என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, September 10, 2011

17 பதிவர்கள் கவனத்திற்கு....


இப்பொதெல்லாம் நிறைய பதிவுகளுக்கு நான் போவதில்லை  என்ற கோபம் சில பதிவர்களுக்கு இருக்கலாம்.  நான் அதிக பதிவிற்கு செல்லாததற்கு  காரணம், என் இண்டர்னெட் கனக்சனை கட் செய்து விட்டேன். முன்பு அன்லிமிட்டெட் பேக்கேஜ் வைத்திருந்ததால் எந்த நேரமும் கம்யூட்டன் முன்பே கதியாக கிடந்து, வாக்கிடவும், பின்னூட்டமிடவும் முடிந்தது. இப்போது அப்படி இல்லை.  நான் பதிவு போடுவதாக இருந்தாலே ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ எதாவது ஒரு நெட் செண்டரிலோ, அல்லது என் நண்பர்களின் இல்லங்களிலிருந்துதான் பதிவிடுகிறேன்.

அந்த நேரத்தில் எல்லாப்பதிவுகளுக்குமே செல்வதற்கு  சாத்தியமில்லை.  அதே நேரம் என் செல்போனில் GPRS-மூலம் சில தளங்களுக்கு செல்வதுண்டு...தமிழில் கமெண்ட் போட முடியாத காரணத்தால் தமிழ்மணத்திலும், மற்ற திரட்டிகளிலும் வாக்குகள் மட்டும் அளிப்பதுண்டு.

ஆனால், சில பதிவர்கள் தன் வலைத்தளத்தில்  மொபல் டெம்ப்ளேட் ஆன் செய்து வைத்திருப்பார்கள் போல....அப்படி வைத்திருப்பவர்களின் வலைத்தளத்தை படிக்க முடிகிறது. ஆனால், தமிழ்மணத்தில் வாக்கிட முடியவில்லை.எப்போது பார்த்தாலும் SUBMIT IN TAMIL MANAM என்றே வருகிறது. மொபைல் டெம்ப்லேட்டை ஆன் செய்து வைத்திருப்பவர்களின் தளத்தில் மட்டும்தான் இப்படி வருகிறது. அப்படி மொபைல் டெம்ப்ளேட்டை ஆனில் வைத்திருப்பவர்கள் தயவு செய்து அதை மாற்றிவிடுங்கள். அப்போதுதான் என்னைப்போல் செல்போனில் படிப்பவர்கள் தங்களின் பதிவிற்கு  வாக்கிட முடியும்.


அப்படி மாற்றுவதற்கான செய்முறை....

உங்களின் BLOGGER ACCOUNT  போய் SIGN IN செய்துகொள்ளவும். பின் DASHBOARD போய் SETTING- கை அழுத்தவும்.


அதன்பின் வரும் Email& Mobile கிளிக்செய்து கொள்ளவும்.அதில் வரும் show mobile template- இல் No. Show desktop template on mobile devices- என்று வருவதை ஓகே செய்துவிட்டு save setting கொடுத்து விடவும்.அவ்வளவுதான். இனி எல்லோருடைய மொபைலிலிருந்தும் வாக்கிடலாம்.Post Comment

இதையும் படிக்கலாமே:


17 comments:

 1. அதெல்லாம் இன்றும் இல்லை..

  எந்த திரட்டியுமே இணைக்கலையே?

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி சார்

  ReplyDelete
 3. மாமா போட்டா என்ன வித்தியாசம் வரும்?

  ReplyDelete
 4. நல்ல தகவல் இது புரியாமல் நானும் பலருக்கு ஓட்டுப் போடமுடியவில்லை திருதிக்கொள்கின்றேன்! நன்றி தகவலுக்கு!

  ReplyDelete
 5. நல்ல யோசனைதான் அனைவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 6. நல்லதகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 7. இது தான் காரணமா? ரைட்டு...

  ReplyDelete
 8. முடிஞ்சா கமெண்ட் போடுங்க, இல்லேன்னா பரவாயில்லை..நம்ம மக்கள் ஒன்னும் நினைச்சுக்க மாட்டாங்க.

  நானும் என் டெம்ப்ளேட்டை செக் பண்றேன்.

  ReplyDelete
 9. அரசியல் சம்பந்தப்பட்ட உங்களின் கேள்விக்கான பதில்கள் சொல்ல ஒரு புதிய தளம் ஆரம்பித்துள்ளோம். இன்றைய ஸ்பெஷல்:@இந்திராகாந்தி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், வைகோ, காந்தி, ராஜாஜி(அதிரடி அரசியல் கேள்வி பதில்கள் ஆரம்பம்)ஒருமுறை வாருங்களேன் பிளீஸ்..

  ReplyDelete
 10. அருமையான
  பதிவு ....
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. சூப்பர் எனக்கு உங்கள் கருத்துக்கள் மிகவும் பிடிக்கும். உங்கள் பயணத்தை இனிதே தொடருங்கள் ....

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.