என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, September 05, 2011

14 என் சந்தேகத்தை தீர்க்க யாராவது இருக்கீங்களா?

பதிவுலகை கலக்கிக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள் கருண், சவுந்தர், பாலா ஆகியோருக்கும் மற்ற நண்பர்களுக்கும் என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள். 


அய்யா எனக்கு சில சந்தேகங்க....தீர்த்து வையுங்களேன்....

1) சினிமாவில் ஹீரோ கடுமையாக தாக்கப்பட்டு விழுந்து கிடக்கும் போது இடியுடன் கூடிய மழையோ, புயலோ வருவது ஏன்?

2) சினிமாவில் ஒரு கதாபாத்திரம் தீயில் விழுந்து உடல் முழுவதும் கருகிய பின்னும் தலை முடி மட்டும் அப்படியே இருக்கிறதே அது எப்படி?

3) உயிரை உசுரு என்றும், மயிரை மசுரு என்றும் சொல்லலாம். ஆனால், தயிரை தசுரு என்றோ, கயிறை கசுரு என்றோ, அல்லது கொசுறை கொயிறு என்றோ சொல்ல முடியவில்லையே அது ஏன்?


Post Comment

இதையும் படிக்கலாமே:


14 comments:

 1. எங்களுக்கு வாழ்த்து சொன்னதற்க்கு மிக்க நன்றி தல...

  ReplyDelete
 2. முதல் இரண்டு கேள்விகளுக்கு பதில்...

  அது தமிழ்சினிமாவின் எழுதப்பட்ட சட்டம் அது மாற்றினால் தமிழ் சினிமா என்று தெரியாமல் போய்விடும்...

  நல்லா வந்திருக்குப்பா சந்தேகம்...

  ReplyDelete
 3. // # கவிதை வீதி # சௌந்தர் said... 2
  முதல் இரண்டு கேள்விகளுக்கு பதில்...

  அது தமிழ்சினிமாவின் எழுதப்பட்ட சட்டம் அது மாற்றினால் தமிழ் சினிமா என்று தெரியாமல் போய்விடும்...//

  இதை நான் வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 4. அந்த மூணு பதிவர்களும் ஆசிரியர்களா? வாழ்த்துக்கள் சார்!

  ReplyDelete
 5. அப்புறம் உங்க மூணு கேள்விக்கும் பதில்...... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! சத்தியமா எனக்குத் தெரியாதுங்க!

  ReplyDelete
 6. நல்ல சந்தேகங்கள் தான்..

  ReplyDelete
 7. இப்படியும் வருது பாரு சந்தேகம்!
  மூவருக்கும் மற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 8. 1. அந்த சத்தத்தை கேட்டாவது பயந்து தியேட்டரை விட்டு ஓடுங்கள் என்று சொல்கிறார்கள்.

  2. எந்தப்படம்னு சொல்லுங்க..

  3. கயிறை கசுருன்னும், தயிராய் தசுருன்னு யார் வேணும்னாலும் சொல்லலாம். அப்படி சொல்லதாவங்க யார்னா இருந்தா சொல்லுங்க. சொல்ல வைப்போம்.

  ReplyDelete
 9. நல்லா கேள்வி கேட்டிருக்கீங்கப்பு!!!!!!

  ReplyDelete
 10. என்னை தனியாக பெயரிட்டு வாழ்த்தியதற்கு நன்றி நண்பரே...

  என்னோட சந்தேக வியாதி உங்களையும் தொற்றிக்கொண்டு விட்டதா?

  கடைசி சந்தேகம் கேட்டதற்கே உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்...

  ReplyDelete
 11. இப்படில்லாமா சந்தேகம் வரும்.?

  ReplyDelete
 12. இன்னா தல இப்புடி சொல்லிப்புட்டேள். நோக்குத் தெரியுமோண்ணோ. தமிழ்கார ஆளுவ வூடு கட்டி அடிக்கப்போறாக. தமிழ கொல பண்றேளாக்கும்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.