என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, September 17, 2011

18 கலைஞர் வழியில் ஜெயலலிதா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

(ஹா..ஹா..ஹா..எப்படி அடிச்சேன் ஆப்பு...)


மாற்றம் ஒன்றுதான் இந்த உலகத்தில் மாறாதது என்பார்கள். ஆனால், அந்த மாற்றம் கூட ஒரு நாள் மாறிவிடும். மாறவே மாறாத பெருமை எனக்கு மட்டும்தான் என்று இந்த உலகிற்கு பறைசாற்றி உள்ளார் தைரியலட்சுமி ஜெயலலிதா.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் கூட்டணி என்பது சட்டமன்றத்தேர்தலுக்கும், நாடாளுமன்றத்தேர்தலுக்கும் மட்டும்தான், உள்ளாட்சி தேர்தலுக்கில்லை என்று சொல்லி காங்கிரஸை கழட்டி விட்டார் கலைஞர். இப்போது ஜெயலலிதாவும் கலைஞரை பின்பற்றி கூட்டணி கட்சிகளுக்கு ஆப்படித்துள்ளார்.

ஆம்....தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிக்கும் தன்னிச்சையாக மேயர் வேட்பாளர்களை அறிவித்து கூட்டணியினருக்கு குறிப்பாக விஜயகாந்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார் ஜெ. இப்படி கூட்டணி கட்சியினரை அவமதிப்பதும், அசிங்கப்படுத்துவதும் ஜெ.,க்கு ஒன்றும் புதிதல்ல...அப்படி செய்வது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல....

கடந்த சட்டமன்றத்தேர்தலின் போதே கூட்டணி கட்சிகளை ஆலோசிக்காமலேயே வேட்பாளர்களை அறிவித்தார் ஜெ., இதனால் கடுப்பான கூட்டணி கட்சிகள் விஜயகாந்த் தலைமையில் ஒன்றுகூடி ஜெயாவுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதனை தன் ஆளுமைக்கு கிடைத்த அவமானமாக கருதிய ஜெ., அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தான் முதல்வராக வேண்டும் என்ற நிர்பந்தத்தால் கொஞ்சம் இறங்கி வந்தார். (கவனிக்க...பணிந்தோ, பயந்தோ அல்ல கொஞ்சம் இறங்கி வந்தார் அவ்வளவுதான்).
கூட்டணி கட்சியினர் கேட்ட தொகுதிகளை ஒதுக்கினார். ஆனால், அப்போதே முடிவு செய்திருப்பார் போல...இவர்களை பழிவாங்க வேண்டுமென்று...இப்போது 10 மாநகராட்சிகளுக்கும் மேயர் வேட்பாளர்களை அறிவித்ததன் மூலம் பழி தீர்த்து கொண்டுள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலைப்போல இந்தமுறை  இறங்கிவருவாரா என்றால் சந்தேகமே..கடந்த சட்டமன்றத்தேர்தலின் போதாவது தான் முதல்வராக வேண்டுமென்ற நிர்பந்தம் இருந்தது ஜெயாவிற்கு...அதன் பிறகு  அசுர பலத்துடன் ஆட்சிக்கு வந்திருக்கும் அவருக்கு அப்படி இறங்கி வருமளவிற்கு எந்த நிர்பந்தமும் இப்போது இருப்பதாக தெரியவில்லை. அதனால் இறங்கி வரும் சாத்தியகூறுகள் குறைவாகவே இருப்பதாக தோன்றுகிறது.

இப்படி தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்ததன்மூலம் அதிகம் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பது விஜயகாந்தாகத்தான் இருக்கக்கூடும். பாவம் அவர்தான் இந்த உள்ளாட்சித்தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு ஜெயா அரசை விமர்சனம் செய்யாமல் குழந்தை இப்போதுதானே பிறந்துள்ளது. குழந்தை நடக்க ஆரம்பிக்கட்டும். பார்க்கலாம்.
அதுவரை பொறுத்திருப்போம் என்றும், இன்னும் ஆறு மாதம் கழிக்கட்டும் அப்போது பார்க்கலாம் என்றெல்லாம் சப்பை கட்டு கட்டிவந்தார்.இப்போது நம்பவைத்து கழுத்தறுக்க பட்டிருக்கிறார். அரசியலில் ஜெயாவை விட சீனியரான வைகோவையே கழுத்தறுத்த ஜெயாவிற்க்கு விஜயகாந்தை கழுத்தறுப்பது அவ்வளவு கஸ்டமானதாக இருக்கவில்லை. ஜெயாவிற்கு விஜயகாந்தெல்லாம் ஜுஜுபி.

( ரெண்டுல ஒண்ணு பார்த்திட வேண்டியதுதான்)

இது விஜயகாந்திற்கு ஒருவகையில் நல்லதுதான். இதே கூட்டணியில் அவர் நீடித்திருந்தால், வரும் நாடாளுமன்றத்தேர்தலில் 5 அல்லது 6 சீட்களையும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் 40 அல்லது 45 சீட் வாங்கிக்கொண்டு ஜெயாவை முன்னிறுத்தி அவர் முதல்வராக பாடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். இந்த கூட்டணியை விட்டு விலகினால், மீதமிருக்கும் நாலரை வருட கால இடைவெளியில் தன் கட்சியை இன்னும் அதிகமாக வளர்த்து, தானும் முதல்வர் வேட்பாளராக மாறி ஜெயாவுக்கு தலைவலியை கொடுக்கலாம்.

இனி, சட்டசபையிலிருந்து வெளி நடப்பு செய்வதற்கும், ஜெயாவின் அராஜகம் ஒழிக என்று கோஷமிடுவதற்கும் தி.மு.க.,எம்.எல்.ஏ-க்களுக்கு  துணையாக நிறைய எம்.எல்.ஏ.,க்கள் கிடைப்பார்கள். குழந்தை நடக்கட்டும் என்று காத்திருந்த விஜயகாந்த் குழந்தை நடக்கும் முன்பே அறிக்கைப்போர் தொடுக்கலாம். தமிழ்நாட்டு அரசியலில் இனி சீரியசிற்கும், காமெடிக்கும் பஞ்சமிருக்காது.


Post Comment

இதையும் படிக்கலாமே:


18 comments:

 1. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
  எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது .
  எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் .
  நல்ல அலசல் இந்த அரசியல் பதிவு

  ReplyDelete
 2. பனித்துளி சங்கர் சொன்னதை
  நான் வழி மொழிகிறேன்
  நண்றி!நண்ப!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 3. ஆறு மாசதுக்கப்பறம் குழந்தை நடக்க்ட்டும்ன்னு சொல்லுவாங்களோ?

  ReplyDelete
 4. நண்பரே தம நண்பர்கள் யாரோ இணைத்து விட்டிருக்கிறார்கள்..

  ReplyDelete
 5. சீனியரான வைகோவையே கழுத்தறுத்த ஜெயாவிற்க்கு விஜயகாந்தை கழுத்தறுப்பது அவ்வளவு கஸ்டமானதாக இருக்கவில்லை. ஜெயாவிற்கு விஜயகாந்தெல்லாம் ஜுஜுபி.

  ReplyDelete
 6. ம்ம்ம்...ரைட்டு!

  ReplyDelete
 7. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

  ReplyDelete
 8. தமிழ்நாட்டு அரசியலில் இனி காமெடிக்கும் பஞ்சமிருக்காது.

  ReplyDelete
 9. //குழந்தை நடக்கட்டும் என்று காத்திருந்த விஜயகாந்த் குழந்தை நடக்கும் முன்பே அறிக்கைப்போர் தொடுக்கலாம். தமிழ்நாட்டு அரசியலில் இனி சீரியசிற்கும், காமெடிக்கும் பஞ்சமிருக்காது.
  //
  உண்மைதான்

  ReplyDelete
 10. அரசியலில் எல்லாமே நடக்கும். எல்லாவற்றுக்கும் தயாராகத்தானே கூட்டணிக்கு சம்மதிச்சிருக்காங்க.

  ReplyDelete
 11. அரசியல் என்ன சினிமாவா?வீர வசனம் பேசி நினைச்சதை வென்றேடுக்க? பண்ருட்டி என்ன ஆலோசனை சொல்லப்போறாரோ,என்ன கூத்து ந்டக்க போகுதோ,பார்ப்போம் இனியும் விசயகாந்து பம்முவாரா என்று.

  ReplyDelete
 12. விஜயகாந்தின் பலத்தையும் சோதித்துப் பார்த்து விட ஜெயா எண்ணியிருக்கலாமோ?(டவுட்டு)

  ReplyDelete
 13. //அரசியலில் ஜெயாவை விட சீனியரான வைகோவையே கழுத்தறுத்த ஜெயாவிற்க்கு விஜயகாந்தை கழுத்தறுப்பது அவ்வளவு கஸ்டமானதாக இருக்கவில்லை. ஜெயாவிற்கு விஜயகாந்தெல்லாம் ஜுஜுபி.//

  உண்மையை நச்சுன்னு சொன்னீங்க..அப்போ இனிமே நல்ல, நல்ல காமெடி சீன்ஸ் வரும்னு சொல்றீங்க..குட்.

  ReplyDelete
 14. செம அலசல். மேடம்னாலே அதிரடிதான!

  ReplyDelete
 15. (ஹா..ஹா..ஹா..எப்படி அடிச்சேன் ஆப்பு...) PRABHAKARAN.N PH.D.MANGT. MA.PUBLIC ADMIN M.COM PGD OFFICE MANGT PGD PUBLIC RELATION DCA AND BJP AIDMK

  ReplyDelete
 16. (ஹா..ஹா..ஹா..எப்படி அடிச்சேன் ஆப்பு...) PRABHAKARAN.N PH.D.MANGT. MA.PUBLIC ADMIN M.COM PGD OFFICE MANGT PGD PUBLIC RELATION DCA AND BJP AIDMK

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.