என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, October 31, 2011

15 காவல்துறை கருப்பு ஆடு (சவால் சிறுகதை- 2011)

 
அந்த இரண்டு துண்டு பேப்பர்களையும் மேஜையில் வைத்து பார்த்துக்கொண்டிருந்த சிவாவின் கவனத்தை அவனது அலைபேசி அழைத்து திருப்பியது.எடுத்துப்பார்த்தான். இன்ஃபார்மர் விஷ்ணுதான் அழைக்கிறான்.


"சொல்லுங்க விஷ்ணு"


"சார் நான் கொடுத்தனுப்பின அந்த பிரிண்ட் அவுட் பேப்பரை பார்த்தீங்களா?"


"பார்த்துட்டு இருக்கும்போது தான் நீங்க போன் செஞ்சுட்டீங்க...ஆமா, வழக்கமா மெயில்தானே அனுப்புவீங்க...இப்ப என்ன புதுசா பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்பியிருக்கீங்க...."


"காரணம் இருக்கு சார். என்னோட மெயில் ஐ.டி.யை போலீஸ் கண்காணிக்கறாங்களோன்னு ஒரு சந்தேகம்.அதான் முன்னெச்சரிக்கையா இருப்பமேன்னு இப்படி ஒரு ஐடியா"


"குட்....அதுசரி அதுல என்னவோ எழுதியிருக்கு...ஒண்ணுமே புரியல..."


"சார்...அது போலீஸ் கோட் வேர்ட். அதுப்பத்தி நீங்க அலட்டிக்கவேணாம். நான் இந்த தடவையும் எஸ்.பி.கோகுலிடம் தவறான கோட்வேர்ட்தான்கொடுத்திருக்கேன். அதனால நீங்க வழக்கமா சரக்கு எடுத்துட்டு போற வழியிலேயே இப்பவும் எடுத்துக்கு போகலாம். ஒரு பிரச்சினையும் இருக்காது. "


"இதுல எதும் சொதப்பல் இருக்காதே...எதுக்கு கேக்கறேன்னா.... நாங்க வழக்கமா எடுத்துக்கு போறது கம்மியான சரக்குதான். இப்ப எடுத்துக்குப்போக போறது இருபது கோடி ரூபாய் சரக்கு...அதான் உதறலா இருக்கு. "


"சிவா சார்...அதான் நான் சொல்லிட்டேன்ல....பயப்படவேணாம்....வழக்கமா உங்க எதிரி பாஸ்கர் சரக்கு கடத்தற வழியை நீங்க  எனக்கு சொல்லிக்கொடுப்பீங்க... நானும் அதை அப்படியே போலீஸ் டிபார்ட்மெண்ட்ல சொல்லுவேன். அதனால், போலீஸ் கவனமெல்லாம் உங்க எதிரி சரக்கு கடத்திட்டுப்போற வழில இருந்து அவங்க சரக்கும் மாட்டிக்கும். உங்க சரக்கு வேற வழில ஈஸியா தப்பிச்சு போயிடும்.அதனால, எங்க டிபார்ட்மெண்டுல எனக்கும் நல்ல பேரு"


"அது தெரிஞ்ச விசயம் தானே....அதை எதுக்காக இப்ப சொல்றீங்கங்க விஷ்ணு?"


"காரணம் இருக்கு சார். நான் ஒவ்வொரு தடவையும் போலீசுக்கு கொடுக்கற தகவல் சரியாவே இருக்கும். ஏதாவது ஒரு கடத்தல் சரக்கு அவங்க கைக்கு சிக்கிரும். அதுபோல இப்பவும் நான் கொடுத்திருக்கிற தகவல் சரியாத்தான் இருக்கும்ன்னு போலீஸ் நம்புவாங்க..."


"அப்படின்னா இந்த தடவை அவங்களுக்கு ஏதும் சரக்கு மாட்டலைன்னா உங்கமேல சந்தேகம் வந்திடுமே?"


"சரக்கு மாட்டாதுன்னு யாரு சொன்னது? இந்த தடவையும்  நிச்சயமா மாட்டும்."


"மாட்டுமா? என்ன குழப்பறீங்க?"


"நிஜம்தான் சிவா சார். வேற ஒரு கும்பல் ஒரு முக்கியமான வழில சரக்கு கடத்தறதா எனக்கு ஒரு தகவல் வந்துச்சு. அதைத்தான் நான் போலீசுக்கு சொல்லிருக்கேன். போலீசும் அந்த வழில நின்னு சோதனை போடுவாங்க...எப்படியும் அவங்களுக்கு எதாவது ஒன்னு மாட்டிக்கும். "


"எதாவது மாட்டட்டும். எப்படியோ.... நம்ம சரக்கு தப்பிச்சாப்போதும். "

   ”தப்பிச்சிடும் சார். அதான் போலீசை திசை திருப்பற வேலையை நான் கச்சிதமா செஞ்சுக்கு இருக்கேனே? ”


”அதுக்குத்தானே உங்கள விலை கொடுத்து வாங்கிருக்கோம். ”


"அதுசரி, சார்...எனக்கு கிடைக்கவேண்டிய கமிஷன்?"

 "பயப்படாதீங்க...என்னிக்காவது லேட்டாகிருக்கா? சரக்கு பத்திரமா போய் சேர்ந்ததும் உங்க அக்கவுண்ட்ல பணம் விழுந்திடும்."


  "இந்த தடவை கமிஷனை கொஞ்சம் அதிகமா தரலாமே?"


  "வழக்கமா உங்களுக்கு சேர வேண்டிய கமிஷன் வரும். அதைவிட அதிகமா  தரமுடியாது. அடுத்த தடவை பார்க்கலாம்."


 "இல்லை சார்.... நான் எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கேன்னு தெரியுமா?   எங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்களுக்கு தெரிஞ்சா?”


"நீங்க அப்படி ரிஸ்க் எடுக்கறதாலதான் நாங்க உங்க சம்பளத்தைவிட பலமடங்கு அதிகமா கிம்பளம் தாறோம்...ஓக்கே...எனக்கு நிறைய வேலை இருக்கு போனை வச்சிடுறேன்"


    "ஓக்கே...சார்..."    போலீஸ் ஸ்டேஷன்......


    எஸ்.பி.கோகுல் அருகில்  நின்றிருந்த இன்ஸ்பெக்டர் பிரபுவிடம் திரும்பி...


    "சூப்பர் பிரபு....அப்படியே அச்சு அசல் அந்த விஷ்ணு மாதிரியே பேசிட்டீங்க.."


    "சார்.. நான் காலேஜ்ல படிக்கற காலத்துல ஸ்டேட் லெவல்ல நடந்த மிமிக்கிரி போட்டில  நாந்தான் முதலாவதா வந்தேன். யாரோட பேச்சையும் ஒருதடவை கேட்டாலே போதும். அப்படியே அவங்க குரல்ல பேசிடுவேன்."


    "குட்....எப்படி...அந்த சிவா உங்க பேச்சை நம்பிட்டான்ல?...சந்தேகம் வந்திருக்காதே?"


    "நம்பாம இருப்பானா? அந்த விஷ்ணுவோட சிம்மில் இருந்துதானே கூப்பிட்டோம். விஷ்ணு குரலில் தானே பேசினேன்.அப்புறம் எப்படி சந்தேகம் வரும்? இன்னிக்கு அவனோட இருபது கோடிரூபா சரக்கு நம்ம கைலதான். "


    "ரைட்...இப்ப அந்த விஷ்ணு எங்கே?"


    "துரோகி...இப்ப என் கஸ்டடிலதான் இருக்கான். நம்மட்ட வேலை பார்த்துட்டு... நம்மை திசை திருப்பி அந்த சிவாகிட்ட சம்பளம் வாங்கிட்டு இருந்திருக்கான். எப்படியோ    அதை கண்டுபிடிச்சு... நாலு சாத்து சாத்தினதுல உண்மையெல்லாம் கக்கிட்டான்."

"அந்த விஷ்ணுதான் அந்த கருப்பாடுன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க பிரபு?"

"போன வாரம் நானும் அவனும் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போயிருந்தோம். சாப்பிட்டுக்கு இருக்கும்போது அவனுக்கு ரெண்டு மூணு தடவை போன் கால் வந்துச்சு...அதையெல்லாம் என் பக்கத்துல உக்கார்ந்துதான் அட்டெண்ட் பன்னினான். அதுக்கப்புறம் ஒரு போன் வந்துச்சு. அதை பார்த்ததும் அவனோட முகம் லேசா மாறுச்சு.அதை நான் கவனிச்சுட்டேன். அவனுக்கு வந்த எல்லா போன் காலையும் என் பக்கத்திலேயே இருந்து பேசினவன் அந்த போன் கால் வரும்போது மட்டும் எடுத்துக்கு தூர போயிட்டான். பேசி முடிச்சப்பின்னாடிதான் வந்தான். அப்ப எனக்கு மைல்டா அவன் மேல சந்தேகம் வந்துச்சு. இருந்தாலும் காட்டிக்கல...அப்புறம் அந்த போனை டேபிளில் வச்சிட்டு கை கழுவ போனான். அந்த கேப்ல அவனுக்கு வந்த நம்பரை எடுத்து பார்த்து என் மைண்ட்ல வச்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் அந்த நம்பரை கொடுத்து அட்ரஸ் விசாரிச்சேன். ஒரு அட்ரஸ் கிடைச்சது. அதை விசாரிச்சா அப்படி ஒரு இடமே சிட்டில இல்லை. ஃபோர்ஜரியா அட்ரஸ் புரூஃப் கொடுத்து எடுத்திருக்காங்க...அப்பவே முடிவு பன்னிட்டேன். விஷ்ணுட்ட எதோ தப்பிருக்குன்னு..."

"வெரி இண்ட்ர்ஸ்டிங்க். அப்புறம்?"

அதுக்கப்புறம், அந்த நம்பர்லேர்ந்து வர்ர காலை எல்லாம் ரெக்கார்ட் பன்ன சொன்னேன். அப்படி ரெக்கார்ட் செய்ததை கேட்கும்போதுதான் தெரிஞ்சது அந்த போன் நம்பருக்கு சொந்தக்காரன் இவ்வளவு நாள் நம்மகிட்ட சிக்காத ஸ்மக்ளர் சிவான்னு..... நான் அவனோட போனை ட்ரேஸ் செஞ்ச விஷயம் சிவாவுக்கு தெரிஞ்சிருச்சா....அல்லது எதார்த்தமா அமைஞ்சதான்னு தெரியல...திடீர்ன்னு அந்த போன் நம்பர் வேலை செய்யல.... நம்பர் மாத்திட்டான் போல...”

”ஆமா...வழக்கமா கடத்தல் பிசினஸ் செய்யறவங்க ஒரே நம்பரை யூஸ் பன்ன மாட்டாங்க..”

”அதேதான் சார்...பேசாம விஷ்ணுவை பிடிச்சறவேண்டியதுதான்னு முடிவு செஞ்சு...இன்னிக்கு காலைலதான் விஷ்ணுவை பிடிச்சேன். அவன் ஆரம்பத்தில ஒத்துக்கல... நம்ம பாணில விசாரிச்சதும் எல்லாத்தையும் கக்கிட்டான். வாரத்துக்கு ஒரு தடவை அதாவது இன்னிக்குத்தான் சரக்கு கடத்துவாங்களாம். குத்துமதிப்பா ஒரு வாக்கியத்தை எழுதி அதை அந்த சிவாட்ட கொடுக்க சொல்லி விஷ்ணுகிட்ட கொடுத்தேன். அவனும் சிவா வீடு வரை போய் அங்கே இருக்க தோட்டக்காரனுட்ட  அதை கொடுத்து சிவாட்ட கொடுக்க சொல்லிட்டு வந்தான். ”

”அப்பவே நீங்க சிவாவை அரெஸ்ட் செஞ்சிருக்கலாமே?...”

”செஞ்சிருக்கலாம் தான். அப்படி செஞ்சிருந்தா அவன் மட்டும்தான் மாட்டிருப்பான். அவன் கோஷ்டியும், பல கோடிரூபாய் மதிப்புள்ள சரக்கும் மாட்டாதுல...”


    "ஓக்கே.....ஒக்கே....எப்படியோ காவல்துறையில இருந்த  கருப்பு ஆடு சிக்கிருச்சு."


    "சிக்கினது கருப்பு ஆடு மட்டுமில்ல....இவ்வளவு நாளா சிக்காம இருந்த அந்த கடத்தல் மன்னன் சிவாவும் தான். "


    "ஹா...ஹா...."


    இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.

    
Post Comment

இதையும் படிக்கலாமே:


15 comments:

 1. சூப்பர் தல...

  வாத்துக்கள்...

  ReplyDelete
 2. கஸாலி சிம்பிளா கலக்கிப்புட்டாரே...

  ReplyDelete
 3. "சிக்கினது கருப்பு ஆடு மட்டுமில்ல....இவ்வளவு நாளா சிக்காம இருந்த அந்த கடத்தல் மன்னன் சிவாவும் தான். "/

  அருமையான் சிம்பிள் அண்ட் நீட் கதை!
  பரிசுபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. தல!உடான்சில் நான் இணைத்த இணைப்பிற்கு ஏழு லைக்குகளும், நீங்கள் இணைத்த இணைப்புக்கு நாலு லைக்குகளும் வந்திருக்கு....

  #நான் அவசரப்பட்டுட்டனோ?

  ReplyDelete
 5. @வெளங்காதவன்வெளங்காதவன் said... 5

  தல!உடான்சில் நான் இணைத்த இணைப்பிற்கு ஏழு லைக்குகளும், நீங்கள் இணைத்த இணைப்புக்கு நாலு லைக்குகளும் வந்திருக்கு....

  #நான் அவசரப்பட்டுட்டனோ?//////
  விடுங்கப்பு....பரவாயில்லை.

  ReplyDelete
 6. சூப்பர் வாழ்த்துக்கள்/ma

  ReplyDelete
 7. அருமையான கதை .. நல்ல முடிவு

  ReplyDelete
 8. கஸாலி சிம்பிளா கலக்கிப்புட்டாரே...

  ReplyDelete
 9. கஸாலி சிம்பிளா கலக்கிப்புட்டாரே...

  ReplyDelete
 10. நல்ல இருக்கு....வாழ்த்துக்கள்.அப்படியே என்னோட கதையையும் படிச்சுடுங்க..http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

  ReplyDelete
 11. ஒரு ஆக்சன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல விருவிருப்பான கதை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. நல்லாயிருக்கு கதை! Voted

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.