என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, October 07, 2011

13 கலைஞருக்கு எதிராக திரும்பிய எம்.ஜி.ஆர்......

முந்தைய பாகங்கள்

சேலம் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.சுப்ரமணீயத்திற்கும் எம்.ஜி.அருக்கும் தனிப்பட்ட தகராறு. அந்த தகராறு காரணமாக எம்.ஜி.ஆர்.,மீது குறைசொல்லி ஒரு கடிதம் எழுதி அதை பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டார் அவர்.

அதில்...
அன்னிய செலாவணி, வருமான வரி போன்ற விஷயங்களில் எம்.ஜி.ஆருக்கு நிறைய சிக்கல்கள் இருக்கிறது. அவற்றை தீர்த்துக்கொள்ள மத்திய அரசின் உதவியை நாடியுள்ளார் எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆருக்கு வந்துள்ள நெருக்கடியை தமக்கு சாதகமாக்கிக்கொள்ள நினைக்கிறார் பிரதமர் இந்திரா. மத்திய அமைசர் மோகன் குமாரமங்கலம் இந்த விஷயத்தில் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை கேள்விப்பட்டதும் கொதித்துவிட்டார் எம்.ஜி.ஆர். கட்சியில் ஒன்று நான் இருக்கனும், இல்லை அந்த சுப்ரமனியம் இருக்கனும். யார் வேண்டுமென்று முடிவு செய்துகொள்ளுங்கள் என்று கோபத்துடன் சொன்னார். அதன்பிறகு, சுப்ரமணியம் ஐந்து வருடம் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.

சிறிது நாட்களுக்குள் எம்.ஜி.ஆரின் அதிருப்தி திருகழுகுன்றத்தில் வெளிப்பட்டது. அங்கு அண்ணாவின் சிலையை திறந்து வைத்த அவர்
அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட  அண்ணாவுக்கு நாம் செய்யும் துரோகம். லஞ்சத்தையும் ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்கு நாம் செய்கிற நன்றியாகும், பெருமை ஆகும்.கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும்  சொத்துக்கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்ப பணியாக இருக்கும்.அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!” என்று பேசினார்.


அத்துடன் விடவில்லை எம்.ஜி.ஆர்., அன்று மாலையே சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தன் பேச்சின் மூலம் எரிகின்ற பிரச்சினைக்கு எண்ணை ஊற்றினார்...இல்லை...இல்லை...பெட்ரோல் ஊற்றினார்.

அதில் அவர் தி.மு.க.,என்றால் எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர்.,என்றால் தி.மு.க என்றேன் நான். அப்படியானால் நான் தி.மு.க. இல்லையா என்று கேட்கிறார் ஒருவர். நான் சொல்கிறேன். நீயும் சொல்லேன். உனக்கும் அப்படி சொல்ல உரிமை இருக்கிறது. உனக்கு துணிச்சல் இருந்தால் நீ தான் தி.மு.க.என்று சொல். நான் மறுக்கவில்லை. உனக்கு துணிச்சல் இல்லையென்பதால் என்னை கோழையாக்காதே... நான் மட்டும் தான் தி.மு.க.,என்றால்தான் பேச்சு. காமராஜரை என் தலைவர் என்றும் அறிஞர் அண்ணா அவர்களை என் வழிகாட்டி என்று சொன்னேன். இப்போதும் சொல்கிறேன் தி.மு.க., வின் வழிகாட்டி அண்ணா மட்டுமே...

இப்போது நடக்கும் பிரச்சினைகளெல்லாம் தேவை இல்லாதவைகள். நான் சினிமாவை விட இன்னும் அதிகமாக அரசியலில் ஈடுபடவேண்டும் என்கிறார்கள் என் நண்பர்கள். நான் கொஞ்சமாக அரசியலில் ஈடுபடுவதையே சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இன்னும் அதிகமாக ஈடுபட்டால் என்னவாகுமோ....பரிதாபத்துக்குரியவர்கள்.


கழக நண்பர்களுக்கு ஒன்று சொல்கிறேன். நான் மக்களை சந்திக்கிறேனே தவிர, தலைவர்களை தேடிப்போய் வாழ்க்கையை உயர்த்திக்கொள்ளவேண்டிய அவசியம் எனக்கில்லை. என் தாயும், தமிழக மக்களும் அண்ணாவும் என்னை அப்படி வைக்கவில்லை. நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக்கொள்ள  வேண்டிய அவசியம் இல்லை. தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர்., போய்விடுவார் என்று சொல்ல அவர்களுக்கு பயம். யாருக்கோ என் பேச்சு உறுத்துகிறது.

ஊழல் இருக்காது. நேர்மை இருக்கும் என்று சொல்லித்தானே வாக்கு கேட்டோம். இந்த ஆட்சியில் ஊழல் இருக்கக்கூடாது என்று சொல்ல எனக்கு உரிமை இல்லையா? மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கணக்கு காட்டவேண்டும் என்று சொல்கிறேன். அவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று பொதுக்குழுவில் கேட்க வேண்டும். 

நான் சினிமாவில் நடிக்கிறேன் சம்பாதிக்கிறேன்... நீ சம்பாதிதால் கணக்கு காட்டு. மாவட்ட, வட்ட, கிளை செயலாளர்கள் பதவியில் இருப்பவர்களும், அவர்களின் உறவினர்களும் குடும்பத்தில் வாங்கியிருக்கிற சொத்துக்களுக்கு கணக்கு காட்டவேண்டும். அவை எப்படி வந்தன என்று விளக்கம் சொல்லவேண்டும். பொதுக்குழுவில் இதுபற்றி ஒரு தீர்மானம் கொண்டுவருவேன். 

தீர்மானத்திற்கு பொதுக்குழுவில் ஆதரவு கிடைக்கவில்லையென்றால் மக்களை சந்தித்து இந்த கேள்வியை கேட்பேன். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். கழக நிர்வாகிகள் தங்கள் கை சுத்தமானது என்று நிருபிக்க வேண்டும். நிருபிக்க முடியாதவர்களை மக்கள் முன் நிறுத்து தூக்கி எறிய வேண்டும். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை தூக்கி எறிவோம் என்று ஆவேசத்துடன் பேசினார்....
உடனே பற்றிக்கொண்டது நெருப்பு.....
இன்னும் வ(ள)ரும்................


Post Comment

இதையும் படிக்கலாமே:


13 comments:

 1. எழுதுங்கோ எழுதுங்கோ!

  ReplyDelete
 2. அடடா..புரட்சித்தலைவர் பொங்கிட்டாரே...

  ReplyDelete
 3. இதுவரை கேள்விப்படாத பல அருமையான விஷயங்களைச் சொல்கிறீர்கள் நண்பா! அசத்தல்!

  தொடருங்கள் உங்கள் பயணத்தை!

  ReplyDelete
 4. விஷயம் சூடு பிடித்துவிட்டது... தெரியாத வரலாறை தெரிந்துகொள்ள வைத்தமைக்கு உங்களுக்கும் செங்கோவி அவர்களுக்கும் நன்றி...

  ReplyDelete
 5. [ma] சேத்தா என்ன ஆகும்[/ma]

  ReplyDelete
 6. சூடா இருக்கே வரலாறு
  அருமை

  ReplyDelete
 7. தலைவரே...சூடு பறக்கிறது...

  ReplyDelete
 8. அருமையான பதிவுகள்..mgr பற்றி சில சந்தேகங்கள்..
  1) எத்தனையோ நடிகர்கள் இருக்கும் போது பாக்யராஜை தனது கலை உலக வாரிசாக அறிவிக்க காரணம் என்ன?
  2) இருவர் படத்தில் mgr இன் இறந்த முதல் மனைவியும் ஜெயாவும் ஒரே சாயலில் இருந்தாகவும் அது தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட காரணம் என்பது உண்மையா?
  3) இருவர் படத்தில் கௌதமி கேரக்டர் யாரை குறிக்கிறது?

  ReplyDelete
 9. வணக்கம்,அருமை!எழுதுங்கள்,காலத்துக்கேற்ற பதிவு!

  ReplyDelete
 10. கட்சியிலிருந்து எம்.ஜி.ஆர் வெளியே வரவேண்டும் என்று தான் அவர் இவ்வாறு பேசினார்.

  ReplyDelete
 11. பழைய அரசியல் அக்கப்போர்களை தெரிந்து கொள்ள வைக்கும் பதிவு சுவாரசியமாக செல்கிறது.நன்றி.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.