என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, October 01, 2011

8 மின்சாரமும் ரஜினிகாந்தும் ஒன்றா?


ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் ரெண்டு விஷயங்கள் தீவிரமாக நடைபெற்றது. ஒன்று தி.மு.க.,வினரை கைது செய்தது. மற்றொன்று மின்சாரம் தடையில்லாமல் வந்தது. 


கடந்த நான்கு மாதங்களாக மின்வெட்டு ஒரு சில இடங்களில் சில நிமிடங்கள் நீடித்தாலும் தடையில்லாமல் மின்சாரம் கிடைத்தது. இப்போது யார் கண் பட்டதோ தெரியவில்லை. மீண்டும் மின்வெட்டு தலைதூக்க ஆரம்பித்துவிட்டது, முன்பை விட மோசமாக.....


எந்த அறிவிப்பும் இல்லாமல் கூட்டணி கட்சியினரை வெளியேற்றிய ஜெயலலிதா போல...எந்த அறிவிப்பும் இல்லாமல் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.


 முன்பெல்லாம் மின்சாரம் நிறுத்தப்படுவதற்கான அறிவிப்பாவது வரும். இப்போது அதுவும் இல்லை. கடந்த சில நாட்களாக வழக்கமாக காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிவரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. சரி, அத்துடன் விடுவார்களா என்று பார்த்தால் அதுதான் இல்லை. அதன் பிறகு...வள்ளி படத்தில் அடிக்கடி காணாமல் போய் பின் தலையை காட்டும் ரஜினிகாந்த் போல...மின்சாரமும் அடிக்கடி காணாமல் போய் தலையை காட்டுகிறது. இது நள்ளிரவில் இன்னும் அதிகமாய் நடக்கிறது. அப்படி ஒன்றும் இது மோசமான கோடை காலமும் கிடையாது. பிறகு ஏன் இப்படி மின் தடை ஏற்படுகிறது  என்று விளங்கவில்லை. 


ஒருவேளை தடையின்றி மின்சாரம் கிடைத்ததால் வியாபாரம் டல்லாகி போன ஜெனரேட்டர், இன்வெர்டர், UPS விற்பவர்கள் மின்சார வாரியத்துடன் ஒப்பந்தம் போட்டுவிட்டார்களோ என்னவோ....


ஆற்காடு வீராசாமியால் கடந்த சட்டமன்றத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆப்பு கிடைத்ததுபோல...நத்தம் விஸ்வநாதனால்(இப்ப அவர்தானே மின்சாரத்துறையை கவனிக்கறார்..அல்லது அவரையும் ஜெயலலிதா மாத்திட்டாங்களா?...ஒரு டவுட்டு...அதான்) உள்ளாட்சி தேர்தலில் இப்போதைய ஆளுங்கட்சிக்கு ஆப்பு கிடைத்துவிடும் போல.... Post Comment

இதையும் படிக்கலாமே:


8 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. நல்லா தான் யோசிகிரீக ரஹீம்.....

  ReplyDelete
 3. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாது

  ReplyDelete
 4. எங்கஊர்லையும் காலைல 6 மணிக்கு போய்ட்டு 9 மணிக்கு வருது...... நேத்து நைட் 1 மணிநேரம் போய்டுச்சு....... மழ பேஞ்சதுனால புழுக்கம் இல்லைன்னாலும் பயங்கர கொசு கடிஒரு வேள கூடங்குளம் போராட்டத்தின் காரணமாக இருக்குமோ

  ReplyDelete
 5. உள்ளாட்சி தேர்தலில் அறிவிக்கப்படாத மின் வெட்டு ஆப்படிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்

  ReplyDelete
 6. என்னை ரசினிகாந்து கூட ஒப்பிட்டு பேசினதுக்கு நன்றி, உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு..

  ReplyDelete
 7. தெலங்கானா பிரச்சினையால் மின்சார பற்றாக்குரையாம் அம்மா சொல்றாங்.............க

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.