என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, September 24, 2011

15 தனித்துப்போட்டி...ஜெயிக்கப்போவது யாரு?-ஒரு பரபர அலசல்....உள்ளாட்சி தேர்தலுக்கான களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தனது கூட்டணியிலிருந்து காங்கிரஸை வெளியேற்றிய சூடு ஆறும் முன் அண்ணா.தி.மு.கவும் தன் கூட்டணி கட்சிகளை வெளியேற்றியுள்ளது. கலைஞராவது தனித்துப்போட்டி என்று அறிவித்தார். ஆனால், எதையுமே அதிரடியாக செய்து பழக்கப்பட்ட ஜெ., எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்காமலேயே தன் கட்சிக்கு வேட்பாளர்களை அறிவித்ததன் மூலம் கூட்டணியினரை வெளியேற்றியுள்ளார்.போன சட்டசபை தேர்தல்போல இதுவும் ஒரு அழுகுனி ஆட்டமாக இருக்கும் என்று நம்பி காத்திருந்த கம்யூனிஸ்ட்கள், நிஜமாகவே ஜெயலலிதாவின் பிடிவாதத்தை பார்த்து ஏமாந்துபோய் கடைசியில் சீ...சீ...இந்தப்பழம் புளிக்கும் என்று வெளியேறிவிட்டனர்.

தே.மு.தி.க.,வும் காத்திருந்தது. ஆனால், காம்ரேட்கள் போல ஜெயலலிதாவிடம் பேச்சு வார்த்தையில் இறங்கவில்லை என்பது ஒரு ஆறுதலான விஷயம். கடைசியில் விஜயகாந்தும் வேட்பாளர்களை அறிவித்து மீசையில் மண் ஒட்டாமல் பார்த்துக்கொண்டார்.

தி.மு.க., அண்ணா.தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், பா.ம.க., வி.சி., பா.ஜ.க., என்று தமிழகத்தில் இருக்கும் அத்தனை கட்சிகளுமே தனியாக போட்டியிடுகின்றன. பார்க்க ஏழு முனை போட்டி, எட்டு முனை போட்டி என்பதுபோல தெரிந்தாலும், உன்மையான போட்டி தி.மு.க., அண்ணா.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க.,வினரிடையே மட்டும்தான். மற்ற கட்சிகள் என்பது லட்டர்பேட் கட்சிகளை போல்தான்.

இந்த உள்ளாட்சி தேர்தலுக்கு தனிப்பட்ட செல்வாக்குகள் தான் வெற்றிக்கான காரணமாய் இருக்குமே தவிர...கூட்டணி அல்ல...அதேநேரம் மாநகராட்சி மேயர், மாவட்ட சேர்மன் போன்ற பதவிகளை கட்சி வாக்கும், கூட்டணி வாக்கும் தான் தீர்மானிக்கப்போகிறது. அனைத்து கட்சிகளும் தனித்து நிற்கும் வேளையில் வெற்றிவாய்ப்பு எப்படி என்று சுருக்கமாக அலசலாம்.....

கடந்த சட்டமன்றத்தேர்தலில் ஆட்சியை ஜெயலலிதாவிடமும், எதிர்க்கட்சி அந்தஸ்தை விஜயகாந்திடமும் இழந்து, இருந்த கொஞ்சப்பேரையும் சிறைக்கு அனுப்பிவைத்துவிட்டு வாழ்வா சாவா என்ற நிலையில் இந்த தேர்தலை சந்திக்கிறது தி.மு.க. அனைத்து கட்சிகளும் தனித்து நிற்கும் நிலையில் அது,தி.மு.க.,விற்கு ஓரளவு வெற்றியை ஈட்டித்தரலாம். ஏனென்றால்...தமிழ் நாட்டில் வலுவாக காலூன்றியுள்ள கட்சிகளில் தி.மு.க.,விற்கு வலுவான இடம் உண்டு.

தி.மு.க.,வை போலவே அண்ணா.தி.மு.க.,வும் வலுவான கட்சிதான். அதேநேரம் கடந்த முறையைப்போல அத்தனையையும் மொத்தமாக அள்ள முடியாது. காரணம், ஜெயலலிதாவின் தவறான கூட்டணி அனுகுமுறைதான். இருந்த கட்சிகளை எல்லாம் விரட்டிவிட்டு அதிகாரத்தை தனியாக சுவைக்கலாம் என்று ஜெ.,போட்டிருக்கும் கணக்கு சரியா தப்பா என்று போகப்போக தெரியும்.

தி.மு.க.,அண்ணா.தி.மு.க.,போல வலுவான கட்சியாக ம.தி.மு.க.,இல்லை என்றாலும், தமிழகம் முழுவதும் பரவலாக தொண்டர்களை வைத்திருக்கும் கட்சி. இன்றைய அரசியல்வாதிகளிடையே வைகோ-விற்கு இருக்கும் கிளீன் இமேஜே இந்த கட்சியை கொஞ்சம் கரையேற்றிவிடும்.
கடந்த தேர்தலில் ஜெயாவிடம் ஏமாந்து போட்டியிடாததால் இவருக்கு கிடைத்த அனுதாபமும், தமிழீழ உணர்வாளர்களும் இவருக்கு வாக்களிக்க கூடும். மொத்தத்தில் ம.தி.மு.க.,வும் கணிசமான இடங்களை பிடிக்கலாம்.

தே.மு.தி.க.... அண்ணா.தி.மு.க., விற்கு அடுத்த நிலையில் இருக்கும் பிரதான எதிர்கட்சி. ஆனால், தன் பொறுப்பை உணர்ந்து இதுவரை விஜயகாந்த் செயல்பட்டதாகவே தெரியவில்லை. கூட்டணி பலத்தால் எப்படியாவது ஓரிரு மாநகராட்சிகளை கைப்பற்றி விடலாம் என்று நினைத்திருந்தவருக்கு பெரிய ஆப்பு கிடைத்திருக்கிறது. நேற்றுவரை கூட்டணி மன நிலையில் இருந்த அவரது தொண்டர்கள் இதனால், சோர்ந்து போயிருக்கின்றனர். கடந்த உள்ளாட்சி தேர்தலைப்போல இந்த முறையும் சில இடங்களை பிடிக்கலாம். ஆனால், மேயர் என்பதெல்லாம் டூமச் என்பதே என் கருத்து.

மண் குதிரை காங்கிரஸ் இந்த தேர்தல் ரேசில் ஓடுவதுதான் பெரிய காமெடி. தனித்துப்போட்டி என்று வாய்சவடால் விட்ட யுவராஜா, இளங்கோவன் போன்ற காமெடி பீசுகளுக்கு இந்த தேர்தலில் பெரிய அடி காத்திருக்கிறது.

அடுத்து, பாட்டாளி மக்கள் கட்சி...இதுவும் இந்த ரேசில் ஓடுகிறது என்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. அதே லிஸ்டில்தான் பாரதிய ஜனதா கட்சியும்.

கம்யூனிஸ்ட்கள் நிலையும் பரிதாபம்தான்.

மொத்தத்தில்....தி.மு.க., அண்ணா.தி.மு.க., ஆகிய கட்சிகள் தான் மேயர் இடங்களை அலங்கரிக்க போகிறது. மற்றவர்கள் நகராட்சிகளை வேண்டுமானால் அலங்கரிக்கலாம்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


15 comments:

 1. மறுபடியும் தேர்தலா??அவ்வ்வ்வ்

  ReplyDelete
 2. உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்த வரை, மாநிலத்தில் ஆளும்கட்சிதான் பெரும்பாலான இடங்களில் ஜெயிக்கும் என்பது எழுதப்படாத விதி.

  ReplyDelete
 3. [ma]ஒரு சரியான அலசல். தி.மு.க., அண்ணா.தி.மு.க., ஆகிய கட்சிகள் தான் மேயர் இடங்களை அலங்கரிக்க போகிறது. மற்றவர்கள் நகராட்சிகளை வேண்டுமானால் அலங்கரிக்கலாம் என்று மிகச் சரியாக எழுதியிருக்கிறீர்கள்[/ma]

  ReplyDelete
 4. திருச்சி இடை தேர்தலில் தி மு க ஜெயிக்கும். மேயர் தேர்தலில் அண்ணா தி மு க ஜெயித்தாலும் வார்டு லெவலில் மற்ற கட்சிநியரே ஜெயிக்க வாய்ப்பு உள்ளது. இதே நிலை தான் நகராட்சிக ளுகு பொருந்தும். அண்ணா தி மு க தென் மாநிலங்களில் ஜெயிப்பது அவளவு எளிதல

  ReplyDelete
 5. உண்மையான அலசல்
  ஓரளவு சரியாக
  இருக்கலாம்
  நன்றி!

  ReplyDelete
 6. தவறான கணிப்பு.தங்கள் கணிப்பு பொய்யாகிப் போகும்.அனைத்து பகுதிகளிலும் அதிமுக வே முன்னிலை பெரும்.பொறுத்திருந்து பாருங்கள்.

  ReplyDelete
 7. தவறான கணிப்பு.தங்கள் கணிப்பு பொய்யாகிப் போகும்.அனைத்து பகுதிகளிலும் அதிமுக வே முன்னிலை பெரும்.பொறுத்திருந்து பாருங்கள்.

  ReplyDelete
 8. நீங்கள் சொல்வது போல இது நான்குமுனை பொட்டி கூட கிடையாது... இரண்டே முனைதான்... ஒன்று அ.தி.மு.க... இன்னொன்று தி.மு.க... பெரும்பாலான இடங்களில் அதிமுக தான் ஜெயிக்கும்... சில இடங்களில் லோக்கல் செல்வாக்கின் காரணமாக திமுக ஜெயிக்கலாம்...

  ReplyDelete
 9. சட்டமன்ற தேர்தலில் இதே மாதிரி தனித்தனியாக நின்றிருந்தால் அவர்களின் வீரத்தை பாராட்டியிருக்கலாம்...

  ReplyDelete
 10. கொள்கைக்கு முரணான கட்சிகளிடையே கூட்டணி என்பது கடந்த சில தேர்தல்களில் இருந்தாலும் இம்முறை தனித்துப்போட்டி என சுழி இட்டது கலைஞர் தான். இதற்கு நாம் நிச்சயம் நன்றி சொல்லியே ஆக வேண்டும்! கூட்டணியால் அவர் பட்ட பாடுமட்டுமல்ல தமிழகம் பட்டபாடும் கொஞ்சநஞ்சமல்ல..

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.