என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, September 07, 2011

20 எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதன் பின்னணி- இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....


எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டதற்கு உண்மையான காரணம் என்ன? என்ற ஒரு வாசகரின் கேள்விக்கு,
இது இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்கிறது ஜூனியர் விகடனில் வெளிவரும் கழுகார் பதில்கள்.
 மேலும், இப்படி சொல்கிறது.......
ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்த எம்.ஆர்.ராதா மலேசியாவில் பேசிய பேச்சைக் கேளுங்கள்...


'எம்.ஜி.ராமச்சந்திரனும் நானும் நண்பர்கள். அம்பது வருஷமா சிநேகிதம். ரெண்டு பேரும் தமாஷா சுட்டுக்கிட்டோம். ஏன் சுட்டுக்கக் கூடாதா? பொண்டாட்டியும் புருஷனும் அடிச்சுக்கலையா? அப்பனும் மவனும் வெட்டிக்கலையா? அதே மாதிரி ரெண்டு நண்பர்கள் அடிச்சிக்கிட்டோம். அவ்வளவுதான். கையில் கம்பிருந்தா கம்பை எடுத்து அடிச்சிக்குவோம். கத்தி இருந்தா, கத்தி எடுத்து அடிச்சிக்குவோம். ரிவால்வர் இருந்துச்சு... அந்த நேரத்துல. எடுத்து அடிச்சிக்கிட்டோம். அடிச்சதும் 'டப்பு... டப்பு’ன்னது. நிறுத்திப்புட்டோம்.

அதுல என்ன ஒருத்தரை ஒருத்தர் கொன்னு போடணும்னா சுட்டுக்கிட்டோம்? ரிவால்வரில் எட்டு தோட்டா இருக்கு. அப்படி விரோதமா இருந்தா, எட்டு தோட்டாவையும் பயன்படுத்தி இருப்போம். ஒரு தோட்டாதான் ஆச்சு. வெடிக்குதா வெடிக்கலையானு பார்த்தோம். அது வெடிச்சிருச்சு. இதெல்லாம் புரியாம ரொம்பப் பேர் தவறாப் பேசுறாங்க!’ என்பதாக கழுகார் பதில் சொல்கிறது.ஆனால், உண்மையான காரணமாக அப்போது பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் கீழே....

எம்.ஜி.ஆர், நடித்த பெற்றால்தான் பிள்ளையா என்ற திரைப்படத்தை வாசு என்பவர் தயாரித்திருந்தார். அந்த படம் தயாரிப்பதற்க்கு எம்.ஆர்.ராதா ஒரு லட்சரூபாய் பண உதவி செய்திருந்தாராம். படம் முடிந்ததும் அந்த பணத்தை வாசுவிடமிருந்து வாங்கித்தருவதாக எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதாவிடம் வாக்களித்திருந்தார். அந்தப்பணம் விஷயமாக பேச தயாரிப்பாளர் வாசுவுடன் 1967-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு சென்றார் எம்.ஆர்.ராதா.

அப்போது ஏற்பட்ட தகராறு காரணமாக எம்.ஜி.ஆரை தன்மடியில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார் எம்.ஆர்.ராதா., நொடியில் எம்.ஜி.ஆர்., குனிந்ததால் அவரின் இடது காதையொட்டி கன்னத்தில் பாய்ந்தது குண்டு.

உடனே தன் தலையில் வைத்து எம்.ஆர்.ராதா சுட்டு தற்கொலைக்கு முயல...அது அவரின் நெற்றியில் பாய்ந்தது.

உடனே எம்.ஜி.ஆரை ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் பொது மருத்துவமனியில் சேர்த்தார்கள். அப்போதும் எம்.ஜி.ஆர். , ராதா அண்ணனை காப்பாற்றுங்கள் என்றாராம்.

எம்.ஆர்.ராதாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் நெற்றியில் பாய்ந்த தோட்டா அகற்றப்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆரின் கழுத்தில் பாய்ந்த குண்டு மூன்று முக்கிய நரம்புகளுக்கு நடுவே பாய்ந்திருந்ததால், அதை அகற்றினால் நரம்புகளுக்கு சேதம் ஏற்பட்டு அவரின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்பதால் அந்த குண்டை அகற்றாமல் உள்ளேயே வைத்து தையல் போடப்பட்டது. 


Post Comment

இதையும் படிக்கலாமே:


20 comments:

 1. ???????? ???????? ?????[/ma]

  ReplyDelete
 2. எம்.ஜி.ஆர் கழுத்தில் பாய்ந்த துப்பாக்கி குண்டு, பின்னர் ஒரு நாள் அவர் வாந்தி எடுத்தபோது வெளியே வந்து விழுந்ததாக சொல்கிறார்கள். ஆனால் ஒன்று, எம். ஆர். ராதா போல ஒரு தைரியசாலி இன்றைய தேதி வரை யாரும் இல்லை என்பதே உண்மை.

  ReplyDelete
 3. சுட்டாச்சு சுட்டாச்சு என்ற சுதாங்கன் புத்தகத்தை வாசித்து தலை சுற்றியதுதான் உண்மை.

  மகா பொறுமைசாலியான என்னை சுட்டுப் போட்டுட்டார் புத்தகத்தைப் பரிசாகக்கொடுத்த பதிவுலக நண்பர்:-)

  ReplyDelete
 4. ரெண்டு பேரும் தமாஷா சுட்டுக்கிட்டோம்

  ReplyDelete
 5. தலைப்பே பயங்கரமா இருக்கே...விளக்கம் சொல்லியாச்சா?..ஹி..ஹி..

  ReplyDelete
 6. இதுல அந்த அம்மணிக்கு சம்பந்தம் இல்லையா?

  ReplyDelete
 7. ஐயா, பின்னூட்டத்துல ஒவ்வொரு கமெண்ட்டிற்கும் நன்றி வருதே..அது தேவையா? லோடு ஆக லேட் ஆகுது கஸாலி.

  ReplyDelete
 8. நண்பரே நான் ஒரு புத்தகத்தில் படித்தது.

  எம் ஆர் ராதா, கழகத்தில் இருந்தாலும், காமராஜர் மீது அளவற்ற பற்று உடையவர். எம்‌ஜி‌ஆர் காமராஜரை கொள்ள திட்டமிடுகிறார் என்ற செய்தியை யாரோ அவர் காதில் போட, அவரை அந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்க தொடங்கியது. ஒரு நாள் அது உச்ச கட்டத்தை அடைய எம்‌ஜி‌ஆர்ஐ பார்க்க செல்லும்போது துப்பாக்கி எடுத்து சென்றதும், பிறகு சுட்டதும் என்று... இது உண்மையாக இருக்குமோ?

  ReplyDelete
 9. இது ஜூ.வி-யில் சுட்டதல்ல.....//

  என்ன இது புதுசா பஞ்ச்லைன் எல்லாம்

  ReplyDelete
 10. அந்தக் காலத்தில் நான் அறிந்து தான்!அப்போது என் வயது பன்னிரண்டு.உண்மை அது தான்.பணக் கொடுக்கல்,வாங்கல் பேச்சு வார்த்தை தடித்து,சுடப்பட்டார்,பொன்மனச் செம்மல்!

  ReplyDelete
 11. இது ஜூ.வி-யில் சுட்டதல்ல....

  யாருக்கோ சொல்றீங்களோ...

  ReplyDelete
 12. இன்னும்இதற்குப் பின்னால் உள்ள விசயங்கள் உண்டு.

  ReplyDelete
 13. Malarum Ninaivukal Nandri.

  ReplyDelete
 14. //இது இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்//

  இது சி.பி போட்ட பதிவுக்கு நான் சொன்னது:)

  ReplyDelete
 15. Ma/Ungal pathivu Nandraaga erunthathu nanbare. Nandrigal pala Anbare/ma

  ReplyDelete
 16. நல்ல பழைய தகவல்

  Without Investment Data Entry Jobs !

  FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

  ReplyDelete
 17. நீங்கள் கூறிய காரணம் எதுவும் சரியானதல்ல. தனிநபர் ஒழுக்கத்தில் திராவிடக்கட்சித்தலைவர்கள் மிக மோசம். அவர்களுக்குள் தகராறு அந்த விஷயத்தில்தான்.

  ReplyDelete
 18. நடிகவேள் செய்தது ரெண்டு தப்பு, முதல் தப்பு சுட்டது,ரெண்டாவது தப்பு சரியா சுடாதது.

  ReplyDelete
 19. [@]c4421869877271794180[/@]
  [ma] எம்.ஆர் ராதாரா சிறைத் தந்தனை முடிந்து வெளியில் வந்ததும் தினசரிகளில் தான் ஒரு படம் எடுக்கப் போவதாக முழுப் பக்க விளம்பரம் கொடுத்தார். அதன் தலைப்பு: மீண்டும் சுடுவேன். [/ma]

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.