர் தானே?

  ReplyDelete
 17. நியாயமான ஆதங்கம்தான் நண்பரே..!!

  ReplyDelete
 18. திருந்த மாட்டங்களே .....

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.