என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, September 03, 2011

12 இதை கொஞ்சம் கவனமா படிங்க.....இரண்டு கலர் போட்டோ இருபது ரூபாய் என்ற போர்டுடன் வரவேற்றது அந்த பொருட்காட்சியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட போட்டோ ஸ்டூடியோ...வாசலில் எம்.ஜி.ஆர், சிவாஜியிலிருந்து ரஜினி,கமல், அஜீத் வரை வரவேற்றார்கள் புகைப்படமாய்.....
சிவாவும், சங்கரும் உள்ளே நுழைந்தார்கள்.
”வாங்க தம்பி...வாங்க...எந்த மாதிரி போட்டோ வேனும்? பாஸ்போர்ட் சைஸா? மேக்சியா....எதுவானாலும் அரைமணி நேரத்தில தந்துடுவோம்”
”அண்ணே....ரெண்டு கலர் போட்டோ இருபது ரூபான்னு போட்டிருக்கீங்களே? நிஜமாவா?”
”என்ன தம்பி இப்படி கேட்டுட்டீங்க.....கொடுக்கமுடியாட்டி போட மாட்டோம்ல...”
”அப்படின்னா எங்க ரெண்டுபேரையும் சேர்த்து போட்டோ எடுத்துடுங்க”....

போட்டோ எடுக்கப்பட்டது. இருபது ரூபாய் கொடுத்து ரசீது வாங்கியபடி....
”அண்ணே....எப்ப ரெடியாகும்?”

”இன்னும் அரைமணி நேரம் கழிச்சு வந்து வாங்கிக்கங்க”


அரை மணி நேரத்திற்கு பிறகு.....

”அண்ணே போட்டோ ரெடியாகிடுச்சா?”
”ஆயிருச்சு தம்பி..போட்டோ சூப்பரா இருக்கு...உங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போது அந்த காலத்துல எம்.ஜி.ஆரும், கலைஞரும் இருக்க மாதிரி இருக்கு”
”அப்படியா கொடுங்க பார்ப்போம்”....
அவர்களிடம் போட்டோ அடங்கிய கவர் கொடுக்கப்பட்டது. வாங்கிப்பார்த்த இருவரும் அதிர்ந்தார்கள்.

”என்னண்ணே....ரெண்டு கலர் போட்டோன்னு சொல்லிட்டு ஒரேயொரு பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவை தாறீங்க?”
”ஆமாம் தம்பி... நீங்க கொடுத்த இருபது ரூபாய்க்கு இதுதான் தம்பி வரும்.”
”நீங்க எங்களை ஏமாத்தப்பாக்கறீங்க....வாசல்ல என்ன எழுதி வச்சிருக்கீங்க....ரெண்டு கலர் போட்டோ இருபது ரூபாய்ன்னு எழுதிவச்சிட்டு இப்ப மாத்தி பேசறீங்க”
”யாரையும் ஏமாத்தல...இதை கொஞ்சம் கவனமா படிங்க....ரெண்டு கலர் போட்டோ இருபது ரூபாய்....அதாவது ரெண்டு கலர் போட்டோன்னா கருப்பு ஒரு கலரு....அப்புறம் வெள்ளை ஒரு கலரு...இப்ப கருப்பும் வெள்ளையும் சேர்த்து ரெண்டு கலராச்சா? அதான் ரெண்டு கலர் போட்டோ...இப்ப புரியுதா? நான் யாரையும் ஏமாத்தல...எழுதியிருக்கபடிதான் தந்திருக்கேன்.”


Post Comment

இதையும் படிக்கலாமே:


12 comments:

 1. அட..நன்னாரி பயபுள்ள.இப்டி ஏமாத்திப்புட்டானே..?!பாத்து சூதானமா இருங்கப்பு. :)

  ReplyDelete
 2. உள் குத்து`ங்குரது இதுதானா???

  ReplyDelete
 3. அவன் சரியாதானே சொல்லிருக்கான் ???

  ReplyDelete
 4. நல்லாத்தன் யோசிச்சி எழுதுராங்கப்பா கதையை....


  அசத்தல்...

  ReplyDelete
 5. ஸ்டுடியோ காரன் சரியாத்தான் சொல்லிருக்கான் ?

  ReplyDelete
 6. அடப் பாவிங்களா!எப்புடில்லாம் ஏமாத்துறாங்க?

  ReplyDelete
 7. [ma]ரெண்டு கலரு சிங்கிச்சா, கருப்பு கலரு சிங்சிச்சா, வெள்ளை கலரு சிங்கிச்சா.. ஆமா, வெள்ளை ஒரு கலரா? [/ma]

  ReplyDelete
 8. ma, ma சேத்தேன்.. ஒரு வித்தியாசத்தையும் காணலையே காஸாலி..!!

  ReplyDelete
 9. இதுக்கு தான் முதல்லையே ஸ்மைல் ப்ளீஸ் ன்னு சொல்றாங்களோ...

  ReplyDelete
 10. அருமை
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

  ReplyDelete
 11. (என்னை பார்த்து நானே சொல்லுகிறேன்... ) டேய் உனக்கு தேவையா .... டேய் உனக்கு தேவையா .... டேய் உனக்கு தேவையா .... டேய் உனக்கு தேவையா .... போ போ... உனக்கு இதுவும் வேணும் ... இன்னுமும் வேணும்....(எல்லாமும் எனக்கு நானே சொல்லிகிட்டேன் ) ......

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.